இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ‘தற்கொலை குண்டுதாரிகளாக தயாரான 15 பெண்கள்’

படக்குறிப்பு, ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த ஈஸ்டர் தாக்குதலில் 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் இறந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. இலங்கையில் 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடத்தப்பட்டு வருகின்ற விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம்…

“இலங்கையில் பாஜக கிளை 100 ஆண்டுகளுக்கு பிறகு வேண்டுமானால் நடக்கலாம்”

மனோ கணேசன் இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தமது அரசியல் கிளையை விரிவுபடுத்த உத்தேசித்துள்ள இந்தியாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் வெளியிட்ட கருத்து, இலங்கையில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. இந்த விவகாரத்தில், இலங்கை மீது கண் வைப்பதற்கு முன்பாக முதலில் இந்தியாவிற்குள்…

இலங்கை நாடாளுமன்றம்: “விடுதலைப் புலிகள், பிரபாகரன் குறித்து பேச தடை”…

இலங்கை நாடாளுமன்றத்திலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரிய நாடாளுமன்ற சபையில்…

தமிழர் உரிமை குழுவினர் மீது சட்ட நடவடிக்கை – இலங்கை…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் உரிமை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் போலீஸ் சட்டப் பிரிவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரியொருவர் பிபிசி தமிழிடம்…

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தடை – காவல்துறை எச்சரிக்கை

இலங்கையில் காதலர் தினம் கொண்டாட்டங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கொழும்பு, நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை நாடுமுழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கையில் காதலர் தினம்…

ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுமா? புதைக்க இடமளிப்போம்: பிரதமர்

ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இடமளிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் பிரதமரிடம் கேளுங்கள் கேள்வி நேரத்தில், ​ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், “நீரின் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றுவதற்கு வாய்ப்பு இல்லையென சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – இலங்கை தமிழர்களின் ‘அகிம்சை…

இலங்கை தமிழர்களின் உரிமைகளை கோரும் நோக்குடன் நடத்தப்பட்ட பாரிய போராட்ட பேரணி, இன்றுடன் (பிப்ரவரி 07) நிறைவடைந்தது. கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் முதல் வடக்கு மாகாணத்தின் பொலிகண்டி வரை தமிழர்களின் உரிமைகளை கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொத்துவில் பகுதியில் கடந்த 3ம் தேதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.…

இலங்கை மலையகத்தை முடக்கிய பெருந்தோட்ட தொழிலாளர் போராட்டம்: 1000 ரூபாய்…

மலையகத்தில் வாழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஹர்த்தால் போராட்டமொன்று  (பிப்ரவரி 05) முன்னெடுக்கப்பட்டது. (இலங்கை மதிப்பில் 1000 ரூபாய் என்பது இந்திய ரூபாயின் தற்போதைய மதிப்பில் சுமார் 376 ரூபாய்க்கு நிகரானது.) மலையகத்தில் உள்ள பெருத்தோட்ட தொழிலாளர்கள் பெரும்பாலும் இந்திய…

கிழக்கு கொள்கலன் முனையம்: இலங்கையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட அதிருப்தி –…

இலங்கையில் துறைமுகங்கள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புக் குரல் ஒலித்து வருகிறது. இதில், தொழிற்சங்கங்கள், பொது மக்கள், எதிர்க்கட்சிகள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஈடுபட்டுள்ளனர். இப்போது இலங்கையின் ராஜபக்ஷ அரசாங்கம் இந்தியாவுடனான ஒரு டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளது. இந்த டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டம் கிழக்கு கொள்கலன் முனையம் (East…

வவுனியா காட்டுக்குள் துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை ராணுவம்: ஏன்?

