இந்த குருமார் வழிபாட்டின் தத்துவம் என்ன? ஒரு மனிதர் தான் வாழ்ந்தக் காலத்தில் ஏதோ அற்புதங்களை நிகழ்த்தினார் என்பதற்காக (அதுவும் அதற்கு எந்த ஒரு ஆதாரப்பூர்வமான சான்றுகள் கிடையாது) அவர் வழிபாட்டிற்கு உரியவர் ஆகிவிடுவாரா?
நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த ஒருவரை (இக்குருமார்களின் இறப்பை பல மாதிரி இட்டுக்கட்டிச் சொல்வது அவரின் சீடர்களின் தொன்று தொட்டு வரும் ஒரு பழக்கம்) எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்வது?
வரலாற்றுக்கு முற்பட்டக் காலத்தில் நிகழ்ந்ததைத்தான் ஐதீகம் புராணம் மரபு நம்பிக்கை என்று எந்த ஒரு சான்றுகளுமின்றி எங்களை நம்பவைத்தீர்கள்!
சைவ சமய போதனைப்படி இறைவன் ஒரு நாளும் ஒரு தாயின் கருப்பையில் உண்டாகி பிறக்க மாட்டான் என்பது முடிந்த முடிபு.
குருவானவர்(உண்மை குருவாக இருந்தால் மட்டுமே, ஆனால் இந்த குருமார் வழிபாட்டில் ஈடுபடும் அனைத்து பக்தகோடிகளும் தங்கள் குரு உண்மையானவர் என்று வாதிடுகின்றனர், நித்தியானந்தா ரஞ்ஜிதா கமலீலையில் ஈடுபட்டு பிடிபட்ட பின்னரும் அவரை அவதாரப்புருஷர் என்று அவரின் பக்தர்கள் கூறுகின்றனர் முன்பைவிட தற்பொழுது அவருக்கு பெண் பக்தர்கள் மிக அதிகமாகப் பெருகி விட்டனர், இதிலிருந்தே பக்தகோடிகள் குருவை தேர்ந்தெடுக்கும் லட்சணம் தெரிகிறது! நித்தியானந்தா மட்டுமல்ல இன்னும் நிறைய குருமார்களின் யோக்கியதை இப்படித்தான் இருக்கு) மிகுந்த மரியாதைக்கும் மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரியவர்.
அப்படியிருக்க அடிப்படையில் சைவ சமயிகளான தமிழர்கள் எப்படி நம்முடன் பிறந்து வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு இறந்த மனிதர்களை கடவுளின் அவதாரம் என்றும் அவர் கடவுள் என்றும் நம்பி இந்த குருவழிபாட்டுக் கூட்டத்தில் போய் மாட்டிக் கொண்டனர்?
முன்பு ஒரு காலத்தில் நம் மலேசியத் தமிழர்கள் பெருந்தெய்வ வழிபாட்டோடு சிறு தெய்வ வழிபாட்டையும் கடைபிடித்து வந்தனர் பிறகு சைவ சமய அறிஞர் மற்றும் தொண்டர்களின் கடும் முயற்சியால் மலேசியத் தமிழர்கள்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்) பெரும்பாண்மையோர் சைவ சமய நெறிகளுக்குத் திரும்பினர்.
சிறு தெய்வ வழிபாடும் அவற்றிக்கு உயிர் பலியிடுவதும் குறைந்தது. முனியாண்டியாக காட்டோரத்தில் இருந்த சிறு தெய்வம் முனீஸ்வரராக மாற்றங்கண்டு கோயில் உள்ளே ஒரு தனி சன்னதி அமைத்து சைவ முனீஸ்வரராக அருள் பாலித்தது. பிற்காலத்தில் இந்த முனீஸ்வரர் சிவனின் ஒரு அவதாரம் என்று மக்களால் நம்பப்பட்டு வழிபடப்பட்டார் (மலேசியத் தமிழர்களால்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்)). சில பல முனீஸ்வரர் கோயில்கள் பிற்காலத்தில் சிவாலயங்களாக மாற்றம் கண்டது. அங்கு சைவ சமய முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது, உயிர் பலியிடுவது நிறுத்தப்பட்டது.
எது எப்படியோ மலேசியத் தமிழர்கள்(இந்து சமயத்தை சார்ந்தவர்கள் மட்டுமே குறிக்கப்படுகின்றனர்) சைவ சமயத்தை சார்ந்தவர்களாகவே வாழ்ந்தனர். எனக்குத் தெரிந்து தோட்டப்புரத்தில், மலாயாவில் குடியேறியது முதல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறந்து வாழ்ந்த தமிழர்கள் (நானும் தோட்டப்புரத்தில் பிறந்து வளர்ந்தவன் தான்) தங்களிடம் ஒருவர் வந்து நீங்கள் என்ன இனம், நீங்கள் என்ன மதம் என்று கேட்டால்: “நாங்க தமிளாலுங்க, நாங்க கும்படறது தமிள சாமிங்கள” என்றுதான் பதில் சொல்லுவார்கள், நானும் அப்படிதான் பதில் கூறினேன்.
இப்படித் தமிழ் மயமாக வாழ்ந்த மலேசியத் தமிழர்கள் பிற்காலத்தில் எப்படி தன்னிலை மறந்து இந்தியன் இந்து என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டனர்? இந்தியன் தமிழன் என்ற இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் மூடனானான்! இந்நாட்டில் வாழும் ஏனைய இனத்தோரெல்லாம் (பூர்வீகக்குடியினர் உட்பட) தங்களின் இன சமயத்தை சரியாக தெளிவாக அடையாளப் படுத்திக் கொள்ளும் போது தமிழர்களுக்கு மட்டும் ஏன் இந்த தடுமாற்றம் அறியாமை!
முன்பு தோட்டப்புரத்தில், தெளிவான இன அடையாளத்தோடு வாழ்ந்த தமிழர்கள் பிற்காலத்தில் எவ்வாறு தன்னிலை மறந்து இந்தியன் இந்து ஆனான்? அவனது தமிழ் அடையாளத்தை யார் மறக்கச் செய்தது? அவனது சைவ சமயத்தை யார் இருட்டடிப்புச் செய்தது?
இதற்கும் குருமார் வழிபாட்டிற்கும் என்ன சம்மந்தம்? அது இந்து சமயத்திற்கு அச்சுறுத்தலாய் அமையப் போவது எப்படி?
அடுத்தக் கட்டுரையில் தொடரும்…
-கதிர்
________________________________________________________________________________________________________
22/07/2013 Article (Part – 1)
மலேசியாவில் சிறுபான்மையினராய் வாழும் தமிழர்கள் (இந்து(சைவசமயம்) சமயத்தை சார்ந்துள்ள தமிழர்களை மட்டுமே இக்கட்டுரை விவாதிக்கிறது) இந்நாட்டில் தங்கள் இன சமய அடையாளங்களை நிலைநிறுத்திக் கொள்ள பெரும் சவால்களை எதிர் நோக்குகின்றனர்.
அண்மைய காலமாக வேற்று மதத்தினரின் மதமாற்றத் தாக்குதல்கலால் பெரும் இக்கட்டை நம்மினம் சந்தித்து வருவது உண்மையே! இது பெரும் சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் ஆளாகி வருவதும் நாம் அறிந்ததே.
அத்தோடு நம்மினத்தையும் சமயத்தையும் இழிந்தும் பழித்தும் பேசுவதும், நம் கோயில்களை ஆங்காங்கே இடித்துத் தள்ளுவதும் இந்நாட்டில் வாடிக்கையான நிகழ்வுகளே!
நம் இனத்தையும் சமயத்தையும் தற்காக்கும் பொறுப்பில் உள்ள நாம் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசு சாரா இயக்கங்களும் தங்கள் கடமையை சரிவரச் செய்யவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இது இவ்வாறு இருக்க, நம்மிடையே சமீப காலமாகத் தோன்றி; (இந்தியாவிலிருந்து இறக்குமதியானவை) அசுரவேக வளர்ச்சி கண்டுவரும் குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்கள் இந்து(சைவசமயம்) சமயத்திற்கும் தமிழர் அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாய் மாறிவருகிறது!
ஆண்டாண்டு காலமாய் நம் மலேசியத் தமிழர்கள் முருகனையும் மாரியம்மனையும் வழிபட்டு தேவார திருவாசக திருமுறைகளை ஓதி நம் தமிழ் சைவ சமய அடையாளங்களை பேனி வந்த நிலை மாறி இன்று ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களில் போய் சேர்ந்துக் கொண்டு பஜனைகளிலும்(இது பெரும்பாலும் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியில் பாடப்படுகிறது) யோகாவிலும் தியானத்திலும் மூழ்கி நம் இன அடையாளத்தையும் சைவ சமய போதனைகளையும் இழந்து வருகிறார்கள்!
நம் சைவ சமய போதனைகள் சமயத்தோடு நம் தமிழையும் வழியுறுத்தி நம் அடையாளத்தை காத்தது. தேவார திருவாசக திருமுறைகளை ஓதும் போது நம்முள் ஆன்மீகத்தோடு தமிழும் தமிழ்ப் பற்றும் வளர்ந்தது! முருகக் கடவுளை நாம் வணங்கி வந்த போது, முருகன் தமிழ்க் கடவுள் என்ற அடையாளமும் திருப்புகழ், கந்த சஷ்டி கவசம் போன்ற தெய்வீகப் பாடல்களை நாம் ஓதும் போது தெய்வீகமும் தமிழும் நம்மோடு பேனிக் காக்கப்பட்டது.
ஆனால் இன்று ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்கள் அறுசமய கூட்டான வைதீக சமயத்தில் (ஆதிசங்கரரால் ஒருங்கினைக்கப்பட்டு வகுக்கப்பட்டது. இதையே பிற்காலத்தில் இந்து சமயம் என்று பொதுவாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. நம் தமிழர்கள் இந்த அறுசமயக் கூட்டில் சைவ சமயத்தை சார்ந்தவர்கள்.) எந்தப் பிரிவை சார்ந்தவர்கள்? இவர்களால் நம் தமிழர் மற்றும் சைவ சமய அடையாளத்தை வளர்க்க முடியுமா? வளர்த்தார்களா?
இன்று இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான இந்துத் தமிழர்கள் ஊர் தோரும் புற்றீசல்களைப் போல் தோன்றியுள்ள இந்த குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் பக்தகோடிகளாய் மாறியுள்ளனர்!
இது மாதிரியான இயக்கங்களில் சைவசமய கோட்பாடுகளோ தமிழ் இன மற்றும் மொழியை அடையாளப்படுத்தும் சயல்களோ கிடையாது! இது மாதிரியான இயக்கங்களில் மயக்கம் கொண்டு சேரும் இந்தத் தலைமுறையினர் நமது அடுத்த சந்ததியினருக்கு எப்படி நம் இன மொழி அடையாளத்தோடு சேர்த்து ஆன்ம கடைத்தேற்றத்திற்கு திறவுகோலாய் அமைந்துள்ள சைவசமயத்தை விட்டுச் செல்வது?
இது மாதிரியான இயக்கங்களை வழிநடத்துபவர்கள் பல இடங்களில் தமிழ் இன மற்றும் மொழி முக்கியத்துவத்தை பின்தள்ளி ஆங்கில மற்றும் சமஸ்கிருத மொழி ஆளுமையை நம் மேல் தினிக்கின்றனர்! நம்மை தமிழர் என்று சிந்திக்க விடாமல் இந்தியர் இந்தியர் என்றச் சிந்தனையை நம் மேல் தினித்து நம் பிறப்புரிமையை மறக்கச் செய்கின்றனர். நம்மைத் தமிழராய் சிந்தித்து தமிழர் அடையாளத்தில் செயல்பட விடாமல் தடுத்து நிறுத்தும் புல்லுருவிக் கூட்டம் நம்முடனேயே இருப்பதை அப்பாவித் தமிழர்கள் உனர்வதில்லை!
சரி நம் கதைக்கு வருவோம், இது மாதிரியான இயக்கங்களை வழிநடத்துபவர்கள் பெரும்பாலோர் தமிழர் அல்லாதவரே! இவர்களை நம்பி இன்று இந்நாட்டில் வாழும் பெரும்பான்மையான இந்துத் தமிழர்கள் ஊர் தோரும் தெருவுக்குத் தெரு தோன்றியுள்ள இந்த குருமார் வழிபாட்டு இயக்கங்கள், பல்வேறு யோகா மற்றும் ஆன்மீகம் சார்ந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் பக்தகோடிகளாய் சரனடைந்துள்ளனர்! இதனால் நாமும் நம் எதிர்காலத் தலைமுறையினரும் இழக்கப்போவது நாம் தமிழர் என்ற இன அடையாளத்தையும் நம் இன மொழி அடையாளத்தோடு சேர்த்து ஆன்ம கடைத்தேற்றத்திற்கு திறவு கோலாய் அமைந்துள்ள சைவசமயத்தையும்!
நம்மை தமிழர் என்று சிந்திக்க விடாமல், ஒருங்கினைய விடாமல், அடையாளப்படுத்த விடாமல் பல காலமும் நம் மூளையை மழுங்கடித்து வைத்திருக்கும் புல்லுருவிக்கூட்டம் இப்போது தமிழர்கள் தங்களை சைவ சமயிகள் என்று சிந்திக்க விடாமல், ஒருங்கினைய விடாமல், அடையாளப்படுத்த விடாமல் தடுத்திட கிளம்பிவிட்டனர்!
– கதிர்
என்று தமிழன் தன மீது போர்த்தப்பட்டுள்ள இந்துப் போர்வையை கழற்றி எறிகிறானோ அன்றுதான் தமிழன் உலகம் போற்றுபவனாக திகழ்வான்! யானைக்கு தன பலம் எப்படி தெரியாதோ அதே போன்று இந்துவாக இருக்கும் தமிழனுக்கு தன பலம் தெரியாது?
முதன் முதலிலி தீயா யோசித்து எழுதி உளீர்கள்.கதிர்…சபாஷ்!
சிவன் கோவிலில் 25 காசுக்கு வெட்டியானுக்கு வேட்டி விரித்து போட்ட காலம் போய் மொட்ர்ன் சவ அடக்கம் இப்போது 5,000 செலவாகுது. முன்பு கருமாதிக்கு வராத ஐயன் இன்று கடற்கரை வரை வந்து கட்டம் கட்டி சம்பாதிக்க தயாராகி விட்டன. அய்யனோட வசூலே அவனின் மோகம். புகை காட்டி சம்பாதிக்கும் dr பரமசிவம் போன்ற பக்கா பெருசாளில்கள் உள்ளவரை அய்யன் ஆட்டம் அடங்காது.நமது சிவனிசம் வெறும் சாம்பல்தான்.சமயம் ஒரு அழகு போராட்ட்டமாகிவிட்டது.அதில் அவன் சம்பாதிக்கிறான் நம்மவர்கள் ஏமாளி பயநீட்டளர்கள்.
வர வர ரொம்ப மோசமாக போகிறது சமுதாயம், இன்று யாரோ ஒருவர் ஒரு படத்தை photoshop மூலம் நிலவுடன் இணைத்து வெளியிட்டள்ளார், உடனே அனைவருக்கும் அந்த உருவம் நிலவில் தெரிகிறதாம் , என்ன ஜென்மங்கள் , அந்த போடோஷப் பில் செய்ய பட்ட படம் அப்பட்டமாக போலி என்று தெரிகிறது அந்த நினைவிலேயே அன்னது பார்த்தல் சாய் ராம் என்ன கமலஹாசன் கூட தெரிவார்
குருமார்கள் ஆசிரமங்கள் இயங்குவது ஒருபுறம் இருக்கட்டும். அதனால் சமுதாயத்திற்கு ஒன்றும் பெரிய கேடு விளைந்துவிடவில்லை. ஆனால் தடம் மாறிப்போகும் குண்டர் கும்பல்கள் பல இந்நாட்டில் இயங்கி வருகின்றனவே.. நம்மின இளைஞர்களின் எண்ணிக்கைதான் அதில் அதிகம். அதைப் பற்றி பொதுமேடையில் பேசவும் விவாதிக்கவும் தைரியம் இருக்கிறதா இந்த கதிருக்கு? யாரை சுலபமாக மேய முடியுமோ, அதனை தைரியமாக செய்து காட்டுவதுபோல் ஏன் இந்த வீண் நடிப்பு கதிர். இந்நாட்டில் சமய மாற்று விவகாரம் பூதாகரமாக இருக்கிறதே அதைப் பற்றி பொதுவில் பேசலாமே!
“குருமார்கள் வழிபாட்டு முறையால் ஒன்றும் சமுதாயத்திற்கு கேடு விளைந்திடவில்லை!” என்று கருத்துரைப்பவரிடம் கேட்கிறேன், எந்த சமுதாயத்திற்கு ஒரு கேடும் இல்லை? எந்த மொழிக்கு ஒரு கேடும் இல்லை? எந்த கலாச்சாரத்திற்கு ஒரு கேடும் இல்லை? தமிழனைத் தரைமட்டமாக்கும் ஒரு செயலை யார்கண்டித்து எழுதினால் என்ன? அதை எண்ணி பெருமைபடுவதற்கு பதிலாக , பொது மேடை விவாதத்திற்கு சவால்விடுவது விடுவது தமிழினத்தை , அதன் நலனை பிரதிபலிக்கவில்லையே? குண்டர் கும்பல் பிரச்னை சமூக சீர்கேட்டின் உச்சம். அந்த சீர்கேடு தமிழினப் பற்றால் தானா வந்தது? தமிழன் தன்னிலை மறந்ததால் வந்தது ; தமிழன் பொருளாதாரத்தில் பின்னடைவை அடைய இந்த நாட்டு அரசியல்வாதிகளின் சதிச்செயலால் வந்தது ; கல்வியில், வேலைவாய்ப்பில் தமிழினம் ஓரங்கட்டப்பட்டதால் வந்தது தமிழினத்தில் குண்டர் கும்பல் கலாச்சாரம். அதற்கும் கட்டுரையாளருக்கும் என்ன சம்பந்தம் கண்டீர்? கதிர் என்ன குண்டர் கும்பலின் தலைவனா? அல்லது குண்டர்கும்பலின் பிதாமகனா அவரிடம் சவால் விடுவதற்கு?
மாதா பிதா குரு தெய்வம்..
