ஸ்ரீ முருகம் நிலையம் சரியானப் பாதையில் செல்லுகிறதா என்னும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.
அவர்களைக் குற்றம் சொல்ல வேண்டும் என்னும் நோக்கம் நமக்கில்லை.
டாக்டர் தம்பிராஜா அவர்களும், அவர் தம் குழுவினரும், ஸ்ரீ முருகன் நிலையத்தை ஆரம்பித்த போது நிச்சயமாக அவர்களிடையே ஒரு பொது நல நோக்கம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அதுவும் அந்தக் காலக் கட்டம் இந்திய மாணவர்கள் மிகவும் அவதிப் பட்ட ஒரு நேரம். எந்த வித ஆதரவும் அவர்களுக்கு இல்லாத ஒரு நேரம். டியூஷன் வகுப்புக்கள் என்று எதுவும் இல்லாத ஒரு நேரம்.
யோசித்துப் பாருங்கள். பட்டணங்களில் படித்தவர்கள், வசதிப் படைத்தவர்கள் அவ்வளவாகப் பிரச்சனைகளை எதிர் நோக்கவில்லை. ஆனால் தோட்டப் புற மாணவர்கள், கிராமத்து மாணவர்கள், பட்டணங்களில் வாழ்ந்த ஏழை மாணவர்கள் இவர்களுடைய நிலை என்ன. நிச்சயமாக அவர்கள் பிரச்சனைகளை எதிர் நோக்கவே செய்தனர்.
ஓர் ஆதரவற்ற நிலையிலிரிந்த மாணவர்களுக்கு சரியான நேரத்தில் உதவிக் கரம் நீட்டியவர்கள் டாக்டர் தம்பிராஜா குழுவினர்.
ஆனாலும் காலப் போக்கில் அனைத்தும் தடம் புரண்டுவிட்டதாகவே தொன்றுகிரது.
டாக்டர் தம்பிராஜா என்று ம.இ.கா.வின் தலைமைத்துவத்தின் உதவியை நாடினாரோ அன்றே ஸ்ரீ முருகன் நிலையத்தின் சருக்கல் ஆரம்பித்து விட்டது.
அதன் பிறகு பல்வேறு குற்றச்சாட்டுக்களை அந்த நிலையம் எதிர் நோக்கி வருகிறது.
குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களை கேலியும் கிண்டலும் செய்வது. அவர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் என்பதால் அவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது போன்றைவைகளும் இதில் அடங்கும்.
ஆனால் இதை விட பெரிய குற்றச்சாட்டு அரசாங்க மானியங்கள் தவறாகப் பயன் படுத்தப்படுகின்றது என்பது தான்.
சாமிவேலுடன் கைக் கோர்த்தவர்கள் அனைவரும் இது போன்ற குற்றச் சாட்டுக்களை எதிர் நோக்குவது இது ஒன்றும் புதிது அல்ல! இருந்தாலும் மிகக் கற்றவர் ஒருவர், சமுதாய நோக்கம் உடைய ஒருவர், இப்படித் திசை திருப்பட்டு விட்டாரே என்று நினைக்கும் போது மனம் கவலை அடைகிறது.
ம.இ.கா.வின் உதவி இல்லாமல் இப்போது அரசாங்கத்தின் மானியங்கள் நேரடியாகவே ஸ்ரீ முருகன் நிலையதிற்குக் கொடுக்கப்படுவது அவர்களின் சேவை மதிக்கப்படுகின்றது என்பதால் தான். நிச்சயமாக அது தொடர வேண்டும். நாமும் அதனை வரவேற்கிறோம்.
அந்த மானியங்கள் இந்திய மாணவர்கள் நலன்களுக்காக பயன் படுத்தப்படும் என்பதையும் நாம் நம்புகிறோம். ஒரு தலை சிறந்த கல்வியாளர்க் குழுவினரால் நடத்தப்படும் அதுவும் தமிழ்க்கடவுள் பெயரைக் கொண்ட ஒரு நிலையம் நேர்ப் பாதையில் செல்லும் எனவும் நம்புவோம்.
இந்த நேரத்தில் ஒரு சில ஆலோசனைக் கூறவும் கடமைப் பட்டுள்ளோம்.
எவ்வளவு காலம் தான் நீங்கள் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்?
கொஞ்சம் மாறுங்கள். நமது மாணவர்கள் பல்கலைக்கழகம் போக வேண்டும் என்பது உங்கள் நோக்கம் மட்டும் அல்ல. எங்கள் நோக்கமும் கூட. ஆனால் அவர்கள் தகுதிக்கு ஏற்றவாறும், அவர்கள் தெர்ந்தெடுக்கும் பாடங்களும் அவர்களுக்குக் கிடைக்கின்றனவா என்பதை நீங்கள் உறுதிப் படுத்த வேண்டும்.
அது மட்டுமல்ல. நீங்கள் விளம்பரப் படுத்துவது போலவே நிறைய மாணவர்கள் மெற்றிகுலேஷன் கல்வி பயில தகுதி பெறுகின்ரனர். ஆனால் அவர்களுக்கு மெற்றிக்குலேஷன் கல்வி பயில உங்களுடைய பங்கு என்ன என்பதிலும் கவனம் செலுத்துங்கள்.
நீங்கள் பிரதமர் நஜிப்புடன் சேர்ந்து கைக் கோர்த்து செயல் பட ஆரம்பித்திருக்கிறீர்கள்.
இதை ஒரு நல்ல நேரமாக எடுத்துக் கொண்டு, ஒரு வாய்ப்பாகக் கருதி இந்திய மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். பிரதமர் உங்களைத் தேடி வருகிறார். அதனை நல்ல முறையில் நீங்கள் பயன் படுத்த வேண்டும் என்பதே நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை.
