ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை

ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற Read More

வில்கிலீக்ஸ்: “என்ன விலை கொடுத்தாவது அன்வார் தண்டிக்கப்படலாம்”

"அன்வார் இப்ராஹிம் குறைந்த பட்சம் அடுத்த பொதுத் தேர்தல் வரையிலாவது அம்னோ ஆட்சி தொடருவதற்கு மருட்டலாக இருப்பார் என்னும் மதிப்பீட்டின் அடிப்படையில் அவர் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்படலாம். இவ்வாறு வில்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க அரசதந்திரக் கேபிள் தகவல் ஒன்று கூறுகிறது. பிரதமர் நஜிப் ரசாக்கும் அம்னோ ஆளும்…

கொலை நிகழ்ந்த இடத்தில் ரோஸ்மா இருக்க “சாத்தியமில்லை”

மங்கோலிய பெண் அல்தான்துயா கொல்லப்பட்ட இடத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் இருந்தார் என்று கூறப்படுவதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. மூன்றாண்டுகளுக்குமுன் அமெரிக்க அரசதந்திரி ஒருவர் வாஷிங்டனுக்கு அனுப்பிவைத்த இரகசிய ஆவணம் ஒன்று இவ்வாறு குறிப்பிட்டிருந்தது. அந்த ஆவணம், 2006 அக்டோபரில் அந்த மங்கோலிய…

உங்கள் கருத்து: மலேசியாவுக்கு வயது 48, 54 அல்ல

"மலேசியா 1963ம் ஆண்டுதான் தோற்றம் பெற்றது. அதனால் அதற்கு வயது 54 எனச் சொல்வது தவறு. அவ்வாறு கூறுவது மலேசியா உருவாவதற்கு சபாவும் சரவாக்கும் ஆற்றிய பங்கை அலட்சியம் செய்வதற்கு ஒப்பாகும்."      இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா நல்ல மனிதர்கள்: இது மாறுபட்ட விஷயமாக…

“சீனர்கள் ஒரங்கட்டப்படுகின்றனர்” என்ற தமது கருத்தில் ஒங் உறுதியாக நிற்கிறார்

இந்த நாட்டில் "சீன வம்சாவளியினர் ஒரங்கட்டப்படுகின்றனர்" என அமெரிக்க அரசதந்திரிகளிடம் தாம் கூறியதை முன்னாள் மசீச தலைவர் ஒங் தீ கியாட் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் தாம் சிறுபான்மை சீன சமூக உணர்வுகளை எடுத்துரைத்தாக  அவர் சொன்னார். "ஒரங்கட்டப்படுவது குறித்து சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ…

இணக்கப் போக்கை வலுப்படுத்துமாறு பக்காத்தானுக்கு அறிவுரை

பினாங்கில் வழக்கமாக பிகேஆர் போட்டியிடும் பல மலாய்ப் பெரும்பான்மைத் தொகுதிகள் மீது டிஏபி குறி வைத்துள்ளதாகக் கூறப்படுவதை அந்தக் கட்சி மறுத்துள்ளதை பினாங்கு பிகேஆர் வரவேற்றுள்ளது. அந்தச் சர்ச்சை எழுந்திருப்பதைத் தொடர்ந்து பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப் போக்கு குறைவாக இருப்பதை சரி செய்து ஒத்துழைப்பை வலுப்படுத்துமாறு…

விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்

"மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர். "விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது" என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்,…

இன அவநம்பிக்கைக்கு இடையில் 54வது மெர்தேகா

மலேசியர்கள் இன்று 54வது மெர்தேகாவைக் கொண்டாடுகின்றனர். இனங்களுக்கு இடையிலும் சமயங்களுக்கு இடையிலும் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில் வழக்கமான கோலாகலத்துடன் மலேசியர்கள் தேசிய தினத்தைக் கொண்டாடுகின்றனர். மலேசியா தனது பல பண்பாட்டு சமுதாயம் குறித்தும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பின்னணியில் சமயச் சுதந்திரம் பின்பற்றப்படுவது குறித்தும் பெருமை கொள்கிறது.…