குரு வழிபாடு சைவ சமயத்தில் வலியுறுத்தி உள்ளது. நமக்கு பாடம் கற்பிற்கும் குரு-வும் மதிக்கதக்கவரே.. யாரை வேண்டுமானாலும் குருவாக ஏற்க்கலாம். நவகிரங்களில் கூட குரு பகவான் சுக்கிர பகவான் என 2 குரு இருக்கிறார்கள். அதனால் அதை ஒரு விசயமாக எடுத்து கொள்ள கூடாது. குருவும் நம்மை வழி நடத்த வந்தவர்தான். அனால் மூட நம்பிக்கையாக இருக்க கூடாது. நீங்கள் சொல்லும் இந்த யோகா தியான மையங்களில் உள்ளோர் எதனை பேர் உண்மையாக உள்ளவர்கள். யோகா சொல்லுபவர் மனைவி கழுத்து நிறைய தங்க நகைகளை அணித்து நாளிதழ்களில் கலக்குவார்.. ஆனால் கற்றுக்கொள்ள சென்றவர் நிலை?? இதை யோசிங்கள்..
சபாஷ் ஜெகா ! பாலா இன்னும் சமஸ்கிருத குருமார்க குட்டையிலிருந்து வெளிவர வில்லை….சமஸ்கிருத் மந்திரங்கள்
அவனுகே விளங்காது இவருக்கு என்ன வடியுது?
ஐயா கதிர் நான் ஏற்கனவே செம்பருத்தியில் இதுபற்றி பலதடவை பின்னுட்டம் எழுதியிருக்கிறேன் .. யாரும் கண்டுகொள்ளவில்லை .
உங்கள் செய்தி சரியான நேரத்தில் வந்திருக்கிறது . இந்த வாலா தமிழன் இல்லை ..
இத வழிநடத்தி வருகிறவர்கள் தமிழர் இல்லை .. பிரச்சனை இல்லாத வியாபரதளம் குருவளிபாட்டுதலம். தலைநகரில் லெபோ அம்பாங் பகுதியில் தமிழ் படும்பாடு ஐயோகோ.. குண்டர் கும்பல் தமிழர்கள் மிக குறைவு.. தமிழரல்லாதவர்கள் முதலிடம் ..ஆனால் கெட்டசெஇதிக்கு தமிழர்கள் …இந்தியன் செய்கிறது எல்லாம் நாத்தவேல …போலீஸ் உலவுபெதாக்களிடம் கேட்டால் முதலிடம் குண்டர் கும்பல் செயல் தமிழரல்லாத இரண்டாமிடத்தில் இருப்பவர்கள் !! தமிழ் அமைசர் கடந்த காலசாதனை இந்தோனேசிய பெண்களின் உரிமைக்கு குரல்கொடுத்தது ,தலைநகரில் உள்ள இந்தியர் வழிநடத்தும் தமிழ் மொழியை கொச்சைபடுத்தும் குருவளிபாட்டு வியபாரதளத்துக்கு பெரிய தொகை அன்பளிப்பு கொடுத்தது இந்த அமைச்சரின் சாதனை .. தன்மான தமிழர்கள் இந்தமாதிரி பொம்மைகளை விரட்டி மொழிப்பற்று இனப்பற்று உள்ள சைவத்தை பின்பற்றும் தமிழரை தேர்வு செய்யவும் ..
இதற்கு முதல் தவறு செய்பவர்கள் யார் தெரியுமா இந்து சங்க தலைவர் என்று சொல்லி கொள்ளும் மோகன் ஷேன் அவர்கள்தான் நாட்டில் உள்ள அணைத்து ஆலயங்களில் எத்தனை உறுப்பினர்கள் இருகிறார்கள் என்பதனை முதலில் சென்று பார்க்க சொல்லுங்கள் பிறகு தெரியும் சமய இலச்சணம் . ஆலயங்களுக்கு மானியம் இந்து சங்கம் முலம் தான் வர வேண்டுமே தவிர கட்சிகள் மூலம் அல்ல என்பதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்
அப்பப்பா இந்த புதுப் புது குருமார்கள் வழிபாடு எப்படியெல்லாம் தமிழனை ஆட்டிப் படைக்குது பாருங்கள். பரம்பொருளின் நெறியை அறியாத, உணராத தமிழன், பணத்தைக் கட்டி குரு கொடுக்கும் ஆசிர்வதத்தால் அனைத்தையும் பெற்றேன் என்று அங்கலாயித்தால் பின் உங்களுக்கு சமயம் ஏன்? முதலில் சமய நெறியைக் கற்றுக் கொள்ள, காசு பணம் வாங்காத உண்மையானா குருவை கண்டுபிடித்து இறைவனின் பேரின்பத்தை அடைய முயற்சியுங்கள். தக்க நேரத்தில் அந்த சிவபெருமானே உங்களுக்கு குருவாகவும் வரலாம். அதை விடுத்து சடப் பொருள்கலானா நவகிரங்கள் (குரு சுக்கிரனையும் சேர்த்துதான்) உங்களுக்கு எந்த நன்மையும் செய்யா என்பதனையும் அறிந்துக் கொள்ளுங்கள்.
நண்பர்கள் நிறைய பேர் ஆத்திரத்தில் குரு வழிபாட்டை வசைபாடி இருக்கின்றனர்! விவேகானந்தர்க்கு பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருவாக இருந்தார், பலருக்கு புத்தர், பகவான் ரமணர் போன்றோர் குருவாக இருந்திருக்கின்றனர். ஆன்மீக தேடலில் குருவின் வழிகாட்டல் நமக்கு நன்மையே. இருந்தாலும் மாணவனின் லட்சணம் மட்டுமல்ல, குருவின் லட்சணம் என்ன என்பதையும் வேதம் விளக்குகிறது. அதன்படி குரு தகுதியானவரா என்பதை அவரவர் முடிவு செய்யலாம். இங்கே கதிர் சாடுவது சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும், தவறான வழிகாட்டியாக இருக்கும் போலி ‘குரு’மார்கள் என நினைக்கிறேன் (Datuk Sri போல) . இந்து சமயத்தால் தமிழுக்கு பாதிப்பு வருகிறது என்பது தவறான கருத்து என்பது என் கருத்து!
