சத்து மலேசியா(வா)?

இந்நாட்டில் எல்லா இனத்திற்கும் அரசாங்கம் சமமான வாய்ப்புகளையே வழங்கி வருகின்றது என்று மக்களின் வரிப் பணத்தில் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தப் படுகின்றன. எழுதிவைத்துள்ளச் சட்டத்தையே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வாய்ச் சட்டத்தையா அமல் படுத்தப் போகிறது இந்த அம்னோ அரசாங்கம்? நடப்பில் உள்ள உண்மைகளைப் படியுங்கள்.

1.    நாட்டில் உள்ள 5 முக்கிய வங்கிகளில் 4 (அரசாங்கத்தின் கோட்பாட்டின் காரணமாக) மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டில் உள்ளது.

2.    பெட்ரோனாஸில் உயர் அதிகாரிகளில் 99% மலாய்க்காரர்கள். இந்நிருவன வேலை வாய்ப்பில் 3% சீனர்களும், 0.1% இந்தியர்களும் உள்ளனர். இந்த 0.1%த்தில் 70% முசுலிம் இந்தியர்கள் ஆவர்.

3.    நாட்டில் உள்ள 2000 பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையங்களில் 99% உரிமையாளர்கள் மலாய்க்காரர்களே.

4.    பெட்ரோனாஸில் பதிவுப் பெற்றக் குத்தகையாளர்கள் 100% மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும்.

5.    மலாய்க்காரர்களின் நிருவனங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சட்டம் கிடையாது. ஆனால் ஆனால் மற்றவர்கனின் நிருவனங்களில் 30%அவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உண்டு.

6.    அரசாங்கத் துறைகளான, காவல்துறை, தாதிமை, தற்காப்பு ஆகியவைகளில் புதிதாக வேலைக்கு அமர்த்தப் படுபவர்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 4%க்கும் குறைவானவர்களே.

7.    ஆகாயப் படையில்1960ல் சீனர்கள் 40%மும், இந்தியர்கள் 50%மும் இருந்தவர்கள் இன்று சீனர்கள் 2% இந்தியர்கள் 0.4% மட்டுமே உள்ளனர்.

8.    புத்ராஜெயாவில் உள்ள அரசாங்க நிர்வாகங்களில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள் 2%த்திற்கும் குறைவானவர்களே.

9.    95% அரசாங்கக் குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கே. ரி.ம. 100,000.00 வரை மதிப்புக் கொண்ட அரசாங்க குத்தகைகள் மலாய்க்காரர்களுக்கு மட்டுமே.

10.    எல்லா வியாபார உரிமங்களும் மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில்.

11.    மலாய்க்காரர்கள் அல்லாதவர்களினால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பல நிருவனங்கள் அரசாங்கத்தின் மிரட்டலின் மூலம் அவை மலாய்க்காரர்களின் கட்டுப் பாட்டுக்கு மாற்றப்பட்டன. உதாரணம். UTC, UMBC, MISC, SOUTHERN BANK, WORKERS BANK,

12.    கடந்த 40 வருடங்களில் சீன, இந்தியர்களுக்குச் சொந்தமான குறைந்தது 15 பேருந்து நிருவனங்கள் கட்டாயம் மற்றும் அதிகாரத்துவ மிரட்டலாலும் மலாய்க்காரர்களுக்கு மாற்றப் பட்டுள்ளன.

13.    மூவார் பேருந்து நிலையத்தில் 2004 இல் மலாய்க்காரர்கள் அல்லாதவர் ஒருத்தருக்குக் கூட அங்கு கடை கொடுக்கப்பட வில்லை.

14.    புதியப் பொருளாதாரக் கொள்கையில் கீழ் கடந்த 34 ஆண்டுகளில் ரிங்கிட் மலேசியா 8,000.00 கோடியை, ASB, ASN, MARA, TABUNG HAJI, சில அரசாங்க நிருவனங்களைத் தனியார் நிருவனமாக மாற்றி அமைத்ததன் மூலம் அரசாங்கம் மலாய்க்காரர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றது.

