பொதுத் தேர்தலுக்குமுன் எம்பிபிஜே-க்குத் தேர்தல்

சிலாங்கூர் மாநில அரசு, அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சிமன்ற(எம்பிபிஜே) தேர்தலை நடத்தத் திட்டமிடுகிறது. ஊராட்சி மன்றத் தேர்தல்களை உயிர்ப்பிக்கும் நோக்கில் அவ்வாறு செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சிமன்ற உறுப்பினர் தெரேசா கொக் கூறினார். 1965-இல் ரத்துசெய்யப்பட்ட ஊராட்சி மன்றத் தேர்தல்களை மீண்டும் கொண்டுவருவது டிஏபி-இன் 2008 தேர்தல்…

முகைதின்: அம்னோ, பிரச்னைகளைத் தீர்க்க இன்னும் நிறைய செய்ய வேண்டும்

அம்னோவில் உட்பூசல் மலிந்திருப்பதாக டாக்டர் மகாதீர் முகமட் கூறுவதை அந்தக் கட்சியின் துணைத் தலைவர் முகைதின்  யாசின் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அந்த உட்பூசல்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார். "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், முன்னைய பிரதமர் அப்துல்லா அகமட் படாவியிடமிருந்து பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட…

கேஆர்1எம்:உணவுப்பொருள் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

“சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில் அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஊழல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டார்.” மைடின், மிளகாய் சாறுமீது நடத்திய பரிசோதனையில் சுயஆதாயம் பெறும் சூழல் உள்ளதாகக் குற்றச்சாட்டு ஜோ லீ:சில ஆண்டுகளுக்குமுன் சீனாவில், அரச உணவு, மருந்து நிர்வாகத்தின் முன்னாள் தலைவர்…

ஹிஷாம்: அம்னோ “திருத்தப்படுகிறது, உருமாற்றம் பெறுகிறது”

அம்னோவுக்குள் "உட்பூசல் நிலவுவதுடன் தலைமைத்துவமும் பலவீனமாக இருப்பதாக" அதன் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதீர் கூறுவதை அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் நிராகரித்துள்ளார். "அம்னோவில் மட்டும் அவ்வாறு நிகழ்வில்லை. நான் அதனை மறுக்கவில்லை. ஆனால் நாங்கள் உருமாற்றம் அடைந்து வருகிறோம். திருத்தங்களைச் செய்து வருகிறோம்", என அவர்…

குற்றச் செயல்களை முறியடிப்பது ஏவுகணை அறிவியல் அல்ல

ஐஜிபி அவர்களே, உங்களுக்குப் புதிய யோசனைகள் தேவை இல்லை. நீங்கள் உங்கள் போலீஸ் படை மீது கட்டுக்கோப்பை அமலாக்கினால் போதும். மக்கள் உங்களை நம்பத் தொடங்குவர். ஐஜிபி: குற்றச் செயல்களை குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள் குழப்பம் இல்லாதவன்: இது பெரிய ஏவுகணை அறிவியல் அல்ல. புதியதும் அல்ல.…

ஜொகூர் பெர்சே 2.0 : ஜொகூர் மாநிலத்தில் தூய்மையான நீதியான…

தூய்மையான நீதியான தேர்தலை மலேசியாவில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் பல சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பெர்சே 2.0 கூட்டமைப்பில் ஒன்றிணைந்தன. இக்கூட்டமைப்பில் இடம்பெற்ற அமைப்புகளில் சில, தங்கள் இலக்கான 8 கோரிக்கைகளை முன்னிறுத்தி தொடர்ந்து பட்டறைகள், கருத்தரங்குகளை நடத்தி வருகின்றன. ‘8 கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள், பிறகே…

எம்பி பதவியைத் துறப்பதற்குப் பணம் கோரியதை சுல்கிப்லி மறுக்கிறார்

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் போட்டியிடுவதற்கு உதவியாக தமது இடத்தைக் காலி செய்வதற்கு ஈடாக தாம் 60,000 ரிங்கிட் கோரியதாக கூறப்படுவதை கூலிம் பண்டார் பாரு சுயேச்சை உறுப்பினர் சுல்கிப்லி நூர்டின் நிராகரித்துள்ளார். முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி, 'அரசியல் போராட்டத்தின் நினைவலைகள்' என்னும்…

லிம் கிட் சியாங்: என்எப்சி சர்ச்சை மீது இன்னும் அதிகமான…

மலேசியர்கள், 300 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சர்ச்சையில் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம் சொல்வதை மட்டும் கேட்க விரும்பவில்லை. மாறாக அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் அரசாங்கமும் என்ன சொல்கின்றனர் என்பதையும் அறிய விரும்புகின்றனர். மூன்று வாரத்திற்கு மேல் மௌனமாக இருந்த பின்னர் என்எப்சி நிர்வாகத் தலைவர்…

மசீச-வின் வோங் நய் சீ பிரதமரின் புதிய சீன அரசியல்…

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசியல் செயலாளராகத் தாம் நியமிக்கப்பட்டுள்ளதை முன்னாள் கோத்தா மலாக்கா எம்பி வோங் நய் சீ உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அந்தத் தகவலை சின் சியூ நாளேட்டிடம் தெரிவித்தார். தமது நியமனம் டிசம்பர் மாதம் தொடக்கம் அமலுக்கு வருவதாகவும் மசீச இளைஞர் மத்தியக் குழு உறுப்பினருமான…

ஐஜிபி: குற்றச் செயல்களைக் குறைக்க எங்களுக்கு வழி சொல்லுங்கள்

நாட்டில் குற்றச் செயல்களைக் குறைப்பதற்கு புதிய யோசனைகளையும் பரிந்துரைகளையும் போலீஸுக்கு வழங்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி)இஸ்மாயில் ஒமார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். பொது மக்கள் அந்த யோசனைகளை சம்பந்தப்பட்ட மாநில அல்லது மாவட்ட போலீஸ் தலைவர்களுக்கு அல்லது போலீஸ் பொது உறவு அதிகாரிகளுக்கு அனுப்பலாம்.…

சையட் ஹுசேன்: எஸாம் உண்மையை மறைக்க முயலுகிறார்

பிகேஆர்-லிருந்து தாம் விலகியதற்கான நோக்கத்தை மறைப்பதற்கு எஸாம் முகமட் நூர் முயலுவதாக அந்த கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி கூறுகிறார். அந்தக் கட்சியின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான எஸாம், பணத்துக்காக கட்சியிலிருந்து விலகினார் என சையட் ஹுசேன் தமது "ஒர் அரசியல் போராளியின்…

கெரக்கான் தலைவர் பதவியைத் துறக்க மாட்டேன் என்கிறார் கோ

கெரக்கான் தலைவர் கோ சூ கூன், தலைவர் என்னும் முறையில் தோல்வி கண்டுள்ளதால் தாம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளதை நிராகரித்துள்ளார். மலேசியா ஜனநாயக நாடு. ஆகவே மகாதீருக்குச் சொந்தக் கருத்துக்களைச் சொல்வதற்கு தகுதியுள்ளது என…

பக்காத்தான் இரண்டு கட்சி முறையை நிராகரிக்கிறது

பினாங்கு பக்காத்தான் ராக்யாட், அந்த மாநில மசீச தெரிவித்த இரண்டு கட்சி அரசியல் முறையை நிராகரித்துள்ளது. பாரிசான் நேசனலுக்குள் கூட ஆடுகளம் சமமாக இல்லை என அது அதற்குக் காரணம் கூறியது. இவ்வாறு பினாங்கு பக்காத்தான் தலைவர்கள் கூறியுள்ளனர். 2008ம் ஆண்டு 12வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத…

மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் 5.8% வளர்ச்சியைப்…

மலேசியப் பொருளாதாரம் இவ்வாண்டு மூன்றாவது கால் பகுதியில் 5.8% வளர்ச்சியை அனுபவித்தது. இது கடந்த ஒராண்டில் மிகவும் அதிகமான வளர்ச்சியாகும். உள்நாட்டுச் செலவுகள் அதிகரித்ததால் தேவைகள் வலுவடைந்தது அதற்குக் காரணம் ஆகும். இவ்வாறு மத்தியப் வங்கியான பாங்க் நெகாரா கூறுகிறது. சூழ்நிலகள் சவால் நிறைந்ததாக இருந்தாலும் மலேசியப் பொருளாதாரம்…

“மாணவர் உதவித்தொகை மூலம் அரசியல் ஆதாயம் தேட முனைகிறது பிஎன்”

பள்ளி மாணவர்களுக்கு ரிம100 உதவித்தொகை வழங்கும் நிகழ்வின்வழி அரசாங்கம் அரசியல் ஆதாயம் தேடிக்கொள்ளப் பார்க்கிறது என மாற்றரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்நிகழ்வுகளில் பிஎன் பிரதிநிதிகள் அல்லது தலைவர்கள் உடன் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் பணித்திருப்பதே இதற்குச் சான்று. இது, அரசாங்கம் நேர்மையற்றது என்பதைக் காண்பிக்கிறது. பொதுமக்களின்…

“நான் நொடித்துப் போயிருந்தேன் ஆனால் பணத்துக்காக பிகேஆர் -லிருந்து விலகவில்லை”

பணத்துக்காக தாம் பிகேஆர் -லிருந்து விலகியதாக அந்தக் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் சையட் ஹுசேன் அலி கூறியிருப்பதை அதன் முன்னாள் இளைஞர் தலைவர் எஸாம் முகமட் நூர் மறுத்துள்ளார். சையட் ஹுசேன் வெளியிட்டுள்ள "ஒர் அரசியல் போராளியின் நினைவுகள்" என்னும் புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எஸாம் பதில்…

டாக்டர் மகாதீர்: கோ, கெரக்கான் தலைவர் பதவியைக் கைவிட வேண்டும்

கெரக்கான் கட்சியை நல்ல முறையில் வழி நடத்தத் தவறியதற்காக அதன் தலைவர் டாக்டர் கோ சூ கூன் தலைமைத்துவப் பதவியிலிருந்து விலக வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார். 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப்…

என்எப்சிக்கு (NFC) கொடுத்தது கடனா அல்லது மானியமா?

அரசாங்கம் வழங்கிய மில்லியன் கணக்கான கடன் குறித்து சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தேசிய விலங்குக்கூட நிறுவனம் (NFC) அளித்த விளக்கம் வழங்கப்பட்ட ரிம250 மில்லியன் கடன் அல்ல, அது மானியம் என்று வாதிக்கும் பிகேஆரின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகத் தெரிகிறது. பிகேஆரின் வியூகப் பிரிவு தலைவர் ரபிஸி ரமலியின் கூற்றுப்படி இது மானியம்…

திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசும்; கடல் கொந்தளிப்பாக இருக்கும்

நாட்டின் பல பகுதிகளில் திங்கட்கிழமை தொடக்கம் காற்று வேகமாக வீசுவதுடன் கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என மலேசிய வானிலை ஆய்வுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் என்றும் 3.5 மீட்டர் உயரத்துக்கு அலைகள்…

அஸ்ரி: சூரிய சக்தியில் இயங்கும் பேசும் பைபிள்கள் இருப்பதாக கூறுவது…

முஸ்லிம்கள் "சூரிய சக்தியில் இயங்கும் கையடக்க பேசும் பைபிள்கள்" என்னும் கருவி மூலம் மதம் மாற்றம் செய்யப்படுவதாக சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஹசான் அலி கூறிக் கொள்வது ஒர் அவமானம் என முன்னாள் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி ஜைனுல் அபிடின் கூறுகிறார். "பைபிளை வாசிக்கும் அந்தக்…

அமானா, பராமரிப்பு அரசாங்க முறைக்கு யோசனை தெரிவிக்கிறது

தேர்தலின் போது அரசுத் துறைகள் நடு நிலையாக இருப்பதை உறுதி செய்ய பராமரிப்பு அரசாங்கத்தைத் தோற்றுவிக்கலாம் என பிஎன் கூட்டணிக்குள் அமைக்கப்பட்டுள்ள அமானா என்ற புதிய நெருக்குதல் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. இப்போதைய நடைமுறை, பிஎன்,  அரசாங்க நிர்வாக எந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கிறது என அமானா அமைப்பின்…