தமிழனுக்கு மட்டும்தான் வேற்று இனத்தான் குருவாக இருப்பான்
தமிழன் அல்லதவனுகுக்கு தமிழ் இன குரு இருக்க மாட்டான்.இந்து
தூவம் தமிழன்னுகுள் உடுருவி வெற்றி கண்டு விட்டது. ஹின்றப்
அதன் உருவாக்கம்தான்.. ..தமிழர்களே மொழி தான் நமக்கு விழி
இந்து மதத்தால் தமிழனுக்கு பாதிப்பு வருகிறதோ இல்லையோ .ஆனால் , தன்மானமில்லாத,தன்னுணர்வு இல்லாத, இனவுணர்வு இல்லாத, மொழியுணர்வு இல்லாத, எல்லாவற்றையும்விட தன் இனத்தை எதற்காகவும் சின்னாப்பின்னமாக்கக்கூடிய தமிழனால் மாத்திரம் எப்போதுமே தமிழினத்திற்கு ஆபத்துத்தான்! ஆபத்துத்தான்! அறிவன் போன்று தமிழ் உணர்வுள்ள தம்பிகள் நிறையப்பேர் இப்பகுதியில் கருத்துரைத்திருப்பதை எண்ணி நெஞ்சம் நிறைகிறது! வாழ்க தமிழ்! வாழ்வாங்கு வாழ்க தமிழினம் மற்ற இனத்தினரைப்போல!
அருமையான விழிப்புணர்வு கட்டுரை , ஹிந்து சமயத்தை
முழுமையாக அறிவோம் .ஆண்டவனை அடைவோம் .
குருமார்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை ,கடவுள் எதையுமே கேட்கவில்லை, ஆனால் இவனுங்க கேட்பானுங்க பாருங்க! அட சாமி….!
இங்கே போர்ட்டிக்சனில் ஒரு தமிழ்ப்பள்ளியில் “ஐந்து கரத்தனை” என்று தமிழில் இறை வணக்கம் பாடத் தொடங்கிய மாணவர்களை ” ஐந்து கரமாவது, ஆறு கரமாவது, ஓம் யோக ஞான சித்தர் நமக என்று சொல்லுங்கள்” என்று ஒரு அசிரியர் சொல்ல வேறு வழியின்றி மாணவர்கள் இப்போது கட்டாய “மதமாற்றம்?”. பள்ளியில் 3 ஆசிரியர்களைத் தவிற தலைமை ஆசிரியர் உட்பட மற்ற அனைவரும் டத்தோ ஸ்ரீ போற்றி.. மேன்மைகொள் சைவநீதி விளங்குமா உலகமெல்லாம்???
கோட்டு சூட்டு போட்டவனெல்லாம் இன்று சித்தன் என்று சொல்லுகிறான். அதை படித்த மேதைகள் எல்லாம் அமோதிகிறார்கள். சிவவாக்கியர் என்ற சித்தர் சொன்ன பாடலை கேளும் பிறகு எண்ணி பாரும் . ” சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திர சழக்கேரே, பொட்டகத்தை மெத்த வைத்து போதமோதும் பொய்யரே ,
நிட்டை ஏது ஞானமேது ? நீரிருந்த அட்சரம், பட்டை ஏது ? சொல்லிறே பாதக கபடரே ? இந்த உண்மை சித்தர்கள் எல்லாம் ஐந்து கரத்தனை வழி பட்டு தான் மற்ற பாடல்களை இயற்றினர். உண்மை சித்தர் உடைமைகள் இன்றி பலநூறு ஆண்டுகள் வாழ்ந்தார்கள். இந்த கலியுக சித்தன் எத்தனை காலம் வாழ்ந்து நமக்கு மோட்சத்தை கொடுப்பார்?
மரபு திரிபின் பிறிது பிறிதாகும்!
குருமார்கள் வழிபாடு தவறில்லை. ஆனால் உண்மையான குருமார்களாக தேர்ந்தெடுத்து வழிபாடு செய்ய வேண்டும். திருட்டு , பெண்பொறுக்கி மற்றும் பணம் சம்பாதிக்கும் சாமியார்களை இந்து சங்கம் அவர்களை தடை செய்ய வேண்டும்.
அன்பர்களே சித்தர்கள் 60கிலொ மேல இருக்கமாட்டார்கள்.பணத்தை
சுட்டவர்கள் எப்படியும் இருப்பார்கள் ஓம் யோகா ஞான குண்டைய நமஹ 750 முறை சொல்லவும்
குருவுக்கு குருவானவன் முருகப்பெருமான்,அதை முதலில் உணருங்கள்!முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த முருகப்பெருமான் ஒருவனே!ஒன்றிலிருந்து தோன்றியதுதான் அனைத்தும்!சைவ சமயத்தின் உயர் தத்துவம் அவனையே சேரும்! அதில் எந்த சந்தேகமும் இல்லை!
அமர லட்சகன், உங்களின் புதிய கண்டு பிடிப்பு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்களின் கருத்துக்கு ஆதாரம் எங்கே?
ஜொகூர் பாரு-வில் போர்க்ளிப்ட் ஓட்டியவன் இன்று டத்தோஸ்ரீ குருஜி. தன்னைப் பெற்றத் தாயின் காலில் விழாதவன் இன்று பணம் தின்னும் இந்தா குருஜி காலில் விழுகிறான். சித்தன் என்றால், எல்லாம் துறந்தவன் ஆனால் இவனோ போலிஸ் துனையுடன் வருவான். மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்று பாட்டு வேறு. 750வெள்ளி பணம் வாங்கும் இவன், அந்த பணத்தை சம்பாரிக்க ஒரு சாமானியன் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பான் என்று தெரியுமா? தியானத்தை பற்றி இவனுக்கு ஒன்றும் தெரியாது. எல்லாம் பகல் வேசம்.
குருமார்களிடம் பக்தியும், மதிப்பும் இருக்க வேண்டும் தவிர அவர்களை கடவுளுக்கு ஒப்பிட்டும், நடமாடும் கடவுள் என்றும் எண்ணி அவர்களை வணங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 6 வகை இந்து சமயத்தில் இவர்கள் எந்த சமயத்தை சார்ந்தவர்கள்.?
தமிழர்கள் இந்து மதத்தால் என்றுமே ஒன்றுசேரவே முடியாது .ஏன் எனில் நாம் பலபெயர்களில் இறைவனை வழிபடுகிறோம் .இதன் வழி மற்றவர்கள் தமிழர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி பிரித்து ஆழ வழி வகுக்கிறது .இதில் இருந்து விடுபட ஒவ்வொரு தமிழனும் இறைவழிபாட்டின் முடிவில் தமிழர் உருப்பட வேண்டும் என பத்து தடவைகள் கூறுவோம் .இது ஒவ்வொரு தமிழரின் நாவில் இருந்தும் நாடு முழுதும் ஒலிக்கும்போது இது தாரக மந்திரமாக ஒலிக்கும்.இது நம்மை ,தமிழரை ஒன்றுபடுத்தி முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும்.
