முகநூலில் பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதலா?

நான் ஷர்மிளா. எனக்கு வயது 17. நான் கிள்ளான் மாவட்டத்தில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் கெட்டிக்கார மாணவி. வகுப்பில் கேட்கப்படும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்கும் மாணவி நான்தான். இருந்தப்போதும் எனக்கு தொழில்நுடபத்தில் அதிக ஈடுப்பாடுக் கிடையாது. எங்கள் வகுப்பில் நன்னெறிக் கல்வி தொடர்பாக இடுபணி வழங்கப்பட்டது. நான் முதல் முறையாக என் நண்பர்களுடன் கணினி மையத்திற்குச் சென்றேன். அங்கு மிகவும் சத்தமாகவும் வெண்சுருட்டின் நெடி நாற்றமாகவும் இருந்தது.

ஆசிரியர் கொடுத்த வேலையைச் செவ்வனே செய்வதற்காக இதை அனைத்தும் பொருட்படுத்தவில்லை. என் நண்பர்கள் கணினியின் முன் அமர்ந்தவுடன் முகப் புத்தகத்தைத்தான் திறந்தார்கள். உடனே நான் அவர்களிடன் இது என்னவென்று கேட்டப் பொழுது என்னை கிண்டல் செய்தார்கள். நான் இன்னும் பழங்காலத்தில் இருப்பதாகக் கூறி என்னையும் முகப் புத்தகத்தில் பதிவுச் செய்ய கூறினார்கள்.

அவர்கள் எனக்குப் பதிவுச் செய்ய உதவினார்கள். அன்று முதல் நானும் முக புத்தகத்தில் பல நண்பர்களைப் பதிவுச் செய்துக் கொண்டு அவர்களுடன் தொடர்புக் கொள்வேன். மேலும் அதில் என் புகைப்படத்தையும் பதிவேற்றினேன். பள்ளி முடிந்து வந்தவுடனே நான் தனியாகவே கணினி மையம் செல்வேன். முகப் புத்தகத்திற்கு அடிமையானேன் என்றே கூறலாம்.

அப்போழுதுதான் ஸான் என்ற நபரின் தொடர்பு எனக்கு முகப் புத்தகத்தின் வாயிலாகக் கிடைத்தது. அவர் தான் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பொறியியளார் துறையில் பட்டப்படிப்பை செய்வதாகக் கூறினார். மேலும் அவர் கெடாவில் வசிப்பதாகக் கூறினார். நாளுக்கு நாள் நாங்கள் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தோம். உடனே எனக்கு அவரின் புகைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசை வந்தது. அவரும் நான் கேட்டதன் காரணமாக எனக்குப் புகைப்படத்தை முக புத்தகத்தில் வாயிலாக அனுப்பினார். அவர் ஓர் ஆணழகன். அவரின் படத்தைப் படி எடுத்து என் பண பையில் வைத்தேன்.

பணமில்லாத நேரங்களில் நண்பர்களிடம் பணத்தை இரவல் பெற்று கணினி மையம் சென்று அவருடன் அரட்டையடிப்பேன். இப்படியே பல மாதங்கள் உருண்டோட அவரிடம் நான் என் காதலைத் தெரிவித்தேன். அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது. முகப் புத்தகத்தில் நாங்கள் திருமணத்தைப் பற்றியும் வருங்கால வாழ்க்கையைப் பற்றியும் உரையாடுவோம்.

ஒருநாள் அவர் என்னை நேரடியாகக் காண வேண்டும் என்று கூறினார். நானும் ஆசை ஆசையாக இருந்தேன். அன்றுதான் என் வாழ்வில் ஒரு பெரிய அதிர்ச்சி நிகழ போகின்றது என்பது அதுவரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள் கோலாலம்பூரில் சந்திக்கலாம் என்று முடிவெடுத்தோம். அங்கு ஓர் உணவகக் கடையில் நான் அவருக்காகக் காத்துக் கொண்டிருந்தேன். உடனே ஒருவர் என் முன் வந்து அமர்ந்தார்.

என்னால் அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  அதிர்ச்சியில் நான் துவண்டுப்போனேன். ஸான் என்பவர் ஓர் ஆணல்ல. ஆண் என்ற பெண். உடனே நான் அவரிடம் இந்த விஷயத்தை ஏன் என்னிடமிருந்து மறைத்தார் என்று கேட்டப் பொழுது, அவர் அதில் எந்தவித தவறும் இல்லை என்று பதிலளித்தார். அவ்விடத்தை விட்டுச் செல்ல எண்ணியப்போது என் கையைப்பிடித்து இழுத்தார். என்னை அவருடன் சாப்பிடச் சொன்னார். பிறகு என் தொடைப்பகுதியில் கை வைத்தார். நான் அதைத் தட்டிவிட்டேன். பிறகு என்னை அவரே வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறினார். நான் வேண்டாம் என்று படியில் வேகமாக இறங்கினேன். உடனே அவர் என்னைக் கட்டி இழுத்து முத்தமிட்டார். அவரை கீழே தள்ளிவிட்டு ஓடினேன்.

இந்த நிகழ்வுக்குப் பிறகு நான் முகப் புத்தகத்தை திறப்பது கிடையாது. ஆக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து முகப் புத்தகத்தில் புதிய நபர்களுடன் நெருக்கமாகப் பழகாதீர்கள். நீங்கள் நட்பு கொள்ளும் நபரின் விவரங்களை உங்கள் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எதையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். முகப் புத்தகத்தை நல்வழியில் பயன்படுத்தி நன்மை பெருங்கள்.

-தேவா