மலேசியாவில் அம்னோபுத்ராக்களைத் தவிர மற்ற அனைவரும் ஒரங்கட்டப்படுகின்றனர்

 "மசீச, மஇகா, சபா, சரவாக்கில் உள்ள கட்சிகள் ஆகியவற்றின் சாதாரண உறுப்பினர்கள் தங்கள் கட்சிகளிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது."         வில்கிலீக்ஸ்: சீனர்கள் ஒரங்கட்டப்படுவதை மசீச ஒப்புக் கொள்ள முடியாது அபாசிர்: மசீச தலைவர்கள், மஇகா, கெரக்கான் தலைவர்களைப் போன்று அம்னோவிடமிருந்து விலகவே…

மந்திரி புசார்: ஜயிஸ் அறிக்கை தயாரிக்க மேலும் ஒரு மாதம்…

ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் நடைபெற்ற பல இன விருந்தில் தான் நடத்திய சோதனை பற்றி அறிக்கை வழங்குவதற்கு ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டுள்ளது. அந்தத் தகவலை மந்திரி புசார் காலித்…

உத்துசான் மலேசியா, பெர்காசா, எஸ்ஸாம் மீதான புகார்கள் என்னவாயிற்று?

பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு புக்கிட் கெப்போங் சம்பவம் பற்றி கூறிய கருத்துக்கு எதிராக 49 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதால், அவர் மீது விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படையின் துணைத் தலைவர் காலிட் அபு பகார் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி இதர போலீஸ் புகார்கள்…

அதிகாரத்தில் நிலைத்திருக்க பிஎன் சமய உணர்வுகளைத் தூண்டி விடுகிறது

"தாங்கள் அதிகாரத்தில் நிலைத்திருப்பதற்கு இன, சமய வெறுப்புணர்வை தூண்டும் அளவுக்கு அந்த அரசியல்வாதிகள் பொறுப்பற்றவர்களா?"     சிலாங்கூர் மந்திரி புசார்: முஸ்லிம் அல்லாதார் எதிரிகள் அல்ல ஜெர்னிமோ: நான் இந்த ஆண்டு என் முஸ்லிம் நண்பர்களுடைய வீடுகளுக்குச் செல்ல வேண்டுமா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை அல்லது…

விக்கிலீக்ஸ்: பக்காத்தான் சிலாங்கூரில் கீழ்படியாத அரசு ஊழியர்கள்

2008 மார்ச் பொதுத் தேர்தலில் நாட்டின் பணக்கார மாநிலத்தைக் கைப்பற்றிய பக்காத்தான் அரசாங்கம் பல மாதங்களுக்கு "கீழ்படியாத அரசு ஊழியர்களுடன்" பல சிரமங்களை எதிர்நோக்கியது. இவ்வாறு அமெரிக்க வெளியுறவுத் துறையிலிருந்து கசிந்த தகவல் ஒன்று தெரிவித்தது. அந்தத் தகவலுக்கு மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமாரை…

பிரதமர், “பாக் லா” கட்டத்துக்குள் நுழைகிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு விகிதம் சரிந்திருப்பதாக கூறும் கருத்துக் கணிப்புக்கள், பிரதமர் மீது வைக்கப்பட்டிருந்த நல்லெண்ண சேமிப்பு கரைந்து விட்டதைக் காட்டுவதாக டிஏபி ஆய்வாளாரான லியூ சின் தொங் கூறுகிறார். அவருக்கு முன்பு பிரதமராக இருந்த அப்துல்லா அகமட் படாவியைப் போன்று நஜிப்பின் செல்வாக்கும் சரிகிறது…

செல்வாக்கு சரிகிறது: அப்கோவையும் எப்பிசியையும் பிரதமர் தலை முழுக வேண்டும்

"ஆறு புள்ளி என்பது பெரிய விஷயமல்ல. 59 விழுக்காடு ஆதரவுடன் அவர் இன்னும் செல்வாக்காகவே இருக்கிறார். அவரது நிர்வாகத்தை இன்னும் ஆதரிக்கும் 59 விழுக்காட்டினருக்கு என்ன கோளாறு?"       நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியது ஜிஎச் கோக்: உண்மையில் அந்தக் கருத்துக்…