தேனி அவர்களே! பழனிமலை ஒன்றே பெரும் ஆதாரம், இது புதிது அல்ல! சிவனாண்டி மகனாக பிறந்தான்டி! பழனிமலை உட்சியிலும் ஆறறிவு படைத்த அனைத்து மானிட பிறவி உட்சியிலும் அவனே ஆதாரம்! பழனிமலை முழுவதும் முப்பத்து முக்கோடி தேவர்களின் முக்கோண பீடம்! தேடுங்கள் கிடைக்கும் மேலும் ஆதாரம்!
அமர லட்சகன், நீங்கள் சைவ சமய நெறி என்ன என்பதை அறியாமல் கருத்து எழுதுகின்றீர்கள். சைவர்கள் பரம்பொருளாகிய சிவபெருமானையே முழு முதற்கடவுளாக வணங்குபவர்கள். முருகன் நாம் வணங்கும் பல தெய்வங்களில் ஒருவர். அனைத்து தெய்வங்களும் பரம்பொருள் என்றால் அப்புறம் பரம்பொருள் ஒன்று என்ற நெறி பிழையாகிவிடும் அல்லவா?
எல்லோரும் ஏதேதோ கருத்தை சொல்றீங்க, சரி… ஆனா இந்த பிரச்சனை எல்லாம் ஏன் இன்னும் நம் சமூதாயத்தில் மட்டும் நடக்கிறதுனு யோசிச்சிங்களா.. அந்த காரணத்தை முதல்ல அலசி ஆராயுங்கள்.. கருத்தை சொல்லுங்கள்… பிறகு எல்லோரும் ஒன்றாக்கூடி ஒரு தீர்வைக் காணலாம்.. யாரையும் குறை சொல்றதோட தன் வேலை முடிஞ்சதுனு நிறுத்திட வேண்டாம்.. நம் மக்களிடையே உள்ள குறைய சரி செய்ய வழி தேடுவோம்.. அதை அனைவரும் ஒன்றாய் செயல்படுத்திடுவோம்.. காலத்தை கடத்திட வேண்டாம்.. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. வெல்வோம் நிச்சயமாக..
அனைவருக்கும் வணக்கம்,உங்கள் அனைவரது கருத்துக்களையும் படித்தேன். அனைவரும் உங்கள் மனதில் உள்ளதை தெரிவித்துள்ளீர்கள். எல்லாம் சரிதான், சொல்லிவிட்டு போய்விட்டால் போதுமா? நம் தமிழரிடையே சைவ சமய பிரச்சாரங்களை செய்வதும் அதை கடைப்பிடிக்கச் செய்வதும் சுலபமான காரியம் இல்லை. பள்ளியில் ஆசிரியர் மாணவர்களுக்கு விநாயக மந்திரத்தை விடுத்து குரு மந்திரத்தை சொல்லச் சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன். நம்மைப்போன்ற “நாம் தமிழர்: என்ற பற்று கொண்ட அனைவரும் அவரவர் குடும்பங்களிலும் உறவினர்களிடமும் முடிந்தளவு சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழர் என்ற விழிப்புணர்வு இல்லாத அறியாமைதான் நம்மவர்களின் கண்ணை மூடியுள்ளது. அந்த அறியாமை என்கிற மாயத்திரையை அகற்றினால்தான் நம் தமிழர் இனம் இந்த மலை நாட்டில் உயிர்வாழும். இல்லையேல் …….. நான் சொல்லத் தேவையில்லை.
என் அருமை சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம்!
தமிழையும் சைவத்தையும் வளர்க்க என்னிடம் ஒரு யோசனை
உள்ளது… மொழிபற்றும் இனப்பற்றும் உள்ள தமிழர்களிடம் உதவிபெற்று.
தலைநகரில் ஒருகட்டடைத்தை வாடகைக்கு எடுத்து சைவசமய போதைனை வழிபாடு… வள்ளலாரின் போதனைகளை அறிஞர் பெருமக்களை கொண்டு வழிநடத்தலாம்… முன்று வேளையும் அன்னதானம் சிறப்பாக செய்து கொடுக்கவேணும்… ஒரே மாசத்தில குருவழிபாட்டுத் தலத்தில் விரல்விட்டுத்தான் என்னவேண்டும். மற்றும் எமது ஆலயங்களில் திருவிழாக் காலங்களில் தமிழருக்கு சம்பந்தமில்லாத புத்தகங்கள், சிலைகள், ஒலிப்பேழைகள், போதனைகளை விற்பனையைத் தடைசெய்ய வேண்டும்… முக்கியமாக பத்துமலையில் ஐயா நடராஜா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலயங்களில் அர்சனை சீட்டு கொடுக்கும் வேலை, அலுவலக வேலைகளை உள்ளூர் தமிழ் மாற்றுத் திறநாலிகளுக்கு கொடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் பிரசித்திப் பெற்ற ஒரு ஆலயமாவது தமிழர் கையில் உள்ளாதா?
வசதிபடைத்த தமிழர்கள் தமிழனாகவும் சைவசமயத்தவனாகவும் வாழுங்கள். உங்கள் தொழில்துறைகளில் பிரச்சனை ஏற்பட்டால் பாமர பாட்டளிமக்கள்தான் குரல்கொடுக்கிறார்கள். இனம் வளர சமயம் வளர உங்களால் முடிந்ததை செய்யுங்கள். என் அன்பானவேண்டுகோள்!
