செம்பருத்தி.காம்
டோங் ஜவ் ஸோங் (DJZ) என்ற சீனக் கல்வி அமைப்பின் தலைவர் யாப் சின் தியன் ‘ மலேசியக் கல்விப் பெருந்திட்டம் 2013-2025’ எதிர்த்து அது தாய்மொழிக் கல்விக்கு ஏற்ற வகையில் மாற்றம் காணும் வரை போராடப் போவதாக சபதமிட்டார்.
இன்றுக் காலை கோலாலம்பூர் சூங் குவொ சீன ஆரம்பப் பள்ளி மண்டபத்தில் நடந்த ‘728 பிரகடனம்’ (சிறப்புக் கட்டுரைப் பகுதியைக் காணவும்) என்ற கல்வி மாநாட்டில் உரையாற்றிய யாப், “இந்தப் பெருந்திட்டம் தாய்மொழிக் கல்வியை ஒரு முடிவுக்குக் கொண்டுவர போட்ட திட்டமாகவே காட்சியளிக்கிறது”, என்றார்.
தாய்மொழிக் கல்வி உரிமையைப் பறிக்க விடமாட்டோம் என்று யாப் கூறிய போது அரங்கத்தில் இருந்த 2,000-க்கும் அதிகமானோர் பலத்த கரவொலி எழுப்பி ஆதரவு நல்கினர்.
இந்தப் பெருந்திட்டம் சார்பாக மக்களின் கருத்துகள் தொகுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் கல்வி அமைச்சு அதை இதுவரை ஒரு பொருட்டாக கருதியதாக தெரியவில்லை என்றார். எனினும் தாங்கள் தொடர்ந்து தமிழ்க்கல்வி அமைப்புடன் இணைந்து மீண்டும் கோரிக்கையைக் கல்வி அமைச்சிடம் சமர்ப்பிப்போம் என்றார் யாப்.
இதையும் புறக்கணித்தால் எதிர்ப்பு நடவடிக்கையாக கையெழுத்து பிரச்சாரத்தையும் நடத்த போவதாக யாப் கூறினார். மேலும், “மனித உரிமைகள் என்ற வகையில் ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் யுனெஸ்கோ அமைப்பிடமும் முறையீடு செய்வோம்” என்றார்.
மண்டபம் நிறைந்து காணப்பட்ட 2,000 க்கும் அதிகமானோர் 1,100 இயக்கங்களின் பிரதிநிதிகளாக மாநாட்டின் தீர்மானங்களை ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், மலேசியாவில் உள்ள இந்தியர்களுக்கு ஆரம்பக் கல்வியை வழங்கும் ஒரு முக்கிய பங்கை காலணித்துவ காலம் முதல் தமிழ்ப்பள்ளிகள் ஆற்றியுள்ளதாகவும், அதன் வளர்ச்சி இன்று ஒரு தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் நிலைக்கு எட்டியுள்ளதாகவும் கூறினார். அதை அபகரிப்பது குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை கல்வி உரிமையை பறிப்பதாக அமையும் என்றார்.
“ஒரு நாடு, ஒரு மொழி” என்ற கொள்கை வழி அனைத்து இனங்களையும் ஒருங்கிணைக்க முயலும் வழிமுறை காலாவதியாகிவிட்ட ஒன்று என்ற ஆறுமுகம், 2004-ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய நாட்டு மேம்பாட்டு திட்ட அறிக்கை தாய்மொழிக் கொள்கைக்கு முன்னிலை கொடுத்துள்ளதை சுட்டிக் காட்டினார். “தாய்மொழிக்கல்வியை வலுக்கட்டாயமாக அழிக்க முற்பட்ட பல நாடுகளில் மொழி, பண்பாடு சார்ந்த முரண்பாடுகள் அரசியல் போராட்டமாக வெடித்துள்ளதை உணர வேண்டும்” என்று கூறிய அவர், மனித விடுதலை கோரும் மக்கள் மொழியையும் பண்பாட்டையும் விட்டு கொடுக்க மாட்டார்கள் என்றார்.
இந்நிகழ்வில் மக்கள் கூட்டணி பிரதிநிதிகளாக லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வாரின் புதல்வி நூருல் இசா, பொக்கொ சேனா நாடாளுமன்ற உறுப்பினரும் பாஸ் கட்சியின் துணைத்தலைவருமான மாபுஸ் ஒமார், தாமான் சி பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் ஆகியோர் தாய்மொழிக் கொள்கையை தீவிரமாக தற்காத்துப் பேசினர். இதில் தமிழ் அறவாரியத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆர். சுப்ரமணியம், பி. சுப்பிரமணியம், மதன் மற்றும் அன்பழகன் ஆகியோர் சிறப்பு வருகையாளர்களாக கலந்து கொண்டனர்.