நீங்கள் பாதை மாற வேண்டாம். உங்கள் பாதை இந்தச் சமுதாயத்தின் உயர்வாக இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும். அதுவே எங்களின் வேண்டுகோள்.
– கோடிசுவரன்
சரியான நேரத்தில் வந்த கட்டுரை. முதலில், ஸ்ரீ முருகன் நிலைய மாணவர்களுக்குத் தரமான “டியூஷன்” வகுப்புக்கள் நடத்தபடுகின்றதா என்ற கேள்வி குறி எழுந்துள்ளது. அளவுக்கு அதிகமான மாணவர்களை ஒரு வகுப்பில் சேர்த்துக் கொண்டு பாடம் நடத்தப்படுகின்றது என்ற குறைபாடு ஒரு புறம். அடுத்து, டியூஷன்
மாணவர்கள் அதிகரித்து விட்டனர் ஆனால் அவர்களின் தேர்ச்சி தரம் குறைந்து காணப் படுவதாக அறிகின்றோம். புள்ளி விவரங்களை முழுமையாக ஸ்ரீ முருகன் நிலையத்தார் கொடுக்க வேண்டும். இறுதியாக, இந்திய சமுதாயத்தின் பேரில் அரசாங்கத்திடம் இருந்து நேரிடையா நிதி பெரும் அமைப்பு என்பதால், ஸ்ரீ முருகன் நிலைய வரவு செலவுகளை பொது மக்கள் அறிய வாய்ப்பில்லை. காரணம், அது ஒரு தனியார் நிறுவனமோ (Private company limited by shares / Sdn. Bhd.) அல்லது சங்கமாகவோ பதிவு செய்யப்படவில்லை என்பதை அறிகின்றோம். ஆதால், அதன் வரவு செலவு கணக்குகளை பொது மக்கள் அறிய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவர்களும் யாருக்கும் கணக்கு காட்ட வேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் ஒரு மைக்கா ஹோல்டிங்ஸ் அல்லது ‘MIED’ போல “இது எங்க அப்பன் வீட்டு சொத்து” என்று ஆகி விடாமல் பார்த்துக் கொண்டால் சரி!
ஸ்ரீ முருகன் நிலையம் நல்ல ஒரு அமைப்பு தான்.. ஆனால் வெறும் ஏட்டுக் கல்வியில் மட்டும் மாணவர்களின் தரத்தை உயர்த்த கவனத்தைச் செலுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாத விசயமாகும்..அவர்கள் மாணவர்களின் பண்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும்..எப்பேர்பட்ட கல்வி படித்திருந்தாலும்,நல்ல ஒழுக்கம் இல்லாவிட்டால் அவன் இந்த சமுதாயத்திற்கு கேடு தான் விளைவிப்பான்..இதனை எப்படி சொல்கிறேன் என்றால்,இதனை நான் ஸ்ரீ முருகன் நிலையத்தின் UPSR & PMR முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் சொல்கிறேன்.
ஸ்ரீ முருகன் நிலையம் சரியான பாதையில் தான் செல்லுகிறது, தம்பிராஜாவுக்கு டான்ஸ்ரீ கிடைத்து விட்டது அதில் உள்ள சில உருப்பினர்கலெல்லாம் அதிக விலையுள்ள வாகனக்களை வாங்கி அனுபவிக்கின்றனர், மாணவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, ஆனால் தவறாமல் வகுப்புக்குச் செல்கிறார்கள், பெற்றோர்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்று நினைத்து சோறு கட்டி கொண்டு செல்லுகிறார்கள், மொத்தத்தில் தமிழ் சமுதாயம் ஆ ஆ ஓ ஓ என்று வாழ்கிறார்கள்… ஓம் நாமம்…
ஸ்ரீமுருகன் பணியை ஒரு புறம் பாராட்டுவோம். நாடு முழுவதும் ஆங்காங்கே கூடுதல் பாட வகுப்புகளை (டியூஷன்) மட்டுமே கட்டணம் வாங்கிக் கொண்டு நடத்துகிறார்கள். ஆண்டு முடிவில் எங்கள் மாணவர்கள் யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம், எஸ்டிபிஎம். போன்ற தேர்வுகளில் சாதனை படைக்கிறார்கள் என்று பெருமைபட முழங்குகிறார்கள். பாவம் நாடு முழுவதுமுள்ள தமிழ்ப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு பாடப் பொறுப்பாசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களும் இரவு வரை படும் பாடு, அவர்களின் தியாகம், ஆர்வம் அனைத்தும் மதிப்பிழந்து போகிறது! என்ன வேடிக்கை? என்ன கேலிக் கூத்து? அடிப்படை கல்வியை கொடுத்தவன் மறைந்து நிற்கிறான்…இடையில் வந்தவன் கும்மாளம் கொட்டுறான்! ‘நாடு நடக்கிற நிலையில நமக்கே ஒன்னும் புரியல” ! ! ! !
ஸ்ரீமுருகன் நிலையம் ஒன்றும் இனாமாக படித்துத் தரவில்லை. பரிச்சைக்கு ஏற்ற கட்டணத்தையும் வசூல் செய்கின்றனர். ரிம80-100வரை. ஆனால் படித்துத் தரும் ஆசிரியர்களுக்கு கூட தகுந்த சம்பளம் தருவதில்லை. காரணம், அந்த பணத்திற்கு உண்டான கணக்குகளும் இல்லை. ஸ்ரீமுருகன் நிலையத்தை போன்றே சிங்கையிலும் இருக்கிறது, அங்கே பரிச்சைக்கு படித்து தருவது மட்டுமில்லாமல் சந்தாவாக ஒரு பாடத்திற்கு 5டாலர் மட்டுமே வாங்குகிறார்கள். எல்லா இந்திய மாணவர்களின் தாய் மொழி வகுப்புகளும் நடத்துகின்றனர். சிங்கையில் நடத்தி வரும் சிண்டா அரசாங்க அனுமதியோடு நடப்பதாலும் அங்கே மக்கள் நன்கொடைகளையும் தந்து இன்னும் வளர்ச்சியடைய உதவுகின்றனர். வசதி இல்லாத மாணவர்களுக்கு அந்த அமைப்பே மேற்கல்வியை தொடரவும் உதவுகிறது. அதை போல இங்கே செய்தாலாவது ம.இ.கா போல தடுமாறாமல் நின்று நிலைக்கும்.
