நன்றி: மைற்கற்கள் (http://shkifthihar.blogspot.com)
எகிப்தில் இராணுவப் பயங்கரவாத தாக்குதலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் ஆகியோறின் விபரங்களை ஆதாரங்களுடன் வெளியிடப்போவதாக இஹ்வான்கள அறிவித்துள்ளனர். VIDEOஎகிப்தில் இராணுவ சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஷியிக்குஆதரவாக நடாத்தப்படும் தொடரானஆர்பாட்டத்தின் மீது இராணுவத்தினர் நேற்றுநடத்திய தாக்குதல்களில் 2500 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக இஹ்வான்களின்உதியோகபூர்வமற்ற தாகுவல்கள்குறிப்பிடுகிறது.
இதேவேளை 525 பேர் வரைகொல்லப்பட்டுள்ளதாகவும் 3700 பேர் காயமடைந்துள்ளதாகவும் எகிப்து இராணுவ நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது. அதிகமானவர்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் ஆனால் எண்ணிக்கையை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த தாக்குதலில் மூன்றுஊடகாவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் எகிப்தின் இடைக்கால நிர்வாககத்தை அமெரிக்க கண்டித்துள்ளது. அவசர காலநிலையை வாபஸ் பெறுமாரும் கூறியுள்ளதுடன். எகிப்து இராணுவதுடன் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கூட்டுபயிற்சியை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது , எனினும் எகிப்தில் இடம்பெற்ற இராணுவ சதிப் புரட்சியை இராணுவப் புரட்சியை என்று இது வரை அமெரிக்க அழைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எகிப்து இடைக்கால நிர்வாககத்தை பல ஐரோப்பிய நாடுகளும் கண்டித்துள்ளன.
எகிப்து இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான நாடாக காணப்படுகிறது அதன் அமைவிடம் உலகத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளதால் பலரின் கண்களுக்கு இந்த நாடு பெரும் சவாலாகவே உள்ளது .
இப்படிப்பட்ட நாடு பல வரலாற்று சாதனைகளையும் படைத்தே வந்துள்ளது உங்களுக்கு தெரியும் எகிப்தில் மிகப்பெரும் இஸ்லாமிய அறிஞகள் உறுவாகியுள்ளார்கள் என்பதும் உலகம் அறிந்த உண்மையே இப்படி பட்ட நாடு கடந்த கடந்த அறுவது வருடமாக அதன் தலைமைகளால் சுரண்டப்பட்டு குட்டிச்சுவராகியுள்ளது .
இதற்கு ஒரு விடிவாகவே இஸ்லாமிய உலகத்தில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சியை குறிப்பிடலாம் அதன் காற்று எகிப்திலும் வீசி எகிப்திய அரச கதிரையில் ஒட்டியிருந்த முபாரக்கை புடுங்கி எடுத்தது.அதன் பிறகு உலகம் எகிப்தை இன்னும் உற்று நோக்க ஆரம்பித்தது .
இதன் விளைவாக எகிப்தின் முதல் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதி தேர்தல் பல தரப்பினரின் உதவியுடன் நடைபெற்றது இதன்விளைவாக கலாநிதி முர்சி அவர்கள் எகிப்தின் முதல் இஸ்லாமிய உணர்வு மிக்க தலைவராக தெரிவு செய்யப்பட்டார் .
எகிப்திய புரட்சிக்கு பிறகு மிகவும் வேகமாக எகிப்து வளர்ச்சியடைய ஆராம்பித்தது இது ஒரு சில இஸ்லாமிய பெயர்தாங்கிய நாடுகளுக்கு நெருப்பை வயிற்றில் கொட்டியதுபோல் ஆனது அன்று முதல் இந்த அரசை வீழ்த்த அமேரிக்கா ,இஸ்ரேலுடன் இந்த நாடுகள் சேர்ந்து சதி முயற்சியில் இறங்கியது.இதற்க்காக பல கோடிக்கணக்கான டொலர்களை செலவளித்து இஸ்லாமிய ஆட்சிக்கு பயந்த இந்த நாடுகள் கடைசியில் இஸ்லாத்தை உடைத்தெறியும் வேலைத்திட்டங்களில் இறங்கியது அந்த சதி முயட்சியுளும் உலக பார்வையில் வெற்றிகண்டது.
