இமயமலை வீரர் மூர்த்தி மரணமடைந்ததைத் தொடர்ந்து சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன். அவர் உயிரோடு இருக்கும்போது இஸ்லாத்தைத் தழுவிட்டாராம், எனவே, இஸ்லாமிய இலாகா மூர்த்தியின் சடலத்தைத் தம்மிடம் ஒப்புவிக்கும் அதிகாரத்தை ஷரியா நீதிமன்றத்தில் இருந்து அது பெற்றது. இதை அறிந்த அவருடைய மனைவி காளியம்மாள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மூர்த்தி முஸ்லிம் அல்ல என்று பிரகடனப்படுத்தும்படி வேண்டினார். உயர்நீதிமன்றம் 121(1A)ம் ஷரத்தைக் காட்டி இந்த விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் ஷரியா நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்று கூறி காளியம்மாளின் மனுவைத் தள்ளுபடி செய்தது.
மூத்த வழக்கறிஞர் கி. சீலதாஸ், செம்பருத்தி.காம் -க்கு எழுதிய சமயம் சட்டமானது! சட்டம் சமயமானது! கட்டுரைத் தொடர்ச்சியின் இறுதிப்பகுதி இது. இதற்கு முன்பு வெளியான பகுதிகள் இப்பகுதியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளன).
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மலேசியர்களை மட்டுமல்ல வெளிநாட்டவரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்த வழக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் (1A) ஷரத்தின் விளைவிக்கும் சங்கடங்களை எல்லோரும் அறிந்து கொள்ள முடிந்தது. இதனால் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது எனலாம்.
பிரதமர் இலாகாவில், நாடாளுமன்ற விவகார அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸீர் கூட உயர்நீதிமன்றத்தின் போக்கை ஜீரணித்துக் கொள்ள முடியாத நிலையை அடந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசும் காளியம்மாளுக்கு ஏற்பட்டத் துயரை அறிந்து கவலைப்பட்டதாகத் தெரிகிறது. அதே சமயத்தில் இது போன்ற சங்கடங்கள் இனிமேலும் நிகழாமல் இருக்க பார்த்துக் கொள்ளும் பொருட்டு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமாயின் அதுவும் கவனிக்கப்படும் என்று அரசின் அறிவிப்பு மலேசியர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது.
பொது அமைப்புகளின் கொந்தளிப்பு
நடப்பிலிருக்கும் சமய மாற்றம் சம்பந்தமான மாநில சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக இயற்றப்பட்டு இருப்பதையும் உயர்நீதிமன்றம் இந்தப் போக்கைக் கண்டு கொள்ளாமல் செயல்படுவது முறையல்ல என்ற பல பொது இயக்கங்கள் சுட்டிக்காட்டியதும் உண்டு. அதோடு மலேசிய ஹிந்து சங்கம் அங்கம் வகிக்கும் பல சமயங்களைக் கொண்ட மலேசிய ஆலோசனை மன்றமும் மூர்த்தியின் பிரச்சினை அரும்புவதற்கு முன்னமே, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுவதை வலியுறுத்தின.
நிலைமை இப்படி இருக்க முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவியின் காளியம்மாள் அனுபவித்தத் துயர் இனியும் நேரக் கூடாது, அதற்காக சட்டத்தில் திருத்தம் அவசியமானால் அது மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு மெச்சத்தக்கதாகும். இந்த அறிவிப்பால், மக்கள் நலனில் அக்கறை கொண்ட இயக்கங்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க ஏதுவாக இருக்கும் என நம்பினர்.
அப்துல்லா படாவி தெரிவித்த கருத்து அவர் பல ஆக்ககரமான தகவல்களைச் சேகரிப்பதில் கவனம் செலுத்துவார் என்ற நம்பிக்கையையும் கொடுத்தது.
அமைச்சர்களை புறக்கணித்த அப்துல்லா படாவி
தேசிய முன்னணி அமைச்சரவில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அல்லாத அமைசர்கள் ஒன்று கூடி மகஜர் ஒன்றை பிரமரிடம் சமர்ப்பித்தனர்.
மகஜர் சமர்ப்பிக்கப் பெற்ற நடவடிக்கையை அப்துல்லா படாவி விரும்பவில்லை. அதற்குப் பிறகு அவர் கொடுத்த அறிக்கை மலேசியர்களின் துயரைக் கலைவது போல் அமைந்திருக்கவில்லை. டத்தோ ஸ்ரீ நஸீர் கூட பிரமரிடம் மகஜர் கொடுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது? அப்துல்லா படாவியும், நஸ்ரியும் காளியம்மாள் வழக்கில் வந்தத் தீர்ப்பின்போது வெளிப்படுத்திய கவலை மனப்பூர்வமானதா என்ற சந்தேகத்தைக் கிளப்பியது மட்டுமல்ல, சட்டங்களால் இழைக்கப்படும் துயர்களை நீக்க உடனடியாக பரிகாரம் கிடைக்காது என்ற ஐயத்தையும் ஏற்படுத்திவிட்டது எனலாம்.
முஸ்லிம் அல்லாத அமைச்சர்கள் கொடுத்த மகஜரில் என்ன சொல்லப்பட்டது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் பிரதிநிதிக்கும் இயக்கங்களையும் மக்களையும் அவர்களைப் பாதிக்கும் சட்டத்தைப் பற்றி வெளிப்படையாக பேசவும், பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரவும் அவர்களுக்கு எல்லா உரிமையும், அதிகாரமும் உண்டு.
இந்த விவகாரத்தில் அப்துல்லா படாவியின் போக்கு மக்களாட்சி மரபுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகச் சொல்லமுடியாது. அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப்படமாட்டாது என்பதை அறிவிப்பதை அவர் ஒத்திப் போட்டிருக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. அப்படி அவர் செய்து இருந்தால் அவர் வலியுறுத்தும் நேர்மையான அரசு என்ற அடைச்சொல்லுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கும்.
அப்துல்லா படாவி, கருத்து பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்று மலேசியர்கள் நம்பியதுண்டு அந்த நம்பிக்கையை அவரால் காப்பாற்ற முடியவில்லை.
நஜிப்பின் மீதுள்ள நம்பிக்கை – மறுபரிசீலனை
டதோஸ்ரீ நஜீப் பிரதமரானப் பிறகு நீதித்துறை அதிகாரம் உயர்நீதிமன்றங்களிடம் ஒப்படைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். ஆனால், இதுவரை அது நடந்தேறவில்லை.
121(1A) ஷரத்து குழப்ப நிலையை உருவாக்கிவிட்டது என்பதை கூட்டரசு அரசு ஏற்றுக் கொண்டிருப்பது சட்டத்தில் தெளிவான ஷரத்து அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கலாம். இது வரவேற்கத்தக்க நல்ல அணுகுமுறை என்றாலும் பல முக்கியப் பிரச்சினைகளை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தத் திருத்தமானாலும் அதை நன்கு பரீசீலிக்க வேண்டுமென்பது முஸ்லிம் அல்லாதாரின் எதிர்பார்ப்பு என்பதையும் உணரவேண்டும். இந்த நெருக்கடியான நிலை முஸ்லிம்களையும் கவலைக்குள்ளாக்கி இருப்பதை மறைக்க முடியாது. இதற்காக நாடாளுமன்ற சிறப்பு குழுவை (Parliament Select Committee) அமைத்து முஸ்லிம் அல்லாதாரின் இயக்கங்கள், தனி நபர், பொதுவாக மலேசியர்களின் கருத்துக்களுக்குக் செவிமடுக்க வேண்டும்.
1. 1988ஆம் ஆண்டு சிவில் உயர்நீதிமன்றத்தின் நீதி அதிகாரம் நீக்கப்பட்டதே இன்றையச் சட்டச் சிக்கல்களுக்குக் காரணம். எனவே 1988ஆம் ஆண்டு முன்பு நிலவிய சட்ட நிலையை திரும்ப அமலாக்கப்படப்படுவதை பரிசீலிக்க வேண்டும்.
2. 121(1A) ஷரத்து சட்டச் சிக்கல்களுக்குக் காரணமாக இருப்பதால் அதை ரத்து செய்யவேண்டும். அது தேவை என்று கருதினால் அந்த ஷரத்தில் திருத்தம் செய்து ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரம் இஸ்லாத்தைச் சார்ந்தவர்கள் மீது செலுத்தப்படும் என்று தெளிவுப்படுத்த வேண்டும். சட்டப் பிரச்சினை முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதவருக்கும் இடையே என்றால் அதை விசாரிக்கும் அதிகாரம் சிவில் உயர்நீதிமன்றத்திற்கே உண்டு எனத் தெளிவு படுத்த வேண்டும்.
3. இஸ்லாத்தைத் தழுவியவர் பதினெட்டு வயதை அடையாத தம் பிள்ளைகளைத் தன்னிச்சையாக இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யக்கூடாது. தாய், தந்தை இருவரின் ஒப்புதல் பெற்றாக வேண்டும்.
4. இஸ்லாத்தைத் தழுவியவர் அந்த மதத்தைத் தழுவுவதற்கு முன்னமே திருமணமாகிவிட்டவர் என்றால் அவர் குடும்பச் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளையும் சிவில் நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க அதிகாரம் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஷரியா நீதிமன்றங்கள் அதிகாரம் செலுத்த முடியாது என்று தெளிவுபடுத்த வேண்டும்.
5. பதினெட்டு வயதை அடையாதவர் இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார் என்றால் பதினெட்டு வயது நிரம்பியதும் தம் விருப்பப்படி மதமாற்றுதலை செய்து கொள்ளலாம். அப்போது எந்தத் துறையில் இருந்தும் வற்புறுத்தல் இருக்கக்கூடாது.
6. இஸ்லாத்தைத் தழுவியவர் உடனடியாகத் தம் மதமாற்றத்தைத் தம் உறவினர்களிடம் அறிவிக்க வேண்டும். அல்லது இஸ்லாமிய சமய இலாக்கா அதை தகவல் ஊடகங்களின் வழியாக அறிவிக்க வேண்டும்.
7. மாநில அரசுகள் முஸ்லிம் அல்லாதாரைப் பற்றிய சட்டம் இயற்றுவதைத் தடுக்க வேண்டும். இஸ்லாத்தை நிர்வகிக்கும் சட்டத்தை இயற்றும் போது அந்த மதத்தைச் சாராதவர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதோடு அப்படிப்பட்ட சட்டத்தை இயற்றும் முன்னர் முஸ்லிம் அல்லாதாரைப் பாதிக்கும் அளவுக்கு அந்தச் சட்டம் செயல்படும் என்று அறிந்தால் முஸ்லிம் அல்லாதார் இயக்கங்களின் கருத்தைப் பெற்றதாக வேண்டும்.
8. மாநில அரசுகள் இயற்றும் இஸ்லாத்தைச் சம்பந்தப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் அல்லாதாரை பாதிக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் பட்சத்தில் சிவில் உயர்நீதிமன்றங்கள் பரீசீலித்து தீர்ப்பு கூறும் அதிகாரத்தைத் தெளிவுப்படுத்த வேண்டும். இந்த அதிகாரம் இப்போது இல்லை என்று சொல்வதற்கில்லை, ஆனால் சில நீதிபதிகளின் மனப்போக்கு தடுமாற்றத்தில் இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
முடிவுரை – மதம்பிடித்த மனிதர்கள் மாற வேண்டும்
மேற் சொல்லப்பட்ட கருத்துகளை அரசு கவனத்தில் கொண்டு செயல்படுமாயின் முஸ்லிம் அல்லாதாரின் அவல நிலையை நீக்க முடியும். சட்டத்தின் நோக்கம் மக்களுக்கு மகிழ்வும் தன்னம்பிக்கையும் கொடுக்கும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். இதை உணர்ந்தால் நல்லது.
மலேசியா சுபிட்சமான நாடு என்பதில் எந்த ஐயமும் இல்லை. அந்த சுபிட்சத்திற்கு அஸ்திவாரமாக இருப்பது அரசியலமைப்புச் சட்டமும் அதற்கு வழி வகுத்த சமுதாய ஒப்பந்தமாகும். அந்த அஸ்திவாரத்தில் மாற்றம் செய்ய முற்படும் போது எல்லா இனத்தவர்களின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாத பொறுப்பு என்பதை எல்லோரும் உணரவேண்டும். அதை உணர்ந்தால் இந்த நாட்டின் சுபிட்சம் மேலோங்கி இருப்பதோடு பல்லின இணக்கம் செழிப்பாகத் திகழும்.
இதுவரை சில வழக்குகளைப் பற்றி மட்டுமே தான் விவரித்துள்ளேன். தலையெடுத்த சட்டப் பிரச்சினைகளைப் பற்றி விளக்கப்பட்டது. இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் நிறைய தேங்கிக் கிடக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் யாதொரு நீதி பரிகாரமும் இல்லாமல் தவிக்கின்றனர் என்பது உண்மையான நிலவரம். இந்தக் கொடுமையிலிருந்து விடுபட பல ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அரசு எவ்வாறு அணுகும் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் அரசு ஒரு நல்ல ஆக்ககரமான தீர்வைக் காண முயற்சிக்க வேண்டும் என்பது எல்லாருடைய எதிர்பார்ப்பாகும். அந்தப் பரிகாரம் வரும்வரை பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே கேள்வி. ஒரு சமயத்தை விட்டு பிறிதொரு சமயத்துக்குப் போவதால் ஏற்படும் சட்ட சிக்கல்களைத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாகும்.
மதம் மாறுகிறவர் தம் மனமாற்றத்தை ஒளிவு மறைவு இன்றி வெளிப்படுத்திவிட வேண்டும்.
உங்கள் நிலையை, உங்கள் தரத்தை, உங்கள் பாரம்பரியத்தை, உங்கள் கலாச்சாரத்தை, உங்கள் பண்புகளை நன்கு புரிந்து பேணி காத்துக்கொள்ள நீங்களே நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்போது, மதமாற்றத்தால் விளையக்கூடிய வில்லங்கத்தையும் புரிந்துவைத்துக் கொள்வது நல்லது.
நம்மை எதிர் நோக்கும் பிரச்சினையை மதப் பிரச்சினயாகக் கருதாமல் மனிதநேய பிரச்சினையாகக் கருதி செயல்பட்டால் நல்லது. சட்டம் மக்களுக்கு உதவ வேண்டுமேயன்றி மக்களுக்கு துயர் தரும் கருவியாக மாறிவிடக்கூடாது. அதை தவிர்க்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு. அதை ஓயாமல் நினைவுறுத்தும் பொறுப்பு நமக்கு உண்டு.
முடிவு.
பகுதி 1 ; பகுதி 2 ; பகுதி 3 ; பகுதி 4 ; பகுதி 5 ; பகுதி 6
இந்த லட்சணத்திலே rtm அன்றாடம் தமிழ் பாட்டை மலாய் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யும் அருவருப்பான நிகழ்ச்சி!!! உலகின் முதல் மொழி படும் பாடு சகிக்க முடியவில்லை!!!
முன்பெல்லாம் காலையில் எழுந்து பள்ளிக்கு கிளம்பும் போது சாமி பாடல்கள் ஒலிபரப்பப் படும். இப்போதெல்லாம் காலயிலேயே “இறைவனிடம் கையேந்த” வேண்டியுள்ளது… அதனாலேயே எனக்கு பிடித்த வானொலி டி எச் ஆர் ராகா வாக மாறிப்போனது..
மக்களின் பிரச்சனை எதுவாயிருந்தாலும் நேர்மையான முறையில் தீர்ப்பதுதான் சட்டத்தின் அடிப்படை கொள்கை.இதனை மலேசிய அரசாங்கம் கடைபிடிக்கிறதா?சிவில் உயர் நீதிமன்றங்களுக்கு மதப்பிரச்சனையை தீர்க்க உரிமை இல்லை என்றால் வேறு எந்த மன்றத்திற்கும் உரிமையில்லை.குடியாட்சி நாட்டில் இப்படியொரு அநீதி நடப்பதை மக்கள் எதிர்த்து போராடவேண்டும்.
தீவிர அரசாங்க அபிமானியாக இருந்த என்னை ஒரு அரசாங்க எதிர்பாளராக மாற்றிய சம்பவம்தான் இந்த மூர்த்தியின் சம்பவம். அன்று முதல் இன்று வரை நான் இந்த அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து பல பேரை மாற்றி உள்ளேன். இன்னும் இதை தொடர்ந்து செய்வேன்.
இமயத்தை தொட்டவன், மனைவியின் இதயத்தை தொட வில்லை ..!
இந்த கூரு கெட்டவன் எதற்காக மதம் மாறினான் என்பதனை யாராவது விசாரித்தார்களா?
உண்மையில் மதம் மாறினான அல்லது மதம் மற்றபட்டனா? இங்கேதான் எது வேண்டுமானாலும் நடக்குமே! மலாக்கா பரமேஸ்வரன் முதலில் மதம் மாறியதாக அப்பட்டமான பொய்! அதன் பின் ஏகப்பட்ட பித்தலாட்டங்கள்! அப்பா! அப்பா! புமிபுத்ராக்கள் என்று தங்களை சுய பிரகடனம் செய்து கொண்டு மக்களை ஏமாற்றி வரும் ஒரு குறிப்பிட்ட அம்னோ பிசாசுகள் தொல்லை தாங்கமுடியவில்லை!!!
நாம் தான் நாஸ்திகம் பேசும் ஆஸ்திகன்,வேதம் ஓதும் திராவிடன்,எப்படி உருப்பட போறோம் .
அனைவருடைய அடையாள அட்டையிலும் அவருடைய மதம் குறிப்பிடப்பட வேண்டும் .மதம் மாறினால் அடையாள அட்டை மற்றபட வேண்டும்.இஸ்லாமியர்கள் போல .
என் மதம் என்ற பற்று இல்லாத நம்மவர்களை என்னவென்று சொல்வது???
இப்ப குடும்பம் நாடு தெருவிலே….!
கடினமான விஷயம் தான்…… நமக்குள் ஒற்றுமை இல்லை
மதம் மாறினால் டத்தோ பட்டம் கிடைக்கும் என்று மாறி இருப்பான் மடையன். இப்ப குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. இதே போல் எங்க ஊரில் தற்காலிக தமிழ் பள்ளி ஆசிரியர் (ஆறுமுகம்) தகவல் இலாகாவில் நிரந்திர அரசாங்க வேலை கிடைத்ததும் குடும்பத்தோடு இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டான். குடும்ப உறுப்பினர் யாருக்கும் தெரியது. இவனைப்போல் மடையன் நாளைக்கு எதையும் செய்வான் பதவி ஆசை வந்தால்.