கவிதா கருணாநிதி – இவ்வருடத்தில் அமெரிக்காவின் டியுக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளைக் கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் மூலம் நம் உடலில் புற்றுநோய் மேலும் பரவக் கொலஸ்ட்ராலின் பங்களிக்கிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடின்றி உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் கல்லீரல் உருவாக்கும் மெழுகுபோல் இருக்கும் ஒருவகை உடல் பகுதியாகும். உடலின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் குறிப்பிட்ட அளவு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. ஆனால், அளவுக்கு அதிகமாகக் கொழுப்பு உடலில் சேரும்போது (ஹைப்பர்லிபிடீமியா நிலை), அவை ரத்த நாளங்களில் படிகின்றன. இந்தக் கொழுப்புப் படிவுகள் மாரடைப்பு அல்லது மூளைத்தாக்கு (ஸ்டிரோக்) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கின்றன.
புற்றுநோய் ஏற்பட்டால் நாம் மருந்தும் சிகிச்சை முறையிலும் அப்புற்றுநோய் அணுக்களை அழித்து மற்ற இடத்திற்கு வெகுவாகப் பரவுவதைத் தடுக்க முடியும். ஆனால், நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் அது புற்றுநோய் அணுக்கள் அழியாமல் இருக்கப் பாதுகாப்பு அளிக்கிறது என்று இக்கண்டுபிடிப்பு குறிப்பிடுகிறது. இதனால், புற்றுநோய் அணுக்கள் மற்ற இடத்திற்கும் பரவி நிலைமையை இன்னும் மோசமடையச் செய்கின்றது.
தலைமை விஞ்ஞானி டாக்டர் டொனால்ட் மெக்டொனல்(Ph.D.) – மருந்தியல் (Pharmacology) மற்றும் புற்றுநோய் உயிரியல்(cancer biology) பேராசிரியர் இக்கண்டுபிடிப்பைப் பற்றி விவரித்துள்ளார். உடல் பருமன் மற்றும் டிசிலிபிடெமியா/ ஹைபெர்கொலட்ரோலெமியா (dyslipidemia/hypercholesterolemia) போன்றவை புற்றுநோய் அதிகரிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகிறார்.
உயிரணுக்களின் உயர் அறிவியல் விஞ்ஞானி மற்றும் அமெரிக்கா புற்றுநோய் கலகத்தைச் சார்ந்த புற்றுநோய் ஆய்வாளர் டாக்டர் லின் எல்மோர் (Ph.D) அவர்களும் இக்கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறியுள்ளார். அதிகக் கொலஸ்ட்ரால் எஸ்ட்ரோஜென்(Estrogen) என்ற ஒரு வகை ஹார்மோனை(Hormone) அதிகரித்து மார்பு( Breast) மற்றும் பிரசவப்(Gynecology) புற்றுநோயை உண்டாக்கும் என்கிறார்.
ஆய்வாளர்கள் எலியை வைத்து ஆராய்ச்சியை மேற்கொண்டதில் 24HC (கொலஸ்ட்ரால்) புற்றுநோயின் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்திருக்கின்றது என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், 24 HC பெரொப்டோசிச் (ferroptosis) என்றழைக்கப்படும் இயற்கையாகப் புற்றுநோய் அணுக்களை அழிக்கும் செயல்முறையும் இந்தக் கொலஸ்ட்ரால் அர்ஹிகரிப்பால் தடுக்கப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ளத.
இருந்தாலும், டாக்டர் மெக்டொனல் கொலஸ்ட்ரால் எப்படி இயற்கை செயல்முறையான பெரொப்டோசிசை(ferroptosis) தடுத்துப் புற்றுநோயை அதிகப்படுத்தியது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அவர்கள் மார்பு( Breast) மற்றும் பிரசவப்(Gynecology) புற்றுநோய் ஆராய்ச்சியை இன்னும் விரிவாக மேற்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது, அதாவது புற்று நோய் உள்ளவர்களுக்குக் கொலஸ்ரோல் இருந்தால் அது ஆபத்தாகும். அவர்கள் விரைவில் இறக்கக்கூடும்.