மக்கள் நீதிமன்றத்தில் ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்! (காணொளி இணைப்பு)

கடந்த 2009-ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது ஈழத் தமிழர்கள் மீது இலங்கையின் சிங்கள அரசாங்கம் மேற்கொண்ட இனப்படுகொலையைக் கண்டித்தும் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் கடந்த 22-ஆம் தேதி மாபெரும் கண்டனப் பேரணி கிள்ளானில் நடைபெற்றது.

இப்பேரணியின்போது போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்தா ராஜபக்சேவின் உருவபொம்மையை தூக்கு மேடைக்கு எடுத்துச் சென்று குற்றாவளிக் கூண்டில் நிறுத்தி குற்றப்பத்திரிக்கை வாசித்தனர். அதன் பின் அவரது உருவ பொம்மைக்கு செருப்பால் அடித்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இப்பேரணிக்கு சிலாங்கூர் நடவடிக்கை குழு பெருந்திரளான மக்களை ஒன்று திரட்டியிருந்ததுடன் இந்நிகழ்வில் ஏராளமான பொது இயக்கங்களும் கலந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஈழத் தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அரசாங்கத்தின் தலைவர் மகிந்தா ராஜபக்சே, போர்க்குற்றவாளி கூண்டில் ஏற்றப்படவேண்டும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அனைத்துலகச் சட்டத்தின் பிடியிலிருந்து மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட இலங்கை அரசாங்கம் தப்பிவிடக் கூடாது எனவும் அவர்கள் அனைவரும் ஆவேசமாக கூறினர்.

கலந்துகொண்டவர்களின் ஆவேசத்திற்கும் கோபத்திற்கும் ஆளான ராஜபக்சேவின் உருவபொம்மைக்கு நடந்தவற்றை காணொளியில் பாருங்கள்.

காணொளியை பார்வையிட அழுத்தவும்

TAGS: