கோவிட்-19-இன் தாக்கம் – மக்களுக்கு ஓர் ஒளிக்கதிராக தேசிய பயிற்சித் திட்டம் (எஸ்.பி.என்)

விளம்பரத்தகவல்  

கோவிட் 19 தொற்றுநோய் பரவலை தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பல உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.

பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் இயக்க செலவுகளை ஈடுகட்ட முடியாததால் திவாலாகியுள்ளது. பலர் வேலை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். பட்டதாரிகளும் வேலை வாய்ப்பின்றி தவிப்பதை காண முடிகிறது.

சில நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகின்றன. இதனால் ‘புதிய பட்டதாரிகள்’ வேலையிலிருந்து வெளியேறவேண்டிய சூழல் அமைந்துள்ளது. மேலும், குறைவான சம்பளம் வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லாத காரணத்தினால் பட்டதாரிகள் அவர்கள் கல்வி கற்ற துறையை கை கழுவிவிட்டு அதிக லாபம் ஈட்ட கூடிய துறைகளை நோக்கி நகர்கின்றனர்.

இந்த சிக்கல்களை உணர்ந்த அரசாங்கம், இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகம் (கே.பி.எஸ்) மூலம் தேசிய பயிற்சித் திட்டம் (எஸ்.பி.என்) எனப்படும் புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. தேசிய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை மூலம் கே.பி.எஸ் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து அனுபவம் இல்லாத பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க உதவுகிறது.

கடந்த ஜூன் மாதம் பியோர் எடுகேஷன்னின் (Pure Education Sdn. Bhd)  ஒத்துழைப்போடு பயிற்சிகள் நடந்தன. அதில் சமையல் கலை, சிறு தொழில், தகவல் தொடர்பு துறை மற்றும் பலவகை துறைகள் உள்ளடக்கிய பயிற்ச்சிகள் வழங்கப்பட்டன.

புள்ளிவிவரங்களின்படி, எஸ்.பி.என் இன் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி பட்டறையில் பியோர் எடுகேஷன்  1000க்கும் மேற்பட்ட பட்டதாரிககளை பேட்டி கண்டுள்ளனர். அதில் 200 இளைஞர்களுக்கு  வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எஸ்.பி.என் திட்டம் பல பயிற்சி வழங்குநர்களுக்கு பயனளிக்கிறது, குறிப்பாக வருங்கால ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க நிதி இல்லாத இவ்வேளையில் நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக அமைந்துள்ளது.மேலும் சரியான ஊழியர்களைக் கண்டடைவதில் சிக்கல் உள்ள நிறுவனங்களுக்கும் இந்த திட்டம் உதவ கூடும் .இந்தத் திட்டம் தொடரப்பட வேண்டும். ஏனெனில், இது இளைஞர்களின் வேலையின்மை விகிதத்தைக் குறைக்கும். இதனால் கோவிட் 19 இன் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

எஸ்.பி.என் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஆறு மாதங்கள் RM600 ஊதிய மானியம் வழங்குவதோடு RM4,000 பயிற்சி மானியமும் வழங்கப்படுகிறது. இதை பெரும் நிறுவனங்கள் கட்டாயம் PERKESO மற்றும் HRDF இல் தங்களது நிறுவனத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.

எஸ்.பி.என் திட்டத்தில் பங்கேற்க விரும்பும்  நிறுவனங்கள் எஸ்.பி.என் செயலகத்தை [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது 03-8871 3265/3264/3463 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தேசிய பயிற்சி திட்டம்

மலேசியாவில் கோவிட் 19 பரவுவதால் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை (PKP) அமல்படுத்தப்பட்டதன் விளைவாக 2020 ஆம் ஆண்டில் மலேசியாவில் வேலையின்மை விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என மலேசிய புள்ளிவிவர துறை (DOSM) தெரிவித்துள்ளது. இதுவே 1989 முதல் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட உயர்ந்த விகிதமாகும். புள்ளிவிவர துறையின் தகவல்படி ஜூலை 2020 உடன் ஒப்பிடும்போது ஆகஸ்ட் 2020இல் 0.5% வேலையின்மை பிரச்சனை குறைந்து 4.7% ஆக இருந்தது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய குறைப்பு ஏற்பட்டு 15 முதல் 64 வயதுக்குட்பட்ட 741,600 நபர்கள் வேலையின்மையில் இருந்துள்ளனர். கோவிட் 19 ஏற்படுத்தும் தாக்கத்தை குறைத்து மதிப்பிட முடியாது.

