பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் ஒழுங்கு நிலை நிறுத்தப்படும்…

அடுத்த பொதுத் தேர்தலின் போதும் அதற்குப் பின்னரும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அரசாங்கம் என்ன விலை கொடுத்தாவது அமைதியையும் ஒழுங்கையும் நிலை நிறுத்தும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று வாக்குறுதி அளித்துள்ளார். ஒழுங்கை நிலை நிறுத்தும் போது போலீசார் பாகுபாடு காட்ட மாட்டார்கள் என்றும்…

பினாங்கு பிஎன் பொதுத் தேர்தலுக்கு உச்சக் கட்ட வேகத்தில் ஆயத்தமாகிறது

பினாங்கு பிஎன் 13வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. அது மாநிலத்தில் அனைத்து மூலை முடுக்குகளிலும் "போர் முரசு" கொட்டத் தொடங்கியுள்ளது. அந்த ஏற்பாடுகளில் அனைத்து தொகுதிகளும் அவற்றின் தலைவர்களும் சம்பந்தப்பட்டிருப்பர் என மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறினார். பிஎன் திட்டங்கள் பற்றியும் வியூகங்கள்…

பிடிபிடிஎன் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம் என்கிறார் அன்வார்

"திருப்பிக் கொடுக்காதீர்கள், அவர்கள் விரும்பினால் உங்கள் மீது வழக்குப் போடட்டும். ஆனால் நீங்கள் மற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். பிடிபிடிஎன் கடனுக்கு அவசியமில்லை." கடந்த சனிக்கிழமை இரவு தமது கோட்டையான பெர்மாத்தாங் பாவ்-வில் கூடிய 10,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் விடுத்த செய்தி…

‘நான் பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு “ஊக்கத்தை” (‘motivating’) மட்டுமே அளித்தேன்

தூய்மையான நியாயமான தேர்தல்களுக்கான பெர்சே 3.0 பேரணி நிகழ்ந்து ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால் அதன் தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மீது விழுந்த தூசி இன்னும் போகவில்லை. அந்தப் பேரணிக்குப் பிந்திய சர்ச்சைகளில் அஸ்மின் தலை உருண்டது. அவர் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டி விட்டு…

ஸ்கார்ப்பியோன் விசாரணை: ‘அரசாங்க மௌனம் அதனை ஒப்புக் கொள்வதற்கு ஒப்பாகும்’

ஸ்கார்ப்பியோன் நீர்மூழ்கிக் கொள்முதல் ஊழல் தொடர்பாக நடத்தப்படும் பிரஞ்சு விசாரணையில் இந்த  நாட்டுக்கு எதிராக அண்மையில் கூறப்பட்ட பல குற்றச்சாட்டுக்கள் மீது தொடர்ந்து மௌனமாக இருப்பது, அந்தக் கூற்றுக்களுக்கு ஆதாரம் இருப்பதற்கான அறிகுறி என டிஏபி பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ கூறுகிறார். "சட்ட அடிப்படையில் பார்த்தால்…

அம்னோ பணமும் உணவும் கொடுக்கிறது, பாஸ் நம்பிக்கையைக் கொடுக்கிறது

"துணைப் பிரதமர் அவர்களே நீங்கள் சொல்வது போல அம்னோ நல்ல நிலையில் இருந்தால் தேர்தலை இப்போதே நடத்துங்கள். புத்ராஜெயா வீழ்ச்சி காண்பதை காணுங்கள்." கெடா பாஸ் பேரணியில் பங்கு கொண்டவர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறுகிறார் முஹைடின் சுதந்திரமான நியாயமான தேர்தல்: எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது- அண்மையில் அம்னோ…

13வது பொதுத் தேர்தலுக்கு பின்னர் கலவரத்தில் ஈடுபடப் போவதில்லை என…

"அம்னோ தோல்வி கண்டால் எதுவும் நடக்கும் என்பதை நான் வரலாற்றிலிருந்து அறிந்து கொண்டிருப்பதால் அந்தக் கட்சியின் கோமாளிகள் வன்முறையில் இறங்க மாட்டார்கள் என நஜிப் வாக்குறுதி அளிக்க முடியுமா?" பொது ஒழுங்கைச் சீர்குலைக்கும் முயற்சிகளை  அரசாங்கம் முறியடிக்கும் என பிரதமர் சூளுரை சின்ன அரக்கன்: தங்கள் பிரச்னைகள் மீது…

இணைய சுதந்திரம் பற்றி மீண்டும் சிந்திக்குமாறு மகாதீர் வேண்டுகோள்

இணையம் மீது அரசாங்கத்துக்கு போதுமான கட்டுப்பாடுகள் இல்லாதது பற்றி மீண்டும் சிந்திக்குமாறு இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டுள்ளார். நியூ சண்டே டைம்ஸ் ஏட்டுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். மகாதீர், இணையத் தணிக்கை ஏதும் இருக்காது என்பதை உறுதி…

துணைப் பிரதமர்: பெர்சே 3.0 பொதுத் தேர்தலுக்குப் பிந்திய குழப்பத்துக்கு…

பக்காத்தான் ராக்யாட் அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வி கண்டால் வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ள கருத்தை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆதரிக்கிறார். கோலாலம்பூரில் பிஎன் தேர்தல் எந்திரத்தை முடுக்கி வைத்துப் பேசிய அவர்," பெர்சே 3.0 பேரணி தேர்தலுக்குப்…