தமிழா தெரிந்து கொள்ளுங்கள் தம்பிராஜா மகளே இந்த ஸ்ரீமுருகன் நிலையத்தில் படிக்கவில்லை அது தெரியுமாடா உங்களுக்கு தம்பிராஜாவுக்கே ஸ்ரீமுருகன் நிலையத்தின் மேல் நம்பிக்கை இல்லை உங்களுக்கு என்ன முருகன் படம் போட்டால் போதும் நம்பிருவீங்க!
நேற்றைய பத்திரிகையில் தான்ஸ்ரீ தம்பிராஜா பள்ளி ஆசிரியர்களை குறை கூருவதாக ஒரு செய்தி வந்திருந்தது. அப்படி என்றால் ஸ்ரீ முருகன் நிலைய ஆசிரியர்கள் மிக சிறந்தவர்களோ? இது உண்மை என்றால் அங்கு பயிலும் அணைத்து மாணவர்களும் மிக சிறப்பாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமே!! ஏன் இல்லை ? சமுதாயத்திற்கு பாடுபடும் இந்நிலையம் ஏன் மாத கட்டணம் (நன்கொடை என்று பெயர் ) கட்டாவிட்டால் பயிற்சி தாள்களை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை? நிலையங்களின் பொறுப்பாளர்கள் இந்த விதிமுறையை மீறினால் அந்த நிலையங்கள் மூடப்படுகின்றன. இப்பொழுது இவர்களின் நோக்கம்தான் என்ன ? கல்வியா கல்லாவா ????
அரசியல்வா{வியா}திகளோடு தாளம் {ஜால்ரா} போடுகிறவன் எப்படி ஒரு கல்வி நிலையத்தை கல்விக்கான சேவை என்று
நடத்துவான்? கல்வியாவது ‘கல்வி யாத்திரையாவது!!எல்லாம் பெரிய விருது’ பட்டம், ‘சில்லறை’ தானே இலக்கு? இந்த இனத்துரோகிகளிடமிருந்து எப்போது தான் இந்த இளந்தலைமுறை விடுதலை பெறுமோ?
கல்வியில் சமயத்தை கலந்த மாபெரும் முட்டாள் இயக்கம்
யாகம் வளர்த்த அறிவு வளராது அய்யர் வயிறு வளரும்
தமிழ் வளராது சமஸ்கிருதம் வளரும். தமிழ் இயக்கத்துடன்
தொடங்கிய இந்த இயக்கம் தனது வெளியிட்டு அறிக்கைகளில் ஆங்கிலத்துக்கே முக்கியம் அளிக்கும்.
.
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்.. பள்ளியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பள்ளி ஆசிரியர்கள் இரவு பகலாக உழைத்து 7ஏ மாணவர்களை உருவாகுகின்றார்கள். ஆனால் வாரம் ஒருமுறை அந்த மாணவர்கள் ஸ்ரீமுருகனில் படித்துவிட்டால் ஒட்டுமொத்த வெற்றியையும் அவர்களே பெற்றுத் தந்ததைப் போல பத்திரிகையில் விளம்பரம் வேறு..
அரசாங்கம் தரும் மானியங்கள் சரியான முறையில் பயன் படுத்த படுகிறதா என்று தெரியவில்லை. seminar அல்லது workshop என்று பணம் நிறைய விரையப்படுகிறது . சாப்பாடுக்கு பல விதமான மற்றும் மிதமிஞ்சிய உணவு வகைகள் ஏற்பாடு செய்கிறார்கள். கட்டணத்தை இன்னும் குறைத்து பயிற்சி தாள்களை இலவசமாக தரலாமே ! ஆடம்பர செலவுகளை குறைத்து அவசியமான திட்டங்களுக்கு முறையான செலவு செய்து முருகனின் அருள் பெறுங்கள் !
30 வருடத்தில் 29 ஆயிரம் பட்டதாரிகள். ஆனால் பெரும்பாலும் வசதி படைத்தவர்களை ,நன்கு படிக்கும் மாணவர்களை மட்டும் கவனம் செலுத்தி வளர்கப்படவர்கள் .உள்ளே நுழையும் போதே உயர்ந்த பாட புள்ளிகளையும்,தகுதிக்கு பரீட்சையும் அடிப்படையாக வைத்து வேலையை எளிமையாக்கி கொள்கிறார்கள்.
தம்பிராஜா உங்களுக்கு தான்ஸ்ரீ பட்டம் கிடைச்சுடிச்சு, நிங்களும் வசூல் ராஜா மாதிரி ஏழைகளை டியூசன் என்ற பேரில் பிச்சு புடுங்காதே. உனக்கு கிடைச்ச இந்த பேறும் புகழும் யாரால் வந்தது என்று கொஞ்சம் திரும்பி பார் !
எல்லாமே பணம் பதவி நோக்கம்தான். தொண்டு கிடையாது.
தேர்தலுக்கு எங்கள் ஊருக்கு இந்த ஸ்ரீ பேருந்து வருது என்று தேர்தல் அறிக்கை விட்டு போனவர் தானே .
