இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை: புங்குடு தீவு வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில்…
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வு, கொலை வழக்கில் 7 எதிரிகளுக்கு ட்ரையல் எட் பார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. வன்புணர்வு, கொலைச் சம்பவம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி நடந்தது. தண்டனை பெற்றவர்களில் இவ் வன்புணர்வுக்…
இலங்கை: வீடுகள் மீது பௌத்த பிக்குகள் தாக்குதல், மீண்டும் வெளியேறிய…
ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களின் முற்றுகைக்குள்ளான நிலையில் அகதிகள் முற்றாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். காலையில் அந்த இடத்தில் பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை…
தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கடத்தல் வழக்கில் கடற்படை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக…
கடந்த 2008 -ஆம் ஆண்டு கொழும்பு நகரில் 11 தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையின் முன்னாள் ஊடக பேச்சாளர் டி.கே.பி. தசனாயக்க உற்பட 6 கடற்படை அதிகாரிகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதை…
ஒற்றை ஆட்சியை நிராகரித்து சமஷ்டி கோரும் தமிழ் மக்களை இடைக்கால…
“ஒற்றை ஆட்சியினை நிராகரித்து தமக்குரிய அரசியல் தீர்வாக சமஷ்டிக் கோரிக்கையினை தமிழர்கள் முன்வைத்துள்ள நிலையில், தொடர்ந்தும் ஒற்றை ஆட்சி முறைமையினை தக்க வைக்கும் பொருட்டு ‘புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை’ வார்த்தைப் பிரயோகங்களில் ஏமாற்ற முற்பட்டுள்ளமை அருவருப்பை ஏற்படுத்துகின்றது” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான…
இலங்கையின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் அவசியம்; ஐ.நா.வில் எம்.கே.சிவாஜிலிங்கம்!
இலங்கையின் இறுதி மோதல்களில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக அப்போதையை இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். ஆகவே, அந்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு சர்வதேச நீதிமன்றத்தின் அவசியம் ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் கலந்து கொண்டு…
ஒற்றையாட்சி, பௌத்தத்தை ஏற்க சிறுபான்மைக் கட்சிகள் இணக்கம்- என்கிறார் சிறிலங்கா…
கூடுதல் அதிகாரங்களை வழங்குவதற்கு பிரதான கட்சிகள் இணங்கினால், நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்தத்துக்கான முன்னுரிமையையும் தொடர்ந்து தக்க வைத்திருப்பதைப் பரிசீலிக்க சிறுபான்மைக் கட்சிகள் தாயாராக இருக்கின்றன என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, வெகுணகொடவில் புதிய காவல்துறை விடுதியை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர்…
தமிழரசுக் கட்சியை விமர்சிப்பவர்கள் முதலில் தங்களைத் திரும்பிப் பாருங்கள். தமிழன்
தமிழரசுக் கட்சியை இல்லாமல் ஒழிக்கவென்று பரந்த அளவில் வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. தமிழரசுக் கட்சியை இல்லாமல் செய்வதன் மூலம் ஏனைய கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புகின்றனர். இந்த நம்பிக்கையானது எதிர்வரும் தேர்தலில் தெரியவரும் என்று ஒவ்வொரு தேர்தல்களிலும் நம்பி மண் கவ்வியது தான் மிச்சம்.…
தொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை –…
அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்புக்கான நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரன், கேள்வி-பதில் பாணியிலான அறிக்கை…
தியாக தீபம் திலீபனுக்கு நினைவுச் சுடர் ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர்..
