மறைந்த ஒரு தோட்ட போராளிக்கு அஞ்சலி – அருட்செல்வன்

டெனூடின் தோட்டப்போரளிகளில் ஒருவரான ஆறுமுகம் அவர்கள் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி  காலமானார். 65 வயதே ஆன அவர் தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளைத் தனியே விட்டுச் சென்றுள்ளார். அவர் மலேசிய சோசிலிச கட்யின் தீவிர பற்றாளர் ஆவார். டெனூடின் செம்பனைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பணம், தண்ணீர் சிக்கல், குடியிருக்க வீடு என பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தி, இறுதியில் அதன் உச்சமாக அவர்களுக்கு இலவசவீடுகள் வழங்கபட காரணமாக இருந்தவர்.

சுமார் 21 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த டெனூடின் தோட்டத்தில் 16 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்ட வரலாற்றை பற்றி உங்களிடம் எடுத்துரைக்க விடும்புகிறேன்.

காலமான ஆறுமுகம் அவர்கள் முனியாண்டி, சேது, பிரான்சிஸ், பத்துமலை ஆகியோருடன் சேர்ந்து  இப்போராட்டத்தில் ஆற்றிய பங்கு முதன்மையானது.  சரியாக 16 டிசம்பர் 2002 தொடங்கி 27 டிசம்பர் 2002 வரை 16 நாட்களுக்கு இப்போராட்டம் நடத்தப்பட்டது.

UKM பட்டதாரி, JKMI, CDS பிறகு மலேசிய சோசிலிச கட்சி என அவரது போராட்ட வாழ்வின் காலவரிசை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது;

4 டிசம்பர் 2002- திகதில் சரியாக மதியம் 3.00 மணியளவில் டெனூடின் தோட்டத்தில் செம்பனைத்  தொழிலாளர்கள் எழுவர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட 120.00 ரிங்கிட் சம்பளத்தைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்தனர். அந்த எழுவரில் செம்பனை குலை வெட்டுபவர்களும் அதனை சேகரிப்பவர்களும் அடங்குவர். அதிர்ச்சிக்குள்ளான அவர்கள் அந்த சம்பளக்குறைவுக்கான காரணமும் தெளிவு கிடைக்கும் வரை அந்த சம்பளத்தை ஏற்க மாட்டோம் என்ற முடிவில் உறுதியாக இருந்தனர்.

5 டிசம்பர் 2002-இல் அத்தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்திருந்தனர். தோட்ட நிறுவாகம் சம்பளக்குறைவுக்குத் தெளிவு கொடுப்பதற்கும், வழக்கமான சம்பளத்தை கொடுப்பதற்கும் ஒப்புக்கொண்டாலும் மட்டுமே இயல்பு வேலைக்கு திரும்புவோம் என கூறினர்.

எனினும் நிறுவாகம் இது குறித்து தொழிலாளர்களிடம் பேச முன்வரவில்லை. எனவே, தொழிலாளர்கள்  இச்சிக்கலை தேசிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் (NUPW) தலைமை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அச்சங்கத்தின் செயலாளர் ஜி.சங்கரன் மற்றும் சிலாங்கூர் பிரிவை சேர்ந்த தமசேகரன் ஆகியோர் இச்சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்துடம் கலந்துரையாடல் நடத்தி, 10 டிசம்பர் 2002 தேதிக்குள் தகவல் தெரிவிப்பதாக உறுதி கூறினர்.

7 டிசம்பர் 2002 – தொழிலாளர்கள் மீண்டும் நிறுவாகத்திடம் தங்களுக்கு சேரவேண்டிய சரியான சம்பளத் தொகையை கோரினர். ஆனால் அந்நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. எனவே, அத்தோட்ட தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர். அதே சமயம்,  காவல் நிலையத்தில் பாதுகாப்பு கருதியும் சம்பளச் சிக்கல் குறித்தும் இரண்டு புகார்கள் செய்தனர்.  வெளி தொழிலாளர்களும், குண்டர்களும் தங்களது லயங்களில் தங்களுக்கு மாற்றாக வேலைக்கு கொண்டுவரப்படலாம் என்ற பயம் அவர்களுக்கு உள்ளூர இருக்கவே செய்தது.

