விக்கிலீக்ஸ்:சீனர்கள் ஓரங்கட்டிருப்பதாக மசீசவால் ஒப்புக்கொள்ள முடியாது

"மசீசவினர் அமெரிக்க அரசதந்திரிகளைத் தனிப்பட்ட முறையில் சந்தித்தபோது மலேசியாவில் சீனர்கள் ஓரங்கட்டப்படுவதை ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும்,  அரசாங்கத்தையும் அதன் காரணமாக அம்னோவையும் ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்களால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளமுடியாது என்றார்கள். இத்தகவல் அமெரிக்காவுக்கு  கோலாலம்பூரில் உள்ள அதன் தூதரகம் அனுப்பிவைத்த இரகசிய ஆவணமொன்றில் அடங்கியிருந்தததாக  அரசாங்கங்களின்…

டாக்டர் மகாதீர்: உண்மையான மனிதராக நடந்து கொள்ளுங்கள்

 "மகாதீர் அவர்களே, பிரச்னையைத் தொடக்கி வைத்ததே நீங்கள்தான். நீங்கள் துணிச்சலாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர் மீது பழி போடக் கூடாது."         டாக்டர் மகாதீர்: முறையைக் குறை சொல்ல வேண்டாம். தலைவர்கள் மீது பழி போடுங்கள் டாக்ஸ்: தலைவர்கள் செய்த தவறு.…

அனைத்தையும் அழித்து விடும் கொள்கையை அம்னோ பின்பற்றுகிறது

"தங்களது சமயத்தைத் 'தற்காக்க' ஒன்றுபடுமாறு மலாய்க்காரர்களைத் தூண்டுவதே அதுவாகும். அரசியலைப் பொறுத்த வரையில் இது ஆபத்தான விளையாட்டு."         டிஏபி: ஆர்டிஎம்-மின் 'முர்தாட்' அறிக்கைப் பொறுப்பானவர்களை நீக்குங்கள் அடையாளம் இல்லாதவன்: நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிலையத்தில் அது போன்ற குப்பை ஒளியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது வெறுப்பைத்…

உலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.…

பினாங்கு வாக்காளர் பட்டியலில் மேலும் “தவறுகள்”

பினாங்கு டிஎபி ஒரே மாதிரியான அடையாளக் கார்டு எண்களைக் கொண்ட பல வாக்காளர்களைக் கண்டு பிடித்துள்ளது. அவர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என அது அஞ்சுகிறது. 90 வயதுக்கும் மேற்பட்ட பலர் இன்னும் உயிருடன் இருந்தும் அவர்களுடைய பெயர்கள் பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ளதையும் அந்தக் கட்சி கண்டு பிடித்துள்ளது. பத்து…

பிகேஆர்: டிஎபி “அம்னோவைப் போன்று தலைக்கனம்” கொண்டிருக்கக் கூடாது

டிஎபி சார்பில் மலாய் வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கு உதவியாக தனது தோழமைக் கட்சியான பிகேஆர்-டமிருந்து அதிகமான இடங்களை டிஎபி கோரியுள்ளது. அதனை பினாங்கு பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஜொஹாரி ஹஷிம் கண்டித்துள்ளார். 13வது பொதுத் தேர்தல் விரைவில் நடத்தப்படாலும் என்னும் ஊகங்கள் அதிகரித்துள்ள வேளையில் டிஎபி மலாய் தலைவர்…

டோனி டான் சிங்கப்பூரின் புதிய அதிபர்

சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் டாக்டர் டோனி டான் இன்று சிங்கப்பூரின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். வாக்குகள் இரண்டாவது முறையாக எண்ணப்பட்டப் பின்னர் மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. ஆளுங்கட்சியான மக்கள் செயல் கட்சியைப் பிரதிநிதிப்பவர் என்று கருதப்படும் 71 வயதான டோனி…

நாம் இழந்ததை ஓர் அந்நியர் நினைவுபடுத்த வேண்டியுள்ளது!