இந்த சதிக்குப்பின்னால் என்ன நடைபெற்றது என்று உங்களுக்கு தெரியுமா? அதை கேட்டால் உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ளவர்கள் கூட அழுவார்கள் ஏன் மனித நேயம் உள்ளவர்கள் கூட அழுவார்கள்.
எகிப்திய இராணுவத்துடன் சேர்ந்து இந்த சதி முயற்சியில் சில முஸ்லிம் பெயர்தாங்கிய முனாபிக்கள் பணத்துக்காக சோரம்போயுள்ளனர் என்பது பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகிறது பின்னர் அவர்கள் நல்ல பிள்ளைகள் போல ஒதுங்கிக்கொண்டனர்.
தற்போதைய எகிப்தில் என்ன நடக்கிறது என்பதை சற்று பார்ப்போம் .
- இராணுவ புரட்சியை தொடர்ந்து எகிப்திய ஜனாதிபதி கலாநிதி முர்சி இதுவரைக்கும் எங்கு இருக்கிறார் என்று தன்னுடைய சொந்த மனைவிக்கே தெரியாது அவரின் உடல் நிலை எவ்வாறு உள்ளது அவர் என்ன சாப்பிடுகிறார் என்று கூட தெரியாது முப்பது வருடம் இரனுவ ஆட்சி செய்த முபாரக்குக் கூட இப்படி நடக்க வில்லை அவர் இப்போது மிக சுதந்திரமாக இருக்கின்றார் முர்சிதான் பெரும் குற்ற வாலி என்று எகிப்திய ஊடகங்கள் வாய் கிழிய பேசுகிறது இவைகளை வழிகெட்ட ஹிஸ்புன் நூர் அங்கீகரித்தே உள்ளது .
- எகிப்தில் அறுவது வருடம் இடப்பெற்ற கொடுமைகளை மாற்றிய எகிப்திய புரட்சி அப்படியே இன்று மறக்கடிக்கப்பட்டுள்ளது அதன்போது பிடிபட்ட அனைத்து குற்றவாளிகளும் இப்போது நிரபராதி என்ற பெயரில் வெளியே நடமாடுகிறார்கள் அதில் மரணித்த சுமார் 360 பேர்களும் ஒருநாள்கூட நினைவு படுதப்படுவதில்லை அவர்களுக்கு ஜனாதிபதி முர்சி அவர்களால் கொடுத்து வந்த ஊதியமும் இன்று நிறுத்தப்பட்டு கடைசியாக நடைபெற்ற இரனுவ புரட்சியில் மரணித்தவர்களுக்கு கொடுக்கப்படுகிறது .
- எகிப்தின் புதிய இரனுவ அரசாங்கத்தில் முபாரக்கின் ஆதரவாளர்களே அதிகம் உள்ளனர் நேரடியாக முபாரக் இல்லாவிட்டலும் மறைமுகமாக அந்த அடக்குமுறை ஆட்சியே நடைபெறுகிறது என்பது அனைவருக்கும் தெரியும் இதையும் அவர்கள் அறிவார்கள் .
- நிர்வாக மட்டத்தில் கூட அனைவரும் முபாரக்கின் ஆட்களே நியமிக்கப்பட்ள்ளனர்.மீண்டும் எகிப்தில் பழைய நிலைமை தோன்றியுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் .
- இந்த சதி முயற்சிக்கு முதலில் துணைபோன நாடு சவூதி இது பல மில்லியன் டொலர்களை இவர்களுக்கு கொடுத்து அவர்களை இன்றுவரை புகழ்ந்து வருகிறது அதை எதிர்க்கும் யாராக இருந்தாலும் கைது செய்யுமாறும் பணித்துள்ளது அந்தவகையில் சேஹ் உரைபி கைது செய்யப்பட்டதும் உங்களுக்கு தெரியும் இங்கே தான் எம் கருணை நபியும் இஸ்லாமிய அரசை உருவாக்கினார்கள் என்றும் அனைவருக்கும் தெரியும்.