9 டிசம்பர் 2002-இல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்கள் கேட்டபடி விளக்கம் கொடுக்க டெனூடின் தோட்டத்திற்கு அவர்களை அழைத்தது. ஆனால் எதிர்ப்பார்த்தது போல அல்லாமல் விளக்கத்திற்கு பதிலாக அவர்கள் பழி சுமத்தப்பட்டார்கள். கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவில்லை எனவும், அதனால் செம்பனை வியாபார வரவு குறைந்துவுள்ளது எனவும் அதன் காரணமாகவே சம்பளம் குறைக்கப்பட்டது எனவும் குற்றம்சாட்டப்பட்டார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத தொழிலாளர்கள் உடனடியாக அதற்கு எதிர்ப்பு  தெரிவித்தார்கள். 10 ஆண்டுகளாக ஒரே மாதிரி வேலை செய்துள்ளதாகவும்  எங்களுக்கு  இதுவரை இந்த அளவுக்கு குறைந்த சம்பளம் கொடுக்கப்பட்டதில்லை எனவும் பதில்கூறியுள்ளார்கள். இதில் கடந்த நவம்பரில் இரண்டு கூடுதல் வேலைகள் வற்படுறுத்தி வழங்கப்பட்டுள்ளது. அந்த கூடுதல் வேலைக்கு தனி சம்பளம் உண்டு எனவும் உறுதியளித்துள்ளது நிறுவாகம். நிறுவாகத்தின் வாக்குறுதிகள் பின்வருமாறு;

ஓராண்டுக்கு மேலாக கவனிப்பாரற்றுகிடந்த லயத்து செம்பனை மரக்கிளைகளை வெட்டுதல், கீழே உதிரும் செம்பனை பழ உதிரிகளை பொருக்கி கோனிப்பையில்  சேகரித்தல். ஆனால் வழக்கத்துக்குக் கூடுதலாக கொடுக்கப்பட்ட இந்த வேலைக்கான கூலி நவம்பர் மாத சம்பளத்தில் இணைக்கவில்லை.

அன்று, நிறுவாகத்தால் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும்  பல வாக்குறுதிகளைப் பற்றியும் தொழிலாளர்கள் முன்வைத்தார்கள். தோட்ட லயங்களில் இருந்த மரங்களின் எண்ணிக்கை குறைப்பு, பணி பகுதி தூய்மை, தொழிலாளர்கள் எளிதாக பணிப்புரிய  உதவும் வகையிலான பாதையமைப்பு இது போன்ற வசிதிகள் செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்றப்பாட்டிருப்பதை தொழிலாளர்கள் எடுத்துரைத்தனர். அதே சமயம் தங்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பள பணத்தை மீண்டும் கோரிப்பார்த்தனர். தோட்ட நிறுவாகம் அவர்களின் நியாயமான கோரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது. எனவே, தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டனர்.

10 டிசம்பர் 2002, போராட்டம் நான்காவது நாளாக தொடர்ந்த போது, பொது தொழிலாளர்களும் செம்பனைத்தோட்ட தொழிலாளர்கள் ஊதியத்தைக் கோரி  இணைந்து போராட தொடங்கினர். அதுவே அப்போராட்டித்திற்கு புது வீரியத்தை ஏற்படுத்தியது. அப்போதும் நிர்வாகம் அவர்களின் ஊதியத்தை கொடுக்க மறுக்கவே செய்தது. தோட்ட வேலைகள் துவங்கப்படாமல் போராட்டம் நிலைகொண்டது. அன்றைய தினம் காலையில் நிர்வாக அதிகாரிகளில் ஒருவர் மேல்நிலை அதிகாரிகளிடன் லயங்களில் மரங்களின் எண்ணிக்கை குறைப்பு பற்றி கலந்துரையாடுவதாக உறுதியளித்தார்.

