அந்தரங்க உறவில் உயர்கல்வி மாணவிகள்!

இராகவன் கருப்பையா– கோறனி நச்சிலுக்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல நாடுகள் அந்நோயின் கோரப்பிடியிலிருந்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுபடுவது மகிழ்ச்சியான ஒரு விசயம்.

ஆனால் நம் நாட்டில் அந்த பெருந்தொற்றின் தாக்கம் தற்போது உச்சத்தில் இருக்கும் பட்சத்தில் அடிதட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் பல உயர்கல்வி மாணவிகளின் நிலை தொடர்பாக அண்மையில் வெளியான தகவல்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மலேசியாவில் சுமார் 10 உயர்கல்வி நிலையங்களை சேர்ந்த 12,705 மாணவிகள் ‘ஷுகர் டேடி’ எனப்படும், அந்தரங்க நட்பிற்காக பண உதவி செய்யும் அமைப்பில் பதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இணை தேடும் பணக்காரர்களுக்கும் உதவி தேவைப்படும் இளம் பெண்களுக்கும் இடையிலான இது போன்ற உறவு உலகம் முழுவதும் புதிதான ஒன்றில்லை என்ற போதிலும் மலேசியாவில் தற்போதைய இக்கட்டான காலக்கட்டத்தில் அதிக அளவிலான உயர்கல்வி மாணவிகள் இத்தகைய சூழலிலுக்கு ஈர்க்கப்படுவது  வேதனையாகத்தான் உள்ளது.

சராசரி 23 வயதுடைய அம்மாணவிகள் அந்தரங்க உறவு நாடும் செல்வந்தர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ஏறக்குறைய 2,500 ரிங்கிட்டை வருமானமாகப் பெறுகின்றனர் என்கிறார் ‘ஷுகர் டேடி’-யை ‘சுகர் புக்’ என்ற அமைப்பின் வழி நடத்தும் டேரன் சான் என்பவர்.

இவர்களுள் உயர் கல்வி மாணவிகள் மட்டுமின்றி வேலையில்லாமல் அவதிப்படும் புதிய பட்டதாரிகள், ஆசிரியர்கள், தாதிகள், நிபுணத்துவ பெண்கள் இப்படியாக பலர் தங்களின் சமூக ஈடுபாட்டை அந்தரங்கமாக கொண்டுள்ளனர்.

இந்த வருமானத்தைக்கொண்டு அவர்கள் தங்களுடைய கல்விக் கட்டணம், வீட்டு வாடகை, உணவு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகளை சமாளிப்பதாகத் தெரிகிறது.

மலேசியாவில் 42,500 நபர்கள் பதிவு செய்து மூன்ராம் நிலையுலும், இந்தியாவில் 338,000 நபர்களும் இந்தோனேசியாவில் 60,250 நபர்களும் பதிவு செய்துள்ளனர்.

தகவல்: freemalaysiatoday