பேராசிரியர் தம்பிராஜா மற்றும் அவருடைய கூஜா தூக்கிகள் கடந்த பொது தேர்தலின் போது ஸ்ரீ முருகன் மாணவர்களையும் மலாயா பல்கலைகழக இந்திய துறை மாணவர்களையும் தேர்தல் பிரசார நிகழ்வுகளிலும் மற்றும் தே.மு. கட்சியின் நிகழ்சிகளிலும் கலந்துக் கொள்ள வலு கட்யாமாக அழைத்துச் செல்லப் பட்டனர் என்று அறிகின்றோம். தயவு செய்து ஸ்ரீ முருகன் நிலையத்தை அரசியல் நிறுவனமாக மாற்றி விட்டாதீர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
இவனுங்க எல்லாம் ஒரு மனுஷனு வெளியே பயங்கரமா படம் காட்ட்டுவணுங்க பாருங்க தமிழ் சினிமா உலகமே தோற்றுவிடும் அதும் கடந்த இருபது வருடமா ஒரு டயலாக் பேசுவதில் புளுகு மூட்டை அள்ளிவிடுவதில் சிவாஜியே தோற்றுவிடுவார் அந்த அளவுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாத நரிகள் கலை நிரந்த தம்பிரஜாஹ் , இன்னொன்று கடந்த வாரம் இவன் கூறிய தமிழ் ஆசிரியர்கள் பள்ளியில் வேலை செய்வதில்லை என்பது மிகவும் கண்டிக்க தக்கது ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் கண்டிப்பாக ஆசரியர்கள் நடத்தி இவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் , சும்மா மற்றவன் உழைப்பில் காலத்தை ஓட்டி தமிழ் மனக்கர்களை மடயர்கலக்கி UMNOVUKKU என்றும் அடிமையாக இவனை போல கற்று கொடுக்கிறான்கள்
Vanakkam Tan Sri and Committee of SMC
We appreciate the services rendered by SMC, I was involved in the 90’s. Besides focusing on tuition, SMC should embark on the higher education intake for Indian students forming a task force to monitor and provide guidance. Higher education involves: Matriculation, Polytechnics, Teachers Training & Public University for both SPM and STPM students. My brother’s daughter score 8A + 2B including A’s in both Tamil subjects. Her application for Matriculation was rejected. Polytechnics & Teachers Training were also rejected after attending interview & no reason given. Appeal through MIC no news. However, with the help from a former teacher, he told us to directly approach Teachers Training Student Intake center at Cyberjaya, we manage to get a place for her at Johor baru Teacher Training for 5years Degree program. We also helped 7 other students to get in to Teachers Training with information. Thus, the important message is that SMC or the MIC Education section or Opposition Political Party should have all the information and direct/guide the student/parents to the respective section for optimum results. Also, one message for the people who make comments: Please provide constructive comments to uplift the organization and beneficial to our Indian community.
எங்கே. போகிறோம்…தமிழ் கடவுள் முருகனை வைத்து கொண்டு
ஆர்யா பண்பாட்டை வளர்க்கும் தம்பிராஜா ஆர்யா கூஜா
.
DEAR SELVA SMC ONLY GOOD FOR SUCK MONEY OF CHILD TO UPGRADE THE LIFE OF THEM NOT THE POOR CHILD IF U ASK HELP THEYLL SAY ITS VERY HARD CANNOT AND THAMBIRAJAH WILL RUNAWAY
சித்தியவானில் வந்து பாருங்கள் இவர்கள் அடிக்கும் லூட்டியை. சிறந்தமாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து கற்று கொடுக்கும் பயல்கள்
அரசாங்கம் கொடுக்கிற ‘Scholarship’பை இவர்கள் வாங்கி கொடுக்கிற மாதிரி, மாணவர்களிடம் சொல்லிவிடுகிறார்கள். இதை நம்பி நம் பிள்ளைகளும் அங்கு படிக்க போகிறார்கள். கடந்த ஆண்டு 1Malaysia Development Scholarship 50 மாணவர்களுக்கு வாங்கி கொடுத்தார்கள் என்று பத்திரிக்கையில் பார்தேன். அது யாருக்கு கிடைத்தது என்று தெரியாது. அரசாங்கமும் SMC தான் நம் சமுதாயத்தை தலைகீல மாத்துது என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால் எல்லாமே காசுக்காகத்தான். 1982யில் தோத்று வாய்த்த இந்த SMC இப்போது பணம் சம்பாதிக்கிற ஒரு Tution Centre. இவர்கள் Education என்ற போர்வையில் மக்களை ஏமாத்திக்கிட்டு இருக்கிறார்கள்.அப்படி நான் சொல்லுவாது உண்மை இல்லை என்றால், மாணர்களிடம் இருந்து வசுளிக்கிற பணமும், அரசாங்கத்திலிருந்து கிடைக்கிற மானியத்தையும் கணக்கு காட்ட சொல்லுங்கள் பார்ப்போம்? அந்த முருகன் தான் இதற்க்கு ஒரு முடிவுகட்ட வேண்டும். ஓம் முருக ! முருகன் துணை.
நண்பர்களே சற்று சிந்தித்து பாருங்கள் அரசாங்கம் கொடுக்கும் மானியத்தை கொண்டு ஸ்ரீமுருகன் நிலையம் நம் இந்திய மாணவர்களுக்கு இலவச வகுப்பே நடத்தலாம் பிறகு ஏன் பணம் வசூலிக்க வேண்டும்?பிறை பட்டணத்தில் பிஎம்ஆர் மாணவர்களுக்கு, மாலை வகுப்பு, இரவு வகுப்பு, விடுமுறை வகுப்பு, கல்வி சாதனை வகுப்பு என்று பல வகுப்புகளை நடத்தி மாதம் ஆயிரம் ஆயிரமாக சம்பாதிக்றார்கல் அதையும் இந்த நிலையம் கண்டு கொள்வதில்லை.இப்படி இருக்க எப்படி சமுதாய சேவை இருக்கும்
கல்வி வியாபாரமாகி போச்சே முருகா….எந்தனை காலம்தான்
எமாற்றுவர் இந்த நாட்டிலே தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லி
எல்லாமே சாமிதான்
maika கதைதான் போலும்? எனக்கு ஸ்ரீ முருகனைப்பற்றி ஒன்றும் தெரியாது, எனினும் மற்றவர் கருத்துக்களை படிக்கும் போது தான் எல்லாம் பணம் தான் போலும். ஆண்டவன் தூங்குகின்றானே!
