-ஜீவி காத்தையா, செம்பருத்தி.கோம், செப்டெம்பர் 9, 2013.
இந்நாட்டில் சீன மற்றும் தமிழ்மொழிப் பள்ளிகள் நிலைநிறுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 இல் கூறப்பட்டுள்ளது.
தேசிய கல்விப் பெருந்திட்டம் 2013-2025 என்று கூறப்படும் மலேசிய அரசின் மிக அண்மையக் கல்வி திட்டத்தை கடந்த வெள்ளிக்கிழமை (செப்டெம்பர் 6, 2013) வெளியிட்டு உரையாற்றிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின் “அவை (தாய்மொழிப்பள்ளிகள்) இருப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டதே இல்லை” என்று கூறிவிட்டு, அவர் கூறியதை ஆதரிப்பதின் அடையாளமாக அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களைக் கைத்தட்டுமாறு கேட்டுக் கொண்டார்!
தேசிய கல்வி பெருந்திட்டம் நாட்டின் கல்வி தரத்தை இமயத்தின் உச்சிக்கே கொண்டு செல்வதற்கான பல்வேறு விவகாரங்களையும், திட்டங்களையும் உள்ளடக்கியிருந்த போதிலும், தாய்மொழிப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த அரசாங்கத்தின் திட்டம் என்ன என்பதில் தாய்மொழிப்பள்ளிகளை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதை அறிந்துள்ள கல்வி அமைச்சர் தாம் தாய்மொழிக் கல்வி பாதுகாவலர் என்பதற்கான அங்கீகாரத்தைப் பெறவே அவரின் கைத்தட்டல் வேண்டுகோள் என்று கூறலாம்.
தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டதே இல்லை என்று கூறும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “உண்மையில், தாய்மொழிப்பள்ளிகளை ஓர் அமைச்சர் மூடுவது சட்டவிரோதமானதாகும்” என்றும் நாடாளுமன்றத்தில் முன்பே கூறியுள்ளார்.
கல்வி அமைச்சர் முகைதின் யாசினின் மேற்கூறப்பட்ட இரு கருத்துகளும் மலேசிய அரசமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். தனிப்பட்டவர்கள் அல்லது அமைப்புகள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில் தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கான உரிமையை அகற்றுவதற்கோ, அவற்றை மூடுவதற்கோ அரசமைப்புச் சட்டம் எவருக்கும் அதிகாரம் அளிக்கவில்லை.
ஆகவே, இந்நாட்டில் தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கான உரிமை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அவற்றை எவ்வாறு தேசியப்பள்ளிகளுக்கு சமமாக மேம்படுத்தி வளர்ச்சியடையச் செய்வது என்பதுதான் தேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 இன் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், தேசிய கல்வி பெருந்திட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகள் பற்றி கூறப்பட்டுள்ள முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
செப்டெம்பர் 11, 2012 இல் பிரதமர் நஜிப் ரசாக் வெளியிட்ட மலேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2025 தொடக்க அறிக்கையில், “மலேசிய கல்வி அமைவின் தற்போதைய கட்டமைப்பு நிலைத்திருக்கும். குறிப்பாக, சீன மற்றும் தமிழ் மொழிகளைப் போதணை மொழியாகக் கொண்ட தேசிய மாதிரி தொடக்கப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படும். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை தேசியப்பள்ளிக்கு அனுப்புவதா அல்லது தேசிய மாதிரி பள்ளிக்கு அனுப்புவதா என்பதை தேர்வு செய்வர். தொடக்கப்பள்ளிக்குப் பின்னர், பல்வேறு பொது மாதிரி பள்ளிகளின் மாணவர்கள் ஒருமுகப்பட்டு தேசிய இடைநிலைப்பள்ளியில் சேர்வார்கள். இம்முடிவு தேசிய கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்ட பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் அமைகிறது.” (The current structure of the Malaysian education system will remain. In particular, National-type primary schools where the medium of instruction is in Chinese language and Tamil will be maintained. Parents will have the option to decide whether to send their children to either National or National-type primary schools. After the primary school, all students from different public school types will converge and enter National secondary schools. This decision is in line with the majority of views raised during the National Dialogue.”) (Ch7-16)
