தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி!

இந்த சுவர்ணபூமியில் யார் முதன் முதலில் மிகப்பெரிய அளவில் தெரு ஆர்பாட்டம் செய்தது. இண்ட்ராப்… ஏன் இவர்கள் வீதிக்கு வந்தார்கள்?

அதன் பிரதிபலிப்பு ஆளும்கட்சி படுதோல்வி கண்டது. நான்கு மாநிலங்கள் மக்கள் கூட்டணி கைவசம் உள்ளது.  இப்போ இங்கு நல்லாட்சி நடக்கிறது. நான்குது வருடத்தில் செய்ததை வைத்து பார்த்ததில் மக்கள் கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்பட்டதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

அப்படி இருக்க இப்போ பாரிசான் வழங்கி வரும் உதவியை ஒரு தேர்தல் நாடகம் என்றுதான் சொள்ள வேண்டும். காரணம் பிரதமர் அறிவித்தது போல் இதுவரை எந்த தமிழ்ப்பள்ளிக்கும் நிலம் கொடுக்கப்பட்டு புதிய கட்டிடம் நிர்மாணிப்பு நடந்திருக்கவில்லை.

மேடையில் பேசி நாளை நடைபெறும் என்று சொல்லி போய்க்கொண்டு போவது பெரிய  விசயமில்லை. அவை நடைமுறைக்கு வர இன்னும் குறைத்தது ஐந்து அல்லது எட்டு வருடம் ஆகும். அதை நம்பி இனியும் நம்பிக்கை வைத்தால் நம்பலைபோல் ஒரு ஊதாரி இந்த உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள். ஏமாந்தது போதும் பாரிசானை நம்பி  நம் இனத்தை சிறுக சிறுக வதைத்து இருக்கும் இடம் தெரியாமல் போனது.

இந்த பரிசான் அரசாங்கம் எப்படி இனவாதக்கொள்கை அமுலாக்கம் வழி கல்வி , சொத்துடமை , வேலைவாய்ப்பு , குடியுரிமை , சமயமேம்பாடு , மனிதநேய புறக்கினைப்பு இப்படி பலவற்றில் நம்மவர்களை ஓரங்கட்டியுள்ளனர்.

ஒவ்வொரு பொதுத் தேர்தல் வரும்போதும் வாக்குறுதிகள் கொடுத்தது மலேசியா இந்தியர் யாவர்க்கும் நன்றாக தெரியும். செடி நட்டவன் கண்டிப்பாக தண்ணீர் ஊற்றுவான் என்ற அக்கறை இருந்தால் 54 வருடங்களில் நாம் நல்ல நிலயில் முன்ணேற்றம் அடந்து இருப்போம். ஆனால் இன்னும் அதே பிரச்சனைகள்தான். எப்படி ஏன் இந்த நிலைமை யார் காரணம்?

குறை நம்மிடம் தான் பரிசானிடம் இல்லை. முட்டாள் தனமாக இன்றும் இனி என்றும் நாம் இருக்க கூடாது. நமக்கு நம் மேல் நம்பிக்கை வேண்டும் பிறகு ஒற்றுமை வேண்டும். பாரிசானுக்கு நமது ஓட்டின் மேல் தீராத ஆசை. குறிப்பாக அம்னோவிற்கு நாம்தான் உற்ற தோழன் அவர்கள் எப்படி அடித்தாலும் உதைத்தாலும் , இழிவுபடுத்தினாலும் நாம் கடமை தவறாது அவர்களுக்கு ஓட்டு போட்டு பாராளுமன்றதில் ஏத்தி நம்மவர்களை கிளிங் , பறையா, பாலிக் நெகிரி, காகி போத்தோல் என்று திட்டிட வழிவகுத்தோம்.

இந்த பிரதமர் இப்போ நம்மிடம் ஒட்டி உறவாடுவது எதற்கு? ஓட்டுக்குதானே
இவர் கல்வி அமைச்சராக இருந்தபோது தமிழ் பள்ளிகளுக்கு என்ன செய்தார்? ஆசிரியர் இல்லாமல் எத்தனை பிள்ளைகள் படிவம் மூன்று மட்டும் ஐந்தில் தமிழ் பாடம் படிக்க முடியாமல் சிரமப் பட்டனர். நல்ல தேர்ச்சி பெற்று தகுந்த படிப்பிற்கு வாய்ப்பு வழங்கப்படாமல் எத்தனை பேர் அன்றும் இன்றும் அவதிபடுகிறார்கள்.

ஏன் இந்த ஓரவஞ்சனை. நாம் இந்த மண்ணில் பிறக்கவில்லையா? நம் முன்னோர்கள் வியர்வை சிந்தவில்லையா? வரிதான் செலுத்தவில்லையா? இதே இனம் இந்த நாட்டின் முதுகு எலும்பாக இருந்து உலக சந்தையில் ரப்பரை முதன்மை பெறச்செய்து அன்னிய செலவாணியை ஈட்டித் தந்தது. இந்தியனின் உழைப்பும் ஓட்டும் தேவை ஆனால் சம உரிமையை கேட்க கூடாது. இதில் எங்கே உள்ளது ஞாயம்?

“சிறுபான்மை இனமே பேசாதே! சொல்வதை செய்!” என்ற காலம் மாறிபோச்சு.  வாரும் வரும் தேர்தல் சாவடியில் அடிக்கும் சாவுமணி.

-மருதன்