புதிய இருதய சிகிச்சை –  ஐஜேன்-னின் புத்தாக்க கண்டு பிடிப்பு ஆசியாவில் முதன்மையானது  

தேசிய இருதய சிகிச்சை மையம் (IJN) ட்ரைஸ்குபிட் ரிகர்ஜிடேஷன் (tricuspid regurgitation) அல்லது கசிவு இதய வால்வுகளால் (leaky heart valves) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிகிச்சை முறையை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.

இச்சிகிச்சை ட்ரிக்வால்வு ® டிரான்ஸ்காதீட்டர் பைகாவல் வால்வுகள் சிஸ்டம் (பயோப்ரோஸ்டெசிஸ்) (Tricvalve® Transcatheter Bicaval Valves system) (Bioprosthesis) என்று பெயரிடப்பட்டுள்ளது. திறந்த இதய அறுவை சிகிச்சை (Open heart surgery) சில நோயாளிகளுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இச்சிகிச்சை முறை அவர்களுக்கு மிகவும் பொருத்தமாகும்.

இச்செயல்முறை தேசிய இருதய சிகிச்சை மையத்தில் 6 மே 2021 அன்று இதய செயலிழப்பு & இதய மாற்று குழு மற்றும் இருதயவியல் துறையால்(The Heart Failure & Heart Transplant team and Cardiology Department) மேற்கொள்ளப்பட்டது.

இந்த இருதய நோய் இரத்தம் வலது எட்ரியத்திலிருந்து(right atrium) வலது வென்ட்ரிகலுக்கு(right ventricle) செல்ல உருதுணையாக இருக்கும் நடுவே உள்ள வால்வு செயலழிந்ததால்  இரத்த ஓட்டம்  பின்னோக்கி செல்வதாகும். அதனால், இந்நோய் ட்ரைகுஸ்பிட் வால்வு ரிகர்ஜிடேஷன் (Tricuspid valve regurgitation) என்று அழைக்கப்படுகின்றது. இருதயத்திற்குக் கொண்டு வரும் வெனாகாவா இரத்தக்குழாயை(venacava) இது சேதப்படுத்துகிறது.

வலது வென்ட்ரிகலின் (left ventricle) அளவு பெரிதடைந்து அந்த வால்வை சரியான முறையில் இயங்கவிடாமல் தடுப்பதால்தான் இந்நிலமை ஏற்படுகின்றது.இந்நோய்க்கு ஆளாகுபவர்கள் சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும கால், வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை காணலாம். இந்த அறிகுறிகளை பெரும்பாலும் நிலைமை மோசமடையும்போது காணலாம்.

சில நோயாளிகள் மருந்து உட்கொள்வதன்வழி இந்நோயைத் தவிர்க்க முடியும். ஆனால், நிலமை மோசமானால் அவர்களுக்கு பளுதடைந்த இருதய வால்வை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

ஆனால், அனைத்து நோயாளிகளும் அறுவை சிகிச்சையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாததால் அவர்களால் அறுவை சிகிச்சைக்குச் செல்ல முடியாத நிலமை ஏற்படுகின்றது என்று டத்தோ டாக்டர் அஸ்மீ முகமட் காஜி, மருத்துவ இயக்குநர், இதய செயலிழப்பு மற்றும் இதய மாற்று, ஆலோசகர் இருதயநோய் நிபுணர் கூறினார்.

ட்ரைகுஸ்பிட் வால்வு ரிகர்ஜிடேஷனுக்கான( tricuspid valve regurgitation ) பொதுவான அறுவை சிகிச்சை அனூலோபிளாஸ்டி(annuloplasty) ஆகும். இச்சிகிச்சை இதயத்தில் உள்ள வால்வைச் சுற்றிய வளையத்தை இறுக்குவதாகும். ஆனால், விரிவடைந்த ட்ரைகுஸ்பிட் அன்லஸ் (Tricuspid annulus) அல்லது பேஸ்மேக்கர்(Pacemaker) உள்ள நோயாளிகளால் இந்த சிகிச்சையை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆகவே, இந்நிலமையை தவிர்ப்பதற்கு  டிரிக்வால்வு போன்ற புதியவகை அறுவை சிகிச்சை  மிகவும் அவசியம்  என்று அவர் கூறினார்.

இரட்டை வால்வு அமைப்பு (The dual-valve system) மிகவும் எளிமையான அறுவை சிகிச்சை மட்டுமல்லாமல் நோயாளிகளையும் மிக விரைவில் குணபடுத்தும். இதனால், மருத்துவர்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிகின்றது.

இதற்கிடையில், டத்தோ டாக்டர் ஐசை அசான் அப்துல் ராஹிம், தலைமை நிர்வாக அதிகாரி & மூத்த ஆலோசகர் இருதயநோய் நிபுணர், IJN புதிய  சிகிச்சை முறைகளைக் கண்டறிந்த தேசிய இருதய சிகிச்சை மையத்தின்(IJN) குழுவிற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தேசிய இருதய சிகிச்சை மையத்தின் வெற்றிக்குக் காரணம் அங்கு பணி புரியும் பணியாட்களின் புதிய கண்டுபிடிப்புகளில் உள்ள ஆர்வமும் விடாமுயற்சி மட்டுமல்லாமல் நோயாளிகளின் மேல் இருக்கும் அன்பும் அக்கறையும் கூட என்று கூறப்படுகின்றது.

(மொழியாக்கம் – கவிதா)