கைக்குக் கைமாறும் பணமே நீ எங்கே இருக்கிறாய்?

இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு வசதியுள்ளவர்கள் உதவ முன் வரவேண்டும் டத்தோ பழனிவேல் வேண்டுகோள்.- தமிழ்நேசன் – 3.10.2011 – ப.16

மஇகா இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிறையவே உதவிகள் செய்து வருவது நாடறிந்த உண்மை. அதுபோலவே சில வசதி படைத்தவர்களும் நிறையவே உதவிதான் வருகின்றனர்.

ஆனாலும் அண்மையக் காலமாக மத்திய அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்காக நிறையவே கொடுத்துள்ளது. அந்தக் கொடுத்தப் பணங்களெல்லாம் என்ன ஆனது?

10 கோடி, 13 கோடி என மத்திய அரசாங்கம் பள்ளிகளுக்கு மானியங்களாகக் கொடுத்தப் பணமெல்லாம் எங்கே போனது? யார் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது?

வசதியுள்ளவர்கள் உதவ முன்வர வேண்டுமென்கிற ஒப்பாரியெல்லாம் இனிமேலும் வேண்டாம்.

அரசு கொடுக்கின்ற பணங்களை முறையாகச் செயல்படுத்தினால் ஒப்பாரியெல்லாம் தேவையுமல்ல – வசதியுள்ளவர்களின் உதவிகளும் தேவையுமல்ல. வசதிபடைத்தவர்களும் எவ்வளவுதான் கொடுப்பார்கள்.

கடந்த 50 ஆண்டுகளாகக் கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டது போதும். அரசிடம் நம்முடைய உரிமைகளைக் உரத்துக் கேட்போம். அவர்களும் கொடுக்கிறார்கள்தான்; ஆனால் எங்கே போகிறது என்பதுதான் இன்னமும் மர்மமாக இருக்கிறது.

ஐயன்.
5.10.2011