செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ மக்களும்…

‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது. ஈழத் தமிழர் மனசாட்சியிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும்…

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்!- யாழில் ராஜபக்‌ச

பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூட இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரியுங்கள் என ஜனாதிபதி…

புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்!…

தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் 2014ம் ஆண்டில் எட்டப்பட்ட விடயங்கள், சிறிலங்கா…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிவிப்பானது பேயிட மிருந்து பிடுங்கி பிசாசிடம்…

சிறிலங்காவில் எதிர்வரும் 08 ம் நாள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி பால சிறிசேனவை ஆதரிப்பதாவும்,தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளமை பேரதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத்…

மகிந்த நாளை யாழிற்கு விஜயம்: கூட்டமைப்பினரை வளைத்துப்போட பல கோடி…

ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இழுத்துப் போடுவதற்கு பல கோடிகளில் அரசு பேரம் பேசி வருவதாகத் தெரிய வருகிறது. ஆயினும் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தாம் ஒரு போதும் விலை போகப்…

அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல!- வடமாகாண முதலமைச்சர்

வடமாகாணசபையினர் நாங்கள் ஆளுநரை அண்டிச்சென்று, ஜனாதிபதியை நாடிச்சென்று, அவர்தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்துப் பல நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால் அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல. பல் இளிக்கும் வரை தான் பலன் கிடைக்கும். நாடும் வரையில்தான் நன்மை கிட்டும் என்றென்றும்.…

2015 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர தீர்வு கிடைக்கும்!…

2015 புதுவருடத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்திற்கு ஏற்றவகையில் தமது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டும்.'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற…

தோல்வியை ஊகித்துள்ள ஜனாதிபதி! எதிர்க்கட்சித் தலைமையை கைப்பற்ற வியூகம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதி என்பது உளவுத் தகவல்கள் மூலம் ஜனாதிபதிக்கு தெரியவந்துள்ளது. நாளுக்கு நாள் ஆளுங்கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குத் தாவும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை தேர்தல் தோல்வி குறித்த முன்னறிவிப்பை தெளிவாக வழங்குவதாக ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் உணர்ந்துள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதித்…

சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் மீள வழங்குவேன்: மைத்திரிபால சிறிசேன

கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட காணிகளை மக்களிடம் திருப்பவும் வழங்குவேன் என்று பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான…

யாழில் மைத்திரிக்காக மக்கள் அணிதிரள்வு!

பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக பிரச்சாரக் கூட்டம். இன்று 5 மணியளவில் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் சரத்பொன்சேகா துமிந்த திஸநாயக்க…

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மைத்ரிபாலவுக்கு ஆதரவு

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்   இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இந்த முடிவை அறிவித்தார்.…

மைத்திரியை ஆதரிக்கும் முடிவை த.தே.கூ நாளை வெளியிடும்?

ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த…

தமிழ்மக்கள் மைத்திரிக்கு ஆதரவு தெரிவிப்பார்களென்பதில் சந்தேகமில்லை!

இலங்கைவாழ் தமிழ்மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எதிரணி பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவிற்கே வாக்களிப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவ்வாறு காரைதீவில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரிக்கும் ஜ.தே.கட்சி தேர்தல் பிரசார அலுவலகத்தைத் திறந்து வைத்து கருத்துரைத்த காரைதீவுப்பிரதேச தேர்தல் இணைப்பாளரும் முன்னாள் ஜ.தே.கட்சியின் நிந்தவூர் பிரதேசசபை…

வடமாகாணசபைக்கு சகல அதிகாரங்களும் உள்ளது! தமிழக தொலைக்காட்சியில் மகிந்த செவ்வி

வடக்கு மாகாணசபைக்கு எந்த அதிகாரங்களும் அளிக்கப்படவில்லை என்றும், ஆளுநரால் சமாந்தரமான நிர்வாகம் நடத்தப்படுவதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுவதும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமிழகத்தில்ல் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போது  தெரிவித்துள்ளார். இந்தச் செவ்வியில் அவர், “தேவையான எதையும் செய்வதற்குரிய சுதந்திரம்…