DJZ போன்ற சீன அமைப்பு இல்லையென்றால் இந்த நாட்டில் தமிழ் ICU தான் ! மலாயாப் பல்கலைகழகத்தில் இந்திய ஆய்வியல் துரை மூடப்படுகிறது தமிழரே!
எனக்கு ஓர் உண்மை தெரிய வேண்டும் சாமி! இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள், சீனப்பள்ளிகள் இருக்கின்றன. ஆனால் மலாய்ப்பள்ளிகள் ஒரு காலத்தில் இருந்தன. இப்பொழுது இருக்கின்றனவா? எனக்குத் தெரிந்து இஸ்லாமியப் பள்ளிகள் இருக்கின்றன. அதனால்தான் உடைமாற்றும் அறையில் இஸ்லாம் அல்லாத மாணவர்கள் உணவு உண்ண நிர்பந்திக்கப்பட்டனர். மலாய்ப் பள்ளிகளில் இப்படி செய்யமாட்டர்கள். அவர்கள் நல்லவர்கள். ஆனால் அந்தப் பள்ளிகள் இப்பொழுது இந்நாட்டில் இல்லை. கிளந்தானில் ஒருகால் இருக்கலாம். புரிந்தால் சரி !!!!!!!!!!!!!!!
செம்பருத்தியின் சமுக பனி பாராட்டுக்குரியது, தொடரட்டும்!
இப்பொழுது ஏற்பட்டிருக்கும் இந்த விழிப்புணர்வு முன்பே ஏற்பட்டிருந்தால் இந்த பிரச்சனை இப்பொழுது ஏற்பட்டிருக்காது. இருப்பினும் இனிமேலாவது இதனை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். ஒன்றை நாம் புரிந்து கொள்ளவேண்டும், அம்னோ மிகப் பெரிய ஆக்கரமிப்பு திட்டத்தை துங்கு காலம் தொட்டு தீட்டியுள்ளது. அதன் பிறகு வந்த தலைவர்கள் அவரவர் தகுதிக்கு ஏற்ப அதனை வலுப்படுத்தி உள்ளனர். இவற்றை புரிந்து வேரிலேயே அழித்து விடுதல் நன்று.
2013 – 2025 கல்வி கொடூர சதியை தண்டிக்க நீங்கள் எடுத்த படை நன்று! வாகன நெரிசலில் மாட்டிக்கொண்டேன் மீட்டிங் உள்ளே 2000 பேர் வெளியே ஆயிரம் மாயிரம் வாககனங்கள் மாட்டிக்கொண்டு தவித்தோம்! அடுத்த கூட்டம் மெர்டேக்கா அரங்கில் நடத்துவோம்.அனைவருக்கும் பாராட்டுகள்!
தமிழ் பள்ளியை சாகடிக்க சதி நாச
வேலை செய்யப் படுகிறது .
அசைவிலா ஊக்கம் இருக்குமிடத்தை ஆக்கம் தானே தேடிவரும் .
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை-(திருக்குறள்-594)
சிறிதும் அசைவற்ற , கடைசிவரை உறுதிப்பாடுடைய ஊக்கமுடைய இனத்தினிடம் அவர்களின் ஆக்கத்திற்குத் தேவையான அனைத்தும் அந்த இனத்தின் முகவரிகேட்டு வழிவினவிக் கொண்டு தானே சென்று அடையும். உலகத் தமிழினம் இக்குறளை உணரவேண்டும் .
மலேசிய சீன மன்றங்கள் 728 ஒருங்கு கூடுதல் கல்வி பெருந்திட்டம் 2013-2025 க்கு கண்டனம் தாய்மொழிக் கல்வி மேம்பாட்டிற்கு தீங்கானது மலேசிய ஐக்கிய சீனப்பள்ளி குழுக்கள் மன்றம் (டோங் ஸோங்) ஏற்பாடு செய்ததை போன்று நம் தமிழ் பள்ளிகளுக்கும் இதுபோன்ற அமைப்பு இப்போதைய காலகட்டத்தில் அவசியமான ஒன்று என்பதை உணர்துகின்றது.