அரசியலமைப்பு சட்டமும் அரங்கேறும் நாடகமும் – பகுதி 2

அரசைத் தீர்மானிப்பது யார்?

ஒரு நபரை அரசாங்கத் தலைவராகத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு சட்டமன்றத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளிடமிருந்து மிகத் தெளிவான, ஒருமித்த கருத்து இருக்கும்போது, ​​அதற்குப் பதிலாக வேறு ஒரு நபரை அரசாங்கத் தலைவராக நியமித்தால் அதை நிச்சயமாக விசித்திரமாகக் கருதப்பட வேண்டும்.

ஒரு பொதுக் கண்ணோட்டத்தில், நாம் தனிப்பட்ட முறையில் விரும்பும் மாற்றத்தைச் செய்ய ஒரு மன்னர் தங்கள் விருப்பத்தைப் பயன்படுத்தும் போது அவரை நாமும் உற்சாகப்படுத்த ஆசைப்படலாம்; அல்லது ஒருவேளை நாம் கவலைப்படாமல், அரசன் ஆண்டால் ன்ன, ஆண்டி ஆண்டால் என்னா, எந்த வித்தியாசமும் ஏற்படாது என்று விட்டு விடுவோம்.

ஆனால், ஆபத்தான கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகள் உண்மையில் மிகவும் தீவிரமானதாகக் கருதப்பட வேண்டும். காரணம், மலேசியா போன்ற ஒரு நாட்டில், பிரதமருக்கு அபரிமிதமான அதிகாரம் உள்ளது.

உண்மையில், மலேசிய அரசியலில் மிக முக்கியமான ஒரே கேள்வி பிரதமர் யார் என்பதுதான்?நமது நாட்டின் பலமான அதிகாரத்தை மையப்படுத்தியுள்ள ஒரே பதவி பிரதமர் பதவியாகும். இன்று அனைத்து செயல்பாட்டு அதிகாரமும் பிரதமரிடம் இருந்துதான் வருகிறது.

சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான பிரதிநிதிகளின் தெளிவான அல்லது  தெளிவற்ற தேர்வு; போட்டி காரணமாக வேறொரு வேட்பாளரை நியமிப்பதற்கு ஆதரவாகச் செயல்படுதல் அல்லது  புறக்கணித்தல். இப்படியாக இது மலேசிய அரசியலின் அதிகார இயக்கவியலை முற்றிலும் தலைகீழாக மாற்றிவிடுகின்றது.

ஷெரட்டன் நகர்வுக்குப் பின்னர் நடந்த பல்வேறு அரசியல் சூழ்ச்சிகளால், வாக்காளர்கள் அரசியல் செயல்பாட்டில் உண்மையில் பயனற்ற பகடைக்காய்களாகவும் அரசியல் தாக்கம் அற்ற செல்லாக் காசாகவும் மாறி வருவதை உணர்கிறார்கள்.

அதற்குக் காரணம், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியைத் தேர்ந்தெடுத்தவுடன், அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ரைத் அரசாங்கத்தின் பிரதமராகத்  தேர்ந்தெடுப்பார் என்பதை க்க கரமாக முடிவு செய்ய அவர்களுக்கு ண்மையாகவே வழி இல்லை.

நீண்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பிரதிநிதிக்கு வாக்களிக்க மாட்டோம் என்று மட்டும் ஒரு அச்சுறுத்தலைப் பதிவு செய்யலாம்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் எப்போது கலைக்கப்படும் என்ற இந்தக் கேள்வியையும் சுருக்கமாகப் பார்ப்போம்.மலேசியா அரசியலமைப்பு சட்டம் பிரிவு 40A (2) (b) “நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான கோரிக்கைக்கான ஒப்புதலை நிலுவையில் வைக்கலாம்” இது யாங் டி-பெர்டுவான் அகோங் தனது விருப்பப்படி செயல்படலாம் என்று தெளிவாகக் கூறுகிறது.

இது மிகவும் தெளிவானது.