இங்கே பாருங்க,, நம்ம சமுகத்திலங்க
..நிறைய பேருங்க அறியாமயில்ல இருக்காங்க காங்க பொதுவங்க
கடவுள் பேர சொன்னாக்க ஜனங்க நம்புவாங்க அதன்ங்க நாங்க
முருகன் பெயரை சொல்லி ஆப்பு வைகிரன்ஞ்கோ
.
இங்கு எழுதியவர்கள் எல்லாம் (இன்னும் பலர) இதையேதான் கடந்த பதிப்புகளிலும் எஸ் எம் சி பற்றி எழுதினீர்கள். எதையாவது சாதிக்க முடிந்ததா? ஒன்னும் இல்லை. வெறும் வாயைதான் அறைக்கின்றீர்கள். அவர்கள் என்றும் போல் இன்றும் வசூல் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பாவம் பெற்றோர். இன்னும் அந்த ட்டுயூசன் செனடருக்குப் பிள்ளைகளை அனுப்பி கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்வு முடிவு வந்த உடனேயே அவர்கள்தான் பள்ளி முதல்வர் மாதிரி அறிவிப்பு செய்கிறார்கள். பிள்ளைகளும் அவர்தம் பெற்றோரும் டீவியில் நாளிதழில் செய்திவரும் என்ற ஆசையில் அவர்களோடு சேர்ந்து பல்லு இலிக்கிறார்கள் படத்தில். பாவம் பள்ளி ஆசிரியர்கள். பள்ளியில் போதனையில் ம்ட்டம் அடிக்கும் ஆசிரியர்கள் அங்கு சூப்பர் ஆசிரியர் என்று காசு (பேர்) வாங்குகிறார்கள். யாரு கேடப்து? 50 ஆண்டுகள் அரசாங்கமும் டத்தோ சாமியும் ந்ம்மை ஏமாற்றியது என்று சொல்லி சொல்லியே அவர்களும் அவர்கள்தான் ஆசிரியர்களும் உட்பட நம்மை 30 வருசமாக ஏமாற்றுகிறார்கள் என்பதை இந்த மட சமூதாயம் உணருமா? அரசு பள்ளிகளில் எந்த தமிழ் ஆசிரியருக்காவது ஒருநாள் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதா? இந்த நாட்டில் மலாய் ஆசிரியருக்கும் தமிழ் ஆசிரியருக்கும் ஒரே சம்பளம் தான். அவர்களைவிட டியூசன் நடத்தி அதிகம் சம்பாதிபவர்கள் நம்ம ஆசிரியர்களே. எங்கே போனது உங்கள் உணர்வு?
smc தன் ஆரம்பகால நோக்கங்களில் இருந்து மாறுபடுகிறது என்பதை அறிய மனசுக்கு வேதனையாகதான் இருக்கிறது. தற்போது அது ஒரு “franchise ” வியாபார வியூக அடிப்படையில் நடத்தபடுகிறது. அது மட்டுமின்றி தனிமனித துதி பாடலுக்கும் பஞ்சமில்லை. இங்கு நேத்ரா கூறுவதில் மற்றுகருதுக்கு இடமில்லை. ஒவ்வொரு முறையும் பரீட்சை முடிவுகள் வெளியானவுடன், smc தான் அதற்கு முழு காரணம் என்பது போல் நம் பத்திரிகைகளும் பக்கம் பக்கமாக படங்களுடன் செய்திகளை வெளி இடுவதால், வாரம் முழுவதும் நேரம் காலம் பாராமல் உழைத்த ஆசிரிய பெருமக்களின் தியாகம் இருட்டடிக்கப் படுகின்றது. smc யின் கூற்று உண்மையானால் சனி ஞாயிறுகளில் smc யில் மட்டுமே பயின்று மாணவர்கள் சாதனை படைக்க முடியுமா?