15.    1968லிருந்து 2000வரை, 48 சீன தொடக்கப் பள்ளிகளும், 144 தமிழ்ப் பள்ளிகளும் மூடப்பட்டு இதேக் காலக் கட்டத்தில் 2637 theesiya ஆரம்பப் பள்ளிக் கட்டப் பட்டுள்ளன.

16.    பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடுகளில், மலாய்ப் பள்ளிகளுக்கு 96.5%மும், சீனப்பள்ளிகளுக்கு 2.5%மும், தமிழ்ப் பள்ளிகளுக்கு 1%மும் ஒதுக்கப் பட்டுள்ளது

17.    எல்லா அரசாங்கப் பல்கலைக் கழகங்களிலும் உதவி தலைமை அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.1965ல் 70%மாக இருந்த மலாய்க்காரர்கள் அல்லாத விரிவுரையாளர்களில் இன்று 5%மட்டுமே உள்ளனர்.

18.    இதுவரை STPMஇல் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற இந்திய மாணவர்களில் 200க்கும் மேற்பட்டோருக்கு அவர்களின் விருப்ப தொடர்கல்வியை அரசாங்கம் திட்டமிட்டே மறுத்திருக்கின்றது.

19.    கடந்த 40 வருடங்களில் 2 மில்லியன் சீனர்களும், 0.5 மில்லியன் இந்தியர்களும் வேறு நாடுகளுக்குத் தஞ்சம் புக, 3 மில்லியன் இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பினோக்களுக்கு இங்கே குடியுரிமை வழங்கப்பட்டதோடு, பெரும்பாலானோருக்கு பூமிபுத்ரா தகுதியும் வழங்கப் பட்டுள்ளது. ஆனால் இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த 6 இலட்சம், சீனர் மற்றும் இந்தியர்களுக்கு இன்னும் குடியுரிமை மறுக்கப் படுகின்றது.

20.    அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைகாட்சி நிலையங்களான TV1, TV2,TV3ன் நிர்வாக அதிகாரிகளாக மலாய்க்காரர்கள் மட்டுமே.

21.    வைப்புத் தொகைக்கான வட்டி 2%லிருந்து 3.5% பேங்க் நெகாரா நிர்ணயித்திருக்கும் போது ASB மற்றும் ASN போன்றவைகள் 12.5%வரை தங்கள் அங்கத்தினர்களுக்கு வட்டியாகக் கொடுத்திருக்கின்றன.

இதுமட்டுமல்ல. நாட்டின் பொன் முட்டை இடும் வாத்து என்றுக் கருதப்படும் நிருவனங்கள் அம்னோ புத்ரா கட்டுப் பாட்டில் உள்ளன.

அ. வடக்கு தெற்கு நெடுஞ்சாலை நிருவனம் (KHAZANAH)
ஆ. நீர் வினியோகம் மற்றும் கட்டுமானத் துறை (GAMUDA, MMC, HI-COM)
இ. தொடர்புத் துறை (CELCOM, TM)
ஈ. அரிசி இறக்குமதிக்கான உரிமம் (BERNAS, SYED MOKTAR)
உ. அன்றாட தேவைக்கான இறக்குமதி உரிமம் (UMNO TENAGA BANK

இதுப் போன்ற சான்றுகள் எத்தனையோ இருக்க, ஓட்டுகள் வாங்குவதற்காக, மேடைகளில் கவர்ச்சிகரமாகப் பேசினால் மட்டும் போதாது. மக்களை மிரட்டி பணிய வைக்கும் நடைமுறையை மாற்றி அமைத்தால் ஒழிய, சத்து மலேசியா யாருக்கு என்ற அச்ச உணர்வு தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.

கடைசியில் இந்தியர்கள் சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்கொடிகளாய் தான் வாழ வேண்டி உள்ளது. ஆட்சி மாறனும் அல்லது ஆட்சியை மாற்றனும்.

 

-கா. கலைமணி ([email protected])