நமது அடிப்படை கல்வி அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான்.
மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில் மாட்டி கிழிபட அவர்கள் விரும்பவில்லை. இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி வெளியிட்ட கருத்தை செம்பருத்திற்காக மொழியாக்கம் செய்துள்ளார் யுவராஜன்.
கல்வியில் அடிப்படை தேடலே உண்மையை அறிவதாகும். உண்மையை அறிவதன்பதே அர்த்தபூர்வமான செயல்முறைகளாலும் நுண்ணாய்வின் பிரதிபலிப்பாகவும் உள்ளதென புரிந்து கொள்ளலாம்.
இது சில நேரம் எளிதான செயல்முறையாக இருப்பதில்லை. பல நேரங்களில் குழப்பங்களையும் ஏமாற்றங்களையும் தரவல்லது. மிகவும் அரிதான் கணங்களில் மட்டுமே உண்மை நேரடியாக புரிந்து கொள்ளும் தன்மையைக் கொண்டிருக்கிறது.
ஆனால் இத்தகைய உண்மையை தேடும் கல்வி வெறும் மனப்பாடம் செய்தல், குருட்டுத்தனமான அடிபணிதல் போன்ற கல்விமுறையிலிருந்து நிச்சயம் வேறுப்பட்டதுதான். உண்மையான கல்வியைக் கற்க விரும்பும் மாணவன் திறந்த மனதுடன், ஆர்வத்தோடு தேடுபவராகவும் அனைத்து சிந்தனைகளை கேள்வி எழுப்புவராகவும் இருப்பார்.
இறுதியில் சரியான தீர்வு வெளிப்படும்போது நல்ல பலனைத் தருவதாக இருக்கும். நாம் உண்மையை அறிய கடந்த வந்த பாதையைத் திரும்பி பார்க்கும்போது நாம் எத்தகைய சிந்தனை திறன் கொண்டவர் என்பதை அறியலாம்.
கல்வி பெறுவது வெறும் சமுக உரிமை மட்டுமல்ல, இயல்பிலேயே தனித்துவமானதுதான். ஆகவே கல்வி குறித்த செயல்பாடுகளை அறிஞர்களே கருத்துகளை சொல்வது முக்கியம்.
இதனால்தான் கல்வி பயில்வதில் சுதந்திரம் மிக அவசியம். இறுதியில் சிறந்த கல்வி கற்றவர்கள் உருவாகுவதே முக்கியம். சிறந்த கல்வியால் சிறந்த வேலை வாய்ப்பையும் வெளிநாட்டு முதலீடுகளையும் கவரலாம். (ஆனால் இதில் மட்டுமே பெரும் முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவது வருத்தமான விடயம்தான்.) நம்மை மனிதர்களாக மாற்றும் கல்வி நமக்கு ஒரு சொத்துதான்.
அழுத்தப்படுபவர்களுக்கான கல்வியலில் பாவ்லோ ப்ரே கூறுவது என்னவென்றால் ‘ சுதந்திரம் என்பது மனிதனின் புறத்தில் இருப்பதோ அல்லது மாயையானதோ கிடையாது. மாறாக மனித வாழ்வை முழுமை அடையச் செய்யும் இன்றியமையாத தேடலாகும்.
மாணவர்களை வெறும் மனபாடம் செய்திருக்கும் தகவல்களைக் கொண்டு மட்டும் அளவிட கூடாது. மாறாக திறந்த மனதுடன் அறிந்து கொள்ளும் ஆர்வமும் அறிவார்ந்த தெளிவும் வளர்ச்சியும் – இதன் மூலம் சிறந்த அறிவார்ந்த உரையாடல்களை ஏற்படும். இத்தகைய அறிவார்ந்த பண்புகள் வளர நாம் அவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. மாறாக தேடல் கொண்ட மாணவர்களே அதை இயல்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நமது உலகலாவிய பார்வை இன்னும் வலுப்ப்படுவதும் அதன் ஊடாக உண்மையான குடிமை சமூகம் உருவாகுவதும் இதை ஒட்டியே உள்ளது.
மலேசியாவின் கல்வி அமைப்பு
நமது அடிப்படை கல்வி அமைப்பையே அவமதிக்கும் வகையில் புது வருடத்தன்று நமது மாணவர்கள் மோசமாக தாக்கப்பட்டதைக் கொண்டு புரிந்து கொள்ளலாம். இது ஒன்றும் ஒரே இரவில் நிகழவில்லை. பல வருடங்கள் அடக்கி ஆளப்பட்டதால் திரண்ட ஆவேசம்தான்.