இந்தச் சிக்கலுக்கு மத்தியில் தேசிய விவசாய தொழிலாளர் சங்கமோ புதிதாக நிர்ணயிக்கப்பட்ட 10.00 ரிங்கிட் சந்தா பணம் 6 மாதங்களாக செலுத்தப்படாமல் இருப்பதை தெரிவித்து; அதை செலுத்தினால் மட்டுமே  இச்சிக்கலைக் களைய உதவ முடியும் என கூறிவிட்டனர். இது சிக்கலை மேலும் வலுவாக்கியது. அதே போல சிலாங்கூர் பிரிவோ, 13 டிசம்பர்தான் தங்களால் தோட்டத்துக்கு வர இயலும் என தெரிவித்துவிட்டனர். இதற்கிடையில் சங்கதினர் இப்போராட்டத்தை நிறுத்தக்கோரியுள்ளனர். இது தொழிலாளர்களின் கோபத்தை மேலும் தூண்டவே, தங்களுக்கு முறையாக சேர வேண்டிய சம்பளப்பணம் முழுமையாக் செலுத்தப்பட்டால் மட்டுமே இப்போராட்டம் நிறுத்தப்படும் என கூறி முழுமூச்சாக போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். அதே சமயம் சங்கத்தின் சந்தா உயர்த்தப்பட்டுள்ளதற்கான காரண விவரங்களைத் தெரிவிக்காதவரை அந்த பணத்தையும் செலுத்தபோவதில்லை என தெரிவித்துவிட்டனர்.

அன்று மாலை 5.00 மணியளவில் தோட்ட நிறுவாகம் தொழிலாளர்களின் சம்பளத்தை கொடுப்பதாகவும் லயங்களில் மரங்களின் எண்ணிக்கையை 200-ஆக குறைப்பதாகவும் தெரிவித்தது. தொழிலாளர்கள் மகிழ்ந்து மறுநாள் வேலைக்குச் செல்ல சம்மதித்தனர்.

ஆனால் நிர்வாகம் கொடுத்த உறுதி நீடிக்கவில்லை, சரியாக ஒரு மணிநேரம் கழித்து மேல்நிர்வாகம் அதாவது மலேசிய விவசாய உற்பத்தியாளர் சங்கம் (MAPA) சம்பளப் பணத்தை  தர ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தொழிலாளர்கள் அனைவரையும் 11 டிசம்பர் மாலை 3.00க்கு செமெஞ்செ தோடத்தில் சந்திப்புக்கு அழைத்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அந்த அழைப்பை மறுத்து, டெனூடின்  தோட்ட அலுவலகத்திலேயே சந்திப்பு நடத்தப்பட வேண்டும் அல்லது செமெஞ்செ தோட்ட அலுவலகத்திற்குச் செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் எனவும் அழுத்தமான கோரிக்கையை விடுத்தனர். தோட்டத்தொழிலாளர்களின் இந்த கோரிக்கைக்கும் நிர்வாகம் மறுப்பையே தெரிவித்தது. எனவே 12 டிசம்பர் 2002 இல் தோட்டத்தொழலாளர்கள் இது குறித்து தொழிலாளர் இலாகா (Jabatan Buruh) அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்ய முடிவெடுத்தனர்.