ஆரம்ப காலத்தில் தம்பிராஜா போட்ட திட்டம் இப்போதும் சரியாகத்தான் போய் கொண்டு இருக்கிறது. அரசியலுக்கு வராமலேயே அவர் தன் செல்வாக்கை மக்களிடம் நிலை நாட்ட மாணவர்களின் கல்வியை களமாக பயன்படுத்த துவங்கினார்.ஆதில அவர் வெற்றியும் பெற்று விட்டார். ஶ்ரீ முருகன் நிலைய ஆரம்பகால தலைவர்கள் இன்று பலர் அரசியலில் (ம இ கா) முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். தேவமணி, எல்.கிருஷ்ணன் (பிறை), பிரகாஷ் ராவ் போன்றவர்கள் மக்கள் சேவை செய்தா பிரபலம் ஆனார்கள். மாணவர்களின் முன்பும் பெற்றோர்களின் முன்பும் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ள ஶ்ரீ முருகன் நிலையம் அவர்களுக்கு உதவியது. தம்பிராஜாவும் இதைத் தான் விரும்பினார். ம.இ.காவை ஶ்ரீ முருகன் நிலையம் மெல்ல தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகள் துவங்கப்பட்டு வெகு காலம் ஆகிறது. கல்வி யாகம், கல்வி யாத்திரை போன்ற கூட்டம் கூட்டும் நிகழ்வுகள் யாவும் ஶ்ரீ முருகன் நிலையம் தன் பிரபலத்தை மக்களிடம் காட்டும் முயற்சிதான். ஒரு சோசலீச சிந்தனையாளர் என்று தன்னை ஆரம்பத்தில் காட்டிக் கொண்ட தம்பிராஜா இந்துத்துவா தத்துவங்களை தனக்கு தோதாக பயன்படுத்த தொடங்கி வெகுகாலம் ஆகிறது. இப்போது ‘தூ லேட்’ அப்போது நமது நாட்டு பகுத்தறிவாள சிங்கங்கள் எல்லாம் சிக்கன் சோப் கடித்துக் கொண்டு சும்மா இருந்தன. எது எப்படி போனா என்ன எம் புள்ள படிச்சா போதும் என்று பலரும் எந்த மாற்று கருத்தும் இன்றி ஶ்ரீ முருகன் நிலையத்தை நாடினர். அங்க போய் பிள்ளைகள் படிச்சதோ படிச்சத கிழிச்சதோ அது பற்றி அதிக அக்கரை இல்லை. அங்கு பாடம் போதிக்கும் ஆசிரியர்களின் தகுதி குறித்தும் யாருக்கும் கவலை இல்லை. (பல ஆரம்பலள்ளி ஆசிரியர்கள் பி எம் ஆர் வகுப்பு நடத்துகின்றனராம்) பள்ளிக்கூடங்களில் (தமிழ்ப்பள்ளிகள்) நடத்தப்படும் காலை, மாலை, இரவு வகுப்புகளுக்கும் அனுப்புவது போதாதென்று ஶ்ரீ முருகன் நிலையத்துக்கும் பிள்ளைகளை அனுப்ப பலரும் முந்துகின்றனர். எல்லாம் பொதுபுத்தி சார்ந்த சிந்தனைதான். எல்லாரும் செய்வதே சிறந்தது என்று பழகி போன சமுதாயம். ஶ்ரீ முருகன் நிலைய செயல்பாடுகளை இனி கேள்வி கேட்பது வீண் வேலை. அவர்கள் செயல்பாடு திருப்தி அளிக்க வில்லை என்றால் உங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பாதீர்கள்….
இவனுங்க wayang மன்னனுங்கனு எல்லாருமே சொல்வதை பல இடங்களில் கேட்டு அலசியதில் இது உண்மையே என்பது நிருபணமாகிறது
கையிலே உனக்கு அவ்வளவு பெரிய ‘வேல்’ எதற்குதான் முருகா??? இத்துரோகிகள் மீது பத்து மலையிலிருந்து அதனை வீச வேண்டாமா!! ‘ வேல் முருகா வேல் முருகா, வேல்”வேல் முருகா வேல் முருகா, வேல்’. சூரனை வதம் செய்த வெற்றி வேல் முருகா!!!
ஸ்ரீ முருகன் நிலையம் சரியான பாதையில்தான் செல்லுகிறது ஆனால் செல்லும் போது நொண்டி அடித்து கொண்டு போகிறது
ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே பொது நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு ……………………………..இன்றோடு போகட்டும் திருந்திவிடு
ஒன்று மட்டும் நன்கு புரிகிறது. நாம் எல்லாக் காலங்களிலும் யாரையாவது பிடித்துக் கொண்டு, வாலைப் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். நமது சொந்தப் புத்தியைப் பயன் படுத்துவதில்லை. அதனால் தான் சாமிவேலு, தம்பிராஜா போன்றவர்கள் இந்த சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்கிறார்கள். ஒன்று உங்கள் பள்ளி ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள். இல்லாவிட்டால் விபரம் தெரிந்தவர்களை நாடுங்கள். இன்னும் நம் மத்தியில் நல்லவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அது மட்டும் அல்ல. மாணவர்கள் இணையத் தளங்களுக்குச் சென்று உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தேடுங்கள். சொந்த முயற்சி இல்லையென்றால் எதுவும் கை கூடாது! இது உயர்கல்விக் கூடங்களுக்கு செல்லும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
நான் மாணவனாக இருந்த காலத்தில் ஶ்ரீ முருகன் நிலைய பேச்சாளர்கள் (தம்பிராஜா, தேவமணி, எல் கிருஷ்ணன் மேலும் பலர்) பாரிசான் அரசாங்கத்தையும் ம.இ.கா (சாமிவேலுவையும்) வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் கிழி கிழி என்று கிழிப்பதை பார்த்து வியந்திருக்கிறேன். என்னைப் போன்றே பல மாண்வர்களும் நாட்டு நடப்பு பற்றி தீவிரமாக சிந்திக்க ஊக்குவிக்கப்பட்டார்கள். தேவமணி ‘தெய்வ மணியாக ‘ பல மாணவர்களுக்கு தெரிந்தார். கம்யூனிச சித்தாந்த அறிவு கொண்ட சிந்தனையாளராகவும் சமரசம் செய்து கொள்ளாத களப்போராளியாகவும் தம்பிராஜா தன்னை முன்னெடுத்துக் கொண்டார். மாணவ சமுதாயம் அவர் பின் நின்றது. ஆனால் அப்போதே சில ‘திறமையான ‘ பேச்சாளர்கள் முடிந்த அளவுக்கு சுருட்டிக் கொண்டு காணாமல் போய் விட்டனர். எல் கிருஷ்ணன் போன்றோர் ஶ்ரீ முருகன் நிலையம் தந்த பிரபலத்தை பயன்படுத்தி சொந்தமாக ஒரு கல்லூரி தொடங்கி மாணவர்களை சேர்த்து, போதிய அளவு காசு பார்த்து விட்டு அதையும் மூடி விட்டார். (இந்த கல்லூரியில் படித்து தேறிய யாரும் இருந்தால் முன்வந்து கூறலாம்)
