ராமசாமி த ஸ்டார், பத்திரிக்கையாளர் மீது 10 மில்லியன் ரிங்கிட்…

பினாங்கு துணை முதலமைச்சர் II டாக்டர் பி ராமசாமி, த ஸ்டார் நாளேட்டின் பத்திரிக்கையாளர்,  பத்திரிக்கை வெளியீட்டாளர் ஆகியோருக்கு எதிராக 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். மெசர்ஸ் ஏ சிவநேசன் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக அந்த வழக்கு இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்ற…

பிரதமர் போலீசாருக்குச் சொல்கிறார்: பொது மக்களுடைய நம்பிகையை பெற முயலுங்கள்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் அகற்றப்படவிருப்பதைக் கருத்தில் கொண்டு போலீசார் புதிய சவால்களை எதிர்கொள்வதற்குத் தங்களது ஆற்றலை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டுள்ளார். "நன்கு கல்வி கற்ற, விஷயங்களை அறிந்த சமுதாயம் உயரிய தரத்தை எதிர்பார்க்கிறது. ஆகவே போலீசார் புதிய எதிர்பார்ப்புக்களை…

சுங்கை சிப்புட் மஇகா பழனிவேல் போட்டியிடுவதையே விரும்புகிறது

சுங்கை சிப்புட் மஇகா, கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் அல்லது அவரால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அங்கு போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்தத் தொகுதியை பாரிசான் நேசனல் திரும்பவும் கைப்பற்ற அது கடுமையாக பாடுபடும் என்று அதன் தலைவர் ஆர்.கணேசன் கூறினார்.இப்போது அத்தொகுதி எம்பியாக இருப்பவர் பிஎஸ்எம்மின் டாக்டர் டி.ஜெயக்குமார். அவர்,…

நஸ்ரி: ஷாரிசாட் குடும்பத்தினர் ரிம250மில்லியனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) திட்டத்தில் சம்பந்தப்பட்ட மகளிர், குடும்ப, சமூக மேம்ப்பாட்டு அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலிலின் குடும்பத்தார் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ரிம250மில்லியன் கடனைத் திருப்பிக் கொடுத்திட வேண்டும். பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் இவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். அவரது தொகுதியான பாடாங் ரெங்காசில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி,…

மாபுஸ்: என்எப்சி ஊழலால் தேர்தல் தாமதமாகலாம்

நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன்(என்எப்சி) ஊழலால், அரசாங்கம் தேர்தலை விரைவில் நடத்தாமல் தள்ளிப்போடக் கூடும். பொதுத் தேர்தல் அடுத்த இரண்டு மாதங்களில் நடக்காது என்பதற்கு அதுவும் காரணம் என்கிறார் பாஸ் உதவித் தலைவர் மாபுஸ் ஒமார். “என்எப்சி விவகாரம் பேயாக வந்து அரசாங்க மற்றும் அம்னோ தலைவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதால் அரசாங்கம்…

“மிதவாத மலேசியா” என்ற கூற்றைக் கேலிசெய்யும் செயல், சார்ல்ஸ் சந்தியாகு

எம்பி பேசுகிறார்: தண்டனையிலிருந்து தப்பிக்க தம் நாட்டைவிட்டுத் தப்பியோடி வந்த ஒரு சவூதி அராபியரைப் பிடித்து அவரது நாட்டுக்கு - கொலைக்களத்து என்றுகூட சொல்லலாம் -  திருப்பி அனுப்பி வைத்ததன்வழி அவரது நம்பிக்கையை நாசமாக்கிவிட்டது மலேசிய அரசாங்கம். 23வயது பத்தி எழுத்தாளரான ஹம்சா காஷ்ஹாரி, நியு சிலாந்து செல்லும்…

ஒரே பராமரிப்பு: இன்னொரு சுற்று “கொள்ளை”

யோசனை தெரிவிக்கப்பட்டுள்ள ஒரே பராமரிப்புத் திட்டம் சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும் வரி வசூலிப்பு மூலம் அதற்காக உருவாக்கப்படும் பில்லியன் கணக்கான ரிங்கிட் நிதிகள் மீது அரசாங்கத்தை வரி செலுத்துவோர் நம்ப முடியாமல் இருப்பதாக சுகாதாரத் துறைக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறுகிறார்.…

“மன்னிப்பு தேவையில்லை;ரிம80 மில்லியனைத் திருப்பிக்கொடுங்கள்”

 "பிரதமர் அவர்களே,அம்னோ-பிஎன்னின் தோற்றத்தை உயர்த்திக்காட்ட ரிம80மில்லியனைச் செலவிட்டீர்களா?அது வரிசெலுத்துவோரின் பணம், அதுவும் கொஞ்சநஞ்ச பணமல்ல.”   பிபிசி-யைப் பின்பற்றி மன்னிப்பு கேளுங்கள்;நஜிப்பிடம் வலியுறுத்து பல இனவாதி: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மன்னிப்பு கேட்டால்  மட்டும் போதாது.அந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்காக செலவிடப்பட்ட பணத்தை ஈடுசெய்ய வேண்டும்.   ஜோ லீ:கதை…

இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரிம200 மில்லியன் என்னவாயிற்று?

