நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
இர்வான் ஏழு ஆண்டுகளில் சுமார் ஏழு மில்லியன் ரிங்கிட் சம்பாதித்தார்
அரசு கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் இர்வான் செரிகர் அப்துல்லா கடந்த ஜனவரி 2011 லிருந்து ஜூன் 2018 வரையில் அரசு சேவையின் மூலம் மொத்தம் ரிம2,944,095.61 சம்பாதித்தார் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் கூறினார். நாடாளுமன்றத்தில் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப்…
மகாதிராக இருந்தால் அப்படிச் செய்திருக்க மாட்டார்:கெராக்கான் இளைஞர் தலைவர்
புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதத்தை வெளியிட்ட நிதி அமைச்சர் லிம் குவான் எங்கைக் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியான் கண்டித்தார். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் டான், பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டாக இருந்தால் அப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார் என்றார். “அமைச்சரவை…
கிளந்தான் நிதியுதவி கேட்கும் கடிதத்தை குவான் எங் வெளியிட்டார்
நிதி அமைச்சர் லிம் குவான் எங் புத்ரா ஜெயாவிடம் நிதியுதவி கேட்டு கிளந்தான் அரசு எழுதிய கடிதமொன்றை வெளியிட்டார். பாஸ் கட்சியால் வழிநடத்தப்படும் மாநில அரசு அதன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் போவிடுமோ என்று அஞ்சி நிதி அமைச்சிடம் ரிம24.5 மில்லியன் கேட்டிருந்தது. அதில் ரிம22.5 மில்லியன்…
பாயா தெருபோங் கட்டுமானத் தள நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு ஓர்…
பாயா தெருபோங் கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, பினாங்கு மாநிலத்திற்கு மற்றுமொரு எச்சரிக்கை, அதனைச் சாதாரணமாக கருத வேண்டாம் என மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) கூறியுள்ளது. இவ்வாண்டு, பினாங்கு மாநிலத்தில் நிகழ்ந்த இரண்டாவது நிலச்சரிவு இதுவாகும். இதில் தொழிலாளர்களின் உயிர் பலியானது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக, பினாங்கு,…
வன்முறையைத் தவிர்க்க இந்து குழந்தைகளுக்கு ஆன்மீக நன்னெறி போதனை, சமயத் தலைவர்கள்…
இந்து சமயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அனைவருக்கும் ஏழு வயது முதல் பன்னிரண்டு வயதுக்குள் தீட்சை அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் புத்ராஜெயாவில் கூடிய இந்து சமய அமைப்புகளின் தலைவர்கள் ஒருமனதாக முடிவு எடுத்துள்ளனர். சமயத் தெளிவு, ஆன்மீக நன்னெறியுடன் பெற்றோரின் வழிகாட்டலும் போதிய அளவு இருந்தால்…
திருமண வயது 18, சபா மாநிலம் முடிவு
சபா மாநில அரசு, திருமண வயதைப் பதினெட்டாக நிர்ணயம் செய்துள்ளது. அதேசமயம், சில சந்தர்ப்பங்களில் அதற்கு விதிவிலக்கும் உண்டு. கடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று சபா முதலமைச்சர் முகமட் ஷாஃபி அப்டால் தெரிவித்தார். "இதுபற்றி, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமைதாங்கிய ஒரு…
மலாக்கா பிகேஆர் தேர்தல் தொடர்பில் 10 போலீஸ் புகார்கள்
சனிக்கிழமை நடந்த மலாக்கா பிகேஆர் தேர்தல் குறித்து 10 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக மாநில போலீஸ் தலைவர் ராஜா ஷாரோம் ராஜா அப்துல்லா கூறினார். அந்தப் பத்தில் நான்கு மலாக்கா தெங்கா மாவட்டத்திலும் ஆறு அலோர் காஜா மாவட்டத்திலும் செய்யப்பட்டதாக அவர் சொன்னார். மின்வாக்களிப்பு முறையிலும் தேர்தல் முடிவுகள்…
பிகேஆர் தேர்தல்: மலாக்கா, நெகிரி முடிவுகள் செல்லாதென்று அறிவிக்கும் திட்டம்…
பிகேஆர் மத்திய தேர்தல் குழு(ஜேபிபி), தொழிநுட்பக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட ஆறு தொகுதிகளின் தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவிக்க எண்ணவில்லை எனக் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் இன்று கூறினார். “அவர்கள் (ஜேபிபி) பிரச்னையை ஆராய்கிறார்கள். அதன் பின் முடிவெடுப்பார்கள். “ஆனால், இப்போதைக்குத் தேர்தல் முடிவுகளைச் செல்லாதென அறிவிக்க…
மகாதிர் நாளை தாய்லாந்துக்குப் பயணம்- இது 7வது பிரதமரான பின்னர்…
பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாளை தொடங்கி தாய்லாந்துக்கு இரண்டு-நாள் அதிகாரத்துவ வருகை மேற்கொள்கிறார். மகாதிர் மே 10-இல் பிரதமான பின்னர் தம்மை அண்டை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளும் முகமாக பயணங்கள் மேற்கொண்டு வருகிறார் என்றும் அதில் ஒரு பகுதிதான் இவ்வருகை என்றும் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையில் கூறிற்று.…
ஜாஹிட் ‘விடுப்பில் செல்ல வேண்டியதில்லை’- அனுவார்
அம்னோ உயர்த் தலைவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டால் அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டுமென்ற நிலையான நடைமுறை(எஸ்ஓபி) கட்சித் தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி-க்குப் பொருந்தாது. அம்னோ ஆளும் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தால் மட்டுமே அது பொருந்தும் என்று அம்னோ தலைமைச் செயலாளர் அனுவார் மூசா கூறினார். மே 9…
பினாங்கு நிலச்சரிவு சம்பவம் : கட்டுமானத் தொழிலாளர்களின் உயிர் அவ்வளவு…
மலைப்பகுதிகளில் நடக்கும் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தக்கோரும் அழைப்பை வரவேற்பதாக, மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளது. “அக்டோபர் 19-ல், 7 உயிர்களைப் பலிகொண்ட, புக்கிட் குக்குஸ், சாலை கட்டுமானத் தளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, மோசமான பணி பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளின் விளைவாக…
டெக்சி சேவையை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும்- ஜாம் காட்டம்
டெக்சி ஓட்டுனர்களை “ஏமாற்றுப் பேர்வழிகள், மிரட்டிப் பணம் பறிப்பவர்கள்” என்று வருணித்த முன்னாள் தகவல் அமைச்சர் ஜைனுடின் மைடின், டெக்சி சேவையை முற்றாக ஒழித்துக்கட்டுவது நல்லது என்றார். டெக்சி ஓட்டுனர்கள் “முகம் கொடுத்துப் பேசுவதற்கு ஏற்ற மனிதர்கள் அல்லர்” என்பதால் கிரேப் வாடகைக் கார் சேவை மட்டுமே போதும்…
ஹிஷாம்: சீனா செல்வேன், லோ லோ-வைக் கொண்டு வருவேன்
1எம்டிபி விவகாரத்துக்கு ஒரு முடிவுகாண விரும்பும் ஹிஷாமுடின் உசேன், அதற்காக தொழிலதிபர் லோ லோ-வை- அவர் எங்கு மறைந்திருந்தாலும்- தேடிப் பிடித்துவர முன்வந்தார். யாருடைய கோரிக்கையுமின்றி தாமே இப்பணியைச் செய்ய முன்வருவதாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் கூறினார். “1எம்டிபி விவகாரம் முடிவுக்கு வர வேண்டும், நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்…
மகாதிர்: அரசாங்கம் மாறியபோதே ஊழல் கட்டுப்படுத்தப்பட்டது
அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு முன்பு பரவலாக நிலவிய ஊழல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, மக்கள் இப்போது ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை என்கிறார் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஏனென்றால், ஏதோ காரணத்துக்காக அரசாங்கத்தை அணுகும் பொதுமக்களும் நிறுவங்களும் வணிகர்களும் ஊழல் பற்றிய அச்சமின்றிப் பேச்சு நடத்த முடிகிறது. “இப்போது நிறுவனங்களும்…
தமிழ்ப்பள்ளிகள் சீரமைப்புடன் சீராகச் செயல்படும் – கல்வி அமைச்சர்!