இதைத்தான், சில அலங்கார வரிகளோடு, முகைதின் யாசின் வெளியிட்ட தேசிய கல்வி பெருந்திட்டம் 2013-2015 லும் கூறப்பட்டுள்ளது. (Ch7-18)
இதன் அடிப்படையில், தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்படுமா அல்லது மூடப்படுமா என்பதை முடிவு செய்யும் சட்டப்பூர்வமான அதிகாரம் அரசமைப்புச் சட்டத்திலிருந்து தேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் முடிவிற்கேற்ப கல்வி அமைச்சர் செயல்படுவார் என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
இதன் உள்நோக்கத்தை மக்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இது நிச்சயமாக திட்டமிடப்பட்ட ஒரு சதியாகும். இம்முறை தேசிய கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் தாய்மொழிப்பள்ளிகள் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றார்கள். அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பெருந்திட்டத்தில் கூறப்படுள்ளது. அடுத்த முறை இன்னும் பெரிய அளவிலான தேசிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அதன் அடிப்படையில் தாய்மொழிப்பள்ளிகள் மூடப்படும் என்பதற்கான முன்னறிவிப்பது இது என்பதை புரிந்து கொள்வது அவசியமாகிறது.
இது கற்பனை அல்ல. இதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சமீபத்தில் அம்னோ சார்ந்த மலாய் முஸ்லிம் அரசு சார்பற்ற அமைப்புகள் கலந்துரையாடல்கள் நடத்தின. அவற்றில் யுஐடிஎம் வேந்தர் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகமட் நோர் போன்றோர் தாய்மொழிப்பள்ளிகளுக்கு எதிராகப் போர் முரசு கொட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேல்முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி தாய்மொழிப்பள்ளிக்கு அரசமைப்புச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டவில்லை என்று கூறுவதை உண்மை என்று பலர் ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும், கல்வி அமைச்சரும் தாய்மொழிப்பள்ளிகள் அவருடைய ஆளுங்கட்சியின் தயவில்தான் நிலைத்திருக்க முடியும் என்ற மாயத்தை வலியுறுத்தி வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 29 இல், புத்ராஜெயாவில் மலேசிய கல்வி பெருந்திட்டம் குறித்து தமிழ் நாளேடுகளின் ஆசிரியர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய கல்வி அமைச்சர் முகைதின் யாசின், “தமிழ் மற்றும் சீனப்பள்ளிகளின் நிலை குறித்து சில தரப்பினர் தேவையில்லா அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். நாட்டில் தேசிய முன்னணி ஆட்சி இருக்கும் வரை இப்பள்ளிகள் நிலைத்திருக்கும் என்பது உறுதி. ஆகையால், இது குறித்து மக்கள் ஐயுறத் தேவை இல்லை”, என்று கூறியுள்ளார். (தமிழ் நேசன் 30.8.13)
இதன் அர்த்தம் இதர கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், தாய்மொழிப்பள்ளிகளை மூடி விடுவார்கள் என்பதாகும். அப்படி என்றால், தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதும் இல்லாததும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றாகிறது. இப்படி கூறுவதின் நோக்கம் மக்களை அச்சுறுத்தி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காக நடத்தப்படும் சதி. இது அரசமைப்புச் சட்டத்தை கீழறுக்கும் சதி.