கடந்த 2011  ஆம் ஆண்டு  அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் நிதி அமைச்சரும் மலேசிய பிரதமருமாகிய நஜிப் துன் ரசாக் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ரிம100  மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் தாக்குதலின்  போதும் இப்படி பல மில்லியன்…

ஹிஷாம்: தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கம் அல்ல

தங்கள் சொந்த நாடுகளில் தேடப்படுகின்றவர்களுக்கு மலேசியா பாதுகாப்பான சொர்க்கபுரியாக கருதப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே சவூதி அரேபியப் பிரஜையான ஹம்சா காஸ்ஹாரியை திருப்பி அனுப்ப அரசாங்கம் முடிவு செய்ததாக உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறுகிறார். "தங்கள் சொந்த நாடுகளில் தேடப்பட்டுகின்றவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பான சொர்க்கபுரியாகவும் இடையில் தங்கிச் செல்லும் நாடாகவும்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக உட்பூசலுக்கு முடிவு கட்டுங்கள் என ஸாஹிட்…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல் (பிஎன்) தனது  தோற்றத்தையும் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களுடைய தோற்றத்தையும் மேம்படுத்திக் கொள்வதற்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருப்பதாக தற்காப்பு அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். எனவே கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் தலைவர்களுக்கு இடையிலும் நிலவுகின்ற உட்பூசல்…

ரௌடிக் கும்பலை ஒடுக்கப் போலீசாருக்குத் துணிச்சல் இல்லை

"போலீசாரால் எதுவும் செய்ய முடியாது" என்ற சொற்றொடர் அந்தக் குண்டர்களுக்கு பாதுகாப்புச்சேவை அளித்ததைத் தவிர வேறு எதனையும் போலீசார் எதனையும் செய்ய விரும்பவில்லை என்பதைப் போலத் தொனிக்கிறது." "குண்டர்கள்'"தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்படது கலா: கிள்ளான் கம்போங் இடாமானில் பிப்ரவரி மாதம் 11ம் தேதி மாலை எம்எஸ்எம்…

குண்டர்கள் தாக்கியதால் இன்னொரு செராமா நிகழ்வு நிறுத்தப்பட்டது

கல்வித் துறை சுதந்திரம் மீது நேற்றிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செராமா நிகழ்வு ஒன்று ரௌடிகளினால் நிறுத்தப்பட்டது. கிள்ளான் கம்போங் இடாமானில் அந்த நிகழ்வு நடத்தப்படவிருந்த இடத்தை அந்த ரௌடிகள் நாசப்படுத்தியதுடன் அதனைச் சூழ்ந்தும் கொண்டனர். அந்த "குண்டர்கள்" செராமா தொடங்குவதற்கு முன்னதாக அந்த பல நோக்கு மண்டபத்தில் போடப்பட்டிருந்த…

பாஸ் கட்சியின் 2 மூத்த தலைவர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவர்

பாஸ் கட்சியின் அடிநிலைத் தலைவர்களுடைய ஆதரவு வலுவாக இருப்பதால் அந்தக் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டும் தலைவர் ஹாடி அவாங்-கும் வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடும். ஏற்கனவே தாம் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என அறிவித்துள்ள ஹாடி, தேர்தலுக்கு கட்சியை ஆயத்தம் செய்வதில்…

வழக்குரைஞர்கள் ஹம்சா காஷ்ஹாரி நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதில் தோல்வி கண்டனர்

டிவிட்டர் தகவல் தொடர்பில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பத்திரிக்கையாளர் ஹம்சா காஷ்ஹாரி-யை அதிகாரிகள் நாடு கடத்துவதைத் தடுக்கும் முயற்சியில் மனித உரிமை போராளிகள் தோல்வி கண்டுள்ளனர். இன்று காலையில் அந்தப் பத்திரிக்கையாளர் நாடு கடத்தப்படுவதை நிறுத்தும் இடைக்கால நீதிமன்ற உத்தரவை அதிகாரிகளிடம் வழங்குவதற்கால வழக்குரைஞர்கள் சுபாங் விமான நிலையத்துக்கு…

இண்டர்லோக் செயற்குழு (நியாட்) அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது!