வளர்ச்சியடைந்த குடும்பப் பெண்கள் இளைஞர்களை காதல் பண்ணி மதம் மாற்ற இரண்டு பெரிய மதத்தவர்களால் அதற்கு பெயர் சூட்டப்பட்டு பயிற்சியும் கொடுத்து நெறிபடுத்துகிறார்கள். மா இ காவில் பலதலைவர்களின் பிள்ளைகள் மதம் மாறிப் போயுள்ளதே இதற்க்கு நல்ல உதாரணம். அவர்களின் மதத்தை எந்தெந்த வழிகளில் பரப்புவது என்று வாரம் ஒருமுறை கூடி ஆலோசிக்கிறார்கள்… நாம் இன்றே விழித்தெழாவிட்டால் ……
சைவ சமய நெறிகளை தமிழர்களுக்கு உணர்த்த வேண்டுமானால், அதற்க்கு வழி (1) ஆலய நிர்வாகத்தினர் சமய அறிவு பெற்றவராக இருக்கவேண்டும் (2) ஒவ்வொரு ஆலயத்திலும் உண்மையான சைவ சமய நெறி அறிந்த அறிஞர்களின் சமய சொற்பொழிவு வாராவாரம் நடைபெற வேண்டும் (3) ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்ய மலேசிய அர்ச்சகர் சங்கமும் அதன் உறுப்பினர்களும் முன் வரவேண்டும். (4) நாம் தேவாரம், திருவாசகம் ஓத கற்றுக் கொள்ள வேண்டும் (5) நமது பிள்ளைகளுக்கும் திருமுறைகளை கற்றுத் தர வேண்டும் அல்லது அருகாமையில் நடக்கும் தேவார வகுப்புகளுக்கு (பஜனை வகுப்புகளுக்கு அல்ல) அனுப்ப வேண்டும். தொடரும்…
தொடர்ச்சி, (6) சமயத்தின் வழி நம்பிக்கை என்ற போர்வையில் ஊட்டப்படும் தவாறான, அர்த்தமில்லாத மூட நம்பிக்கைகளையும், வியாபார நோக்கம் கொண்ட பூஜை வழிபாடுகளை ஆலயங்களில் இருந்து அர்ச்சகர்கள் அகற்ற வேண்டும் இல்லையேல் நிர்வாகத்தால் அகற்றப்படவேண்டும் (7) ஆலயங்களில் உயிர் பலி கொடுக்கப்படுவதை நிறுத்த வேண்டும் (8) தைபூச மற்றும் பல ஆலய திருவிழாக்களில் சமயத்தின் பேரில் நடைபெறும் அட்டூளியங்களை களைந்தெறிய, ஆலய நிர்வாகங்களும் தமிழர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் (9) ஆலயங்களிலும் தமிழர் வாழ்க்கை முறையில் இருக்கும் வருணாசிரம கோட்பாடுகளைக் களைய வேண்டும், அதற்க்கு சைவ சமய குரவர்கள் (அப்பர்) காட்டிய வழியே அத்தாட்சியாக வேண்டும். (10) முறையான குரு வழிபாட்டினை தமிழர்களுக்கு எதுவென்று உணர்த்த வேண்டும். (11) சமயத்தைப் பற்றி தவாறன கருத்துக்களை உணர்த்தும் யோகா வகுப்பு ஆசிரியர்களை ஒடுக்க வேண்டும். எழுதி, எழுதி கை வலி எடுத்துக் கொண்டது. மேலும் தேவையான நடவடிக்கைகளை மற்றவர்கள் எழுதட்டும்.
வியக்கத்தக்க முறையில் கோயில்கட்ட தெரிஞ்சவனுக்கு(தமிழன் ) மணியாட்ட தெரியாமல் போனது வேதனை ..
குருஜி வழிபாடு என்கிறான். பணத்தை செலுத்துகிறான். சொர்கத்தையே கண்டுவிட்டது போல் பேசுகிறான். சில மாதங்களுக்குப்பின் அதே பழைய குட்டையிலேயே வீழ்ந்துகிடக்கின்றான். கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டதுபோல் சைவ சமயப் போதனைப்படி இறைவன் ஒரு நாளும் ஒரு தாயின் கருப்பையில் உண்டாகிப் பிறக்க மாட்டான் என்பது முடிந்த முடிவு. ஆயினும் ஸ்தூல உடலால் அவ்வாறு பிறவா இறைவன், சூக்குமமாய் ஒரு மனிதனுள் அவதரித்து மக்களுக்கு வழிகாட்டுவது மரபு. அந்த மகாத்மாவை அறிந்து அவர் வழி செல்லுங்கள், வாழ்வு சிறக்கும். உங்கள் ஆன்மா பிறவிப்பயனை அடையும்.
ஒவ்வொருவரும் ஒரு மனவுருவை (concept) கையில் எடுத்துக் கொண்டு பணம் சம்பாதிக்க வழி தேடுகின்றனர். குண்டர் தலைவன் மக்களிடம் உள்ள பயத்தை கொண்டு பொருள் ஆதாயம் தேடிக் கொள்கிறான். அரசியல்வாதி அரசியல் ஆதாயம் தேடுபவரின் பலவீனத்தை பயன் படுத்திக் கொள்கிறான். குறுக்கு வழி, அதிர்ஷ்டம் ஆகிவற்றை நம்புபவன் திருட்டு, சூதாட்டம் என்று ஓடுகிறான். இவருக்கு மக்களிடம் உள்ள ஆன்மீக அறியாமை கருவாக கைகொடுக்கின்றது. நிமிடத்திற்கு நிமிடம் வங்கி இருப்பில் பணம் போய் சேர்ந்து கொண்டிருக்கின்றது. நடப்பதை எல்லாம் பார்த்தால் சீக்கிரம் நானும் ஒரு ‘குரு பெரியசாமி’ ஆக அவதாரம் எடுத்து உங்கள் முன் வந்து நின்றாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஹஹஹா
நாமெல்லாம் அறிவு ஜீவிகளாக இவ்வளவு எழுதியும் ஒரு குருஜியோ/ ஐயரோ/ பண்டாரமோ/சாமியோ/குருக்களோ/ ஏன் சமய முனிவர்கள் /முனைவர்கள்/பேய் பிசாசு ஓட்டுபவன் /கோவில் தலைவன்/சாஸ்திர சம்பவான்கள்/ ஜோசியர்கள்/ஓலை பார்ப்பவன்/எண்கணித குழப்பிகள்/குட்டி சாமியாடிகள்/பூசாரிகள்/ தோஷம் கழிப்பவன்/காவடி தூக்குபவன்/ பூஜை எடுபிடிகள் எல்லாம் கச் புச் என்று இருக்காங்கள் எனக்கு பயமா இருக்கு சார்?
எத்தனை பெரியார் வந்தாலும் தமிழன் மாறமாட்டான் .
இந்த ஆண்டு சித்திரை விழாவை என்னால் மறக்கவே முடியாது
முன்பு எல்லாம் தமிழ்ப் பள்ளிகளில் சரஸ்வதி பூசை மிகச் சிறப்பாக நடைப் பெற்று வந்தது. ஆனால் இன்று அது குறைந்து சாய்பாபா பூசை மிக வேகமாக வளர்ந்து தமிழ்ப் பள்ளிகளில் பஜனைப் பாடி வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் அதற்க்கு தீனிப் போட்டு வளர்த்து வருகிறார்கள்? சமயம் குரு மார்களின் துதிப் பாடி மகிழ்கிறது!