கல்வி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான கருத்தை, அதுவும் வேண்டுமென்றே, வெளியிட்டது மக்களை ஏமாற்றும் நோக்கம் கொண்டது என்று எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
தாய்மொழிக் கல்வி கற்கும், போதிக்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தில் தரப்பட்டுள்ளது. இதைத்தான் அமைச்சர் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். அது மட்டுமல்ல. கல்வி விவகாரத்தில் அரசாங்கம் எந்த ஒரு குடிமகனுக்கும் எதிராக வேறுபாடு காட்டக் கூடாது என்பதும் அரசமைப்புச் சட்டமாகும். இதைத்தான் கல்வி அமைச்சர் கூறியிருக்க வேண்டும்.
மேலும், நாட்டில் இயங்கும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அரசாங்கம் அதன் நிதியிலிருந்து வழங்கும் நிதி ஒதுக்கீடுகளில் எவ்வித வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்பதும் அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் நாளிதழ் ஆசிரியர்களிடமும் நாட்டு மக்களிடமும் கூறியிருக்க வேண்டும்.
முகைதின் யாசின் மேற்கூறியவாறு நடந்துகொள்ளவில்லை. ஏனென்றால், அவர் ஒரே மொழிக் கொள்கையை முற்றாக ஆதரிப்பவர்.
தாய்மொழிக் கல்வியில் அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஆர்வலர்கள், அமைப்புகள் இந்த விவகாரத்தை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் மாணவர்களும் கல்வி அமைச்சர் முகைதின் யாசின் வெளியிட்ட தேசிய கல்வி பெருந்திட்டத்தில் தாய்மொழிப்பள்ளிகள் யாரோ கூறிய கருத்தின் அடிப்படையில் நிலைநிறுத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கிட்டத்தட்ட ஏளனமாக கூறியுள்ளதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
“உண்மையில், தாய்மொழிப்பள்ளிகளை ஓர் அமைச்சர் மூடுவது சட்டவிரோதமானதாகும்”, என்று முகைதின் யாசின் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்து தாய்மொழிப்பள்ளிகள் இருப்பதற்கான உரிமையின் உறைவிடம் அரசமைப்புச் சட்டமே தவிர பாரிசான் ஆட்சியோ, வேறு எவரோ எடுத்த முடிவோ அல்ல என்பதை அவருக்கு உணர்த்த வேண்டும்.
“மொழி வாழின் இனம் வாழும்” இந்நாட்டில் நாம் [தமிழர்கள்] இருக்கிறோம் என்பதற்கு அடையாளமே,.தமிழ்ப் பள்ளிகளும், கோவில்களும்தான். இவ்விரண்டையும் எப்படியாவது அழித்து விடவேண்டும் என்பதே இந்த அம்னோ அரசின் நோக்கம். மலாய்த் தவிர, பிற மொழிப் பள்ளிகளுக்கு தேவையான நிலங்களை அவர்களே வாங்கிக் கொள்ள முடியாதா என முகைதீன் சொல்வதில் இருந்தே நம் மொழிக்கு அவர் புரியப்போகும் துரோகம், தெளிவாகிறது.
தற்போதைய பி என் அரசாங்கம் இருக்கும்வரை இப்படித்தான் பிற இன பள்ளிகளை மூட முயன்றுகொண்டிருப்பார்கள் போலும்.
56 ஆண்டுகளில் பி என் ஆட்சியின் கீழ் ஆயிரத்திற்கும் மேல் இருந்த தமிழ் பள்ளிகளை எண்ணிக்கையை 523 பள்ளிகளாக குறைத்துசாதனையா?
அல்லது, பக்கத்தான் ஆட்சியின் கீழ் ஐந்தே ஆண்டுகளில் மிட்லாண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி மிளிருகிறதே இது சாதனையா?