மனித உரிமை உள்ளிட்ட கோரிக்கைகளையே அம்மாணவர்கள் கோரினர். இனியும் சக்கரத்தின் பற்களில் மாட்டி கிழிபட அவர்கள் விரும்பவில்லை.
கல்வி அமைப்பில் கூறுபடுவதை விடுத்து உண்மையில் நமது உயர்க்க;ல்வி நிலையங்கள் எப்படி கற்றலுக்கு உகந்த பாதுகாப்பான இடமாக இல்லாமல் இருப்பதை அன்று மீண்டும் நமக்கு நிறுவியுள்ளனர். அவை வெறும் அரசின் பிரச்சார ஊதுகுழலாகவும் அதிகார அமைப்பாகவும் உள்ளன.
AUKU சட்டத்தால் தொடர்ந்து அடக்குமுறை செய்வதோடு அல்லாமல் கடந்த ஞாயிறன்று மாணவர்களின் எதிர்ப்புகளை கடுமையாக அடக்கியதால் அரசு தன் அடக்குமுறையை மீண்டும் மெய்பித்துள்ளது. அரசு தன்னை அடக்குமுறையாளராக நிலைநிறுத்தி கொண்டுள்ளதோடு ( அப்படி இருப்பதில் எவ்வித குற்ற உணர்ச்சியும் அதற்கு இருந்ததில்லை) எவ்வித ஆபத்துமில்லாத தன் குடிமக்களின் மீதே வெட்கமில்லாமல் வன்முறையை ஏவவும் தலைப்பட்டுள்ளது.
இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணியின் கருத்து
இளைஞர்களை உரிமையை நிலைநிறுத்தும் அமைப்பாக , இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி மாணவர்களுக்கு எதிராக புது வருடத்தன்று நிகழ்த்தப்பட்ட தாக்குதலை எண்ணி வருந்தவும் கடுமையாக கண்டிக்கவும் செய்கிறது.
நமது மாணவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமதிப்பை மலேசியாவிலுள்ள அனைவர் மீதும் நடத்தப்பட்ட அவமதிப்பாக நாங்கள் கருதுகிறோம். நாம் விரும்புவதெல்லாம் முற்போக்கான மக்களாட்சி கொண்ட சமூகத்தை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாம் அனைத்து பல்கலைக்கழகங்களையும் அதன் இருப்பின் நோக்கமான புதிய கண்டுபிடிப்புகளையும் ஆய்வுகளையும் முன்னெடுக்கும் தளமாக இருப்பதை வலியுறுத்துகிறோம். அதனால் மட்டுமே வளர்ச்சியும் மாற்றங்களையும் கொண்ட குடிமை சமூகம் உருவாகும்.
நம் மாணவர்களின் ஆய்வுகளுக்கு தேவையான வசதிகளையும் உதவிகளையும் ஏற்படுத்தி நம் பல்கலைக்கழகங்கள் அறிவார்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்க நம் பல்கலைக்கழகங்கள் உதவ வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் நம் மலேசிய அரசியலில் குறித்து பொறுப்பும் உய்யச் சிந்தனை கொண்ட மாணவர்களை உருவாக்கலாம்.
ஒரு பக்கம் உலகத் தரவரிசையில் முன்னணி வர முயன்றும் மறுபுறம் மாணவர்களுக்கு எதிராக வன்முறையும் நிகழ்த்தும் பாராபட்ச நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்கள் நிறுத்த வேண்டும்.
தங்கள் அதிகாரத்தைக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கடனுதவிகளை வழங்கும் பெரிய மனதைப் பார்த்து அவர்களின் கல்வி குறித்த முக்கியத்துவத்தை உணர்கிறோம். ஆனால் அதற்கு மாற்றான ‘பெரிய மனதை’ மாணவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது தவறாகும்.
இதனால் அவர்கள் மாணவர்களுக்கு ஏதோ பெரிய உதவி செய்வதாக காட்டுவது சரியல்ல. உண்மையில் இது அவர்களின் கடமையாகும். தரமான கல்வி ஒரு மானுட உரிமையாகும். இதற்கு நாம் யாரின் ‘பெரிய மனதையும்’ இரந்து பெற தேவையில்லை.
ஹடிசில் முகமது நபி அவர்கள் சொன்னது ‘ தவறு செய்யும் அரசனுக்கு முன் உண்மையை மட்டுமே பேச வேண்டும்’ . கடந்த ஞாயிறன்று மலேசிய அத்தகு புனித செயலை காணும் வாய்ப்பை பெற்றது.
– சு. யுவராஜன், www.syuvarajan.com