எஸ். தயாபரன் – “ஆனால் சிந்தனை மொழியைச் சிதைத்தால், மொழி சிந்தனையையும் சிதைக்கும்.” என்கிறார் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், 1984.
நமது நாட்டின் ஆட்சி எவ்வளவு அறிவுப்பூர்வமாகவும், தார்மீக ரீதியாகவும் திவாலாகி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அரசியலில் தொடரும் ஊழல் வழக்குகளையோ ஊழல் குற்றச்சாட்டுகளையோ பார்க்க வேண்டியதில்லை.
அரசியல் செயற்பாட்டாளர்களின் அடிக்கடி இனவாதக் கருத்துக்களையும் கொள்கைகளையும் நாம் பார்க்க வேண்டியதில்லை.
அதையெல்லாம் விட, நமது தேசிய மொழியான பகாசா மலேசியாவைப் பயன்படுத்த வேண்டும் என்ற டேவான் பஹாசா டான் புஸ்தகா (டிபிபி) -வின் கவர்னர்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் அவாங் சரியனின் கருத்து மட்டுமே போதும்.
அதாவது அவர் சொல்கிறார், “மலேசியர்கள் மலாய் மொழியைப் பயன் படுத்தாமல் இருப்பது தேசிய மொழிக்கு அவமரியாதை” ஆகுமாம்.
இது ஒரு மலாய் தேசியவாத மேலதிகார சிந்தனையின் சித்தாந்தத்தில், இவரின் கருத்துப்படி யாரையும் எந்த நேரத்திலும் தேசிய மொழியை அவமதித்ததாக யொரு தண்டனைக்கு உட்படுத்தலாம் என்பதாகும்.
யதார்த்த நிலையில், நாம் அனைவருமே மலாய் மொழியை நமது தொடர்பு மொழியாக அன்றாடம் பயன்படுத்துகிறோம். அது தேசிய மொழி என்பதற்காக அல்ல, மாறாக அது நம்மிடையே நடைமுறையாகிவிட்ட ஒரு பண்பாட்டு மொழி என்பதினால்தான்.
அதோடு, உண்மையில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதையும் தங்களுக்குள் தாய்மொழியையும் அடிக்கடி பயன்படுத்துகிறார்கள்.
உண்மையில், மலாய்க்காரர்கள் அல்லாதவர்களிடையே சாதாரண அன்றாட நடவடிக்கைகளுக்கு இவை இயல்பு மொழிகளாகும்.
மலாய் மொழியைத்தான் பேச வேண்டும் என்பதன் நோக்கம் என்ன?
கடந்த 2019-இல் மதவாத அரசியல் கட்சியான பாஸ், தனது உரிமை கோரல் மாநாட்டில், அரசாங்கத்தின் அனைத்து தலைமை பொறுப்பிலும் மலாய்காரர்களை மட்டும்தான் நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதே மாநாட்டில் உப்சி பல்கலைகழகத்தின் பட்டதாரி ஒருவர் தாய்மொழி பள்ளிகளை மூட வேண்டும், அப்படிச் செய்தால்தான் அனைத்து தரப்பினரும் ஒரே வகையான கல்வியை கற்று ஒற்றுமையை உருவாக்க இயலும் என்றார்.
இனவாதத்தின் வழி அரசியலில் பேர் போடும் நபர்கள் உண்மையான தேசப் பற்றையும் நாட்டின் மீதா ஆழமான நேசத்தையும் காட்டும் தன்மை கொண்டவர்கள் அல்ல, மாறாக இனவாத அரசியலின் வழி ஓர் ஆழமான இன-மதவாத அரசியல் அமைப்புமுறைக்கு வித்திட்டு அதன்வழி ஆதிக்கம் செலுத்தும் சித்தாந்தத்தை கொண்டவர்கள்.