இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ் எம்பிக்களை சிறையில் போட வேண்டும்
காவல்துறையினருடன் சண்டித்தனம் காட்டும் அளவுக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணிவு வந்துள்ளது. இப்படியானவர்களை, கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் சிறையில் தான் தொடர்ந்து அடைத்து வைத்திருக்க வேண்டும். இவ்வாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் உரையாற்றும்…
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இல்லை
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என கொழும்பு அரசியல் வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், குறித்த தினத்துக்கு முன் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறிய முடிகின்றது. அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தின் பின்பே…
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தலைவர் நியமனம்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக மேலும் ஒரு முன்னாள் உயா் நீதிமன்ற நீதியரசா் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் கூடிய அரசியலமைப்பு பேரவையில் இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது. எனினும், இந்த வாரம் அரசியலமைப்பு பேரவை ஒன்று கூடும் திகதி குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.…
அனைத்து கட்சிகளும் இணைந்தாலும் பெரும்பான்மை பெற முடியாது – ரணில்
பழைமை வாய்ந்த சிந்தனைகளுடன் செயல்படுவதால் மக்கள் ஆதரவை பெற்றுக் கொள்ளவோ, தேர்தலில் வெற்றி பெறுவதோ இன்றைய கால கட்டத்தில் சாத்தியம் இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அதிபரை சந்தித்து நேற்று(11) கலந்துரையாடியபோதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். முன்னரும் இதே கருத்தை…
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்து செய்ய நடவடிக்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த யோசனை குறித்து அரச தரப்புகளில் கலந்துரையாடப்பட்டதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில்…
இலங்கையை விட்டு வெளியேறும் தொழில் வல்லுநர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை 37% அதிகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் வெளிநாட்டு வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை சராசரியாக 226,000 மாத்திரமாகும். ஆனால் 2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 311000 வரை உயர்ந்துள்ளதாக…
இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் -மோடிக்கு சாந்தன் கடிதம்
விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு அனுமதிக்குமாறு சாந்தன், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் திருச்சியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் தங்கியுள்ள…
உணவு பாதுகாப்பற்ற நிலையில் 75 இலட்சம் மக்கள்
நாட்டில் சுமார் 75 இலட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து அண்மையில் நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில…
தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது
இலங்கையில் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நிரந்தர தீர்வு அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும்…
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது…
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயாா் – மஹிந்த ராஜபக்
எந்தவொரு தேர்தலுக்கும் தமது கட்சி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தா்ப்பத்திலும் தேர்தலுக்கு நாங்கள் தயார். ஜனாதிபதி தேர்தலுக்கும் கூட நாங்கள் தயார்…
இலங்கையில் புற்றுநோயை அழிக்க புதிய மருந்து அறிமுகம்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் பேராசிரியர் சமிரா ஆர்.சமரகோன் உள்ளிட்ட ஆய்வுக் குழுவினர், மனித உடலில் ஏற்படக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடிய ஊட்டச்சத்து மருந்தை அண்மையில் அறிமுகப்படுத்தினர். 12 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியல் ஆராய்ச்சியை வெற்றிகரமாக நடத்தியதன் மூலம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த…
புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய இடைத்தேர்தல் அவசியம்
மக்கள் புதிய அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்காக இடைத்தேர்தலொன்று தேவை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார் இதன்போது தொடர்ந்து பேசிய அவர், தேசத்தை நேசிக்காத ஆட்சியாளர்கள் பதவியிலிருக்கும்போது நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதால் இடைத்தேர்தல் அவசியம் . நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தாங்கள் எப்படி தப்பிபிழைத்து வாழ்வது…
இலங்கையில் கைது செய்யப்பட்ட சீன பிரஜை நாடு கடத்தப்பட்டார்
கடந்த மாதம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சீன பிரஜை இன்று (ஜூன் 08) பிற்பகல் சீனாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். இரண்டு போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கைக்குள் நுழைய முயன்ற குறித்த சீன பிர்ஜை மே மாத இறுதியில் தடுத்து வைக்கப்பட்டார். இதனையடுத்து, அந்த நபரை…
ஆப்கனை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இலங்கை
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 116 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை அணி எளிதான இலக்கை விரட்டி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹம்பன்தோட்டாவில் நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 22.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் குறித்த தீர்மானம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்த தற்காலிக உரிமம் வழங்கப்பட்டு உரிம காலத்தை தாண்டிய திட்ட உரிமங்களை ரத்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2023-2026 மற்றும் 2026-2030 ஆம் ஆண்டுகளுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்ட அமலாக்கத் திட்டம் குறித்து நேற்று நடைபெற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெண்டர்…
அனுரவின் பேரணிக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வெலிக்கடை பொலிஸாரினால் விடுக்கப்பட்ட…
நீதிமன்றை அவமரியாதை செய்வதனை தடுக்கும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவமரியாதை செய்வதனை தடுக்கும் புதிய சட்டமூலமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் இந்த உத்தேச சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்கவும், பின்னர் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம், சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு திருத்த அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே…
IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு, கலந்துரையாடிய இலங்கை –…
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத்துக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இக்கலந்துரையாடல் பலனளித்ததாகவும்,…
இலங்கையின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் – 2.0 ஆக…
இலங்கையில் மத்திய பகுதியில் கம்பளை மாவட்டத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் நேற்றைய தினம் (06) இரவு வேளையில் பதிவாகியிருந்ததாக தெரியவருகிறது. இந்த விடயத்தை புவிச்சரிதவியல் ஆய்வு சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 2.0 ரிக்டர் குறித்த நிலநடுக்கமானது 2.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
பயங்கரவாதத்திற்கான நிதியுதவியை தடுப்பதாக ஜனாதிபதி உறுதி
சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம்…
திருடர்களை நம்பியிருக்கும் ஒரு தலைவரால் திருடர்களை பிடிக்க முடியாது
தற்போதைய அதிபரால் திருடர்களைப் பிடிக்க முடியாவிட்டாலும், அந்தத் திறன் ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஒரு விடியலின் ஆரம்பம் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸமஹாராம மோடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். 220 இலட்சம் மக்களால் அல்ல, நாட்டின்…
600 காவல்துறையினரை கொன்ற திருக்கோவில் படுகொலை
33 வருடங்களுக்கு முன்னர் திருக்கோவில் காட்டில் 600 காவல்துறையினரை கொன்றமை தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணாவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினாலேயே குறித்த குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. காவல்துறையினரின் கொலையை கருணா தான் செய்ததாக பெங்களுரை…