அடிமட்ட ஏழ்மையில் உள்ள இந்தியர்களுக்கான தீர்வு நேரடியான ஈடுபாட்டு உதவியாக, அவர்கள் வறுமை பண்பாட்டு சுழச்சியில் இருந்து மீட்சிசெய்யும் வழிமுறையில் தொடர்சியுடன் இருக்க வேண்டும் என வாதிடுகிறார் குலா- ஆர்.
பி40 குழுமத்தில் உள்ள இந்தியர்களுக்காக அவர்களின் அடிப்படை தேவைகளை வலுப்படுதுவதற்கு ஒற்றுமை துறை அமைச்சு முன்னெடுத்த பிரத்தியேக திட்டத்தை நான் வரவேற்கிறேன்.
விளக்கமளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இக்கூட்டத்திற்கு மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ , தெரெச கோக் இவர்கள் வந்திருந்தனர் . வேறு அலுவல் காரணமாக ஒற்றுமை துறை அமைச்சரால் கலந்து கொள்ள இயலவில்லை
அமைச்சின் அதிகாரிகளும் பேராசிரியர் பாண்டியன் அவர்தம் குழுவினரும் இத் திட்டம் குறித்து விளக்கமளித்தனர். இந்திய சமுதாயத்தின் வருமானம், சேமிப்பு ,வீட்டுடமை , சமுக பொருளாதார பிரச்சனைகள் , இவைகளைக் களையும் நோக்கங்களைக் கொண்ட ஒரு திட்டமாக அது இருந்தது.
இப் பிரச்சனைகள் இந்தியர்களுக்குகே உரிய ஒன்று அல்ல . எல்லா பி 40 சமூகத்திற்கும் இது பொதுவானதாக உள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இந்தியர்கள் என்று வரும் பொழுது அவர்களின் பிரச்சனைகளை சரித்திர பின்ணணியைக் கொண்டு ஆராய வேண்டியுள்ளது.
அவர்கள் தோட்டபுறத்திலிருந்து புலம் பெயர்ந்து நகர்புரங்களுக்கு எந்த வித ஆதரவும் சமூக பாதுகாப்பும் இல்லாமல் வந்ததனால் அதன் தாக்கத்தை நாம் இப்பொழுது காண்கிறோம். பல தறைமுறைகளைத் தாண்டியும் அதே ஏழ்மை நிலை இன்றும் அவர்களை தொடர்கிறது.
நகர் புறத்தை நாடி வந்த இந்தியர்களுக்கென அன்றைய அரசாங்கம் எந்த ஒரு முழுமையான திட்டத்தையும் வைத்திருக்கவில்லை.
நகர்புறங்களில் வாழ்வதற்கு அடிப்படை தேவைகளாக உள்ள சமூக பொருளாதார உதவிகள் , திறன்கள் இல்லாததால் , அவர்கள் வலுக்கட்டாயமாக இடம் மாற்றப்பட்டு தங்களுக்கு உரிமை இல்லாத பிறர் நிலங்களில் ,அது அரசாங்க நிலமோ , அல்லது பெரிய வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான நிலமோ , தங்களின் வாழ்வாதாரத்தை அமைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டனர். இதனால் அங்கிருந்து எந்த நேரத்திலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு உதரணாமாக என்னுடைய தொகுதியில் கம்போங்க் தைய்லி, ஸ்பூனர் சாலையில் உள்ள இந்தியக் குடும்பங்கள் பற்றி கூறலாம் .இவர்கள் தலை முறை தலைமுறையாக ஏழ்மை நிலையில் ஓரே இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.
இன்று நமக்கு விளக்கப்பட்ட திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமே கவர்ச்சியாக இருக்கின்றன. ஆனால் அவை மத்தியில் இருந்து நிர்வகிக்கப்பட்டாலோ அல்லது அதில் பங்குகொள்ள இ-காசி திட்டத்தில் இணையவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலோ அது எதிர்பார்த்த பலனை தரப்போவதில்ல. இவைகள் பலன் தர வேண்டுமென்றால் அவைகள் மக்கள் இருக்கும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் .ஏழை இந்தியர்கள் சிறுபான்மையினராக அங்குமிங்கும் பரந்து கிடப்பதினால் அவர்கள் இருக்குமிடத்தில் அத் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்க கேந்திரங்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
என்னுடைய தொகுதியிலே அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். அராசங்கம் இந்த திட்டத்தை இங்கிருந்து ஆரம்பித்தால் பிரச்சனைகளை புரிந்து கொள்ளவும் அதற்கேற்ப திடங்களை செயல் படுத்தவும் அது ஏதுவாக இருக்கும். உதாரணத்திகு இங்கு வாழும் பலருக்கு நிலப்பிரச்சனைகள் உள்ளன, இதை முதலில் களைந்தால்தான் அவர்களின் வீட்டுரிமை பற்றி பேசலாம். அதற்கு அரசாங்கம் களத்தில் நேரடியாக இறங்க வேண்டும்.மத்தியில் இருந்து ஆணை இட்டால் எதுவும் நடக்கப்போவதில்லை.
மக்களின் பிரச்சனைகளை அவர்கள் வாழும் இடத்தில் நின்று ஆய்ந்தால்தான் நல்ல தீர்வு கிடைக்கும். அவர்களின் சமூக பொருளாதார கோணத்திலிருந்து பார்க்கும் போது பிரச்சனைகள் வெவ்வேராக தெரியும் ,எல்லா பிரச்சனைகளுக்கும் ஒன்றே தீர்வாக அமையாது. சிலருக்கு தொழிற்செய்வதற்கு உதவி தேவைப்படலாம் மற்றவருக்கு பிள்ளைகளின் கல்விக்கு உதவி தேவைப்படலாம் . இப்படி வெவ்வேறு கோணத்தில் தேவைகளை அணுகி அது உள்ள இடத்திலிருந்தே களைய வேண்டும்.
ஆகவே அரசாங்கம் இந்தியர்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற முற்றிலும் புதிய அணுகுமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
சமூக பொருளாதார உதவிகள் மக்களிடம் போய் சேரும் வகையில் அதிகாரத்தை பரவலாக்கி மக்களை மையாமாக வைத்து அவர்களின் தன்னாளுமைக்கு உட்படுத்தி அவர்கள் வழியிலேயே தீர்வு காண்பதுதான் சிறந்த வழி.
மு .குலசசேகரன் -ஈப்போ பாரட் நாடளுமன்ற உறுப்பினர்