இந்திய ஏகாதியபத்தியத்திற்கு எதிராக போராடி தியாகி திலீபன் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் எனவும் தியாக தீபம் திலீபனின் விடுதலைப் போராட்டம் வித்தியாசமானது எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் அம்பாறை – கல்முனையில் இன்று…
சிறிலங்கா அதிபரிடம் விரைவான முன்னேற்றங்களை வலியுறுத்தினார் ஐ.நா மனித உரிமை…
சிறிலங்காவில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக இடம்பெற்று வருவதாகவும், முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக சிறிலங்காவுக்கு வருமாறும், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுமாலை ஐ.நா…
தமிழ் மக்களின் சுயமரியாதை புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சம்பந்தன்
தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பன புதிய அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கமுடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அரசியலமைப்பு அமையவேண்டும் என்றும் அவர்…
புதிய அரசியலமைப்பு, 13வது திருத்தச் சட்டத்தை விடவும் மேம்பட்டதாக இருந்தால்…
“தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விடயத்தில் புதிய அரசியலமைப்பானது, நாம் கடந்த 30 வருடங்களாக கோரிக்கைவிடுத்துவரும் 13வது திருத்தச் சட்டத்தைவிடவும் மேம்பட்டதாக அமையுமாக இருந்தால், அதை வரவேற்போம்” என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு…
பிரிக்கப்படாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல…
பிரிக்கப்பட முடியாத ஒரே நாடாக இலங்கை இருக்க வேண்டும் என்பதை சகல கட்சிகளும், குழுக்களும் ஏற்றுக்கொண்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சகலரும் இணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றை தயாரித்து பலம் வாய்ந்த இலங்கை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு செயற்படுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை அரசியலமைப்பு…
இடைக்கால அறிக்கை குறித்த நிலைப்பாட்டை விவாதத்தின் போது அறிவிப்போம் –…
அரசியலமைப்பு திருத்தத்துக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அரசியலமைப்பு சபையில் விவாதிக்கப்படும் போது வெளிப்படுத்தப்படும் என்றும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த பின்னர், உரையாற்றிய போதே அவர்…
போர்குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தினரைப் பாதுகாப்போம் – திலக் மாரப்பன உறுதி
ஜெனரல் ஜெகத் ஜயசூரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டார் என்று அண்மையில் பிரேசிலில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இல்லை என்று சிறிலங்காவில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று தினேஸ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார். “ஜெனரல் ஜயசூரியவுக்கு…
சிறிலங்காவில் நிலையான அமைதிக்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டும் –…
சிறிலங்காவில் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்று சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார். அமைதிக்கான அனைத்துலக நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் 21ஆம் நாளை,…
சரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா விசேட…
ஈழத் தமிழர்களது சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது என ஐ.நாவின் விசேட பிரதிநிதி பேராசிரியர் அல்பிரட் சயஸ் தெரிவித்தார். பிரான்ஸ் தமிழர் மனித உரிமையத்தின் ஒருங்கிணைப்பில் உலக அணி (Global Allianes) என்ற அமைப்பினால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் இதை குறிப்பிட்டார். இந்த கூட்டம் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்…
மாவீரர் துயிலும் இல்லங்களைப் பராமரிப்பதற்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில்…
யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று திங்கட்கிழமை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில், இணைத் தலைவர்களான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை…
20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்- சிறிலங்கா…
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு அரசியலமைப்பின் சில பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாகவும், இதனால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட பின்னர், பொதுவாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று…
போரில் தவறு செய்யாத படையினர் தண்டனைக்கு அஞ்ச வேண்டியதில்லை –…
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள…
ஐ.நாவில் சிறிலங்கா அதிபரின் உரைக்கு எதிராக போராட்டம் நடத்த ஏற்பாடு
நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் 72 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை உரையாற்றவுள்ள நிலையில், அவருக்கு எதிரான போராட்டம் ஒன்றை நடத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிட்டப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. “சிறிலங்கா…
மகாசங்கத்துடன் விக்னேஸ்வரனின் சந்திப்புக்கள்!
“ஒரு குறிப்பிட்ட கருத்தின் மீது பற்றுக்கொண்டிருப்பதையும் மற்றவர்களின் கருத்தைத் தனக்குக் கீழ்ப்பட்டவைகளாகப் பார்ப்பதையும் தான் மனதைப் பிணைத்திருக்கும் தளைகள் என்று ஞானிகள் அழைக்கிறார்கள் (Mental fetter)” -கௌதம புத்தர் – சுத்த நிபாத சுலோகம் 798 கடந்த கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தென்னிலங்கையிலுள்ள இரண்டு பௌத்த பீடங்களின்…
ஈழத்து தமிழ் அறிஞர்க்கு தமிழகத்தில் உயர் கௌரவம்.
ஈழத்தின் புகழ்பூத்த இசைப்பேராசான் டாக்டர் நா.வி.மு நவரத்தினம், மற்றும் சர்வதேச விவசாய ஆய்வின் விஞ்ஞானியும் தற்போது பிரான்ஸ் கனடா நாடுகளில் வாழ்ந்து வருபவருமான முது முனைவர் கந்தையா தேவமனோகரன் ஆகிய இருவரையும் சென்னைப் பன்னாட்டு தமிழ் உறவு மன்றமும் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கமும் இணைந்து சென்னையில் கௌரவித்துள்ளது. சென்னையை…