ஐயா ஜீவி கெ சொல்லியிருப்பதைவிட வேறு யார் இவ்வளவு தெளிவாகச் சொல்ல முடியும். நானும் ரொம்ப நாளாக இதைத்தான் கேட்கிறேன். தாய்மொழிப்பள்ளிகள் நீடிப்பதை கட்சிகள் கையிலா விடப்பட வேண்டும். நிச்சயமாக அது அரசமைப்புச் சட்டத்தில் தீர்க்கமாக்கப்பட வேண்டும். ஆங்கிலப் பள்ளிகளை மூடி ஆங்கிலமொழிக்கு ஆப்பு வைத்துவிட்டு இப்போ அதை தூக்கி நிறுத்த தலைகீழாக நின்று போராடுகிறார்களாம். இன்னும் தாய்மொழிப்பள்ளிகளை மூடினால் நாடு விளங்கும்!!!!!!!!!!!!!!!
தமிழ், சீன பள்ளிகளை திறப்பது … மூடுவது ஒரு புறம் இருக்கட் டும். … RECONATION … HOW THIS GOVERMENT RECONIZE OUR CHILDREN ( NON – MUSLIM ) EDUCATION ACHIEVEMENT IN THIS COUNTRY …. THIS IS THE MAJOR AND CURRENT ISSUE NOW …
இந்தியர்களின் பிரதிநதி அறிவுக் கொழுந்து கமலனதனிடம் கேளுங்கள்? தமிழ் பள்ளிகளுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்பான். பொதுமக்களும் அரசு சாபற்ற நிறுவனக்களும் களம் இறங்க வேண்டும். 56 வருடங்களில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அம்னோ துங்கு காலத்திலேயே இந்த இன மற்றும் மொழி அழிப்பு திட்டத்தில் இறங்கி விட்டனர். ஆனால் எந்தத் தலைவனும் பொருட்படுத்தவில்லை. பாமர மக்களுக்கும் தெரியவில்லை. மொகிதீன் உண்மையானவன் என்றால் அத்திட்டத்தின் முழு விபரத்தையும் வெளியிடவேண்டும். செய்ய மாட்டான், காரணம் அவ்வளவும் கீலருப்பு.
இவரை உலக பள்ளிகளின் தலைவராக நியமித்தால் இன்னும்
அற்புதமாக இவர் மூலயை பயன் படுத்தி செயல்படுவர் .
Indian’s can buy tamil school lands by their own.It is not difficult.
Suggestion:Goverment should give tax exemption to the tax peyers who donate to tamil school upto RM 5000 per year. This will lead to more tamils contribute financialy to tamil school. We can be satisfied our money goes to our community and we do not need ot depend on govverment to finance it.
எது எப்டி இருந்தாலும்….. தமிழ் பள்ளிகளை மூடுவதற்கு தமிழர்களே காரணகர்த்தா …….
13 வது பொது தேர்தலின்போது BN அரசை தூக்கி தலையில் வைத்து ஆடிய பரதேசி பன்னாடைகள் ஏதாவது கருத்து சொன்னால் ,பின்னி பெடல் எடுக்கலாம் !
நானும் சேர்ந்து கொள்கிறேன். 500 வெள்ளிக்கு சமுதாயத்தை 5 ஆண்டுகள் பணையம் வைத்த பிச்சைக் காரர்களுக்கும் அதே பெடல்தான். இந்த லட்சனத்தில் இன்னும் பி என் டீ சட்டையை போட்டுக் கொண்டு அலையும் பன்னாடைகளும் உண்டு. பணத்தையும் வாங்கிக் கொண்டு மாற்றி ஓட்டு போட்ட தெய்வங்களுக்கு நன்றி.