 "பிஎன் மூத்த அரசியல்வாதிகளுக்கு பல அம்சங்கள் பணயம் வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தோல்வி கண்டால் அவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவார்கள். அதில் அவர்களுடைய சுதந்திரமும் அடக்கம்."     தேர்தல் சீர்திருத்தம்: மலேசியாவின் நிலை என்ன? நிக் வி: நமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கு முன் வைத்துள்ள வாதங்களுக்காக மலேசியாவுக்கான முன்னாள்…

டிவி 3 பற்றி ஹிஷாம் ஒன்றும் செய்யமாட்டார் என எதிர்பார்க்கலாம்

 "பொய்யான செய்தியை வெளியிட்டதற்காகவும் கிறிஸ்துவ சமூகத்துக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டி விட்டதற்காகவும் டிவி 3ஐ அழைத்து அதனை உள்துறை அமைச்சர் கண்டிப்பாரா?         டிவி 3 மதம் மாற்றச் செய்தி பொய் என்கிறது ஒர் என்ஜிஒ அப்டூயூ:  தகராற்றை உருவாக்குகின்றவர்கள் மீது அதிகாரிகள் கடும்…

மதம் மாற்றம் தொடர்பான டிவி 3 செய்தி பொய்

கோலாலம்பூர் ஜாலான் கிள்ளானில் உள்ள டியூசன் மையம் ஒன்று முஸ்லிம்களைக் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்ற முயற்சி செய்வதாக  டிவி 3 வெளியிட்ட செய்தி ஜோடிக்கப்பட்டது என குற்றம் சாட்டி அரசு சாரா அமைப்பு ஒன்று போலீசில் புகார் செய்தது. அந்த மையத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அது வெளியிட்ட செய்தியில்…

பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும், மலாய் டிஏபி தலைவர்

பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் டிஏபியில் உள்ள மலாய் வேட்பாளர்களுக்காக பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று  டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர் வேண்டிக்கொண்டார்.…

தாய்மொழிக்கல்வி மேம்பாட்டிற்கு தமிழ் அறவாரியமும் எல்எல்ஜியும் கைகோர்க்கின்றன

பல்லின நாடான மலேசியாவில் தாய்மொழிக் கல்வி நிலைத்திருப்பதையும் மேம்பாடு காணுவதையும் உறுதி செய்வதற்கு மலேசிய தமிழ் அறவாரியமும் லிம் லியன் கியோக் கலாசார மேம்பாட்டு மையமும் ( எல்எல்ஜி ) கூட்டாகச் செயல்பட இணக்கம் தெரிவித்தன. அவ்விரு அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்று இரவு கோலாலம்பூரில் தமிழ் அறவாரியத்தின் அலுவலகத்தில்…

பெர்சே: உங்கள் வாக்காளர் தகுதியைச் சரி பாருங்கள்

வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் அண்மைய காலமாக அம்பலமாகி வருவதைக் கருத்தில் கொண்டு தங்களது நோன்புப் பெருநாள், தேசிய நாள் விடுமுறையைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வாக்காளர் தகுதியைச் சரி பார்த்துக்  கொள்ள வேண்டும் என பெர்சே 2.0 அமைப்பு மலேசியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளது. பெரும்பாலும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படும்…

வாக்காளர் பதிவு: ஒரே ஒரு புள்ளிவிவரக் களஞ்சியம் மட்டும் இருக்கட்டும்

"அடுத்தடுத்து காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது எப்போது நிற்கும்? அதற்கான தீர்வு மிக எளிது. ஆனால் அது ஏன் அமலாக்கப்படவில்லை என்பது எனக்கு வியப்பைத் தரவில்லை."         வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைக் கண்டு பதிவு செய்யாதவர்கள் அதிர்ச்சி கோமாளி: இசி என்ற தேர்தல் ஆணையம்…

