ஒரே மலேசியாதானே! கல்விக்கொள்கை வேறுபாட்டை ஒழி!

அரசாங்கம் ‘ஒரே மலேசியா’கொள்கையை மனதிற்கொண்டு கல்விக்கு வழங்கப்படும் ‘முழுஉதவி’ மற்றும் ‘பகுதி உதவி’ என நிகழும் நிதி ஒதுக்கீடுபாராபட்சத்தை அகற்ற வேண்டும் என்கிறது LLG கலாச்சார மேம்பாட்டு மையம். 

சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளிமற்றும் தேசியப்பள்ளி ஆகிய மூன்றையும் ஒரே மாதிரிநியாயமாக நடத்த வேண்டும். இது ‘ஒரே மலேசியா’ கோசத்தின்கூர்பார்க்கும் கல்லாக இது அமைகிறது. இல்லையேல் அரசுசொல்வதொன்று செய்வதொன்று என்ற நிலைக்கு தள்ளப்படும்.

துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான டான்ஸ்ரீ முகைதீன்யாசின், கொள்கை அளவில் அரசு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளைதேசியப்பள்ளிகளாக அங்கீகரிப்பதை ஒப்புகிறது. ஆனால் அரசின்நிதி நிலைமை முன்னிட்டே அதன் நிறைவேற்றச் சாத்தியப்படும்என்கிறார். நாங்கள் துணைப்பிரதமரின் இவ்வறிக்கையைவரவேற்பதோடு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளின் தாய்மொழிக்கல்வி மாற்றபடாமல் பள்ளி வாரியமே பள்ளி சொத்துக்களின்உரிமையாளர்களாக நிலை நிறுத்த வேண்டும்.

இன்றுவரை, அரசு சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு முழு நிதிஉதவியை தருவதில்லை. காரணம் பள்ளி நிலமும் கட்டடமும்அரசுக்கு சொந்தமானதாக இல்லாததால் அதன் வளர்ச்சிக்குஉதவவில்லை. இது மாணவர்களின் கல்வி சம உரிமையைபறிப்பதாகும.

LLG கலாச்சார மேம்பாட்டு மையத்தின் கோரிக்கை என்னவென்றால், அரசு இவ்விடத்தில் விட்டு கொடுத்து நிலமும்சொத்துகளும் கல்விக்காகவே உபயோகிக்கப்பட்டாலும் முழுஉதவி கிடைப்பதை உதவி செய்ய வேண்டும். பள்ளி வாரியம்திறந்த மனதோடு கல்வி அமைச்சரோடு பேசி சீன மற்றும்தமிழ்ப்பள்ளிகளின் சொத்துகள் முழுமையாக கல்விக்கேபயன்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஆளும்அரசும் இப்பிரச்சனையை விட்டு கொடுத்து அணுகுவதோடு,மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்காது செயல்பட்டால்மட்டுமே அரசின் கொள்கைகள் மக்களின் இதயத்தைக் கவரும்.

அரசு கல்வி சம உரிமை சட்டத்தை இயற்றி இனி கல்வியில்நிகழும் பாகுபாட்டை களைய வேண்டும். இச்சட்டம், தனியார்இடைநிலைப்பள்ளி, சமயப்பள்ளி, சீனக் கல்லூரி போன்ற இலாபநோக்கமற்ற அமைப்புகளையும் உள்ளடக்க வேண்டும். இதன்வழி,பல்வேறு வகையில் கல்வி அமைப்புகளுக்கு நியாயமும்அறிவாற்றல், பல்லின சமூகத்திற்கு ஏற்ற வகையிலும் அமையவழி வகுக்கும்.

இவை மிக முக்கியம், ஏனெனில் கல்வியே நாட்டின் அடிப்படைகட்டுமானமாகும். ஆகவே, பாகுபாடான கல்வி உதவிகளைகளைவதின் வாயிலாக நாடு சிறந்த ஜனநாயக மற்றும் பன்முகசிந்தனையை நோக்கி அடியெடுத்து வைக்கிறதெனப் புரிந்துகொள்ளலாம்.

நாங்களும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்துள்ளஜனநாயக மறுமலர்ச்சிக்கான அறிவிப்புகளை வரவேற்கிறோம்.ஆனால் ஜனநாயகம் என்பது கேட்பது மட்டுமல்ல,நடைமுறைப்படுத்துவதையும் பார்க்க வேண்டும். பிரதமர் இந்தஅறிவிப்புகளை வருகின்ற 13 பொதுத்தேர்தலுக்கு முன்பேநடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் இவை வெறும்தேர்தல் உத்தி என்ற விமர்சனத்திலிருந்து தப்பலாம். நாங்கள்அரசை உடனடியாக வரும் அக்டோபர் அன்று இவை ஒட்டிநாடாளுமன்ற அவசர கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.இக்கூட்டத்தில் ஆளும் அரசோடு, எதிர்க்கட்சிகளும் அரசு சார்பற்றஅமைப்புகளும் ஒன்றிணைந்து ஜனநாயக பாதைக்கான வரைவுப்படத்தை உருவாக்க வேண்டும்.

உள்துறை அமைச்சு உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு (ISA)மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ள இரு சட்டங்களின் உள்ளடக்கத்தைவெளியிட வேண்டும். இச்சட்டங்களின் ‘தீவிரவாதநடவடிக்கைகள்’ என்பதன் அர்த்தம் மேலும் தெளிவாக விளக்கவேண்டும். இனியும் அரசு ‘அரசின் ஸ்திரத்தன்மை பாதிக்கும்’, ‘கலவரங்கள் உருவாகலாம்’, ‘இனங்களிடையே வெறுப்பைபரப்பும்’ போன்ற பதங்களை மாற்று கருத்துகள் சொல்பவர்களுக்குஎதிராக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். இச்சட்டம் நீதிமன்றவிசாரணை இல்லாமல் யாரையும் தடுத்து வைக்கக்கூடாது.

ஜனநாயக மறுமலர்ச்சி இன்னும் வளரவும் ஆழப்படுத்தவும்நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதோடு அரசு,பல்கலைக்கழகம், கல்லூரி சட்டம் (AUKU), பொது ரகசிய சட்டம்(OSA), தேச நிந்தனை சட்டம் போன்றவற்றை அகற்றுவதோடு,அனைத்துலக குடிகள் மற்றும் அரசியல் உரிமைக்கானஉடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும். தொடர்ந்துஅடிப்படை மனித உரிமை சட்டம், சமமான கல்வி சட்டம்,போன்றவற்றை இயற்றி மக்களின் ஜனநாயக உரிமையை காக்கவேண்டும். அரசு பிரிட்டிஷ் ஒளிபரப்பு கழகம் (BBC)எடுத்துக்காட்டாகக் கொண்டு அவை எத்தகைய அரசியல்அமைப்புகளுக்கும் சார்பற்றவர்களாக இயங்க சட்டம் இயற்றவேண்டும்.

Dr. Toh Kon Woon
தலைவர்,
LLG கலாச்சார மேம்பாட்டு மையம்

(மொழிபெயர்ப்பு : சு.யுவராஜன்)