இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கையில் பெரும்பாலானோருக்கு தேர்தல் மீது நம்பிக்கை இல்லை
நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 வீத பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கச் சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியா கிரேண்ட் ஹோட்டலில் நடைபெற்ற 2023/ 2024 தேசிய சட்ட…
கோட்டாபய ராஜபக்சவின் கடன்களை அடைக்கும் ரணில் அரசாங்கம்
கடந்த ஜனவரிக்கு முன்னர் அனைத்து ஒப்பந்தக்காரர்களினதும் நிலுவைத் தொகைகளை முற்றாக செலுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற தொழில்சார் நிபுணர்களின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் உள்நாட்டுக்…
முன்னாள் போராளிகளுக்குரிய உதவியை விமர்சிப்பது சந்தர்ப்பவாத அரசியல்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னாள் போராளிகளை வைத்து சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்வதாக ஜனநாயக போராளிகள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தமது அரசியலுக்காக முன்னாள் போராளிகளை குறித்த தரப்பினர் பயன்படுத்துவதாகவும் அந்தக் கட்சியின் செயலாளர் இ. கதிர் கூறியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்டு…
இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த இந்திய நிறுவனத்தில் சோதனை
இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்த இந்திய மருந்து நிறுவனம் தொடர்பில் மத்திய மருந்து தர நிர்ணய ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘இந்தியானா’ குஜராத்தில் வழங்கிய கண் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்தினால் இலங்கையில் சுமார் 30 பேருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசு, தமது…
மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளது
கொழும்பில் உள்ள நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, மே மாதத்தில் பணவீக்கம் 25.2 சதவீதமாக குறைந்துள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. விலைக் குறியீட்டின்படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 35.3 சதவீதமாக இருந்தது. இதேவேளை, ஏப்ரல் மாதத்தில் 30.6 வீதமாக இருந்த உணவு வகையின் வருடாந்த பணவீக்கம்…
இலங்கையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு
எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும், அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதுடன் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. அத்தோடு, அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்…
மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது?
பௌத்தத்தை அவமதித்த நடாசாவை கைது செய்யமுடியும் என்றால் ஏனைய மதங்களை அவமதித்த ஞானசாரரை ஏன் கைதுசெய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது நடாசா பௌத்தத்தை உள்நோக்கத்துடன் அவமதித்தமைக்காக கைதுசெய்யப்பட்டார். அவரை கைதுசெய்ய முடியும் என்றால் இஸ்லாமிய மதத்தை அவமதித்த…
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியுள்ள இலங்கை
இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. பௌத்த தலங்களை ஆராய அழைப்பு இந்த…
இலங்கையில் அச்சுறுத்தும் வெப்பம் – சூரிய ஒளியால் கண்களுக்கு பாதிப்பு
இலங்கையில் சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரினதும் கண்களில் நேரடியாக சூரிய ஒளி படாத வண்ணம் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தரமான கண்ணாடிகள் மற்றும் தொப்பிகளை அணியுமாறும் தேசிய கண் வைத்தியசாலையின் சிநேஷ்ட வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனை அறிவுறுத்தியுள்ளார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த போதே…
சீனாவை விலக்கி இந்தியாவுடன் மேம்படுத்தப்பட்ட வர்த்தக உறவு
பொருளாதார நெருக்கடிச் சூழலில் சர்வதேச நாயணய நிதியம் வழங்கிய நிதி போதாது. அத்துடன் அடுத்த கட்ட நிதி தற்போதைக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனை உணர்ந்துகொண்ட இலங்கை அரசாங்கம், இந்தியாவின் தயவுடன் இந்திய - இலங்கை வர்த்தக உறவுகளை மீளவும் புதுப்பிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கின்றது. வடக்குக்…
பறிபோகும் 37 தமிழ் கிராமங்கள்: இன அழிப்பின் ஒரு நீண்ட…
மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களைத் தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கான செயல்பாடு என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மகாவலி அதிகார சபையால் முல்லைத்தீவு, வவுனியா, மாவட்டங்களில் 1988ஆம்…
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு தேசிய மக்கள் சக்தி கடும்…
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு அழுத்தம் கொடுக்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் ஜூன் 8 ஆம் திகதி முதல் போராட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். காலி - பலப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
மத சுதந்திரத்தை பேண புதிய சட்டமூலம்