ஆனால், தேர்தல்கள் எப்போது நடத்தப்பட வேண்டும் என்று விவாதிக்கும் குழுவில் ஒரு அரசியலமைப்பு மன்னர் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்வது தவறாக இருக்கலாம்.

வெஸ்ட்மின்ஸ்டர் மைப்பு அமெரிக்க அமைப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இது ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய மிகக் கடுமையான, கணிக்கக்கூடிய தேதிகளைக் கொண்டுள்ளது.

இதற்கிடையில், வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பில் உள்ள அரசாங்கத் தலைவர், அந்த சட்டமன்றத்தின் கால வரம்பு வரை (மலேசியாவின் வழக்கில் இது ஐந்து ஆண்டுகள்) தங்கள் பதவிக்காலத்தில் எந்த நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்கக் கோருவதற்கு அதிகாரம் பெற்றவர்.

எந்த அமைப்பு சிறந்தது என்ற கேள்வியை இப்போதைக்கு விட்டுவிடுவோம்.

செல்வாக்கு கொண்டவர்களின் வட்டம்

வெஸ்ட்மின்ஸ்டர் செயல்முறை செயல்படும் விதம் என்னவெனில், பிரதம மந்திரி, அமைச்சரவை மற்றும் பிரதமரின் செல்வாக்கு வட்டத்தில் இருப்பவர் ஆகியோர் சட்டமன்றத்தை கலைப்பதற்கான ரிக்கையை எப்போது சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்மானிக்க ஒன்றாக வேலை செய்வார்கள்.

இந்த அரசியல் முடிவு எடுக்கப்பட்டவுடன், கோரிக்கை அரசியலமைப்பின் படி மன்னருக்கு அனுப்பப்படும், அவர் இந்த கோரிக்கையை அங்கீகரிக்க அல்லது மறுக்கத் தெளிவான அதிகாரம் கொண்டவர். மன்னர் சரியாக ஈடுபடும் நிலை இதுவாகும்.

வெஸ்ட்மின்ஸ்டர் அரசியலமைப்பு முடியாட்சியில் சரியான வழிமுறை இதுவாகும்.

வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பு இன்று உலகிற்கு எவ்வளவு பொருத்தமானது என்பதைச் சுற்றிப் பல  விவாதங்கள் உள்ளன; ஆனால் இந்த கேள்வியில் நமது உணர்வுகள் என்னவாக இருந்தாலும், உண்மை என்னவென்றால், இன்று நாம் காணும் அமைப்பு இதுதான்.

இது ஒரு நீண்ட காலமாக நடைமுறையில் உயிர்வாழும் ஒரு அமைப்பாகும், மேலும் குறைந்தபட்சம் ஒரு மட்டத்திலாவது செயல்படாமல் எந்த அமைப்பும் நீண்ட காலம் வாழ முடியாது.

எவ்வாறாயினும், இந்த அமைப்பை முறை நீதியும் தர்மமும் கொண்ட வழிமுறைகளின் மூலமாகச் சரியான அரசியலமைப்பை ஒரு அரசியல் அறமாகவும்  நடைமுறை வழக்கமாகவும் நாம் கடைப்பிடித்தால் மட்டுமே அது செயல்பட முடியும். அவ்வாறு செய்யத் தவறினால், ஜனநாயகக் கொள்கைகளிலிருந்து ஒரு கணமான சிக்கலில்  மக்களும் நாடும் சிக்கிக்கொள்ளும்.

அது சுயநிர்ணய உரிமைக்கான விலகலுக்கு வழிவகுக்கும் என்பதை வரலாறு காட்டுகிறது. (முற்றும்)


NATHANIEL TAN ஜனநாயகத்தைப் படிப்பவர். Twitter: NatAsasi, மின்னஞ்சல்: [email protected].

இங்குத் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள்/பங்களிப்பாளரின் கருத்துக்கள் மற்றும் அவை மலேசியாகினியின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய அவசியமில்லை.