கி.சீலதாஸ், செம்பருத்தி.காம். உண்மையைச் சொன்னால் அல்லது நல்லதை எடுத்துரைத்தால் சிலருக்கு கோபம் பொத்துக் கொண்டுவரும் என்பதற்கு உதாரணமாகக் காட்சி தருபவர் வேறு யாருமல்ல, சாட்சாத் உள்துறை அமைச்சர் – டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜாஹீது ஹமிடி. ஒரே அரசியல் கட்சியில் இருந்தாலும் சரி அல்லது பல கட்சிகள் ஒன்றுகூடி ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாகச் செயல்படுவதாக ஒப்புக்கொண்டலும் சரி கட்சி காட்டும் வழியில்தான் போக வேண்டும்; அது இடும் கட்டளையைத் தலையில் சுமந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். கட்சிக் கொள்கைக்கு எதிராக, அரசின் நடவடிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்பது ஒரு கோட்பாடாக இந்த நாட்டில் பேசப்படுகிறது. வலியுறுத்தப்படுகிறது.
இதற்கு சப்பைக் கொட்டும் நிலைக்கு வந்துவிட்டார் முன்பு உள்துறை அமைச்சைத் தம் வசம் வைத்திருந்த, இப்போது தற்காப்புத் துறையை அமைச்சராகத் தரிசனம் தரும் டத்தோ ஸ்ரீ ஹிஷாமுதின் ஹூசேன். இப்படிப்பட்ட மனோபாவம் எதைக் குறிக்கிறது? கட்சிதான் முக்கியம். கட்சியின் தலைமைத்துவம் எதைச் சொல்கிறதோ அதன்படி நடந்தாக வேண்டும். மாற்று கருத்துக்கு இடமில்லை. இப்படி எல்லாம் சொல்வதற்கான காரணம் என்ன? கூட்டுப்பொறுப்பு என்ற கருத்தைக் காட்டி அமைச்சரவையில் பேசப்பட்டதை வெளியே விவாதிக்கக்கூடாது என்பதாகும்.
இதில் விசித்திரம் என்னவெனில், அமைச்சரவையில் உண்மையிலேயே கருத்துப் பறிமாற்றம் இருந்ததா என்பதே; ஒருவேளை கருத்துப் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் அல்லது பொறுப்பில் இருப்பவர்கள் சொல்வதை நம்பியவர்கள் எதிர்வாதத்தை சமர்ப்பிப்பதைத் தவிர்த்து இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் அமைச்சரவையில் சொல்லப்பட்டதற்கு மாறாக இருப்பின் கூட்டுப் பொறுப்பு என்ற காரணத்தைக் காட்டினால் அது சோடையானதாக அல்லவா கருதப்படும்.
அமைச்சரவையில் என்ன பேசப்பட்டது என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்வது முடியாத காரியம். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டவை, நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு நாளேடுகள் மூலமாகவோ அல்லது நாடாளுமன்ற அறிக்கைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்: ஆனால் அமைச்சரவை நடவடிக்கைகள் அப்படி அல்லவே. அது பரம இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. அதை பொதுமக்களின் பார்வைக்கு விடுவது அரசின் விருப்பத்தைப் பொருத்தது.
எனவே அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை தெரியாதபோது அதன் உறுப்பினர்கள் கூட்டுப்பொறுப்பு என்ற சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனச்சான்றினைத் துறந்து செயல்பட வேண்டும் என்பதுதான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் தத்துவம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு டத்தோ சோதிநாதன் நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் (தேசிய முன்னணி) கருத்துக்கு எதிராகச் செயல்பட்டார் என்ற காரணத்தைக் காட்டி ஆறுமாத இடைக்கால நீக்கம் செய்யப்பட்டதை என்னவென்பது ? மனச்சாட்சிக்கும் நவீன அரசியல் கட்சிக்கும் வெகுதூரம். என்றைக்கு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் தரமான அரசியலை நடத்த அரசியல்வாதிகளும் அரசும் தயாராகிறதோ அன்றுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் விமோசனம் ஏற்படும்.
பி என்னை பொறுத்தவரை ஜனநாயகம் செத்துவிட்டது.
நேர்மையா? உண்மையா? ஜனநாயகமா?? அப்படியென்றால் என்ன என்று கேட்கும் ஆளும் கட்சி இது!!!!
இவற்றுக்குத்தான் எப்போதே சாவு மணி அடித்துவிட்டார்களே…
பூனைக்கு வேதா மணி காட்டுவாரா …..?????
இல்லை பொட்டி பாம்பாய் சுருண்டிடிவாரோ …????
சோதிநாதன் சமுதாயத்திற்காக குரல் கொடுத்தார் என்று எல்லாரும் நம்பிவிட்டார்கள். அனால் உண்மையில் ரஷ்யாவுக்கு மாணவர்களை சேர்த்து அனுப்பிக் கொண்டிருந்த தன்னுடைய நிறுவனம் பாதிக்கப் படுவதை தட்டிக் கேட்கவே அவர் குரல் கொடுத்தார். சமுதாயமாவது வெங்காயமாவது. தனக்கு இல்லாத தெலுக் கெமாங் சீட் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கீழறுப்பு செய்த சோதிக்கு வெகுமதி மத்திய செயலவ உறுப்பினர் பதவி. பழனி ஒரு இளநி.
ஐயா சீலாதாஸ் அவர்களே , நாம என்னதான் கத்தினாலும் கூப்பாடு போட்டாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான்? பி.என். காரன் கண்டுக்க மாட்டான்.
உண்மையை எடுத்து சொன்ன சொப்பன சுந்தரிக்கு நன்றி
மலேசியாவில் எல்லா “இந்தியன் சார்த்த கட்சிகள்” எல்லாத்தையும் மூடிவிட்டு அனைவரும் ம இ கா வில் சேர்ந்து ஒரு புதிய கொள்கை வகுத்து தேசிய தலைவர் இல்லாமல் மாநில தலைவர்கள் என்று மட்டும் அரசியல் நடத்தினால் சமுதாயம் தலை தூக்கும் ….இது எப்படிங்க?
இது எப்படிங்க? என்னும் கேள்விக்கு பதில்: இது நல்லா இல்லே!
மக்கள் நன்கு சிந்திக்க கற்றுக்கொண்டார்கள் என்பதற்கு, வாசர்கள் தங்கள் எண்ணக்குவியலை கொட்டியதிலிருந்து தெரிந்து கொண்டேன். இருந்தாலும்,நீங்கள் எழுதுகின்ற இந்த நாலுவரிகள் போதாது; இருபதைக் கடந்தவருக்கு. இன்னும் நாலுவரிகள் சேர்த்து எழுதுங்கள். எழுத்து உங்களை அடையாளம் காட்டும். எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம். செம்பருத்தி இதழிலும் அழகான வாசகங்களை எழுதுகிறார்கள் என்பதினால்தான் துணிவாக எழுதுகின்றேன். காரணம் சில உண்மைகள் இங்குதான் வெளிவருகின்றன. பள்ளியில் பட்டிமன்றம் பேசுவதற்கு குறிப்பெடுத்துக் கொள்ளும் இடமாக இருக்கிறது.