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் - பேராறு வனப் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. பேராறு வனப் பகுதியில் ராணுவம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தருணத்தில், ராணுவத்தை…

மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், 27.01.2021 திகதியிட்டு, ‘தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே, தமிழக மீனவர்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்’ என்ற தலைப்பிட்ட, நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையின் படகுடன் மோதுண்டு, மீன்பிடிப் படகு விபத்துக்கு உள்ளாகியதில், உயிரிழந்த இந்திய மீனவர்கள் நால்வருக்கு, அஞ்சலி செலுத்தும் அறிக்கையை வௌியிட்டிருந்தது. இந்திய…

புலிகளுக்கு உதவி சந்தேகத்தில் கைதானவர்களின் உறவுகள் போராட்டம்

 விடுதலைப் புலிகளுக்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி, கிளிநொச்சியில் இன்று (01)  போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம், பந்தல் அமைக்கப்பட்டு, இன்று முதல் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, கந்தசுவாமி  கோவில் முன்பாக ஒன்றுகூடிய உறவுகள், கவனயீர்ப்பு…

‘தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை வெல்ல இந்தியா உடனான உறவே…

தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை நிலப்பரப்பில் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியாவின் நெருங்கிய உறவே காரணம் என ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகளை செலுத்தும் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான…

’முறையான யோகா பயிற்சி, மூச்சுப் பயிற்சி கொரோனா பரவலைத் தடுக்கும்’

உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாப்பதற்கான ஓர் உபயாமாக யோகாவை தேர்ந்தெடுப்பதில் தவறில்லை. சாதாரண உடற்பயிற்சி, முறையான யோகா பயிற்சி, மேலும் முறையாகக் கற்றுக்கொண்ட மூச்சு பயிற்சி என்பன, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் என்று, ரிதமிக் யோகா அகாடமியின் நிறுவுனரும் யோகா…

இலங்கை மனித உரிமை மீறலை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய நியமித்த…

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்தார். மூவர் அடங்கிய ஆணைக்குழு, கடந்த 20ம் தேதி முதல் அமலுக்குவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு…

இலங்கை கடலில் இறந்த மீனவர் உடலை வாங்க மறுத்து மறியல்:…

நடுக்கடலில் இந்தியக் கடலோரக் காவல் படை வசம் உடல்களை ஒப்படைக்கும், இலங்கை கடலோரக் காவல் படை இலங்கை கடலில் இறந்த 4 தமிழக மீனவர்களில் ஒருவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். பிறகு அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. மற்ற மூன்று…

பாராளுமன்றம் 2 நாள்கள் கூடும்; 2 நாள்கள் கூடாது

நாளையும் (19) நாளை மறுதினமும் (20) மாத்திரமே பாராளுமன்றம் கூடுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறாதென்றும் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்;தீர்மானம் எடுக்கப்பட்டதாக மனோ கணேசன் தனது  பேஸ்புக் வலைத்தளத்தில்…

இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக சர்ச்சை புகார் கொடுத்த எம்.பி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அம்பாறை மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஆற்றிய உரையின் மூலம் தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுள்ளார் என பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு கடிதமொன்றின் மூலம் புகார் அளித்துளளார் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ. தனக்கு தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்குமாறும் அவர்…

பார்க் தோட்டம் ஓய்ந்தது

நுவரெலியா, கந்தப்பளை - பார்க் தோட்டத்தில்,  நேற்று (17) இரவு முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்பகிஷ்கரிப்பும்  போராட்டமும் சற்று முன்னர் கைவிடப்பட்டது. பார்க் தோட்ட முகாமையாளரை, வேறு ஒரு தோட்டத்துக்கு இடமாற்றம் செய்வதாகவும் அவர் இனி இந்தத் தோட்டத்துக்கு வரமாட்டார் என்றும் குறித்த தோட்டக் கம்பனி அறிவித்ததை அடுத்தே,…

யாழ்ப்பாணம் பல்கலை.யில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் -துணைவேந்தர் உறுதி

முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் அமைக்கப்படும் என துணைவேந்தர் உறுதி அளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். யாழ்ப்பாணம்: இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின்…

இன்று 224 ஆவது எம்.பி சத்தியப்பிரமாண

புத்தாண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு, இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். இதன்போது, 224 ஆவது எம்.பி, இன்றையதினம் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார். ஓகஸ்ட் 5ஆம் திகதியன்று நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், வெற்றியீட்டிய மற்றும் நியமன எம்.பிக்கள் அடங்கலாக 223 பேர், இதுவரையிலும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். எனினும், தங்களுடைய கட்சிகளுக்குக்…

தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும். முன்னாள் மத்திய வங்கி…

பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும்

யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர்…