முஸ்லிம் தனிமாவட்டக் கோரிக்கையை நிராகரித்தமைக்காகவாவது மஹிந்தவிற்கு தமிழ்மக்கள் வாக்களிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த தனி முஸ்லிம்மாவட்டக் கோரிக்கையை நிராகரித்ததற்காவது எமது தமிழ்மக்கள் குறிப்பாக அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்மக்களை நட்டாற்றில் சிக்கவைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்தமைக்கு அம்பாறை மாவட்டம் வாழ் தமிழ் மக்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். அந்த நன்றிக்கடனை…

ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று…

மலையக வீட்டு, காணி பிரச்சினைகள் தொடர்பாக தூங்கி கொண்டிருந்த என் நண்பர் ஆறுமுகன் தொண்டமானை, ´தூங்காதே தம்பி, தூங்காதே´ என்று நாம் இன்று தட்டி எழுப்பியுள்ளோம், என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், எட்டியாந்தோட்டை கலுபான, உருளைவள்ளி, எதிராபொல, கிரிபோருவ, களனி,…

கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!

அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி தேர்தலில் எதிரணியை ஆதரிக்க தீர்மானித்திருப்பதாக ஆளும்கட்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதே கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட போது, ஐக்கிய இலங்கைக்குள் பிரிவினை…

ஜனாதிபதி தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் நாள் வரையில் தமிழ் மக்களின் பிரதான அரசியல் சக்தியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் உத்தியோகபூர்வ முடிவை அறிவித்திருக்கவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது இந்தியாவில் தங்கியிருக்கின்ற நிலையிலேயே கூட்டமைப்பின் முடிவு தாமதமாகிவருகிறது அல்லது முடிவு திட்டமிட்டே தாமதப்படுத்தப்படுகிறது.…

விடுதலைப் புலிகள் மீதான தடை விலக்கு: ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவிடம்…

தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட பயங்கரவாத முத்திரையும், இந்திய அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட வேண்டும் என கோரியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது மறுபடியும் தடை விதிக்கவோ அல்லது ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்பை மேன் முறையீடு செய்யவோ…

கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு முன்வந்துள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் ஐவர் இவ்வாறு கட்சி தாவியுள்ளனர். அத்துடன், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சிலரும் ஆதரவை…

தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் மஹிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும்: விநாயகமூர்த்தி…

தமிழன் தன்மானத்துடன் வாழ வேண்டுமானால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் இம்முறை யாருடைய பேச்சையும் கேட்காது தமது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியும் தமிழினத்தின் எதிர்காலம் பற்றியும் மாவட்டத்தின் அபிவிருத்தி பற்றியும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்.…

மகிந்த வென்றாலும் ஒரு கிரிமினலாக கருதி நீதிமன்றில் வழக்குத் தொடரலாம்…

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் தொடர்பாக போலியான ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்கவின் உதவியுடன் மகிந்த ராஜபக்ச தனது பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருவது ஒரு குற்றச்செயலாகும், இதன் காரணமாக அவர் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவரை இதனை காரணம்காட்டி பதவி நீக்கம் செய்யலாம் என முன்னாள் பிரதம நீதீயரசர்…

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது:…

ஐனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென்பதை த.தே.கூட்டமைப்பு பகிரங்கமாக அறிவிக்கக் கூடாதென வலியுறுத்தியிருக்கும் வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், மக்கள் தாங்களே சிந்தித்துச் செயற்படட்டும் என்றும் தெரிவித்துள்ளார். இத்தேர்தலின் போதான தபால் மூல வாக்களிப்பில் அரச ஊழியர்கள் தெளிவாகச் செய்து காட்டியுள்ளமை போன்று மக்களும் தமது முடிவைச் செய்து…