“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு”

letchumi“என்னை அந்நியராக நடத்தாதே; இது எனது நாடு” பொருத்தமான அடையாளக் கார்டுகளைப் பெறுவதற்கு கடந்த 12 ஆண்டுகளாகப் போராடி வரும் லெட்சுமி ராமசுந்தரம் அடிக்கடி மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் சொற்றொடர் அது தான்.

நிபோங் தெபாலைச் சேர்ந்த அவர், ஒவ்வொரு முயற்சியிலும் கிடைத்த தோல்வியால் வெறுப்படைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜாவியில் பிஎன் உறுப்புக் கட்சி ஒன்றிடம் தமது ஆவணங்களை ஒப்படைத்ததாகவும் அதில் சம்பந்தப்பட்ட தனிநபர்களிடமிருந்து தமது விண்ணப்பம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காதது மிகவும் மோசமானது என அவர் கூறினார்.

“எனக்கு 50 வயதாகி விட்டதால் எனக்கு ஏன் நீல நிற அடையாளக் கார்டு எதற்கு எனக் கூறி என்னை சிலர் தடுக்கின்றனர். நான் வாக்களிக்கவும் சரியான வேலை கிடைக்கவும் நல்ல மருத்துவமனை வசதிகளைப் பெறவும் எனக்கு அது தேவை என நான் அவர்களிடம் சொல்கிறேன்.”

“என்னுடைய பெற்றோர்கள் இருவருக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளன. எனக்கு சிவப்பு நிற அடையாளக் கார்டு கொடுக்கப்பட்ட போது நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய மூத்த இளைய சகோதரிகள் நீல நிற அடையாளக் கார்டுகளை வைத்துள்ளனர்.”

“எனக்கு சரியான வயது என்ன, நான் எங்கு பிறந்தேன் என்பது கூட எனக்குத் தெரியாது. என்றாலும் நான் கோலாக் கங்சாரில் பிறந்ததாக என் தந்தை அடிக்கடி சொல்வார். என்னை ஈப்போவுக்கு அழைத்துச் சென்று அடையாளக் கார்டு எடுக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை,” என லட்சுமி வருத்தத்துடன் கூறினார்.

“நீல நிற அடையாளக் கார்டு இல்லாததால் அவர் பள்ளிக்கூடத்துக்கும் போக முடியவில்லை. பொருத்தமான வேலையையும் பெற முடியவில்லை.”

அதற்குப் பதில் அவர் வீடுகளில் துப்புரவு செய்வது, சாமான்களைக் கழுவுவது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறிக் கொண்டார்.

பினாங்கு ஜாலான் ஆன்சனில் உள்ள பினாங்கு தேசியப் பதிவுத் துறையில் சந்தித்த போது லட்சுமி அந்த விவரங்களைத் தெரிவித்தார்.