கடவுளை இல்லை! என்று சொன்ன பெரியார்….அப்படி இருந்தா நல்ல இருக்குமே என்று சொன்ன கமல்…..இவர்களைவிட . நான்தான் கடவுள் என்று சொல்லி பணம் பறிக்கும் நித்தியாந/ரஞ்சிதா….போன்ற குருமார்களை தேடி உதைக்க வேண்டும்……….. இதுதான் சரியான வழி …….!!!!!!!!!!!!
அடேய் தமிழா உண்மையான இறைவனே சிவன்! அவன் தத்துவம்தான் உண்மை (இந்த குருமார்களை வழிபடுபவன் ஒருத்தன் ஜொகூரிலிருந்து ராஜா குருன்றான், ஒருத்தன் நாந்தான் கடவுள் என்று சொல்றான் எல்லா தமிழர்களும் ஏமாற்றப்படுகிறார்கள்! )
எல்லாம் சரிதான், குரு அருள் இன்றி இறை அருள் ஏது. குரு பூஜையை விமர்சனம் செய்யாதே பிதுர் வழிபாட்டை மறக்காதே, குரு என்பது விகாட்டி. ஏழை குழந்தைகளுக்கு உணவு, இலவசக் கல்வி, இலவச மருத்துவம் இப்படி எவ்வளவோ குரு பீடம் செய்கிறது! ஆலயங்கள் இவற்றில் எதையும் செய்வது இல்லை சிந்திப்பது கூட கிடையாது. மாத்தி யோசி, நன்றி.
அன்பர்களே உண்மைதான்.. இன்று சமயத்தை வியாபாரமாக்கி விட்டார்கள் பலர்.ம.ரி.300,ம.ரி.500,ம.ரி.700 என்று பல விலைகளில் சமயத்தை விற்கிறார்கள்..மேலும் அரசாங்க பட்டத்தையும் தங்கள் ஆன்மிக பட்டத்தோடு இணைத்து விடுகிறார்கள்,டத்தோ ஸ்ரீ குருஜி என்று..ஆனால் இதைச் செய்பவர்கள் குருமார்கள் அல்ல..ஆனால் பெரிய யோகி போல் நடிக்கும் போலி குருமார்கள் தான்.. (தொடரும்..)
சில குருமார்கள் தவறு செய்வதால்,எல்லா குருமார்களையும் துறவிகளையும் சாடாதிர்கள்.. குருவருள் இல்லையெனில் திருவருள் இல்லை.இதனை நான் சொல்லவில்லை ஆனால் பெரிய மகான்களும் பரம்பொருளும் ஒப்புக்கொண்ட விசயம்..(தொடரும்..)
ஏனெனில்,முதல் யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் வேறு வேறு லோகத்தில் இருந்தார்கள்,ஆதலால் கடவுள் அசுரர்களை அழிக்க தனி அவதாரம் புரிய இருந்தது.இரண்டாவது யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே லோகத்தில் ஆனால் வேறு வேறு தேசத்தில் இருந்தார்கள்.இந்த யுகத்தில் கடவுள் அசுரர்களை அழிக்க ராமராக அவதாரம் புரிய இருந்தது.மூன்றாவது யுகத்தில் அசுரர்களும் தேவர்களும் ஒரே தேசத்திலும் குடும்பத்திலும் இருந்தார்கள்(கிருஷ்ணர் குடும்பம்).இந்த யுகத்தில் கடவுள் அசுரர்களை அழிக்க கிருஷ்ணராக அவதாரம் புரிய இருந்தது.நாம் வாழும் இந்த யுகம் தான் நாளாவது யுகம்.இந்த யுகத்தில் அசுரர்கள் ஒவ்வொரு மனிதனுக்குள் இருப்பதாகவும் அசுரர்களை ஒரு அவதாரத்தில் அழிக்க முடியாது,ஆகவே அசுரர்களை அழிக்க குருமார்களாக அவதாரம் புரிவேன் என்றும்,மூன்றாவது யுகம் முடியும் பொழுது கடவுள் சொல்லினார்.(தொடரும்..)
இதனால் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஹரிதாஸ் சுவாமி மற்றும் விவேகானந்த சுவாமி போல் ஒரு நல்ல குரு வேண்டும்..மேலும் மகாகவி பாரதியாரே சத்குரு ஸ்ரீ ஞானானாந்த கிரி சுவாமியிடம் மந்திர உபதேசம் பெற்றார்.அவரே தன்னுடைய கவிதைகளின் வாயிலாக இந்து சமயத்திற்குத் தொண்டுச் செய்திருக்கின்றார்.அவர் ஓர் இந்து மற்றும் அவரும் ஒரு தமிழன்.அதனால் தான் குருவருள் இல்லையெனில் திருவருள் இல்லை என்றார்கள்..நான் ஒரு ஆன்மிகவாதி அல்ல ஆனால் ஓர் இந்து மற்றும் ஒரு தமிழன் அதனால் தான் எனக்கு இது தெரிந்தது..ஒன்றைப் பற்றி முழுமையாக தகவள் தெரியாவிட்டால் அதனைப் பற்றி பேசவோ எழுதுவோ கூடாது..முதலில் எல்லாம் கற்றறிந்த ஞானி போல் பேசுவதை நிறுத்தி கொண்டு,பலவற்றைக் கற்க சிந்திக்க முயல்வோம்..பின்பு விவாதிப்போம் அன்பர்களே.. எல்லோரும் வாழ்க..
முதலில் தமிழனுக்கு பிறக்கும் பிளைக்கு தமிழ் பேரு வைங்கப்பா… .
ஐயா, அனைவரும் தங்கள் கருத்துக்களை செவ்வனே தெரிவித்துள்ளிர்கள் நன்று. ஆனால் அடிப்படை சமய அறிவு அனைவருக்கும் (இந்துக்களுக்கு) அவசியம் என்பதை யாரும் அறிவுருத்தே தவரிவிட்டிர்கள். அடிப்படை சமய அறிவு இருந்தால் இப்படி பட்ட பிரச்சனைகள் எழாமல் குறைத்திர்க்கலாம். ஆலயம் கட்ட முக்கியத்துவம் கொடுக்கிறோம் அனால் அதில் அடிப்படை சமய கல்வி போதனையை மறந்து விடுகிறோம். (தொடரும்)