- இந்த சதிக்குப்பிறகு ஐக்கிய அரபு கூட்டரசு (இமிறேட்ஸ்) இஸ்ரேல் ,அமெரிக்க பிரதிநிதிகள் இன்று எகிப்துக்கு அடிக்கடி வருகை தந்துள்ளார்கள் குறிப்பாக இஸ்ரேலுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது இதேநேரம் பாலஸ்தீனர்களையும்,சிரியர்களையும் எகிப்தை விட்டு வெளியேறுமாறும்,அவர்களை கண்டால் பிடித்து போலீஸில் ஒப்படைக்குமாறும் கட்டளை விடப்பட்டுள்ளது .முர்சி இவர்களை சொந்த சகோதரர்களாக நாங்கள் பார்க்க வேண்டும் அவர்களுக்கு முழு உதவியையும் செய்து கொடுக்குமாறு வேண்டியிருந்தார் .
- சதிக்குப்பிறகு பலரின் உயிர்களை இராணுவம் மற்றும் பொலிஸ்,காடையர்களின் கைகளினால் சஹீதாக்கப்பட்டுள்ளனர் இதில் பெரியவர்கள,சிறியவர்கள் பெண்கள் அனைவரும் அடங்குவர் அவர்களை நாய்களை சுடுவது போன்று வீதிகளில் சுட்டு போட்டதை காணமுடிந்தது.ஏன் தொழுகைக்கு கூட அனுமதியில்லையா சுஜூதில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு பிரயோகம் செய்தது அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவளைதது.
- சதி முயட்சிக்குபிறகு எகிப்தின் முக்கிய பள்ளிகள் சில மூடப்பட்டுள்ளது காரணம் அதிகம் பேர் இந்த பள்ளிகளுக்கு தொளுவதட்க்கு வருகிறார்கள் இதனால் இரனுவ புரட்சிக்கு சவாலாக அமைந்து விடும் என்பதால் குறிப்பாக அல் அஸ்ஹர் பள்ளி சதிக்கு துணைபோன காம்புகள் எகிப்தில் பகிரங்கமாக நடைபெறும் தீமைகளை தடுக்க முன்வரவில்லை ஏனோ?
- முர்சியின் ஒரு வருட காலத்தில் இரவும் பகலும் அவரை அவர் குடும்பத்தை அவர் பிள்ளைகளையும் கூட திட்டிதீர்தவர்களைக்கூட அவர் கைது செய்ய வில்லை ஆனால் இன்று பெரும் எவ்வித குற்றமுமில்லாமல் இஸ்லாமிய தலைமைகள் கைது செய்யபட்டுள்ளார்கள் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது அதுமட்டுமல்ல இரனுவ ஆட்சிக்கவில்ப்பை மறுக்கும் அனைவரும் கைது செய்யப்படுள்ளனர் இன்னும் பலர் வீடுக்காவளில் வைக்கப்படுள்ளனர் உதரணமாக எகிப்தின் முப்தி ,சேஹ் ஹஸ்ஸான் இன்னும் பலர்.
இதே நேரம் ஹிஸ்புன் நூர் என்ற கட்சி கிறிஸ்த்தவ பாபாவுடனும்,இராணுவத்துடனும் சேர்ந்து இஸ்லாமிய ஆட்சியை கொண்டுவர பாடுபடுகிரதாம் இதற்காக யாப்பில் உள்ள இரண்டாவது மாத்தாவை பாதுகாத்துள்ளதாம் இந்த மாத்தா ஜமால் அப்துன் நாசர் ,அன்வர் சாதாத் ,ஏன் முபாரக்கின் காலத்தில்கூட இருந்தே வந்துள்ளது என்பது அவர்களுக்கு தெரியாது போலும் ஏனெனில் அரசியல் குறித்த நீண்ட அனுபவம் இல்லாமையே இதற்கான காரணமாகும்.
உலக இஸ்லாமிய நாடுகளில் இன்னும் பல இராணுவ புரட்சிகள் தொடரும்..அமெரிக்க வேடிக்கை பார்த்து வசூல் செய்யும்.
மனித நேயத்துடன் யார் சிந்திக்கிரர்களோ அந்த உலகில் அமைதி நிச்சயம்