11 டிசம்பர் 2002, தொழிலாளர்கள் சற்றும் குழப்பமற்ற நிலையில் தங்களது சம்பளக் கோரிக்கையை முதன்மையாகக் கொண்டு போராடினர். நிறுவாகம் கொஞ்சமும் இணங்கிவராத நிலையில் 5-ஆவது நாளாக வேலைக்குச் செல்லாமல் போராட்டம் தொடர்ந்தது. அதே சமயம் புதிய தொழிலாளர்கள் யாரும் தங்களுக்கு மாற்றாக வேலை செய்கிறார்களாக என்பதை அறிய பணியிடத்தை (field’) சுற்றி பார்வையிட்ட வண்னமே இருந்தார்கள். மேலும் சிக்கலை உடனடியாகக் களைய   தொழிலாளர்களுடனான  சந்திப்பு ஒன்றை நிறுவாகம் நடத்த வேண்டும் எனக் கோரி தொழிலாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று நிறுவாகக்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலாங்கூர் பிரிவு தேசிய விவசாய தொழிலாளர் சங்கம் (NUPW) தொழிலாளர்களுக்கு உதவுவதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறியிருந்து. மாறாக சந்தாப்பணம் செலுத்தப்பட்டால்  மட்டுமே உதவ இயலும் என  சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது.  கடந்த 30 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட சந்தாப்பணத்தை சற்றும் கருத்தில்கொள்ளாமல்,  கட்டப்படாமல் இருந்த புதிய சந்தா வசூலை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது, தொழிலாளர்களைப் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

தொடர்ந்து 12 டிசம்பர் 2002 முன்னமே திட்டமிட்டது போல ஜாலான் அம்பாங்கில் அமைந்துள்ள  தொழிலாளர் இலாகா (jabatan buruh) அலுவலகத்திற்குச் சென்று புகார் செய்தனர். அப்போது அப்பிரிவின் தலைமைப்பொறுப்பில் இருந்த திருமதி சுல்கியா பிந்தி ஹுஷைன் (puan Zulkiah binti Hussain) அவர்கள் இச்சிக்கலை  சிலாங்கூர்  தொழிலாளர் இலாகா (Jabatan Buruh Selangor) எடுத்துச் சென்றார்.  தொழிலாளர்களை சிலாங்கூர் பிரிவு இலாகா அலுவலகத்தைத் தொடர்பு தொடர்புக்கொள்ளுமாறு வழிகாட்டினார். இதற்கிடையில்  அன்றைய அதிகாலையிலேயே, கொடுக்கப்பட்ட வேலையை முழுமையாக செய்து முடிக்கவில்லை என்ற புகார் கடிதம் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. வேலை செய்து முடிக்கப்படவில்லை என்று நிறுவாகம்  குறிப்பிடும்  தேதிக்கும் புகார் கடித தேதிக்கும்  20 நாட்கள் கால வேறுபாடு இருந்தது. இது குறித்து காவல் நிலையத்தில் தொழிலாளர்கள்  புகார் செய்தனர்.

7-வது நாள் போராட்டத்தின்போது (13 டிசம்பர் 2002) சிலாங்கூர் பிரிவு தொழிலாளர் இலாகாவிலிருந்து (Jabatan Buruh Selangor)  சுமார் 11.30 மணியளவில் 2 அதிகாரிகள் போராட்டம் குறித்து தோட்டத்திற்கு வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் தொழிலாளர்களுடன்  பழுதடைந்த நிலையில் மோசமாக இருந்த தோட்ட வீடுகளை பார்வையிட்டனர்.  மேலும் சம்பள விவகாரம் குறித்து தோட்ட நிறுவாகத்தின் மேலதிகாரியிடம் பேசுவதாகவும்; அதன் பின்னர் அதுகுறித்த முடிவை தெரிவிப்பதாகவும் உறுதியளித்தனர்.

மேலும், கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்கவில்லை என்ற புகார் கடிதத்தை பெற்ற தொழிலாளர்கள் மட்டும் அக்கடிதத்திற்கு பதில் கடிதம் கொடுத்தனர்.  அக்கடித உள்ளடக்கம் பின்வருமாறு;

  1.  > வேலையை செய்து முடிக்கவில்லை என்ற புகார் ஏற்றுக்கொள்ளப்படாதது.

2..> கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களின் எண்ணிக்கை உண்மைக்கு மாறானது; காரணம் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையே கடிதத்தில் காட்டப்பட்டுள்ளது.