கடந்த ஆண்டு இடைநிலைப் பள்ளிகளில் வரலாற்று நூலாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டர்லோக் நாவல் மலேசிய இந்திய சமுதாயத்தை மட்டுமன்றி சீனர்களையும் Read More

கேஎப்சி கைகலப்பு: யூ ட்யூப் வீடியோ தயாரிப்பாளர் எல்லாவற்றையும் சொல்கிறார்

வாடிக்கையாளர் ஒருவரை ஐசிட்டி கேஎப்சி ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படும் இரண்டு வீடியோக்களை யூ டியூப் இணையத் தளத்தில் சேர்த்த Jess6366 என்ற கணக்குக்குப் பின்னணியில் உள்ள நபர் அந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளார். அடையாளம் கூறவும் படம் எடுக்கவும் விரும்பாத அவர், சம்பவம் நிகழ்ந்த போது, தாக்கப்பட்டதாகக் கூறப்படும்…

“பிஎன்னிலிருந்து பலர் பக்காத்தானுக்குத் தாவலாம்”

பொதுத் தேர்தலில் பிஎன் அரசாங்கத்தின் பிடி தளருமானால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சிலராவது கட்சி தாவுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பங்சாரில், பொதுக்கொள்கை ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய கெராக்கான் இளைஞர் தலைவர் லிம் சி பின், தீவகற்பத்தில் பிஎன் கூடுதல் இடங்களை இழக்கும் பட்சத்தில் கட்சித்தாவல்…

டான்: WHO-அளவைவிட குறைவாக செலவிடும்போது 1பராமரிப்புத் திட்டம் எதற்காக?

அரசாங்கம் முன்வைத்துள்ள கட்டாய சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்பு, ஏற்கனவே கண்டனத்துக்கு இலக்காகியுள்ள வேளையில் இப்போது பன்னாட்டு அளவில் நிரணயிக்கப்பட்டுள்ள சில மதிப்பீட்டுஅளவுகளுடன் ஒப்பிடப்பட்டு மேலும் குறைகூறப்பட்டுள்ளது. பிகேஆரின் சுகாதாரப்பராமரிப்பு மீதான பேச்சாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் டாக்டர் டான் கீ குவோங், சுகாதாரப் பராமரிப்புக்காக உலக சுகாதார நிறுவனம்(WHO )…

அம்னோ ஊழல் குறித்து ஹசான் ஊமையாகவும் இருக்கிறார்; செவிடராகவும் இருக்கிறார்

"அம்னோவை பீடித்துள்ள ஊழல் பற்றியும் அந்தக் கட்சியை புற்றுநோயைப் போல அரித்துக் கொண்டிருக்கும் இனவாதம் பற்றியும் இதுவரை நீங்கள் எதுவுமே பேசவில்லை." பிகேஆர், டிஏபி-ய்டன் பாஸ் ஒத்துழைப்பதை ஹசான் அலி சாடுகிறார் முவாக்: முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி அவர்களே, நீங்கள் இஸ்லாத்துக்காகப் போராடினால் அம்னோவை…

மக்களிடம் பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என நஜிப்புக்கு அறைகூவல்

குறைந்த  வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் வழங்குவதையும் எல்லாப் பள்ளிக்கூட மாணவர்களுக்கும் 100 ரிங்கிட் அலவன்ஸ் கொடுப்பதையும் ஆண்டு நிகழ்வுகளாக மாற்றுமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நஜிப், தாம் மக்களுக்கு உண்மையிலேயே உதவி செய்ய விரும்புவதை நிரூபிக்க அவ்வாறு செய்ய வேண்டும். "தேர்தலில்…

பாஸ்: திரெங்கானு எம்பி, தாம் சொன்னதை மூன்று நாள்களில் திரும்பப்…

பாஸ் தன்னைப் பற்றி திரெங்கானு மந்திரி புசார் அஹமட் சைட் கூறியுள்ள கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளது. பாஸ்“மார்க்கத்திலிருந்து விலகிச் செல்லும் போதனைகளைக் கொண்ட கட்சி” என்று அஹமட் சைட் கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளிவந்துள்ளதாகக்…

ரோஸ்மாவுக்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று டாக்டர் பட்டத்தை வழங்குகிறது

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மான்சோருக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கர்ட்டின் பல்கலைக்கழகம் ( Curtin University ) இந்த வார இறுதியில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கவிருக்கிறது. அந்தத் தகவலை நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகமட் ஹசான் இன்று வெளியிட்டார். "அவரைப் பற்றி தவறான…