கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் – சேவியர் விளக்கம்

இன்று 10-8-20220 பிற்பகல் 1 .00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத்தில் கோல் பீல்டு விடுதி மற்றும் தமிழ்ப்பள்ளி நிலம் மீதான விளக்கமளிப்பு கூட்டத்தில், கோல லங்காட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் பத்திரிக்கைகளுக்கு அளித்த விளக்கம்.

 கோல்பீல்டு தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2005 ம் ஆண்டில் 1100 ஏக்கர் நிலத்தில்  அன்றைய மாநில அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்து. அதன்படி முழு நில அளவுக்கும் ஏற்ப திட்ட நகல்  ஏற்கனவே சமர்பிக்கப்பட்டு அங்கீராரம் பெற்று  விட்டதால், தமிழ்ப்பள்ளிக்கு அவர்கள் ஒதுக்கியிருந்த 2.98 ஏக்கர் நிலத்தை 4 ஏக்கராக உயர்த்தக்கூட மறுத்தனர்.

நான் சிலாங்கூர் மாநில அரசின் ஆட்சி குழு உறுப்பினராக இருந்த காலகட்டம் மார்ச் 24, 2008 முதல் மார்ச் 2013 வரையில். அந்தக் காலகட்டத்தில் கோல் பீல்டு தமிழ்ப்பள்ளி மற்றும் விடுதி நிலம் சார்பாக நடந்தவற்றை விளக்குகிறேன்.

பக்காத்தான் ஆட்சிக்கு வந்த 2008 ஆம் முதலே சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்தும் பணியில் நான் ஈடுபட்டிருந்ததை சிலாங்கூர் மக்கள் அறிவார்கள். அப்பொழுது முதல் தோட்டப்புற மாணவர்களுக்கான ஒரு தங்கும் வசதியுடன் கூடிய பள்ளி நிறுவ வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.

தோட்டப்புற மாணவர்களுக்கு தங்கும் விடுதி

நான் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்தக் காலத்தில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு விடுதியை கட்டி, அதில் எழை மாணவர்கள் தங்கி கல்வி பயில வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்தேன். ஆனால் நிலம் கிடைக்க வில்லை.

இறுதியாக 2012-இல் கே.எல்.கெப்போங் நிறுவனம் 7.6 ஏக்கர் நிலத்தை வழங்க முன்வந்தது. ஆனால் அதனை மேம்பாடு நடந்துக் கொண்டிருக்கும் கோல் பீல்டு தோட்டத்தில் அன்றி, துவான் மீ தோட்டத்தில் வழங்க முன்வந்தனர். அந்த நிலத்தை ஆவணப்படுத்தும் வகையில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

நான் எடுத்த நடவடிக்கையின் படி அந்த நிலம் தனியார் உரிமத்திலிருந்து மாநில அரசின் பெயருக்கு மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநில ஆட்சிக்குழுவுக்கு நான் அனுப்பிய பரிந்துரையில் அது குறிப்பிட பட்டுள்ளது. தோட்டப்புற மாணவர்களின் தங்கும் விடுதிக்காக 3.18 ஹக்டர் நிலத்தை மாநில அரசிடம் ஒப்படைக்க கே..எல்.கொப்போங் நிறுவனம் ஒப்புக்கொண்டதை தெரிவித்து மாநில  அரசின் நிதி ஒதுக்கீட்டுக்கும் கோரிக்கை விட்டேன்.

இந்த நிலம் பற்றிய தற்போதைய தகவலை அறிய விரும்புவோர் சிலாங்கூர் மாநில அரசின் பிரதிநிதிகளை அணுக வேண்டும்.

கோல் பீல்டு தமிழ்ப்பள்ளி

ஆரம்பத்தில் கோல் பீல்டு தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மிக குறைவாக இருந்தால், தேசிய ஆரம்ப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து தமிழ்ப்பள்ளியின் நிலத்தை 4 ஏக்கராகவும், தேசிய ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிக்கு 10.98 ஏக்கராகவும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது.

2014ஆம் ஆண்டு தங்கும் வசதி கொண்ட ஒரு பள்ளியை உருவாக்க ரிம 5 மில்லியன் நிதியும் 10 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்படும் என மந்திரி புசார் அறிவித்தார் (https://selangorkini.my/2014/06/mb-rm5million-to-build-malaysia-s-first-tamil-boarding-school/). இது 2012-இல் கோரப்பட்ட எனது முயற்சியின் பயனாக எடுக்கப்பட்ட முடிவாகும்.

மந்திரி புசார் குறிப்பிட்டுள்ள 10 ஏக்கர் என்பது கோல் பீல்டு தமிழ்ப்பள்ளி பள்ளிக்கு வழங்கப்பட்ட 4 ஏக்கர் நிலத்துடன் விடுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7.6 ஏக்கர் நிலமும் அடங்கும்.

இந்த அறிவிப்பின் பின்னணியில் 2017-இல் கோல் பீல்டு தமிழ்ப்பள்ளி 4 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டது. அப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிதி சிலாங்கூர் பொதுப்பணி துறை இலாக்காவிடம் (JKR) ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூலம் அப்பள்ளிக்கான கட்டுமானம் குத்தகைக்கு விடப்பட்டுக் கட்டுமானம் முடிவுற்றுப் பள்ளி செயல்படுகிறது. அந்தப் பணியின் கண்காணிப்பாளர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதிராவ். இந்தப் பள்ளியின் இடம் தேர்வு, அதன் குத்தகை, கட்டுமானம் போன்றவை மாநில அரசால் முடிவெடுக்கப்பட்டது.

மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியில் மாணவர் விடுதி

மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியைக் கட்டும்போதே, பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி பயில வசதியாகக் கட்டப் பட்டுவிட்டது. ஆனால் மாணவர்ளின் எண்ணிக்கையோ மிகக் குறைவாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே, ஏழ்மையில், தோட்டப்புற மற்றும் ஒதுக்குப்புறங்களில் வாழும் மாணவர்களை வாழ்வில் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தோம்.

அதற்குக் கூட்டு முயற்ச்சி தேவை. மிட்லெண்ட் தமிழ்ப்பள்ளியின் பெ.ஆ.சங்கம் மற்றும் பள்ளி வாரியம் நல்ல ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருந்ததால், இங்குள்ள வசதிகளை அதிகமான மாணவர்கள் பயன்படுத்திப் பயனடைய ஒரு விடுதி கட்ட மாநில அரசிடம் பரிந்துரைத்தேன். கட்டி முடிக்கப்பட்ட இந்த விடுதி செயலாக்கம் காண மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்கிறது.

ஷா ஆலாம் மாநகராட்சி மன்றம் மற்றும் சிலாங்கூர் மாநிலப் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (UPEN) அதற்கான குத்தகையாளர் தேர்வு, குத்தகை மதிப்பீடு,  நிதி ஒதுக்கீடு,  திட்ட மேற்பார்வை மற்றும் நிதி பட்டுவாடாவைக் மேற்கொண்டனர்.

– தொகுப்பு அண.பாக்கியநாதன்.