தமிழ்ப்பள்ளிகள் பாதிப்படையும், போராடுங்கள்!

najib_tamil_school2மலேசியக் கல்வி பெருந்திட்டம் தமிழ்ப் பள்ளிகளையும் தமிழ்க் கல்வியையும் வெகுவாக பாதிக்கும். எனவே, அதற்காக நமது சமூகம் சீனர்களைப் போல் போராட வேண்டும் எனக் கோருகிறார் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம். கடந்த வியாழன் அன்று (22.8.2013) துணைப்பிரதமர் முஹிடின் யாசின் கல்விப் பெருந்திட்டம் (2013-2025) மீது எதிர்ப்பு வந்தாலும் அது கண்டிப்பாக அமுலாக்கப்படும் என்று கோடி காட்டியிருந்ததைக் குறித்து செம்பருத்தி.காம் -க்கு   கருத்துரைக்கையில் அவ்வாறு குறிப்பிட்டார்.

malaysia-education-blueprinநாங்கள் அந்தப் பெருந்திட்டத்தில் செய்வது சட்டத்திற்கு எதிரானது அல்ல. தேசியக் கல்வி முறையை முன்னிலை படுத்தவே செய்கிறோம், தாய் மொழிப் பள்ளிக்கூடங்களை மூட  மாட்டோம், அதை எதிர்ப்பவர்கள் தேசியக் கல்வி முறையை எதிர்ப்பதாக பொருள்படும் என்றார் முஹிடின்.

இது சார்பான கருத்து சேகரிப்பில் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம், முஹிடின் கொண்டு வரப்போகும் மாற்றங்களுக்கு ஆதரவு தர ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிகிறது. அதேவளையில் சீனப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் எந்த ஒப்புதலையும் தரவில்லை என்பதால் முஹிடினின் சாடல் சீனப்பள்ளிகளைக் குறி வைத்துள்ளது.

K. Arumugam “இது வரையில் தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர் மன்றம் எந்த எதிர்ப்பையும் காட்ட வில்லை, அது சார்பாக விவாதம் செய்ததாகவும் தெரியவில்லை. அவர்கள் அரசாங்க அதிகாரிகளாக இருக்கலாம், ஆனால் தமிழ்ப்பள்ளிகளைக் காக்க முன்வர வேண்டும்” என்கிறார் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம்.

அடுத்த மாதம் அமுலாக்கத்திற்குக் கொண்டுவரப்படும் இத்திட்டம் தாய்மொழிப் பள்ளிகளின் தனித்தன்மையை பாதிக்கும். பள்ளி அட்டவணையில் மலாய் மொழி போதனைக்கு அதிக நேரம் வழங்கப்பட உள்ளது. அதனால் தமிழ் மொழி வழியான போதனைக்கு ஒதுக்கப்படும் நேரம் குறைக்கப்படும். கால ஓட்டத்தில் அறிவியல் கணிதம் போன்ற பாடங்களின் போதான முறை மாற்றம் கண்டால் தமிழ் மொழியின் பயன்பாடு மேலும் வெகுவாக குறையும்.

najib_tamil_schoolஉதரணமாக மலாய் மொழியின் கற்றல் கற்பித்தல் நேரம் வாரம் ஒன்றுக்கு 570 நிமிடங்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளது. அதேவேலையில் தமிழ் மொழிக்கான நேரம் வாரத்திற்கு 300 நிமிடங்களுக்கு குறைக்கப்படவுள்ளது. இதன் நோக்கம் 2017-இல் புதுமுக வகுப்பை அகற்றுவதற்காக என கூறப்படுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் தமிழ்ப்பள்ளிகளின் தனித்தன்மை மாறிவிடும். மலாய் மொழித்திறனை அதிகரிக்க தமிழ்மொழியை தாரைவார்க்காமல் மாற்று வழிகளை தேட வேண்டும் என்கிறார் ஆறுமுகம்.

 சார்புடைய செய்தி1 

சார்புடைய செய்தி 2