ஐயா ஜீவி ! பி.என். ஆட்சி இருக்கும் வரை தாய்மொழி பள்ளிகள் நிலைத்து இருக்கும் என்பது தேருதல் வாக்குறுதியில் சொல்லப் பட்டது.தமிழ்ப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆய்வு செய்வதாக சொல்லி பேராசிரியர் இராஜந்திரனை பிரதமர் துறையில் அமர்த்தி இருக்கின்றார்களே என்ன செய்து கொண்டு இருக்கிறார்? பி.என். சொல்வதை கேட்டு பின் பாட்டு பாடுவதுதான் அவரது வேலை எத்துனை தமிழ்ப் பள்ளிகள் தரம் உயர்த்தப் பட்டுள்ளது? எல்லாம் வெறும் கண்துடைப்பு வேலைதான். தாய்மொழிப் பள்ளிகள் நிலை நிறுத்தப் படும் என்பது உண்மையானால் அதன் தரம் உருமாற்றத்திர்க்கு வெறும் அறிக்கைகளை அரசு வெளியிடுவதை நிறுத்தி உறுதியான நடவடிக்கையில் ஈடுப் பட வேண்டும். கல்வி அமைச்சு செய்யுமா?
RM .500 கிடைத்த உடன் சில முட்டாள் பரதேசிகள் BN தான் சோறு
போடுறான் என்று சொன்னார்கள் .வெச்சான் பாரு ஆப்பு
முன்னுக்கும் பின்னுக்கும் .இதுங்கள் எல்லாம் நாய் வால்கள்
மாதிரி .
உங்கள் பிள்ளைகள் எல்லாம் எந்த பள்ளி?. தமிழ்ப்பள்ளிகளை வாழ வைப்பது முக்கியமா? அல்லது இன்நாட்டில் நம் பிள்ளைகளை வாழ வைப்பது முக்கியமா? தமிழ்ப்பள்ளிகளின் தலைமைத்துவ திறமும் பெரும்பாலும் ஆசிரியர்களின் சுயநல போக்கும், அறிவாற்றலும் நம்மை மிரள வைக்கின்றன. பள்ளி வசதிகள் பற்றி கேள்வி இல்லை. ஆனால் பள்ளி நிர்வாக முறை பொதுவில் சரியாக இல்லை. இது உண்மை. சும்மா சப்பைக்கட்டு கட்டி தமிழ் உணர்வு என்ற பேரில் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோமா என்ற எண்ணம் என்னைப் போன்ற பலருக்கு உண்டு. இதனால் இன்றுமுதல் நாங்கள் தமிழ் துரோகி ஆகிவிடுவோம். பிரச்சனை இல்லை. ஆனால் இதில் உண்மை உண்டு. தமிழாசிரியர்களை வாழ வைக்க நான் என் பிள்ளைகளை பலிகடா ஆக்குவதில் என்ன நியாயம்? ஏற்கணவே மூவரை பலிகடா ஆக்கிய கலக்கத்தில் உளறுகிறேன் என்று சொன்னாலும் சொல்லலாம். 523 பள்ளிகளில் சிறந்தப் பள்ளி 10ஐ வரிசைப்படுத்த இயலுமா? எடுத்த உடனேயே கிள்ளான் சிம்பாங் லீமா என்று சொல்லாதீர்கள். அப்பள்ளியில் இதுவரை யூபிஎஸ்சாரில் 65% கூட தேர்ச்சி இல்லை. ஆதோடு 400 பேரில் 40 பேர் 7ஏ எடுப்பது போதுமா? சிந்தித்துப்பாருங்கள்.
சாமூண்டி போன்றார்கள் (முட்டாள் பரதேசிகள் என்று) ஏகவசனம் பேசியே தம்மை தாழ்த்திக் கொள்கிறார்கள். 500 வெள்ளி பெறுவது நம் உரிமை. அதற்கு யாரும் விலை போகவில்லை. ஓட்டு போடுவதும் நம் உரிமை. கொடுத்தவர்களுக்கும் தெரியும் பெற்றவர்கள் அனைவரும் தங்களுக்கு ஓட்டுப் போடபோவதில்லை என்று. மக்கள் பணம் பெற்று ஓட்டுப் போட்டார்கள் என்பது அறியாமை. பரிசானுக்கு எதிர்ப்பு உண்டு என்றால் பக்காத்தானுக்கும் எதிர்ப்பு உண்டு என்ற உண்மையை உணர்ந்தால் போதும். மக்களை முட்டாள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.