மார்ச் 2020 முதலே வேலையின்மை விவகாரம் பல விளைவுகளை கொண்டு வரும் என மலேசிய புள்ளிவிவர துறை மற்றும் கசானா ஆராய்ச்சி நிறுவனம் அனுமானித்தது. பெரும்பாலான பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதால் இது இளைஞர்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். மார்ச் மாதத்திலிருந்து வழங்கப்பட்ட அரசாங்கத்தின் ஊக்கத்தொகைகள் (Pakej Rangsangan Ekonomi Prihatin Rakyat 2020), (Bantuan Prihatin Tambahan 2020) இளைஞர்களுக்கு உதவியது.

வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் : பந்துவான் பரிஹாத்தீன் பூஜாங் (bantuan  PRIHATIN Bujang) RM800.00, பந்துவான் பெமண்டு இ-ஹெய்லிங் (bantuan pemandu e-hailing) RM500 மற்றும் படிவம் 6, டிப்ளோமா, ஐபிடி மாணவர்களுக்கான பரிஹாத்தீன் தேசிய உதவி RM200.00 ஆகும்..

எவ்வாறாயினும், ஒரு குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் உதவிதொகை இளைஞர்களின் நீண்டகால பொருளாதார பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி அல்ல. குறிப்பாக பட்டம் பெற்ற இளைஞர்கள் அல்லது தொழிலாளர் சந்தையில் நுழையும் பட்டதாரிகளுக்கு இது தீர்வை அளிக்காது.

அதற்கு ஏற்ப, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதத்திற்கான திட்டங்கள் மற்றும் இளைஞர்களுக்கும் புதிய பட்டதாரிகளுக்கும் பணி அனுபவத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளைச் செயல்படுத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பு அல்லது பயிற்சி திட்டங்களை விரிவாக்குதல், மேம்படுத்துதல், மறுசீரமைத்தல் ஆகியவற்றில் பல்வேறு தரப்பினர்களின் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

கடந்த ஜூலை 22 ஆம் திகதி இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்  டத்தோ ஸ்ரீ ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், பொதுப்பணி துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹாஜி ஃபடில்லா ஹாஜி யூசோஃப் மற்றும் மனிதவளத்துறை அமைச்சர் டத்தோ எம் சரவணன் ஆகியோர் தேசிய பயிற்சி திட்டத்தை (SPN) தொடக்கி வைத்தனர்..

இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கும் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்ட ஒரு முன்னெடுப்பாகும்.

பயிற்சி பெற்றவர்கள் 100 கி.மீ.க்கு  அப்பால்  பணியிட நேர்ந்தால்,  தீபகற்பம் / சபா / சரவாக் / லாபுவான் – இடையே செல்ல ஒரு நபருக்கு RM600.00 ரிக்கிட் மற்றும்  சபா / சரவாக் / லாபுவானிலிருந்து தீபகற்பத்திற்கு அல்லது அதற்கு நேர்மாறாக செல்ல RM1,000.00 ஒரு நபருக்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக, பயிற்சி பெற்றவர்கள் பொதுப் பேச்சு, எழுதும் நுட்பங்கள், பேச்சுவார்த்தை திறன், விமர்சன சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் போன்ற இலவச திறன் பயிற்சிகளையும் பெறுவார்கள்.

இந்த SPN திட்டத்தில் பல நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. அவற்றில் மனிதவள மேம்பாட்டு நிதியத்தின் (HRDF) கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும் மற்றும் இன்வெஸ்ட் கே.எல் (InvestKL) உடன் பணிபுரியும் நிறுவனங்களும் உள்ளன. எஸ்.பி.என் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு RM600 ஊதிய மானியமும் ஒரு நபருக்கு RM4,000 பயிற்சி மானியமும் பெறலாம்.

23 நவம்பர் 2020 நிலவரப்படி, மொத்தம் 397 பேர் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர், இவர்களில் 376 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளது. இந்த எஸ்.பி.என் திட்டத்தில் 67  நிறுவனங்கள் ஒத்துழைத்து இளைஞர்களுக்கு பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.

ஆர்வமுள்ள மற்றும் தகுதித் தேவைகளில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், perantisan.kbs.gov.my மூலம் விண்ணப்பங்கள் செய்யலாம். எஸ்பிஎன் திட்டத்தில் பங்கேற்க விரும்பும்  நிறுவனங்கள் எஸ்.பி.என் செயலகத்தை [email protected] என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது 03-8871 3265/3264/3463 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.