  1.   > நவம்பர் மாதத்தில் கூடுதல் வேலை கொடுக்கப்பட்டது.

4 > புதிய விதிமுறைகள், 1985 முதல் அமலிலிருந்த வழக்கங்களுக்கு மாறாக இருக்கிறது.

  1. > சம்பந்தப்பட்ட தேதியிலிருந்து 20 நாட்கள் தாமதமாகப் புகார் கடிதம் அனுப்புவது அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

டிசம்பர் மாதத்தில் சம்பளச் சிக்கல் விவகாரம் தொடர்பாக  வேலைக்கு செல்லவில்லை என்று நிறுவாகம் கொடுத்த புகார் கடிதத்திற்கும் தொழிலாளர்கள் இவ்வாறு பதில் கடிதம் கொடுத்தனர்.

எட்டாவது நாள் போராட்டத்தின்போது தேசிய விவசாய  தொழிலாளர் சங்கத்திலிருந்து (NUPW)  முதன்முறையாக 2 அதிகாரிகள் தோட்டத்திற்கு வருகை புரிந்திருந்தனர். “தொழிலாளர் இலாகா (Jabatan Buruh) அதிகாரிகள் இச்சிக்கல் குறித்து நடவடிக்க எடுக்கக் கோரினர் எனவேதான் வந்தோம்” என தெரிவித்தனர். அதே சமயம் 3 ரிங்கிட் சந்தா ஏற்றம் குறித்து தெளிவுபடுத்தி, அதை செலுத்தினால் இச்சம்பள விவகாரத்தை தீர்த்துவைப்பதாக உறுதியளித்தனர். ஆனால், தொழிலாளர்கள் இச்சிக்கலை தீர்த்துவைத்தப் பின்னரே அந்த சந்தா பணத்தை செலுத்துவோம் என்று கூறிவிட்டனர்.

போராட்டத்தின் ஒன்பதாவது நாளில் அதாவது (17 டிசம்பர் 2002) மலேசிய தொழிற்சங்க காங்கிரசின் (MTUC) பார்வையும் தோட்டத்தின் பக்கம் திரும்பியது. அவர்களின் பிரதிநிதிகள் தொழிலாளர் மற்றும் நிறுவன இலாகாவிற்கு  (Jabatana buruh dan prindustrian) அனுப்பப்பட்டனர்.

10 நாள் போராட்டம் அதாவது 8 டிசம்பர் 2002-இல் தோட்ட நிறுவாகம் சிலாங்கூர் தொழிலாளர் துறை அலுவலகத்திற்கு தொலை நகல் (fax) அனுப்பியதாக அத்துறை அதிகாரி திருமதி கௌசார் (puan Kausar) தெரிவித்தார். அத்தொலைநகலில் எந்த நிபந்தனையுமற்று தொழிலாளர்களை வேலைக்குச் செல்ல கோருமாறு நிறுவாகம் கேட்டிருந்தது. ஆனால் தொழிலாளர்கள் அதை முற்றாக மறுத்தனர். எனவே திருமதி கௌசார் (puan Kausar) சம்பளச் சிக்கல் குறித்து நிறுவாகத்திடம் பேசி உடனடியாகத் தீர்வு வழங்குவதாக உறுதியளித்திருந்தார்.

போராட்டத்தின் 11-ஆவது நாள் 19 டிசம்பர் 2002-இல் தோட்ட நிறுவாகம் இந்தோனேசிய தொழிலாளர்களைக் கொண்டு செம்பனை குலைகளை வெட்டத்தொடங்கியிருந்தது. இதை அறிந்த தொழிலாளர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

தொடர்ந்து 13-ஆவது நாள் போராட்டத்தின் போது (21 டிசம்பர் 2002) தொழிலாளர்கள் தோட்ட நிறுவாகத்தினரால் மிரட்டப்பட்டனர். தொடர்ந்து இந்தோனேசிய தொழிலாளர்களை வேலைச் செய்யவிடாமல் தடுத்தால் காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுவீர்கள் என பகீரங்கமான மிரட்டுதலுக்குள்ளாகினர்.

