2011 வருடம் முடிய, ஊழியர் சேமநிதிவாரியம்.12 மில்லியன் சந்தாதாரர்களைகயும் ரி.ம. 441 பில்லியன் சொத்து மதிப்புக் கொண்டுள்ளது., உலகத் தரத்தில் அதிக சொத்துக்கள் கொண்ட நிருவனங்களில் இவ்வாரியமும் அடங்கும்.
ஒரு காலத்தில் இதன் சந்தாதாரர்களுக்கு வருடத்திற்கு 10% வட்டியாக வழங்கி, 3% வரை வீழ்ச்சியடைந்து இப்பொழுது 6% வரை உயர்த்தியுள்ளனர். இதுக் கூட இவ்வாரியத்தின் திறமையான முதலீட்டால் கொடுக்கப்பட்டதல்ல. வருகின்றத் தேர்தலை மனதில் வைத்துக் கொண்டு, அம்னோவின் ஆட்டுவித்தையால், தன் முதலீடுகளில் சிலவற்றை விற்று அந்தத் தொகையையே இந்த இலாப ஈவைத் தந்துள்ளனர்.
கடந்த 23 ஜூன் 2011ல் நாடாளுமன்றத்தில் தனது வருடாந்திரக் கணக்கை சமர்பித்த இவ்வாரியம் தன் உருப்பினர்களுக்கு மேலும் பல அதிர்ச்சியையும் வழங்கியுள்ளது.
அரசாங்க நிருவனங்களில் 27%மும், அரசங்கத்திற்கு 33%மும், பங்கு நிலவரத்தில் 35%மும், நாணய சந்தையில் 5%மும் முதலீடு செய்துள்ளது என்ற அறிக்கைதான். இதில் மிகப் பெரிய ஆபத்தான விடயம் என்னவென்றால், இவ்வாரியம் இதுவரை தேசிய முன்னனி அரசாங்கத்திற்கும், அதனைச்சார்ந்த நிருவனங்களுக்கும் கடந்தாண்டு வரை வழங்கிய கடன் 60% அதாவது ரி.ம.240பில்லியனாகும். அதாவது நம் சேமிப்பிலிருந்து 60% பணத்தை நமது அரசாங்கம் செலவு செய்து விட்டது.
வாங்கியக் கடனைத் திருப்பி செழுத்த இந்த அரசாங்கத்திற்கு முறையானத் திட்டம் கிடையாது. தான் கொண்டுவந்தத் திட்டங்களினால் ஒவ்வொருமுறையும் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு கடனுக்கு மேல் கடனாக வளர்ந்துள்ளது.
கடந்த 2001ல் ரி,ம. 44.9 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டு ரி.ம.63.4 காக உயர்ந்தது. இதே நிலை 2011ல் ரி.ம 162.8பில்லியனாக இருந்து ரி.ம.176 முடிந்தது. ஒவ்வொரு வருடமும் பணப் பற்றாக்குறை உயர்ந்துக் கொண்டு வருகின்றதே ஒழிய அதை குறைக்கின்ற சரியானத் தூர நோக்குத் திட்டத்தைக் காண முடியவில்லை. நாட்டின் மொத்த வருமானத்தை விட 53% கடனில் இருக்கின்றது. இதுவே 55% மாக உயரும்போது நாடு நொடித்துவிடும் என்று உலக வங்கி எச்சரிக்கின்றது. இதைதான் சில மாதங்களாக அரசாங்கக் கணக்காய்வாளர்களாலும், எதிர்க்கட்சியினராலும் எச்சரிக்கை செய்துள்ளனர். இதை மறைக்க எதிர்க்கட்சித் தலைவரை சராமாரியாகத் தாக்கிக்யும் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சேமநிதி வாரியம் எதை நம்பி இவ்வளவுக் கடனை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இவ்வாரியத்தின் உயர்நிலைப் பதவியில் இருக்கும் 23 பேர்களில் 20 மலாய்க்காரர்களும், 3 சீனர்களும் இருக்கின்றனர். அது போல 26 முக்கிய இலாக்கக்களில் 2 இந்தியர்களும், 5 சீனர்களுமே, மற்ற அனைவரும் மலாய்க்காரர்களே தலமைத் தாங்குகின்றனர். உயர்நிலைப் பதவியில் எந்த இந்தியரும் இல்லை.
கவனிக்க ஜூன் 2006ல் நம் நாட்டின் ரி.ம 402 பில்லியனாக இருந்தக் கடன் ஜூன் 2010 முடிய ரி.ம.593பில்லியனுக்கு உயர்ந்துள்ளது. நிலமை இப்படியிருக்க, சேமநிதிவாரியம் அரசாங்கத்தையும், அவர்களைச்சார்ந்த குரோனிகளையும் எந்த நோக்கத்திற்காகக் காப்பாற்ற வேண்டும்? அதற்கு முக்கியக் காரணமே இவ்வாரியத்தின் தலமை இயக்குனர் டான்ஸ்ரீ சம்சுடின் ஒஸ்மான் அவர்களோடு மற்றும் பலர் அம்னோவின் கைப்பாவைகள் என்றக் குற்றச் சாற்றாகும். அது மட்டுமின்றி, பல்வேறு துறையில் உள்ள மிக முக்கியமானப் பதவிகளுக்கு ஆளும் அரசாங்கம் தனக்கு வேண்டியவர்களைக் கட்டாயமாக அந்தப் பதவியில் அமர்த்தி விடுவதால், தன் தேவையை சுலபமாக சாதித்துக் கொள்கின்றது.
முன்னால் பிரதமர் மகனின் நிருவனம், மலேசிய விமான நிருவனம், தேசியக் கார் உற்பத்தி போன்ற சில நிருவனங்கள் நொடித்துப் போவதிலிருந்துக் காப்பாற்றியதில் சேமநிதி வாரியத்திற்கு பெறும் பங்குண்டு… முன்னால் பிரதமரின் மகனைக் காப்பாற்ற வங்கிகள் கையை விரித்தப் போது அவர் தற்கொலை முயற்சித்ததை ஊடகங்கள் மூடி மறைத்ததை நாம் மறப்பதற்கில்லை.
இதோடு மட்டும் இல்லாமல் இவ்வாரியம் கடன் கொடுப்பது மற்றும் முதலீடுகளில் நடந்துக் கொள்ளும் முறை இவ்வாரியத்தில் உள்ள சில முக்கியமானவ்ர்களுக்கு உடன்பாடில்லை.. நாட்டில் தலைவிரித்தாடும் இலஞ்சத்திற்கு இவ்வாரியம் தொடர்ந்து துணைப் போனால் பாதிக்கப் போவது அதன் உறுப்பினர்கள் மட்டுமல்ல. இந்த நாடும் தான்!
-கலைமணி, [email protected]