பழனிவேல் தமது அமைச்சரவைக் கடமைகளை தெரிவித்துள்ளார்

மலேசிய நிர்வாக நவீன மய, நிர்வாகத் திட்டப் பிரிவு (மாம்பு) தேசியப் பொது நிர்வாகப் பயிற்சிக் கழகம் (இந்தான்) பொதுப் புகார்ப் பிரிவு (பிசிபி) ஆகியவை தமது பொறுப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் துறை அமைச்சர் ஜி பழனிவேல் தெரிவித்துள்ளார். "நான் சிறப்புப் பணிகளையும் கவனித்துக் கொள்வேன். செப்டம்பர்…

தேர்தல் சீர்திருத்தம்: மலேசியா நிலை என்ன? ஜான் ஆர் மெல்லட்

மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள், அவற்றுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எதிர்ப்பு அறிக்கைகள் பற்றியது இந்த இரண்டாவது கட்டுரை ஆகும்.     வெளிநாட்டில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதியுங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி…

‘ஹாருஸ்ஸானி அறிக்கை பக்காத்தான் குற்றமற்றது என்பதை மெய்பித்துள்ளது’

மலாய் ஒற்றுமை சீர்குலைவுக்கு அரசாங்கமே காரணம் என்று நேற்று பேராக் முப்தி ஹாருஸ்ஸானி ஸாக்காரியா கூறியிருந்தார். அதனை வரவேற்ற பிகேஆர், மலாய் சமூகத்தில் பிளவு ஏற்பட்டதற்கு பக்காத்தான் ராக்யாட் காரணம் என ஆளும் கூட்டணி சுமத்தி வந்த பழியிலிருந்து அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியை அகற்றி விட்டதாக கூறியது. Read…

வெளிநாட்டு அஞ்சல் வாக்குகள்- மாற்றங்கள் செய்ய 2 மாதங்கள் தேவை

வெளிநாடுகளில் வாழ்கின்ற அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குமுறையை விரிவு செய்வதற்கான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அமலாக்க விரும்பினால் அது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உத்தேசத் திருத்தங்களை யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மை ஒவர்சீஸ் வோட் ( MyOverseasVote) என…

அம்னோவுக்கே முதல்வர் பதவி என்பது இனவாதம், கெராக்கான்

‘பினாங்கை பிஎன் வெற்றிகொண்டால் முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவோரை கெராக்கான் சாடியுள்ளது. அப்படிச் சொல்பவர்கள் பினாங்கின் அரசியல் நிலவரம் அறியாதவர்கள் என்று பினாங்கு கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான் கூறினார். அவர்கள் “உண்மை நிலை அறியாது இனவாத கோணத்தில் பேசுகிறார்கள்”என்றாரவர். “இன்றைய நிலையில்…

“வெளிநாடு வாழ் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு”

வாக்காளர் பட்டியலில் பல கோளாறுகள் அம்பலமாகும் வேளையில் வாக்காளர் பதிவு முறை கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தாங்கள் ஒரு போதும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனக் கூறும் இருவர் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில்…

தலைமை நீதிபதி: அம்னோவுக்கு ஆதரவாக இருந்ததில்லை

அடுத்த மாதம் பணி ஓய்வுபெறும் தலைமை நீதிபதி ஸாக்கி அஸ்மி, 2008 அக்டோபரில் பதவியேற்றது முதல் அம்னோ சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்ததில்லை அவற்றில் தலையிட்டதுமில்லை என்கிறார். இன்று சீனமொழி நாளேடான சின் சியு டெய்லியில் வெளிவந்துள்ள சிறப்பு நேர்காணலில் ஸாக்கி, தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற நாளில் அம்னோ சம்பந்தப்பட்ட…

மலேசியன் இன்சைடருக்கு எதிராக தாஜுடின் ரிம200மி. வழக்கு

மலேசிய விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தாஜுடின் ரம்லி, மலேசியன் இன்சைடர் செய்தித்தளத்துக்கு எதிராக ரிம200 மில்லியன் வழக்கைப் பதிவு செய்துள்ளார். Read More