14 நாள், 23 டிசம்பர் 2002-இல் டிசம்பார் மாத சம்பள விவகாரத்திகுப் பிறகு ஏற்பட்ட வேலைக்கு விடுப்பு குறித்த புகார் கடிதத்திற்கு தொழிலாளர்கள்  மீண்டும் பதில் கடிதம் கொடுத்தனர்.

தொடர்ந்து 15-வது நாள் போராட்டத்தில் அதாவது கிறிஸ்மஸ்சுக்கு முதல் நாளன்று (24 டிசம்பர்  2002) நிறுவன மேலாண்மை துறையில் (IRD) செக்‌ஷன் 56- கூட்டு ஒப்பந்தத்திற்கு இணங்காமை என்ற சட்டத்தின் அடிப்படையில்  தொழிலாளர்கள் புகார் செய்தனர். இதுகுறித்த தகவல்களையும் அறிவுரைகளையும் கார்ப்பரேட்(நிறுவன) நீதிமன்ற பதிவாளரைச் (Pendaftar mahkamah Perusahaan) சந்தித்து பெற்றுக்கொண்டனர்.

16-வது நாள் போராட்டதின்போது போராளிகள் கேட்டுக்கொண்டதன்படி தோட்ட நிறுவாகத்துடம் டெனூடின் தோட்டத்திலேயே ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது.  தொழிலாளர்கள் 27 டிசம்பர் 2002 தேதியில் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கடிதம் அங்கே கொடுக்கப்பட்டது.

அதே சமயம் தொழிலாளர்களின் சம்பள கோரிக்கையும் வேலைக்குறித்த நிபந்தனைகளையும் நிறுவாகம் ஏற்றுகொண்ட பின்னரே  27 டிசம்பர் 2002-இல் தொழிலாளர்கள் தங்களது வேலைக்குச்  செல்ல சம்மதித்தனர்.  தொழிளாளர்களின் அந்த கூட்டுப் போராட்டம்  வெற்றியில் முடிவுற்றது.

இவ்வகையில் டெனூடின் தோட்டப்போராளிகள் அப்போராட்டம் போற்றுதக்குரிய வரலாறாகும். இப்போராட்டத்தைத் தொடர்ந்து மேலும் சில போராட்டங்கள் அத்தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. குடிநீர் சிக்கல் அதில் அடங்கும். அது போல முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இறுதியானது  6 ஏப்ரல் 2011 நடத்தப்பட்ட போராட்டமாகும்.  9 தொழிலாளர்களுக்கு திடீர் வேலை நிறுத்த கடிதம் வழங்கப்பட்டதன் பேரில் இப்போரட்டம் அமைந்தது. அக்கடிதத்தின்படி அத்தொழிலாளர்களின் இறுதி வேலை நாள் 31 மே 2011 தேதியாகும்.

இவ்விவகாரத்தை தோட்டவாசிகள் அரசு எக்ஸ்கோவான மரியாதைக்குரிய டாக்டர் சேவியரின் (YB DR. Xavier Exco Kerajaan)  பார்வைக்குக்  கொண்டுச் சென்றனர்.

12 மே 2011 இல் டெனூடின் தோட்ட மக்கள் நல குழுவினர், மேல் அதிகாரியான  இஞ்ச் கென்னத் (Inch Kenneth) அவருடன் சந்திப்பு நிகழ்த்தக் கோரி கடிதம் அனுப்பினர்.

அச்சந்திப்பில் கோரப்பட்ட வேலை நிறுத்த இழப்பீடுகள் பின்வருமாறு;

  1. மலேசிய விவசாய உற்பத்தி மற்றும் தேசிய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் (MAPA_NUPW)ஒப்பந்த அடிப்படையில் வேலை நிறுத்த பணம் மற்றும் மீத சம்பளப் பணம் ஆகிய உரிமை செம்பனை வெட்டும் தொழிலாளர்களுக்குமானது.
  2. டெனூடின் தோட்டத்தின் அருகில் மலிவு விலை தரை வீடு திட்டம்.
  3. முன்னாள் தோட்ட தொழிலாளர்களுக்கும் வேலை ஓய்வு பெற்றவர்களுக்குமான ஒரே மாதிரியான நன்மைகள் செய்யப்பட வேண்டும்.
  4. இழப்பீட்டு தொகை கொடுக்கப்பட வேண்டும்.

5.கோவில், தேவாலயம், மண்டபம் மற்றும் காற்பந்து விளையாட்டு மைதானம் ஆகியவற்றின் தரம் மேம்பாடு.

  1. தோட்டத்தொழில் செய்பவர்களுக்கான நில இழப்பீடு வழங்க வேண்டும்.
  2. Qua-சிக்கல் தீரும்வரை மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகள் நிறுத்தப்படக் கூடாது.

8.மாற்று புதிய குடியிருப்பு முழுமையாக தயாராகும்வரை தோட்டத்திலிருந்து வெளியேற்றக்கூடாது.

  1. மாற்று வீடு கட்டிமுடிக்கும் வரையில் இத்தோட்ட சுற்றுப்புற தூய்மை பேனப்பட வேண்டும்.

முதலில் இஞ்ச் கென்னத் (Inch Kenneth) தொழிலாளர் சட்டத்தின் அடிப்படியிலான இழப்பீடுகளை மட்டுமே செய்துதர முடிவெடுத்திருந்தார். ஆனால், அதனையொட்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் இறுதியில் 22 முன்னாள் தொழிலாளர்களும் இலவச வீட்டுக்கான  ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டனர். 22 முன்னாள் தொழிலாளர்களுக்கும் தரை வீடு கட்டிக்கொடுக்க ஒப்புக்கொண்டதற்கான ஒப்பந்தம் அது. அவ்வொப்பந்தம் மேலதிகாரியான இஞ்ச் கென்னத் (Inch Kenneth) உடன் கையொப்பமிடப்பட்டது. ஒப்பந்தத்திற்கு அருட்செல்வம் மக்கள் சார் சாட்சியாகவும், இஞ்ச் கென்னத்தின் சாட்சியாக திரு ஹுசைன் (Encik Hussain) அவர்களும் பங்காற்றினர். அதனைத் தொடர்ந்து 22 நவம்பர் 2018 அன்று  புதிய வீட்டுக்கான சாவி கொடுக்கும் வரையிலும் தொழிலாளர்கள் தோட்ட வீட்டிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டனர். வீட்டுச் சாவி செமிஞ்சே மலேசிய சோசிலிச கட்சி அலுவலத்தில்  ஒப்படைக்கப்பட்டது.

ஓய்வூதியம் கோரப்படாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இஞ்ச் கென்னத்(Inch Kenneth) நிறுவனம் இந்த இலவச வீட்டை கட்டிக் கொடுத்தது. இவ்விடத்தில் ஆறுமுகம் மற்றும் வாசுதேவன் ஆகிய இருவருகான ஓய்வூதியத்தொகை அதிகம் எனினும் மக்களுக்கு புதிய வீடு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே சுயநலம் காக்காமல் தங்களது ஓய்வூதியப்பணத்தை விட்டுக்கொடுத்திருந்தனர். எனவே அவரது இந்த போராட்ட குணத்தையும் மேன்மை குணத்தையும் நினைவுக்கூர்ந்து எடுத்துரைக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.

ஆறுமுகத்தின் நல்லாத்மா இனிதே சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். வீட்டில், சேதாரம் போன்ற சிக்கல்கள் இன்னமும் இருக்கவே செய்கின்றன. ஆனாலும் அதனைக் கடந்து ஆறுமுகம் அவர்களின் தியாகமும் போராட்டமும் மறக்கவியலாதது. சிறந்த போராளியான அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட.