வேலைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்

கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தினர். நாட்டில் இருபது இடங்களில் நடந்த தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்னின்று நடத்தியது. சட்டத் திருத்தத்தின் பல்வேறு பகுதிகளுக்கு,…

BN-இன் ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும்

அக்டோபர் 6 இல் நாடாளுமன்றம் தொழில் சட்டத்தில்  மாற்றங்கள் கொண்டுவர ஏற்றுக்கொண்ட மசோதாவை மீட்டுக்கொள்வதே சிறந்தது என்கிறார் சுவராம் என்ற மனித உரிமை கழகத்தின் தலைவரான கா. ஆறுமுகம். தொழிலாளர்களின் உரிமைகளுக்கு சாவு மணி அடிக்கும் தன்மை கொண்ட இந்த மாற்றங்கள், தொழிலாளர்களை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ஜடப்பொருட்களாக மாற்றி,…

பக்காத்தான் பதிவு: ஆர்ஓஎஸ் “பொய்சொல்கிறது”

பக்காத்தான் ரக்யாட்டைப் பதிவு செய்ய புதிதாக விண்ணப்பம் செய்யப்படவில்லை என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கூறியிருப்பதை அக்கூட்டணி மறுத்துள்ளது. சொல்லப்போனால், மார்ச் மாதத்திலிருந்து அது பதிவகத்தை விரட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்று பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் குறிப்பிட்டார். கடந்த ஆண்டு நவம்பரில், பக்காத்தான் இடைக்காலத் தலைவர்…

மாட் சாபு தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்ய உத்துசான் விண்ணப்பம்

புக்கிட் கெப்போங் கம்யூனிஸ்ட் விவகாரம் மீது வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றின் தொடர்பில் பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு தொடுத்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உத்துசான் குழுமத்தின் தலைமை ஆசிரியரும் உத்துசாம் மிலாயு (மலேசியா) சென் பெர்ஹாட்டும் செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நவம்பர் 23ம்…

குடிநுழைவுத்துறை அதிகாரிகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முயன்றார்களா என்று விசாரணை

மனிதக் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட குடிநுழைவுத்துறை அதிகாரிகள் எண்மர்மீது இப்போது 2001ஆம் ஆண்டு பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பயங்கவாதத்துக்கு நிதியளித்தல் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. இதனைத் தெரிவித்த உள்துறை அமைச்சு, ஓராண்டுக்காலம் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அந்த அதிகாரிகள்மீது ஏற்கனவே அவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த…

யூரோ நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கத்தின் 6 பில்லியன் ரிங்கிட் ஊக்குவிப்புத்…

மலேசியப் பொருளாதாரம் ஐரோப்பிய கடன் நெருக்கடியின் தாக்கத்தைச் சமாளிப்பதற்கு உதவியாக 6 பில்லியன் ரிங்கிட் பெறும் ஊக்குவிப்புச் செலவுத் திட்டத்தை தயாராக வைத்துள்ளது. இவ்வாறு இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கூறியிருக்கிறார். "நாங்கள் இடிதாங்கியை வைத்துள்ளோம்- வரவு செலவுத் திட்ட ஏற்பாடுகளின் கீழ் 6 பில்லியன்…

மனோகரன் எம்பி தமிழ்ப்பள்ளிகள் குறித்து மக்களவையில் கேள்வி

தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Y.B. எம். மனோகரன் தமிழ்ப்பள்ளி குறித்து மக்களவையில் நேற்று (02.11.2011) கேள்வியெழுப்பினார். மனோகரன்  கல்வி அமைச்சரிடம் எழுப்பிய வாய்மொழியான கேள்விகளும் அக்கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் முகைதின் யாசின் அளித்த பதில்களும் பின்வருமாறு: கேள்வி : 1. 1960 தொடக்கம் 2011-ம் ஆண்டு வரை நாட்டின்…

முஹைடின்: “ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களை போதிப்பது என்பது முடிந்து…

ஆங்கிலத்தில் அறிவியல், கணித பாடங்களைப் போதிக்கும் கொள்கையைத் தொடருவதில்லை என்ற முடிவு இறுதியானது என கல்வி அமைச்சர் முஹைடின் யாசின் கூறியிருக்கிறார். ஆகவே அந்தக் கொள்கையை தொடர்ந்து நிலை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோட்கள், ஈராண்டுகள் காலம் கடந்தவை என துணைப் பிரதமருமான முஹைடின் சொன்னார். "2009ம் ஆண்டு…

“காமன்வெல்த் மாநாட்டின் போது நஜிப் புதல்வி பெர்த்தில் இல்லை”

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்-தில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டின் போது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் புதல்வி அங்கு இருந்ததாக கூறப்படுவதை பெர்த்-தில் மலேசியத் துணைத் தூதர் ஹமிடா அஸ்ஹாரி மறுத்துள்ளார். நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…

துணைப்பிரதமர்: சீன வணிகர்களின்றி மலேசியா இன்றைய நிலையை அடைந்திருக்க முடியாது

துணைப் பிரதமர் முகைதின் யாசின், மலேசியாவின் வளர்ச்சிக்குப் பெருமளவு பங்காற்றியுள்ளதாக சீனர்களின் வணிகச் சமூகத்தை வாயாரப் புகழ்ந்துள்ளார். “நீண்ட காலமாக உள்ளூர் சீன வணிகர்கள்தாம் நம் நாட்டின் தலையாய முதலீட்டாளர்களாக இருந்துள்ளனர் என்று தாராளமாகக் கூறலாம். அவர்கள் இல்லையென்றால் மலேசியா இன்றைய நிலையை எட்டியிருக்க முடியாது.” இன்று செர்டாங்கில்,…

சட்ட அமைச்சருக்குச் சட்டம் தெரியவில்லை

 உங்கள் கருத்து : “நஸ்ரி கூறியது நீதிமன்றத்தை அவமதிப்பதாகுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது மடத்தனமான கூற்று என்பது மட்டும் உண்மை. அதற்காக அவரைக் கூண்டில் நிறுத்த முடியுமா?” சட்ட அமைச்சர்: நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தாலும் யுயுசிஏ-இல் மாற்றமில்லை ஜோக்கர்: என்ன ஓர் அபத்தமான கருத்தைச் சொல்லியிருக்கிறார் நடப்பில் சட்ட…

மசீச தலைமையகத்தில் சிவப்புச் சாயம் வீசப்பட்டது

கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச தலைமையகக் கட்டிடத்தில் சிவப்புச் சாயம் வீசப்பட்டுள்ளது இன்று காலை கண்டு பிடிக்கப்பட்டது. கீழ்த் தளத்தில் உணவு விடுதி அமைந்துள்ள இடத்துக்குப் பின்புறமுள்ள பக்க நுழைவாயிலுக்கு அருகில் தரையிலும் சுவரிலும் சிவப்புச் சாயம் வீசப்பட்டிருந்தது. அந்த இடத்தில் சாயம் வீசப்பட்டுள்ளதை இன்று காலை…

கொள்கை மாற்றம் மீது ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கணக்கான மாணவர்கள்…

யூபிஎஸ்ஐ என்ற சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான கல்விப் பட்டப்படிப்பு மாணவர்கள், தங்களுக்கு வேலைகள் உறுதியற்றதாக இருக்கும் சூழ்நிலை குறித்து நேற்று ஆட்சேபம் தெரிவித்தனர். Gabungan Bertindak Mahasiswa, முஸ்லிம் பட்டப்படிப்பு மாணவர் இயக்கம், தீவகற்ப மலாய் மாணவர் சங்க சம்மேளனம்,  Legasi Mahasiswa Progresif,…

கல்வியாளர் அணிவகுப்பு: உங்கள் மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

'ஈவிரக்கமற்ற அரசியல்வாதிகள் தில்லுமுல்லு செய்யும் பல விஷயங்களை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை கல்வி கற்ற மலாய்க்காரர்கள் வெளிப்படுத்தினால் மட்டுமே இந்த நாட்டுக்கு விமோசனம் கிடைக்கும்' புத்ராஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் யோசனை பெண்டர்: நமது கல்வியாளர்கள் நீண்ட காலமாக 'உணவைத் தேடும்'  (cari makan) கொள்கையைப் பின்பற்றி…

எம்டியுசி மறியல் போராட்டம்: என்யுபிடபுள்யு ஆதரிக்காது

அக்டோபர் 7 இல் நாடாளுமன்றம் சட்டமாக்கிய "ஏற்றுக்கொள்ள முடியாத" வேலைச் சட்டத்திற்கான திருத்தங்களுக்கு எதிராக நாளை மறியல் போராட்டத்தில் இறங்குவதற்கு மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) தாயாராக இருக்கிறது. அந்த மறியல் போராட்டத்தில் எம்டியுசியில் அங்கம் பெற்றுள்ள 200க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்களில் எத்தனை பங்கேற்கும் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில்,…

பெர்க்காசா: அம்பிகாவுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்

வழக்குரைஞர் அம்பிகா ஸ்ரீனிவாசனை “dajal” என வருணித்துள்ள மலாய் வலச்சாரி போராட்ட அமைப்பான பெர்க்காசா, "ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதின் மூலம் தவறான போதனைகளை மேம்படுத்துவதற்காக" அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளது அம்பிகா மனித உரிமைகளை இணைக்கும் அதனுடன் ஒரினச் சேர்க்கைக்கு ஊக்கமூட்டும் "புதிய சமயத்தை"…

புத்ரா ஜெயாவுக்கு அணிவகுத்துச் செல்ல கல்வியாளர்கள் ஆலோசனை?

கல்வியாளர் சுதந்திரம் மீது அமைதியாக நடந்துகொண்டிருந்த ஒருகருத்தரங்கம், சக விரிவுரையாளர் அப்துல் அசீஸ் பாரிக்கு நேர்ந்ததை நினைத்து ஆத்திரம் அடைந்தவர்கள் தங்கள் மனக்கொதிப்பைக் கொட்டியதைத் தொடர்ந்து கல்வியாளர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிடும் ஒரு கூட்டமாக மாறியது. அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட தனியார் மற்றும் பொதுப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார்…

நஜீப், ரோஸ்மாவை தரக்குறைவாகப் பேசியவருக்கு சிறை!

ஹரிராயா பொது உபசரிப்பின்போது திடீரென மேடை ஏறிய ஆடவர், பிரதமர் நஜீப் துன் ரசாக், அவரின் மனைவி உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஆகியோரை தரக்குறைவாகப் பேசினார். அந்த ஆடவருக்கு 7 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை சிரம்பான் 2 மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை…

போலீசார்: மறியலை நடத்த எம்டியூசி அனுமதி பெற வேண்டும்

1955ம் ஆண்டுக்கான வேலை வாய்ப்புச் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு முழுவதும் மறியல்களை நடத்துவதற்கு எம்டியூசி என்ற மலேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் போலீஸ் அனுமதிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என உள்நாட்டுப் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் இயக்குநர் சாலே மாட் ரஷிட் கூறுகிறார். மறியல்கள் நடத்தப்படும் இடங்கள்,…

பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துவதைத் துணை அமைச்சர் ஆதரிக்கிறார்

1971-ம் ஆண்டுக்கான யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை குறிப்பாக மாணவர்கள் அரசியலில் பங்கு கொள்வதைத் தடுக்கும் 15(5) பிரிவைத் திருத்துவதைத் தனிப்பட்ட முறையில் உயர் கல்வித் துணை அமைச்சர் சைபுதின் அப்துல்லா ஆதரிக்கிறார். அந்தப் பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என பிரகடனம் செய்த முறையீட்டு நீதிமன்றத்…

நஜிப் சம்பளத்தில் பிடித்தம் செய்வது பற்றிய தீர்மானம் மீதான விவாதத்தில்…

நஜிப்பின் ஒரு மாத சம்பளத்தைப் பிடித்து வைப்பது பற்றிய தீர்மானம் மக்களவையில் விவாதிக்கப்பட்ட போது அனல் பறந்தது. சபாநாயகர் பண்டிக்கார் அமின் முலியா கூட பொறுமை இழந்து விட்டார். நிரந்தர ஆணைகள் 66(6)ன் கீழ் பிகேஆர் பத்து எம்பி தியான் சுவா அந்த தீர்மானத்தை சமர்பித்திருந்தார். நஜிப்பின் அரசாங்க…

உலு சிலாங்கூர் எம்பி: நடுநிலையான பராமரிப்பு அரசாங்கத்தை அமைக்கலாம்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் "நடுநிலையான பராமரிப்பு அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் என உலு சிலாங்கூர் எம்பி பி கமலநாதன் யோசனை தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில் அவர் சமர்பித்த பல யோசனைகளில் அதுவும் ஒன்றாகும். நடுநிலையானவர்கள் எனக்…

நல்ல கருப்பன் உட்பட மூவர் செனட்டர்களாகப் பதவி உறுதிமொழி ஏற்றனர்

இன்று மூவர் செனட்டர்களாகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டுள்ளனர். அவர்களில் மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தலைவர் எஸ் நல்ல கருப்பனும் ஒருவர் ஆவார். தெஸ் இன்னவேஷன்ஸ் சென் பெர்ஹாட் இயக்குநர் ஜாஸ்பால் சிங்,  சிஎல்கே ஆலோசகர் நிறுவன இயக்குநர் சியூ லியான் கெங் ஆகியோர் மற்ற…