குத்தகைகளில் பூமிபுத்ராக்களின் ஆக்ககரமான ஈடுபாட்டை வரவேற்கிறோம், சேவியர்

பூமிபுத்ராக்களின் மேம்பாட்டிற்கு உதவும் ரீதியில் பிரதமரும், நிதியமைச்சருமான நஜிப் துன் ராசாக் மலேசிய விரைவு ரயில் சேவை நிர்மாணிப்புத் திட்டத்தில்  800 கோடி ரிங்கிட் பெறுமானமுள்ள குத்தகைகளை பூமிபுத்ரா நிறுவனங்களுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது.  இதனால் பூமிபுத்ரா நிறுவனங்கள் பொருளாதார ரீதியில் பயனடைவதுடன், விரைவு ரயில்  திட்டத்தின் தொழில் நுட்பங்களை…

ஒற்றுமையாக நோன்புப் பெருநாளை கொண்டாடுவோம், சார்ல்ஸ் சந்தியாகோ

கடந்த சனிக்கிழமை கம்போங் ராஜா ஊடாவிலுள்ள போர்ட் கார்டன் மசூதியில், நமது முஸ்லிம் சகோதர சகோதிரிகளோடு ஒன்றிணைந்து நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற சார்ல்ஸ் சந்தியாகோ. அந்நிகழ்ச்சியில் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் ஏழை எளிய முஸ்லிம்களுக்கும் பெருநாள் அன்பளிப்பும் வழங்கப்பட்டது. விலை வாசி ஏறிக்…

பெர்சேயின் கோரிக்கைக்கு 88 விழுக்காட்டினர் ஆதரவு

மெர்தேக்கா கருத்து ஆய்வு மையம் மேற்கொண்ட ஓர் ஆய்வில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட மலேசியர்கள் தேர்தல் சீர்திருத்தத்திற்கான குழு பெர்சே 2.0  இன் கோரிக்கைகளை ஆதரிப்பது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் 11க்கும் 27 க்கும் இடையில் 1,207 பேர்களுடன் நடத்திய ஆய்வில் பெரும்பான்மையான மலேசியர்கள் - 88 விழுக்காட்டினர்…

புக்கிட் கெப்போங்:மலாய் நாளேடுகள் மாட் சாபுவை வருத்தெடுக்கின்றன

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்முனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை வீரர்களாகக் காண்பிக்கப் பார்க்கிறார் என்று சொல்லி  மலாய் நாளேடுகள் அவரை வன்மையாகக் கண்டித்துள்ளன. மாட் சாபு என்ற பெயரில்  பிரபலமாக விளங்கும் முகம்மட் சாபு, ஆகஸ்ட் 21-இல் பினாங்கு தாசேக் குளுகோரில் ஆற்றிய உரைதான்…

செபுத்தே எம்பி-யின் எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யும் முயற்சியில் உத்துசான் தோல்வி…

செபுத்தே எம்பி தெரெசா கோக், 2008ம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து தெரிவித்த கருத்து மீது அவருக்கு எதிராக தான் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருடைய எதிர்வாதத்தை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் மிலாயு (எம்) பெர்ஹாட் கோலாலம்பூர்…

“கம்யூனிஸ்ட் வீரர்கள்” செய்திக்காக மாட்ச் சாபு உத்துசான்மீது வழக்கு

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, 1950 ஆம் ஆண்டு நிகழ்ந்த புக்கிட் கெப்போங் சம்பவத்தில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்கார்களைத் தாம் புகழ்ந்து பேசியதாக செய்தி வெளியிட்ட உத்துசான் மலேசியாவைக் கடுமையாகச் சாடினார். ஆகஸ்ட் 21-இல், பூலாவ் பினாங், தாசெக் குளுகோரில் தாம் ஆற்றிய உரையை அம்னோவுக்குச் சொந்தமான அந்நாளேடு …

நஜிப்பின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்துள்ளன (விரிவாக)

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் செல்வாக்கு 6 புள்ளிகள் சரிந்து 59 விழுக்காடாகியுள்ளது. சுயேச்சையாக கருத்துக் கணிப்புக்களை நடத்தும் மெர்தேகா மய்யம் அதனைத் தெரிவித்துள்ளது. Read More