‘மாப்பிள்ளை நாங்கதான்… ஆனா நாங்க போட்டிருக்கிற டிரஸ் பழனிவேலுவோட…!’

najib-palanivelஐயா பழனிவேலு கொஞ்ச நாளாவே கொஞ்சம் முருக்கலாதான் இருக்கார் முருகா. ஏதாவது லேகியம் சாப்பிடுறாரா என்னான்னு ஒன்னும் தெரியல. ‘வின்னர்’ படத்துல வருகிற கட்ட துரை மாதிரி என்னா மொரைப்பு . கட்டதொர பின்னாடி சுத்துற அல்லகைங்க மாதிரி கூடவே நாலஞ்சி பேரு எப்பவும் இருக்காங்க. எப்படியோ தேர்தல் வரைக்கும் இந்தக் காமடியில் எல்லாம் பங்கேற்று நடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. உலகமே ஒரு நாடகம்தானே முருகா!

பழனிவேலு எல்லாத்தையும் சமாளிக்க அவர் வச்சிருக்கிற ஒரே மந்திரம் ‘நம்ம பிரதமர் ரொம்ப நல்லவர். ‘ அண்மையில் கொஞ்சம் அதிகமா போயி… “முன்ன உள்ள பிரதமர்கள் எல்லாம் அதிகமா செய்யல… ஆனால் இவர் செய்றார்” என கூறியுள்ளார்.

என்ன செய்றார்னு தெளிவா சொல்ல மாட்டுறார். அல்தான்துயா பற்றி ஏதாச்சும் ஜாட மாடயா  விமர்சனம் செய்றாரா என்னான்னும் புரியல. எப்படியோ அவரோட வண்டி அப்படியே  தள்ளாடி ஓடுனாலும் பிரச்னைகள் அவர விடுறதா இல்ல.

அண்மையில  எஸ்.பி.எம் பாட விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கல்வி அமைச்சர் எஸ்.பி.எம்மில் 10 பாடங்கள்தான் எடுக்க முடியும் எனச் சொல்ல மக்கள் மத்தியில் கொந்தளிப்பு . உடனே பிரதமர் உள்ளே புகுந்து பிரச்னையைத் தீர்க்குறாராமாம். “தாராளமாக 12 பாடங்கள் எடுக்கலாம் “னு அறிவுப்பு செய்கிறார்.

tamil_school_studentsஅண்ணா… நாங்க இந்தக் காட்சியையெல்லாம் ‘உள்ளத்தை அள்ளித்தா ‘ படத்துலயே பாத்துட்டோங்கண்ணா. அதுல கார்த்திக் , கவுண்டமணிய வில்லன் போல நடிக்க வச்சி , ரம்பாவுக்குத் தொல்லை கொடுப்பார். உடனே கார்த்திக் வந்து காப்பாத்துவார். ரம்பாவுக்கும் கார்த்திக்க கப்புன்னு புடிச்சி போயிடும். நீங்கலெல்லாம் புதுசாவே யோசிக்க மாட்டிங்களாண்ணா. கத படி நம்ம கல்வி அமைச்சர்தான் கவுண்டமணி. அவர நஜீப் வில்லனா காட்டி, தான் ஹீரோவா ஆகப்பார்க்கிறார். உடனே நம்ம பழனியும் பாஞ்சி ‘பிரதமர் சொல்லிவிட்டார் எல்லா பிரச்னையும் தீர்ந்தது இனி தற்காலிக ஆசிரியர்கள் மூலம் இடைநிலைப்பள்ளிகளில் தமிழும் தமிழ் இலக்கியமும் தொடரும்’ என  தமிழ்ச்செய்தியில் உளறிக் கொட்டுகிறார்.

கொஞ்சம் நல்லா யோசிச்சி பார்த்தா நம்மள எவ்வளோ முட்டாளா ஆக்குறாங்கன்னு தெரியும். முதல்ல இருந்தே நம்மோட சிக்கல் தற்காலிக ஆசிரியர்கள்தான். தமிழ்ப்பள்ளியிலும் இடைநிலை பள்ளியில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கும் பற்றாகுறை நிலவுகிறது. ஆனால், மிக சாதூர்யமாக எஸ்.பி.எம்-மில் 10 பாடங்கள்தான் எடுக்க முடியும் என வேறொரு சிக்கலை ஏற்படுத்துகிறார்கள். எல்லார் கவனமும் அதில் குவிகிறது. 12 பாடங்கள் வேண்டும் என போராடுகின்றனர். உடனே புதிதாக எதையோ செய்ததுபோல ’12 பாடங்கள் எடுக்க அனுமதி’ என வரம் போல தருகிறார் பிரதமர். ஆனால், தற்காலிக ஆசிரியர் பிரச்னை அப்படியே கிடப்பில் இருக்கிறது.

எங்காவது ஒரு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவர் இருப்பாரா? தற்காலிக போலிஸ் இருப்பாரா? அல்லது தற்காலிய வழக்கறிஞர்தான் இருக்கிறாரா? அப்படிப் பயிற்சி இல்லாமல் தற்காலிகமாக ஒருவர் பணியாற்றினால் அவர்களை நம்பி வருவபவர்களின் நிலை என்ன? ஆனால் இந்த விசயத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் இடைநிலைப்பள்ளியில் தமிழ்ப் படிக்க ஆர்வம் காட்டும் மாணவர்கள் மட்டும் பாதிக்கப்படலாம் என பழனிவேலு நினைக்கிறாரா? இப்படித்தான் காலம் தோறும் எங்கள் கவனம் சிதறடிக்கப்படுகிறது முருகா.

பழனிவேலுவும் நமக்கெல்லாம் பிரச்னையே இல்லை . நீங்களெல்லாம் மாப்பிள்ளைதான் என்கிறார். ஐயா… நாங்க மாப்பிள்ளைதான்… ஆனா நாங்க போட்டிருக்கும் டிரஸ் உங்களுடையதாச்சே… திரும்ப நீங்க கேட்டா கலட்டி கொடுத்தாகனுமே. எங்களுக்கு வேட்டியெல்லாம் வேண்டாம்பா. சொந்தமா ஒரு கைலிய கொடுங்க என்கிறோம் அவ்வளவுதான்.

ஆனா நீங்களோ…. நிரந்தர தீர்வ கொடுக்காம இருக்கிற கோவணத்தையும் எடுத்துக்கிட்டு திரும்பவும் அதையே துவைக்காம கொடுத்தா நாத்தம் தாங்க முடியலேயே…

-முருக பக்தன்