பரம்பரை அரசியல் வேண்டாம் என அஸ்மின் பிகேஆர்-க்கு அறிவுரை

14 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனி மனிதனுடைய அரசியல் போராட்டத்தின் விளைவாக உதயமானது பிகேஆர் கட்சி ஆகும். அது இன்னமும் அந்த மனிதரான கட்சியின் மூத்த தலைவரான அன்வார் இப்ராஹிமையே வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியில் அன்வார் மனைவி டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் கட்சித்…

அவர்களை ‘வெற்றி’ கொள்ள முடியாவிட்டால் ‘உதையுங்கள்’- அது தான் அம்னோ…

"அரசியல் எதிரிகளையும் சிவில் சமூக அமைப்புக்களையும் அச்சுறுத்துவது அளவுக்கு அதிகமாகச் சென்று விட்டதாக நான் எண்ணுகிறேன். வெறுப்பையூட்டும் அந்த நடவடிக்கை அம்னோ அரசியல் கலாச்சாரமாகி விட்டதாகத் தோன்றுகிறது." மோட்டார் சைக்கிளோட்டிகள் அஸ்மின் வீட்டை வலம் வருகின்றனர் விஜார்ஜ்மை: பக்காத்தான் ராக்யாட் போராளிகளை அடிபணிய வைப்பதற்கு அம்னோ பயன்படுத்தும் புதிய…

பசிக்கிறப் பிள்ளைக்கு மிட்டாய் பொம்மை, கரையான் அரித்தப் பள்ளிக்கு மாதிரி…

  நாம்  அவசரம் காட்ட வேண்டிய விசயங்களில் பாரிசானை அரசியல் நடத்த அனுமதிக்ககூடாது. புதிய ஆறு தமிழ்ப்பள்ளிகள் மீது  பிரதமரின் அறிவிப்பை மீண்டும் –மீண்டும் அமைச்சர்கள் மாறி-மாறி அறிவிப்பு செய்வதிலும், தமிழ்ப்பள்ளிகளுக்கான 100 மில்லியன் ரீங்கீட் மானியத்திற்கான மாதிரி காசோலைகளை எல்லா இந்தியச் சமுதாய நிகழ்வுகளிலும் காட்டி இந்தியச் …

இசா கைதிகள் தங்கள் தலைவிதியை அறிந்து கொள்ள இன்னும் ஒரு…

பேராக் கமுந்திங்கில் உள்ள இசா என்ற உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதிகள், தாங்கள் சட்ட ரீதியாக குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்க வேண்டுமா அல்லது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்களா என்பதை அறிந்து கொள்ள இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அந்த மய்யத்தில் உள்ள 45 கைதிகளுடைய நிலையை மறு…

அகோங்: தேசிய நலனைக் கட்சிக்கு மேலாகக் கருதுங்கள்

மக்கள் பொது நன்மைக்காக ஒன்றுபட வேண்டும் என யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் மூவாட்ஸாம் ஷா கேட்டுக் கொண்டுள்ளார்.மக்கள் ஒருவருக்கு ஒருவர் பகைமை கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அத்தகையப் பகை உணர்வு கால ஒட்டத்தில் அனைவருக்கும் பாதிப்பைக் கொண்டு வந்து விடும்…

அரசு சாரா அமைப்பு: ஷாரிஸாட் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டுள்ளது எம்ஏசிசி-யின்…

முன்னாள் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தின் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்துக்கு கால்நடை வளர்ப்புத் திட்டம் வழங்கப்பட்டதில் அந்த அமைச்சர் சம்பந்தப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது, அம்னோ/பிஎன் ஊழல்களை தூய்மைப்படுத்துவதில் மட்டுமே அந்த ஊழல் தடுப்பு நிறுவனம் ஈடுபடுகிறது என்பதைக் காட்டுவதாக அரசு சாரா அமைப்பு…

அறிவிப்பாளர் மறைவாக இருப்பதை தாயிப் எதிர்ப்பு வானொலி உறுதிப்படுத்துகிறது

சரவாக் விடுதலை வானொலி அறிவிப்பாளர் பீட்டர் ஜான் ஜாபான், விசாரணைக்காக போலீசார் தம்மை கைது செய்யக் கூடும் என அஞ்சி மறைவாக வாழ்வதாக அந்த வானொலி கூறியுள்ளது. ஜாபானிடமிருந்து தனக்கு இது வரையில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அந்த வானொலி நிலையம், அந்த அறிவிப்பாளர் தற்போது…

முன்னாள் ஐஜிபி மூசா அவர்களே, அல்தான்துயா கொலைக்கான நோக்கம் என்ன…

"அன்வார் அதனைச் செய்ததாக சொல்லலாமே ? எல்லாவற்றுக்கும் மேலாக மூசாவைப் போன்ற நிபுணர்கள் அதற்கான சாட்சியங்களை மிக எளிதாக ஜோடித்து விடலாமே?" அல்தான்துயா கொலை: நஜிப் சம்பந்தப்படவில்லை என நான் பாக் லா-விடம் கூறினேன் வேட்டைக்காரன்: மக்களிடம் பொய் சொல்லி குற்றவாளிகளை பாதுகாக்க முடியும் எனமுன்னாள் தேசியப் போலீஸ்…

அமைச்சர்கள் தங்கள் குடும்ப விண்ணப்பங்கள் பற்றி அறிவிக்க வேண்டும் என…

அமைச்சர்களுடைய குடும்பங்கள் அரசாங்கக் குத்தகைகள் அல்லது எளிய கடன்களுக்கு விண்ணப்பிக்கும் Read More