30 ஆண்டுகளில் என்னவெல்லாமோ நடந்து விட்டது. சோசலீச சிந்தனையாளர் இன்று முதலாளித்துவ பிரபுவாகி விட்டார். மலேசிய இந்தியர்களை கவிழ்க்க பலரும் பயன்படுத்தும் கோயில், சமயம், பக்தி ஆகிய அயிட்டங்களை மிக அழகாக கல்வியின் பேரால் காட்டி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடுச்சி போட்டுக் கொண்டிருக்கிறார். எந்த பாரிசானை குறை கூறினார்களோ அதே பாரிசானிடம் இருந்து பட்டம் பதவி, துணை அமைச்சர் , ஆண்டுதோறும் பெரிய அளவில் நிதி உதவி எல்லாம் கிடைக்கிறது. குறை கூறப்பட்ட ம.இ.கா வில் முக்கிய தலைவர்களாக உள்ளனர். என்ன செய்வது நமது வாழ்க்கை இப்படித்தான் உள்ளது. இதுதான் மலேசிய இந்தியர்களின் அரசியல் எழுச்சி…கொஞ்சகாலம் ஆர்ப்பாட்டம் பன்னுவது பிறகு எதிரியின் காலிலேயே விழுந்து அடங்கிப் போவதும் பலமுறை பார்த்து பழகிப் போய்விட்டது. இன்று ஶ்ரீ முருகன் நிலையம் ஒரு அடிப்படை டியூசன் சென்டர்தான். அதன் சமுதாய எழுச்சி சிந்தனைகள் நீர்த்துப் போய்விட்டன. அல்லது மீட்டுக்கொள்ளப் பட்டுவிட்டன. குறைந்த கட்டணம் வசூலிப்பது மட்டுமே அவர்கள் பெருமையாக பேசும் விஷயமாக இருக்கிறது. ஆனால் ஒரு வகுப்பில் 50 மாணவர்களை அடைத்து வைத்து கல்வி போதிக்கும் போது அந்த அளவு கட்டணம்தான் (அதன் தரத்துக்கு) பொருத்தமானது. எனக்கு ஶ்ரீ முருகன் நிலையத்தில் ஆறுதல் அளிக்கும் ஒரே ஒரு விஷயம் அதில் இன்றளவும் சாதிச் சிந்தனை ஊடுருவவில்லை என்பது மட்டும்தான். மற்ற பல இந்திய (தமிழர்) இயக்கங்களிலும் தேர்தல் போட்டி என்றெல்லம் வைத்து தங்கள் சாதீய சிந்தனைகளை வெளிப்படுத்தி விடுவார்கள்… ஶ்ரீ முருகன் நிலையத்தில் தலைவர் போட்டி இல்லாததால் அந்த தொல்லை இல்லை. தம்பிராஜாவுக்குப் பிறகு ஶ்ரீ முருகன் நிலையத்தின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்…. யார் கண்டது இன்னொறு இந்திய அரசியல் கட்சியாக (பாரிசானின் எடுபிடியாக) உருமாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை .
நம் நாட்டில் புகுமுக வகுப்பில் படித்துத் தத்தளிக்கும் மாணவர்களைக் கரை சேர்க்க அரசாங்கம் கொடுக்கும் மான்யத்தை ஶ்ரீ முருகன் நிலையத்தார் நல்வழியில் பயன்படுத்தினால் தகும். அதை விடுத்து யாத்திரை , யாகம் என்று கடவுளைப் பனயம் வைக்காமல் இருப்பது சிறப்பு. உண்மையில் உங்களால்தான் பல பட்டதாரிகள் உருவாக்கப் படுகிறார்கள் என்றால் , அந்தச் சீரிய தொண்டினைப் புகுமுக வகுப்பில் பயிலும் மாணவர்க்குப் பயன்படுத்தி பெயர் பெற்றுக்கொள்ளுங்கள்.
அவர்களும் பட்டதாரியாகட்டுமே!
EMAARUBAVAR IRUKKUM VARAI EMATRUBAVARGAL NAM INATHIL ATHIGAM. KADAVUL PEYAR ENNA ENTHA MUTTALAYUM VAITHAAL SAMBAATHIKKALAAM EMATRALAAM. MAIKA HOLDINGS, SRI MURUGAN, MIED ,TAFE IPPADI ENNATRAVAI. NAM INATTHAI EMAATRUVATHARKKU!
MURUGA
YAARAI THAAAN NAMBUVATHU
தம்பிராஜாவுக்கு தமிழ் ஆசிரியர்களை தாக்கி பேச என்ன உரிமை இருக்கிறது?
முதலில் கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு/மாணவர்களை தேர்ந்தெடுத்து இந்த எஸ் எம் சி யை கற்று தர சொல்லுங்கள் பார்ப்போம் .அவர்களை எல்லாம் இந்த SMC தேர்ந்தெடுக்காது .பயில விரும்பும் மாணவர்களுக்கு ஒரு தேர்வு ….அதில் தேர்ச்சி பெற வேண்டும் இல்லையென்றால் அங்கு இடம் கிடைக்காது.அம்மாதிரியான சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து பாடம் சொல்லிக்கொடுத்து ….மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றால் நாங்கள் தான் அவர்களை உருவாக்கினோம் என்று மார் தட்டிக் கொள்வதுதான் இந்த எஸ் எம் சி .எங்கே உங்களால் (எஸ் எம் சி) முடிந்தால்,கல்வியில் பின் தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து சொல்லிக்கொடுங்கள் பார்ப்போம்.தேர்வில் அவர்கள் சிறப்பு புள்ளிகளை பெறச் செய்யுங்கள் பார்ப்போம்.என்னமோ வந்துட்டானுங்க ரும்ப கிழிச்சிட்ட மாதிரி….மாணவர்கள் கட்டணம் செலுத்த வில்லை என்றால் …அந்த மாதம் அவகளுக்கு ‘modul”கிடைக்காது/கொடுக்க மாட்டார்கள் .இதைத்தான் சேவை என்பார்களோ ?
