டி.கே.சுவா – முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தற்போதைய வட்டி விகிதத்தை பராமரிப்பதில் வெறித்தனமாகத் தோன்றினார், குறிப்பாக கடன் வாங்குபவர்கள் மற்றும் சிறு வணிகங்கள் மீதான வட்டிகள் மேலும் உயர்த்தப்பட்டால் ஏற்படும் பாதகமான தாக்கங்களை மேற்கோள் காட்டினார்.
மலேசியாவில் மட்டுமல்ல, உலகளவில் பணவீக்கம் உள்ளது. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது, மத்திய வங்கிகளில் இருந்து தேசிய கருவூலங்கள் மூலம் கடன் வாங்கியதன் மூலம் பில்லியன் கணக்கான பணம் தடையின்றி, பணம் உருவாக்கப்படுவதே முக்கிய காரணம்.
பெரும்பாலான அரசாங்கங்கள் இதைத்தான் செய்கின்றன – பணத்தை உருவாக்குகின்றன, ஆனால் பணத்தின் அளவுக்கு செல்வத்தை (சொத்தை) உருவாக்குவதில்லை.
இப்போது நிலவுவது உயர் பணவீக்கம். “பணவீக்கம் எப்பொழுதும் மற்றும் எல்லா இடங்களிலும் ஒரு பணவியல் நிகழ்வு ஆகும், அது மொத்த உற்பத்தியைவிட விட பணத்தின் புலக்கத்தை விரைவாக அதிகரிப்பதன் மூலம் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும்.” (மில்டன் ப்ரைட்மேன்)
வட்டி விகிதங்களை குறைப்பது கடனைத் திருப்பிச் செலுத்த உதவலாம் ஆனால் அதிக பணவீக்கம், கடன் வாங்காதவர்கள் உட்பட அனைவரையும் பாதிக்கும்.
அவர்களின் வருமானம் மற்றும் சேமிப்புகள், குறிப்பாக ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில், அவர்கள் உயிர்வாழ்வதற்கு அதிகம் மீதம் இல்லாத நிலையில் அவர்களின் சேமிப்பின் மதிப்பு குறந்துவிடும்.
குறைந்த வட்டி விகிதங்கள் மக்களின் செலவை ஊக்குவிக்கிறது, இது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கிறது. பணத்தின் மதிப்பு சரிவடைகிறது.
அதோடு, பிற நாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டி விகிதங்களை பராமரிப்பது ரிங்கிட் மதிப்பை மேலும் குறைக்கலாம், இதனால் இறக்குமதி பணவீக்கத்தை மேலும் தூண்டலாம். அதாவது அயல் நாட்டு பொருட்களுக்கு நாம் இன்னும் அதிக பணம் செலுத்த வேண்டும்.
நமது பொருளாதாரத்தை நிர்வகிப்பதற்கு “இதுதான் தீர்வு” என்று எருவும் இல்லை. ஆனால் எந்த பரிவர்த்தனைகளும் முடிந்தவரை பலருக்கு பயனளிக்கும் நோக்கில் உரிய பரிசீலனைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
நாம் காணுவது என்ன? உயர் பணவீக்கத்தை நீடிக்க அனுமதிக்க கூடாது. இது செலவழிக்கக்கூடிய வருமானத்தின் மதிப்பைக் குறைக்கிறது மற்றும் தனிநபர்களின் சேமிப்பை அரித்துவிடும். கொஞ்ச கடன் அல்லது கடன் இல்லாதவர்கள் ஏன் அதிகமாக கடன் வாங்கி வாழ்பவர்காளுக்கு உடன் பாட்டு தங்கள் சேமிப்பின் மதிப்பை தாரைவார்க்க வேண்டும்?
உண்மையில், இன்று உலகப் நிலையை பார்த்தால், அது விவேகமாக சேமித்து வாழ்பவர்களுக்கு பயன் தரும் வகையில் இல்லை. மாறாக அவர்களை தண்டிக்கின்றன.
பணத்தை உருவாக்குவதும் அப்படித்தான். ஃபியட் பண உருவாக்கம் வழி, அதாவது ஒவ்வொரு நாடும் விருப்பப்படி பணத்தை உருவாக்க முடியும். குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தொடர்புடைய அதிகரிப்பு இல்லாமல் பணத்தை உருவாக்கியது ஒரு வெளிப்படையான பணவீக்கமாகும்.
தொற்றுநோய்க்குப் பின் உலகம் முழுவதும் பணவீக்கம் இருப்பதைக் கண்டு நாம் ஏன் ஆச்சரியப்படுகிறோம். உக்ரைனில் நடந்த போர் நிலைமையை இதை மேலும் மோசமாக்கியுள்ளது.
வட்டி விகிதத்தை குறைவாக வைத்திருப்பதற்கும் அதை அதிகரிப்பதற்கும் இடையில், பேங்க் நெகாரா மலேசியாவில் உள்ள வல்லுநர்கள் ஒரு தரமான சமநிலையை அடைய வேண்டும். அவர்கள் அளவுக்கதிகமாக கடன் வாங்குபவர்களுக்கு துணை போகக்கூடாது.