மலேசியாவின் தோட்டப்புறங்களில் பணியாற்றுகிற தொழிலாளர்கள், தங்கள் வாரிசுகளுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும். கல்வியில் தேர்ந்தால்தான் நல்ல வாய்ப்புகள் நல்ல வேலை வாய்ப்புகள் மூலமாகவே எதிர்காலத்தில் அந்த வாரிசுகள் நிமிர்ந்து நடை போட முடியும் என்ற விழிப்புணர்ச்சியும் அதன் விளைவாக ஏற்பட்ட போராட்டமும் 1910 ஆம் ஆண்டில் சிலாங்கூரின் மிட்லண்டஸ் தோட்டத்தில் முதலாவது தமிழப்பள்ளி உதயமாகியதைப் பாட்டாளிகள் கண்டனர்.
தோட்ட அலுவலகத்திற்கு அருகில் சிறிய அளவில் கட்டப்பட்ட முதலாவது தமிழப்பள்ளியாகவே அது சிறயதாகவே தொடங்கியது. சிறிய தொடக்கம், பாதி வெற்றி என்பது உண்மையானது. 102 ஆண்டுகாலக் கனவு நனவாகியுள்ளது.
தமிழ்ப்பள்ளிகள் வரலாற்றில் இன்று மிட்லண்டஸ் தோட்டத்துத் தமிழ்ப்பள்ளி, இந்த நாட்டுத் தோட்டத் மண்ணுக்குத் தங்கள் உழைப்பையும் வியர்வை என்ற செந்நீரையும் பாய்ச்சி வந்ததற்கு மிகப் பிரமாண்டமான மூன்று மாடிகளுடன், 28 வகுப்பறைகளுடன் 3000 பேர் அமரக்கூடிய அழகான மண்டப வசதிகளுடன் மிகப் பெரிய மரியாதை செலுத்தும் வகையில் கம்பீரம் காட்டிக் கொண்டிருக்கிறது. சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராஹிம் அதைத் திறந்து வைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளியின் வரலாற்றுச் சுவடுகளுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
நல்ல தமிழ், நல்ல தமிழ்ப் பண்பாடு, நல்ல விளையாட்டுத் துறை, நல்ல இலக்கியம் போன்றவை மலேசியத் தோட்டப்புறங்களில்தாம் ஆழமாக வேரூன்றி வளர்ந்தன, வளர்க்கப்பட்டன என்பது வரலாறு.
மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்
[மக்கள் ஓசை]