Enough is enough, dear SMC leaders.
You have seen the last election results and they were not on your side. Lord Muruga has given you another opportunity to change. Support yourself and your family with your hard earned money and not with public money. You are collecting money from government and also from the poor students. Where is the money?
குரு வாழ்க மாணவர் வாழ்க
ஸ்ரீ முருகன் நிலையம் மாணவர்களிடம் பணம் வசூல் பண்ணாமல் இலவசமாக வகுப்புகள் நடத்தலாம் காரணம் அந்த அளவுக்கு அரசாங்கம் (பிரதமர் நஜீப்) பணம் கொடுத்திருக்கிறார். பஞ்சாபியர்களும் ,மலேசிய தெலுகு சங்கத்தவர்களும் தத்தம் தாய்மொழிகளைக் காப்பாற்றிக் கொள்ள நாடு முழுவதும் இலவசமாக வகுப்புகள் நடத்துகிறார்கள்.
தம்பிராஜா, பிரகாஷ் ராவ் அவருக்கு தம்பிதான், பிரகாஷ் ராவ் உயர் கல்வி
வாய்ப்புக்கு அரசாங்கத்தால் வழங்;கப் பட்ட வாய்ப்பினை 100 விழுக்காடு
தெலுங்கர்கு பயன் படுத்தியுள்ளார்…! எல்லா இடத்திலும் எல்லா நிலையிலும் தமிழர்க்கு பட்டை நாமம் தான்…!
வழங்கிய வள்ளல்
ஏழை மாணவர்களுக்கு கல்வியை தந்து அவர்ககழி வாழ்கையில் பயனுள்ளவர்களாக மாற்றிடவேண்டும் என்கிற மகத்தான எண்ணத்தோடு உருவாக்கபட்ட எஸ் எம் சி இன்று பல லட்சங்களை குவிக்கும் பண தொழிற்சாலையாக மாறியதன் காரணமாக அதன் இலசியங்கள் லட்சங்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது . எஸ் எம் சி தலைவர்கள் வருடம் 3 அல்லது 4 முறை ‘ மைக்கை ‘ பிடித்து காது கிழிய கத்தி கத்தி பேசி மாதா மாதம் இயக்குனர் என்ற பேரிலே ஆயிரம் ஆயிரமாக அல்லிகிட்டு , பெரிய காரெல்லாம் ஓட்டிகிட்டு ஜாலிய இருக்காங்க . ஒரு மாசம் பீஸ் கட்டாத மாணவர்களுக்கு நோட்ஸ் இல்லே ஒரும் மண்ணும் இல்லே……எஸ் எம் சி உங்க சமுதாய சேவையை நினைச்சு பார்த்தவுடன் புல்லரிக்குது போங்க ! மகா பெரிய டியுசன் வகுப்பு நடத்தி பணம் சம்பாதிக்கும் திறமையை வியாபார ரீதியில் மெச்சுகிறேன். டியுசன் பணம், அரசாங்க பணம்….இன்னும் என்ன வேணும்?…மனுசனை மனுஷன் தின்னுற கூட்டம் …பணக்கார கூட்டம் ……வாழ்க இன்னும் வளர்க !
ஒருத்தன் நல்லது செய்தா பொறுக்காதே. நீயும் செய்ய மாட்ட. அடுத்தவன் செய்யுறதையும் விட மாட்ட. என்னடா ஜென்மம்…போங்கடா. போய் பொலப்ப கவனிங்கடா.
ஒரு இனத்தை கொள்ளையடிப்பது நல்லதா ….மிஸ்டர் நான் அவனில்லை …நீர் நிச்சயமாக தமிழனில்லை !!! நீர் தமிழனாக இல்லாவிடாலும் பரவாயில்லை …’அதுவாக’ இல்லாமல் இருந்தால்போதும் !!
மக்களுக்கு நல்லது செய்யும் யாவரும் உங்கள்க்கு கொள்ளைகாரனகவும் சமுதயத்தை ஏமாற்றும் நயவஞ்சகர்கலாகவவே மட்டும் தென்படுகிறார்களே அது எப்படி? தான் ஸ்ரீ தம்பிராஜா அவர்கள் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய நல்லது யாவும் உங்கள் கண்களுக்கு புலப்படவில்லையா? அவரை போன்று இன்னும் நால்வர் நம் நாட்டில் இருந்திருந்தால் உங்களை போல பிறரை குறை சொல்லும் சிறு கூட்டம் முன்பே மாறி இருக்கும்.இவ்வளவு குறை சொல்லும் நீங்கள் நம் இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்தீர்? இந்திய சமுதாயத்தில் உங்கள் சாதனை என்ன?நீங்களும் செய்ய மாடிங்கே !!! செய்யற எல்லாரையும் குறை சொல்லுவிங்கே !!!!! முடிந்தால் நாலு பேருக்கு நல்லது செயிங்கே …..நன்றி …. வணக்கம் !!!!!
ஸ்ரீ முருகன் நிலையத்தாரே இனிமேலாவது டியூசன் என்ற பெயரில் வசூல் வேட்டையை நிறுத்துங்கள். டியூசன் கட்டணம் செலுத்த முடியாத நம்மின மாணவர்கள் சிலருக்காவது இலவசமாக வகுப்பு நடத்துங்கள். முக்கியமாக, புகுமுக வகுப்பு மாணவர்களுக்காவது சிறப்பு வகுப்புகள் நடத்தி அவர்களைக் கரைசேர்க்க பாருங்கள். சமூகம் உங்களைப் பாராட்டும். நன்றி.