“தமிழால் வளர்ந்தேன்” – தாய்மொழி தமிழின் சிறப்புகள்

இன்று உலக தாய்மொழி தினம்.எ ன் தாயின் மொழி செம்மொழி   தமிழால் வளர்ந்தேன். என் தாயின் மொழியின் பெருமை கூறுவது என் தாயின் பெருமை கூறுவது போலாகும்.

தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும்  உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான்.

தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும்.

தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை  பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும்.

உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை ,பந்த பாசங்கள்  எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும்.

எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை. கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர். வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில்  பாருங்கள். உங்களுக்கே புரியும்.

இது சிறிய அளவின்  பிரிவுகள் .

1/102400 – கீழ்முந்திரி
1/2150400 –
இம்மி
1/23654400 –
மும்மி
1/165580800 –
அணு —> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 –
குணம்
1/7451136000 –
பந்தம்
1/44706816000 –
பாகம்
1/312947712000 –
விந்தம்
1/5320111104000 –
நாகவிந்தம்
1/74481555456000 –
சிந்தை
1/489631109120000 –
கதிர்முனை
1/9585244364800000 –
குரல்வளைப்படி
1/575114661888000000 –
வெள்ளம்
1/57511466188800000000 –
நுண்மணல்
1/2323824530227200000000 –
தேர்த்துகள்

இந்த இம்மியளவும் அசையாது என்று நம்  பேச்சு  வழக்கில்  பேசும் சொல்.

தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு .பட்டியலை பார்க்க 

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .

உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும்  முடியாது .

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் .

உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது  .

தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு (ப்+உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே  சொல் தான். LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும்.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள்  எனலாம் . அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்). தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை. உச்சரித்து பாருங்கள். அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள்.

டாக்டர்  கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள், திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள். கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார். முக்கியமாக இந்த “கற்க்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக “எனும் குறள் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது. இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும். 3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது  என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள். சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு  மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா  வளர்ந்தது.

முக்கியமாக சீனாவின் துயரம் மஞ்சள் நதி ,இந்தியாவின் துயரம் பிராமணர்கள் என்று புதுதாக சேர்த்துள்ளனர் சிலர் அதே போல….

தமிழர்களின்/தமிழின் துயரம்:-

அரசியல்

சினிமா

மதம்/ஜாதி

மேலே உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்பதை காட்டுகிறது. ஆனால் நாம் ?

“யாதும்  ஊரே யாவரும்  கேளிர்” என்ற உலக பொது நியதியை கொண்ட ஒரே மொழி இத்தகைய தமிழில் பிறந்து தமிழால் வளர்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம் .

நன்றி : http://ethamil.blogspot.com/2011/02/blog-post_21.html