மலையக மக்களுக்கு எதிரான போலி பிரச்சாரத்தை பரப்ப வேண்டாம்

சமூக பாதுகாப்பு உதவி திட்டங்களில் இருந்து மலையக மக்களின் பெயர்கள் நீக்கப்படுவதாக போலி பிரச்சாரத்தை முன்னெடுத்து, மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி…

கொழும்பில் கனேடிய தூதரகத்துக்கு முன்னால் கடும்போக்கு சிங்கள அமைப்புகள் போராட்டம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையை கனேடிய பிரதமர் ஜெஸ்ரின் ட்ரூடோ மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தி கொழும்பில் போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பௌத்த பிக்குகளை தலைமையாக கொண்ட இந்த அமைப்பு, கொழும்பில் உள்ள கனடா உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று…

அரசாங்கத்திடம் கையேந்த தேவை இல்லை – நாம் ஒன்றிணைந்தால் வெற்றி

அரசாங்கத்தை நம்பி, அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்புவதன் ஊடாக எம்மால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் வளம்பொருந்திய இனமாக நாம் மாற்றமடைய வேண்டும்." இவ்வாறு, யாழ் தொழில்நுட்பவியல் கல்லூரியில் உரையாற்றும் பொழுது பிரபல தொழிலதிபரும், ஐ.பி.சி தமிழ் ஊடக குழுமத்தின் தலைவருமான கந்தையா…

தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும்

தமிழ்க் கட்சிகள் ஒரு மனதாக பேச்சுக்களில் பங்கேற்க வேண்டும். இரு மனநிலையில் பேச்சில் பங்கேற்கக் கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ்க் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில் கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். பிரச்சினைகளுக்குத் தீர்வு…

பொது மக்களிடம் மன்னிப்புக்கோரிய மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ

தனது கருத்துக்கள் மூலம் பொதுமக்கள் மத்தியில் மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக்கோருவதாக போதகர் ஜெரோம் பொ்னாண்டோ தெரிவித்துள்ளார். பௌத்த, இந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுவோரிடம் குறித்த மதங்கள் தொடர்பாக தான் தெரிவித்த கருத்துக்கள் குறித்து மன்னிப்புக்கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மிரிஹானைப் பிரதேசத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆராதனைக் கூட்டத்தில் ஸூம்…

செப்டம்பர் மாதத்திற்குள் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை நிறைவு செய்ய முடியும்…

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வெற்றிகரமாக நிறைவு செய்து பொருளாதாரத்தை ஒரு நிலையான நிலைக்கு கொண்டு வர முடியும்'' என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. பொருளாதாரக் கொள்கை ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த பொருளாதாரக் கொள்கைக்கு பொதுஜன பெரமுனவும்…

இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் வரவேற்பு

இலங்கையின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அமைப்பிற்கு G7 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது. ஹீரொஸிமா நகரில் வெள்ளிக்கிழமை ஆரம்பமான ஜீ-7 நாடுகளின் தலைவர்களது 49 ஆவது மாநாட்டில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர வருமான நாடுகள் இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைமையின் கீழான…

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் சர்ச்சை கருத்து –…

ஜப்பானிய தடுப்புக்காவல் நிலையத்தில் மோசமாக நடத்தப்பட்டு உயிரிழந்த இலங்கை பெண் தொடர்பில் தவறான கருத்தினை வெளியிட்ட  ஜப்பானிய எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் அமைச்சர் ஒருவர் மேல் சபையின் நீதித்துறை விவகாரக்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற…

இலங்கை கால்பந்தாட்ட அணித்தலைவர் பதவி விலகினார்

இலங்கை கால்பந்து போட்டிக்கான பிஃபாவின் தடை நீக்கப்பட்டதையடுத்து, அணித்தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இலங்கை கால்பந்து அணியின் தலைவர் சுஜன் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த கால மற்றும் தற்போதைய நிர்வாகங்கள் வீரர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் சுஜன் குற்றம்…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய பிரதமரின் அறிக்கைக்கு இலங்கை கடும் கண்டனம்

இலங்கையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முடிவுக்கு வந்த ஆயுதப் போரின் போது ஏற்பட்ட துயர்நிறைந்த உயிரிழப்புக்கள் குறித்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. “உள்நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிற்கு உதவாது எனக் கருதும் கனேடிய பிரதமரின் அறிக்கையை கண்டிப்பதாக வெளிவிவகார…

ஈழத் தமிழர்களுக்கு பொதுவாக்கெடுப்பு: தீர்மானத்தை முன்வைத்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்

ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக ரீதியாக 'பிரதிநிதித்துவம்' மற்றும் 'நீடித்த அமைதியான அரசியல் தீர்வுக்கு' பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை அனுப்ப வலியுறுத்தி வரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெபோரா ரோஸ் மற்றும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் ஜோன்சன் ஆகியோரினால்…

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குகிறதா இந்தியா – இலங்கை அதிகாரிகள்…

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா எனக் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (19.05.2023) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “கடந்த எட்டு…

யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகம்: முதல் அணிக்கான வரவேற்பு…

NorthernUni மற்றும் SLIIT யாழ்ப்பாணத்தில் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தை அமைத்து, முதலாவது பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் அணிக்கான வரவேற்பு நிகழ்வை நடத்தியுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வு இன்றைய தினம் 18.05.2023 யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றுள்ளது. கல்வி சார்ந்த இந்த முயற்சியை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில்…

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை! பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி

ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு  பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மரியாதை செலுத்தியுள்ளனர். பிரிட்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் இன்றைய தினம் 18.05.2023 ஒன்று கூடி இந்நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி…

இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள் நாங்கள்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நாங்கள் இழப்புக்களையும் வலிகளையும் நேரடியாக சுமந்தவர்கள் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு நாளாகவே இந்த மே 18 அமைந்துள்ளது என முள்ளிவாய்க்கால் மண்ணில் வாழும் பலர் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், யாரும் அரசியலுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்து போகலாம் ஆனால் எங்களது உணர்வுகள் வேறு, புகழுக்கும் பெயருக்கும்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அரசியல்வாதிகள் அரசியல் மேடையாக்க வேண்டாம் என போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சகாதேவன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் என்பது அரசியல் செய்யும் இடமாக மாறி உள்ளது. 2009…

இலங்கையை காப்பாற்ற தயார் – உலக வங்கி

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டங்களை பாராட்ட வேண்டும் என உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற…

இலங்கையிலிருந்து கிறிஸ்தவ மதபோதகர் ஜெரோம் தப்பியோட்டம்

மதங்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. 16.05.2023) காலை அவர் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றதாக அவரின் நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என்றும் விரைவில் வேறொரு இடத்திற்குச் செல்வார்…

இலங்கைப் பெண்கள் 32 பேர் நாடு கடத்தல்

குவைத்தில் இருந்து 32 இலங்கைப் பெண்கள்  கடத்தப்பட்ட நிலையில் இன்று 16.05.2023 அதிகாலை இலங்கை திரும்பியுள்ளனர். தொழில் செய்யச் சென்று அந்நாட்டு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தம் செய்யப்பட்ட பணியிடத்தையோ அல்லது வீட்டையோ விட்டு வெளியேறி குவைத் மாநிலத்தின் வெளியூர்களில் பணிபுரியும் போது, ​​தூதரகத்திற்கு…

நான் ஒருபோதும் குறுக்கு வழியில் பிரதமர் பதவிக்கு வரமாட்டேன்: மகிந்த…

தான் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், மொட்டுக் கட்சிக்கே கடந்த பொதுத் தேர்தலில் மக்கள்…

இலங்கையில் பட்டினியில் வாடும் இலட்சக்கணக்கான மாணவர்கள்

இலங்கையில் சுமார் 14 இலட்சம் மாணவர்கள் பட்டினியில் வாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாடசாலை செல்லும் மாணவ மாணவியரில் மூன்றில் ஒரு பகுதியினர் முற்றிலும் உணவு இன்றி அல்லது போதியளவு உணவு உட்கொள்ளாது காலையில் பாடசாலை செல்வதாக தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனைகள் மூலம் இந்த விடயம்…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து உரையாற்றும் ஐ.நாவின் முன்னாள் அதிகாரி

இலங்கையில் போரின் போது பணியாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அதிகாரி கோர்டன் வெயிஸ் 9ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து உரையாற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஆயுதப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பேச்சாளராக பணியாற்றினார். நினைவேந்தல் உரை இந்தநிலையில் எதிர்வரும் வியாழக்கிழமை நியூயோர்க்கில் அவர்…

எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்த அனுமதியில்லை

எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்துவதற்கு அனுமதியளிக்கப்படாது என பௌத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாச்சார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். ஜெரோம் பெர்னாண்டோ என்ற மத போதகர் அண்மையில் பௌத்த மதத்தையும், புத்தரையும் இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டதாக கூறப்படும் கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த…