தமிழ் மக்களை வாக்களிக்கவிடாமல் தடுக்க அரசாங்கம் சூழ்ச்சி – மனோகணேசன்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிப்பில் பங்குகொள்ளவிடாமல் தடுப்பதற்கான முயற்சிகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி, கிளநொச்சி, முல்லைத்தீவு, கேகாலை போன்ற மாவட்டங்களில் இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாவட்டங்களின் தமிழ் மக்கள்…

தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப் பலம் ஒன்று தான்!

தமிழ் மக்களின் பலத்தைக் காட்டும் முக்கிய தருணம் இது. தமிழ்மக்களுக்கு இன்றிருக்கும் ஒரே ஆயுதம் வாக்குப்பலம் ஒன்று தான். எனவே அவ்வாக்குப் பலத்தை சரியாகப் பாவித்து தமிழர் தரப்பிற்கு பலம் சேர்க்க வேண்டும். முடிவுகள் எமக்குச் சாதகமாக வரும் சூழ்நிலையே தெரிகிறது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு…

தமிழர்கள் ஒவ்வொரு வாக்கையும் கவனமாக கையாளவேண்டும்- உலக தமிழர் பேரவை

எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியன்று தமிழ் மக்கள் தமது ஒவ்வொரு வாக்கையும் கவனமாக பயன்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலக தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. பேரவை இன்று வி;டு;த்துள்ள அறிக்கை ஒன்றில், சுதந்திரத்துக்கு பின்னர் தமிழர்கள், பெரும்பான்மை தேர்தல் முறையினால் தமது…

வெள்ளக்காடாக இலங்கையின் பல பகுதிகள் : 7 லட்சம் பேர்…

இலங்கையில் கிழக்கு உட்பட பல மாகாணங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்தள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழையின் காரணமாக இதுவரை 4 பேர் பலி   மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பேரும் அம்பாறை மாவட்டத்தில் ஒருவரும் என 4…

ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை…

போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுடன் ஒத்துழைக்க வேண்டியது சிறிலங்கா அரசாங்கத்தின் கடமை என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அதிபர் தனது தேர்தல் அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற்றும், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு…

ஆட்சி மாற்றம் ஏற்படுவதன் மூலமாக தமிழர்களுக்கு நன்மை ஏற்படும் என்ற…

தெற்கின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் சிங்கள பௌத்த பேரினவாத தமிழர் விரோத அரசியலைத் தமது கருத்தியல் மற்றும் தொழிற்பாட்டு அரசியலாக வரித்துக் கொண்டவர்கள். அவர்களிடம் தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு குறைந்தபட்ச நியாயமான நிலைப்பாடு தானும் இல்லை என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது. மேற்கண்டவாறு…

ஐரோப்பிய நாடுகளின் கோரிக்கைக்கு ஏற்ப படையினர் விலக்கிக் கொள்ளப்பட மாட்டார்கள்!-…

ஐரோப்பிய நாடுகளும், ஏனைய நாடுகளும் விடுக்கும் கோரிக்கையை ஏற்று வடக்கில் இருந்து படையினரை விலக்கிக் கொள்ளப் போவதில்லை என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ருவான்வெலயில் நேற்று இடம்பெற்ற கூட்டம ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, வடக்கில் உள்ள படையினரில் 50 வீதத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக…

தேர்தலில் தோற்றால் அமைதியான முறையில் விலகிச் செல்வேன் என்று கூறிவிட்டார்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினால் தாம் அமைதியான முறையில் விலகிச் செல்லப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேர்தலில் தோல்வியைத் தழுவினால் அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் புதிய ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத்…

மண்ணை தொட்டு வணங்கும் மஹிந்தவை பார்த்து “ஊ..” சத்தம் போட்ட…

ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள் நலன்கருதி 20ம் திகதி வெயங்கொட – நைய்வல சனச அரங்கில் பிரபல நாடகக் கலைஞர் வில்சன் குணரத்னவின் 8 கதாபாத்திரங்கள் மேடையேற்றப்பட்டன. இந்த நாடகத்தை காண விசேட அதிரடிப்படை ஊனமுற்றோர், ராகம ரணவிரு செவன ஊனமுற்ற இராணுவ சிப்பாய்கள், ஊனமுற்று படை சிப்பாய்கள் உள்ளிட்டவர்கள்…

கூட்டமைப்பும் மைத்திரிக்கு கைதூக்கியது!

தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தை மீண்டுமொரு முறை அடைவு வைக்கும் வகையினில் தெற்கிற்கு கைதூக்கியுள்ளது கூட்டமைப்பு. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிக்கு நிபந்தனை ஏதுமற்ற ஆதரவை வழங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.  நேற்று கொழும்பில் எதிரணி தலைவர்களை சந்தித்த கூட்டமைப்பின் பங்காளி கட்சி தலைவர்கள் நிபந்தனை ஏதுமின்றி…

ரணில், மைத்திரி, சந்திரிக்காவிடம் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்க வலியுறுத்தி…

தோட்ட தொழிலாளர்களுக்கு ஏழு பர்ச் காணி வழங்குமாறு வலியுறுத்தி எதிரணியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா அம்மையாரிடம் திகாம்பரம், இராதாகிருஸ்ணன் மற்றும் மனோ கணேசன் முன்வைத்துதுள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் லயன் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து காணி உரிமையுடன் தனித்தனி வீதிகளை கட்டிக் கொடுக்க வேண்டும்…

வடக்கை முற்றுகையிடும் மைத்திரியும், மஹிந்தவும்

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கும் இத்தருணத்தில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, அரச தரப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோர் வடக்கில் தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளனர். ஏற்கனவே கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை முல்லைத்தீவில் வடக்குக்கான தனது முதலாவது பிரசாரத்தை ஆரம்பித்துவைத்த மஹிந்த அன்று மாலை கிளிநொச்சியிலும்…

ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு பொதுசன வாக்கெடுப்பு நடத்துக: நாடுகடந்த தமிழீழ…

ஈழத்தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவு செய்யும் உரிமையினைப் பயன்படுத்தும் வகையில் ,பொதுசன வாக்கெடுப்பு நடாத்தும்படி அனைத்துலக சமூகத்திடம் கோரும் தீர்மானமொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் நடந்து முடிந்த நாடுகடந்த தமீழ அரசாங்கத்தின் அரசவையில் நிறைவேற்றப்பட்ட இருதீர்மானங்களில் ஒன்றாக இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.…

‘தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்’ – மாவை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று முன்னணி தமிழ் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. 'தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்' - மாவை   இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும் என்று…

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் பேசும் மக்களும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் எவ்வாறு நடந்து கொள்ளப் போகிறார்கள்? வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் சக்தியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இதுவரையில் தேர்தல் தொடர்பிலான தங்களின்…

சிங்கள தேசம் வேறு தமிழ்த தேசம் வேறு என்பதனை வெளிப்படுத்த…

''இருவரில் யார் வந்தால் எமது இன உரிமை பெறும் எமது செயற்பாடுகளுக்கு சர்வதேச மட்டத்தில் பயனுள்ள சூழ்நிலை தோன்றலாம் என்ற ஒரு கணிப்பு பற்றியதே'' என்ற கேள்விக்கான எனது பதில் செல்வராஜா கஜேந்திரன் யார் ஆட்சிக்கு வந்தாலும் பூகோள அரசியல் போட்டி தமிழ் மக்களுக்கு சாதகமாக மாறவேண்டுமாக இருந்தால்…

தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை இரு தரப்புமே தெளிவாக முன்வைக்கவில்லை:…

தமிழர் பிரச்சினைகளுக்கான தீர்வுத் திட்டத்தை ஆளும் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்போ அல்லது எதிர்க்கட்சியோ தெளிவாக முன்வைக்கத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது பத்து லட்சம் வரையிலான வாக்காளர்களை கட்டுப்படுத்தும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் காணப்படுகின்றது.…

வடக்கில் இரகசிய சிங்கள குடியேற்றம், ஒரு கிராமத்துக்கு ‘நாமல் கம’…

வடக்கில் இரகசியமான முறையில் சிங்கள குடியேற்றங்கள் நிறுவப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க குற்றம்சாட்டியுள்ளார். “நான் அதிகமாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். வவுனியா தெற்கு பிரதேச சபைப் பகுதிக்குச் சென்றபோது, அங்குள்ள மிகவும் நல்ல இளைஞர் ஒருவர், “ஏன் வெளியிலிருந்து கொண்டுவந்து இங்கு குடியேற்றுகின்றீர்கள்” என்று…

தமிழீழ விடுதலைக்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடைக் கற்களாக இருக்காதீர்கள் –…

அண்மையில் சென்னைக்கு வருகை தந்த இலங்கையின் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்திருக்கும் மூன்று கருத்துகள் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளன. இலங்கையில் ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்குச் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தம் பயனற்றது ஆகிய முதலமைச்சரின் மூன்று கருத்துகளையும்…

இனப்படுகொலை என்ற வார்த்தையினை உச்சரிக்க தமிழர்தரப்பு தயங்குவது எதற்காக –…

அடக்குமுறைக்கும் அடிமை வாழ்வுக்கும் ஒருமுற்றுப்புள்ளி வைத்து சுதந்திரமாகவும் சுயமரியாதையாகவும் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்க்காக போராடிய ஈழத்தமிழினம் அதற்காக கொடுத்த விலைகள் மதிப்பிடமுடியாதவை. ஒரு இனம் இன்னொரு இனத்தினால் அடிமைப்படுத்தப்படுவைதையோ அடக்கியாளப்படுவதையோ உலகத்தின் எந்த ஒரு சட்டமும் ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இலங்கைத்தீவிலே சிங்களமேலாதிக்கத்தால் தமிழர்கள் அடக்கியாளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டபோது அது…

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக் வேண்டும்!

ஜனாதிபதில் தேர்தல் தொடர்பான எங்களின் கருத்துகள் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அக்கறையைச் சுட்டிக்காட்டியே இக்கருத்துக்களைக் கூறுகின்றோம். தமிழ் மக்களை குறிவைக்கும் மகிந்த ராஜபக்சவின் கொள்கை என்பது தமிழ் மக்கள் அழிவதற்குச் சமம் என்ற நிலையிலேயே மகிந்தவின் ஆட்சி பிரதிபலிப்தாக தமிழ் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு…

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய முடிவு விரைவில்!

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவு செய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உறுதியாக தெரிவிப்போம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சி…

தமிழ்ச்செல்வன் படுகொலை! துரோகத்தனம் குறித்து சிஐஏயின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது!– விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏனைய தலைவர்களும் துல்லியமான இலங்கை இராணுவக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதற்கு, தலைவர் பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் தரையில் இருந்து வழங்கிய தகவல்களே காரணம் என்று சிஐஏ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை  உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின்…