தலைமைத்துவ போராட்டம் இந்தியர்களுக்கு நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது.

makkal Karutthu31july 13ம.இ.கா.கட்சி ஒரு இந்தியர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கட்சியாகும். இது முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதி செயல்படுகின்றது என்றால் மிகையாகாது.

அதன் உண்மையான கோட்பாடுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக குறை கூற மாட்டார்கள். வழி நடத்துபவர்கள் வழி தவறி போயிருக்கலாம்.  தலைவர்கள் அவர்களின் கடமைகளை மறந்து விடலாம். ஆனால் ம.இ.காவின் சேவை அளப்பறியது.

இன்று நடக்கும் பதவி போராட்டங்களைப் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப் படுகின்றது. கிளையின் தலைவருக்குப் போட்டி, தொகுதியில், தேசியத்தில் போட்டி. போட்டி சுகாதார முறையில் இருந்தால் பாதகமில்லை. ஆனால் 100% பதவி மோகம் கொண்டு பேராசைக் கொண்டு, ஒருவனை அழிக்க வேண்டும் என்று போட்டி போடுகின்றவர்கள் இப்பொழுது அதிகமாகவே உள்ளனர்.

இதனால் இருக்கும் கட்சியில் மிகப் பெரிய பிளவு ஏற்படுகின்றது. ஒற்றுமையின்மை பிறந்து சமுதாயத்தையே அழிக்கும் அளவுக்கு பெரிதாகிவிடுகின்றது.

நான் போட்டி வேண்டாம் என்று கூற வில்லை. போட்டி இருப்பின் தரம் இருக்கும். ஆனால் மக்களை பிரிக்கும் போட்டி வேண்டாம் என்றுதான் கூறுகின்றேன். வதந்திகளைப் பரப்பி, மக்களின் மனதை குழப்பி, உண்மைகளை மறைத்து போட்டியிடும் தலைவர்கள் வேண்டாம் என்றுதான் கூறுகின்றேன்.

போட்டி நன்மை தருவதாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு இலாபம் வர வேண்டும். தலைவர்கள் உவமையாக நீண்ட மரமாக இருந்துக்கோண்டு விசம் தரும் பழங்களை கொடுக்கக் கூடாது. இலைகள் குறைவாகவும் நிழல் தராதவையாகவும் இருக்கக்கூடாது.

தலைவர் என்பவர் மரத்தை உவமையாக வைக்கலாம். நல்ல நிழல் தருபவை, சிறப்பான சத்துள்ள பழங்கள் கொடுப்பவை,  கிளை, இலை, தண்டு, பூ யாவும் மக்களுக்கு பயன் தருபவைகளாக் இருத்தல் அவசியம்

நமது ம.இ.கா. கட்சி வளர வேண்டுமானால் முக்கியமாக தலைவர்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். போட்டியில் இறங்கி காலத்தை விரயமாக்கி மக்களுக்குத் தொந்தரவு தருவதைவிட ம.இ.கா-விலிருந்து வெளியேறி விடுதல் மிகவும் நன்மையாக இருக்கும். ஆகவே ம.இ.கா கிளைத் தலைவர்களே தயவு செய்து அவசியம் இருப்பின் போட்டியில் இறங்குங்கள்.

அதுவும் மக்களுக்கு ஏதாவது நன்மைச் செய்திட களத்தில் இறங்குங்கள். குட்டையைக் குழ்ப்பி மக்களைத் திசை திருப்பி நேரத்தையும் பணத்தையும் ஆக்கபூர்வமான அறிவையும் வீணடிக்க வேண்டாம். சேவையை அடிப்படையாக கொண்டு தலைவராக இருங்கள். சுயநலத்தை முன் நிறுத்தி போட்டியிடுவது சிறப்பான செயல் அல்ல.

ஆதங்கத்துடன்,

கணேசன் ஆறுமுகம்

பாடாக் மத்தி கிளைத் தலைவர்