எதிர்வரும் காலங்களில் மத சுதந்திரம் மற்றும் கருத்துக்களை திரிபுபடுத்தல் தொடர்பில் புதிய சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக புத்த சாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் தொடர்பில் பொலிஸார் இணைந்து விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பௌத்த…
கடந்த நான்கு மாதங்களில் இலங்கை தேயிலை உற்பத்தி 20 வீதம்…
இரசாயன உரத் தடை மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், 2023இன் முதல் நான்கு மாதங்களில் இலங்கையின் தேயிலை உற்பத்தி 20 வீதம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த மூன்றாண்டுகளில் குறைந்த அளவான 84 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி மாத்திரமே கிடைத்ததாக அதிகாரி ஒருவரை கோடிட்டு ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இரசாயன உரத்தடை உத்தரவு…
சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து காலத்திற்கு காலம் பயங்கரவாதத் தடைச்…
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. பல்வேறு தரப்புக்களால் தொடர்ச்சியாக இந்த விடயம் தொடர்பில் விடுக்கப்படும் கோரிக்கைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின்றி நீண்ட கால தடுத்து வைப்பு அத்துடன் வழக்கு தொடராது…
அடைத்து வைத்து சித்திரவதை: வெளிநாடுகளில் இலங்கை பெண்களின் பரிதாப நிலை
வெளிநாடுகளில் தொழிலுக்காக செல்லும் இலங்கை பெண்களை அடைத்து வைத்து சித்திவதைக்குட்படுத்தப்படும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. செல்லகத்தரகம, கொஹோம்பதிகான பகுதியைச் சேர்ந்த எச்.எம்.தில்ருக்ஷி என்ற பெண் சவூதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்று காணாமல் போனதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அவர் அனுப்பிய காணொளி ஒன்று ஊடகங்களுக்கு…
இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையிடம் நீதி கோரி வெளிநாட்டவர்கள் போராட்டம்
இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு அகதிகள் தமக்கு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தை வழங்குமாறு கோரி கொழும்பில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்பாக கடந்த செவ்வாய்கிழமை(23.05.2023) ஒன்றுகூடி வெளிநாட்டு அகதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். அகதிகளாக பதிவு ஐக்கிய நாடுகளின்…
பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்
கடந்த சில வருடங்களாக நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், பல்வேறு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்நிலை நாட்டு மக்களின் பொருளாதாரத்தையும் கூட பாதிப்பதாகவும், குறித்த ஆடைத் தொழிற்சாலைகள்…
முடிவிற்கு வரும் அரசியல் பயணம் -தங்கத்துடன் கைதான நாடாளுமன்ற உறுப்பினர்
தனது அரசியல் வாழ்க்கை இத்துடன் நிறைவுக்கு வருவதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு அளித்த விசேட நேர்காணலில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மோசடிக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை தான் எவ்வித மோசடிக் குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், நேற்று முன்தினம் இடம்பெற்ற…
தாக்குதல் அரசியலை நாம் எதிர்க்கின்றோம்
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம். ஆனால் முற்போக்கு கூட்டணியில் உள்ள எம்.பியொருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்பில் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் தான் அவர் கண்டி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம்…
வடக்கு ஆளுநரின் புதிய வேலைத்திட்டம்
வடக்கு மாகாணத்தில் காணப்படும் பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண புதிய வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் பணிகளை, ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆரம்பித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் ஆளுநர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்ற பின்னர் தமது முதல் பணியாக அவர் இந்த வேலைத்திட்டத்தை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார். மே 22 திங்கட்கிழமை காலை 9.30க்கு…
பிரான்ஸில் கைதான இலங்கையரை நாடுகடத்த திட்டம்
பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையரை நாடு கடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பிரான்ஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குடு அஞ்சு என்ற பாதாள உலக குற்றவாளியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஆவணங்களும் பிரான்ஸ் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு காவல்துறையினரால் அந்த ஆவணங்கள் ஆராய்ந்த பின்னர்…
பொய்யும் மோசடியும் நிறைந்த அரசாங்கம், கைகோர்க்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது
"இருநூற்றி இருபது இலட்சம் மக்களுடன் நிற்பதா அல்லது நாட்டை அழிக்கும் மொட்டு நிழல் அரசாங்கத்துடன் நிற்பதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். பொய்யும் மோசடியும் நிறைந்த அரசாங்கத்துடன் கைகோர்க்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது." இவ்வாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் அவர், "இலங்கை பொதுப் பயன்பாடுகள்…