பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரன்    

இராகவன் கருப்பையா – பனிச்சறுக்கு தாரகை ஸ்ரீ அபிராமி சந்திரனை அறியாதவர்கள் நம் நாட்டில் யாரும் இருக்க முடியாது.

இப்போதுதான் அவருக்கு 9 வயதாகிறது என்ற போதிலும்  மலேசியாவை பொறுத்த வரையில் இந்த விளையாட்டில் அவர் ஒரு ‘சுப்பர் சீனியர்’. அவரின் சகாசங்கள் கொண்ட காணொளிகல் இனையத்தளத்தில் உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக நாட்டை பிரதிநிதித்து பல்வேறு அனைத்துலகப் போட்டிகளில் கலந்துகொண்டு நூற்றுக்கணக்கான பதக்கங்களை குவித்துள்ள  ஸ்ரீ அபிராமி வட கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள லட்வியா எனும் ஒரு சிரிய நாட்டில் தற்போது தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக இளையோருக்கான பனிச்சறுக்கு போட்டிக்காகவும் 2 ஆண்டுகள் கழித்து இத்தாலியில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கும் தம்மை தயார்படுத்திக்கொண்டிருக்கும் அவருக்கு நிதியுதவி தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒரு பொருயியலாளரான அவருடைய தந்தை சந்திரன் தம்மிடமிருந்த எல்லா சேமிப்புகளும் கரைந்துவிட்ட நிலையில் பொது மக்களின் உதவியை நாடியுள்ளார்.

மலேசியாவைப் பொறுத்த வரையில் பனிச்சறுக்கு என்பது ஒரு அபூர்மான விளையாட்டு என்பது நமக்குத் தெரியும். பனிப்பொழியும் நாடுகளிலேயே இவ்விளையாட்டு பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் அதீத திறமை படைத்து அனைத்துலகத் தரத்தை எட்டியுள்ள நமது தங்கப் பெண்மணியின் கனவுகள் நினைவாக நம்மால் இயன்றதை செய்ய முற்பட வேண்டும்.

இந்நிலையில் பலதரப்பட்ட சிக்கல்களையும் தடங்கள்களையும் தாண்டிதான் ஸ்ரீ அபிராமி தற்போதைய உயர் நிலையை அடைந்துள்ளார்.

நிதியுதவி அளிக்க விரும்புவோர், அவரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள அறவாரித்திற்கு வழங்கலாம்.