அனைத்து வகைகளிலும் கல்வியின் தரத்தையும் ஆசிரியர்களின் ஈடுபாட்டையும் உயர்த்த கல்வி அமைச்சு பல நிலைகளில் செயல்படும். அதன் ஈடுபாடு உயர்நிலை சிந்தனைக்கு மட்டும் தலைசாய்க்காமல் கீழ்நிலை மக்களின் ஆலோசனைகளுக்கும் கருத்துகளுக்கும் போதுமான முக்கியத்துவத்தை அளிக்கும் என்று கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் உறுதி அளித்தார். நேற்றுக் காலை, புத்ராஜெயாவில்…
பிகேஆர் தேர்தலில் தவறிழைத்தவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்
பிகேஆர் தேர்தல் குழுவும் கட்டொழுங்குக் குழுவும் கட்சித் தேர்தலில் தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வெளிப்படையாகவும் நியாயமாகவும் முறையாகவும் நடத்தப்பட வேண்டும் ஏன்பதுதான் கட்சித் தலைமைத்துவத்தின் உத்தரவு என்று பிகேஆர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்வார் இப்ராகிம் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “எல்லா…
கொதிக்க வைக்காத குழாய் நீர் பாதுகாப்பானதா? சுகாதார துணை அமைச்சர்…
குழாயிலிருந்து நீரை நேரடியாக குடிக்கலாமா? அது பாதுகாப்பானதா? குடிக்கலாம் மற்றும் பாதுகாப்பானது என்பதை சுகாதார துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சை நம்பவில்லை. மாறாக, குழாய் நீரை குடிப்பதற்கு முன்பு அதை முதலில் கொதிக்க வைக்க வேண்டும், ஏனென்றால் அந்த நீர் பழைய மற்றும் துரு…
மகாதிருடன் தகராறு செய்த வாடகைக்கார் ஓட்டுனர்கள் நாசவேலைக்காரர்கள், டெக்சி சங்கம்…
லங்காவியில் பிரதமர் மகாதிருடன் நடந்த ஒரு சந்திப்பில் அவருடன் தகராறில் ஈடுபட்ட வாடகைக்கார் ஓட்டுனர்கள் நாசவேலைக்காரர்களாக இருக்கலாம் என்று டெக்சி சங்கம் கூறிக்கொண்டது. மகாதிருடன் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்து வெளிநடப்பு செய்தவர்கள் அச்சங்கத்தின் (பெர்ஜிவா) உறுப்பினர்கள் அல்ல என்று அதன் தலைவர் ஜய்லானி இசாய்சுலுடின் கூறினார். அந்த…
ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படவில்லை
பிகேஆர் தேர்தல்: தொழில்நுட்பக் கோளாறுகளால் ஆறு தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வாக்களிப்பு நடைபெற்ற நெகிரி செம்பிலானிலும் மலாக்காவிலும் தேர்தல் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக வாக்களிப்பு நடைபெறும் நாளில் அன்றைய இரவே தேர்தல் குழு முடிவுகளை அறிவித்து விடும். குழுத் தலைவர் ரஷிட்…
அஸ்மின்: மின் வாக்களிப்புப் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுகிறது
பிகேஆர் நடப்புத் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலி, கட்சியின் மின் வாக்களிப்பு முறையில் ஏற்படும் பிரச்னைகளால் கட்சியின் பெயர் கெடுவதாகக் கூறினார். இன்று சுங்கை துவாவில் வாக்களிப்பைப் பார்வையிட்ட அஸ்மின், மின் வாக்களிப்பில் மீண்டும் பிரச்னைகள் எழாமல் கட்சியின் தேர்தல் குழு உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்…
டெக்சி ஓட்டுனர்கள் வெளிநடப்பு: பதவி துறக்கத் தயார்- மகாதிர் அறிவிப்பு
பிரதமர் டாக்டர் மகாதிருடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்ற டெக்சி ஓட்டுனர்கள் அவர் கிரேப் வாகனச் சேவையைத் தடைசெய்ய மறுத்ததை அடுத்து வெளிநடப்புச் செய்தனர். இன்று காலை லங்காவியில் நடைபெற்ற அக்கூட்டத்தில் 200 பேர் கலந்து கொண்டார்கள். அவர்களில் சிலர் கூட்டத்திலிருந்து வெளியேறியதும் சிறு சலசலப்பு ஏற்பட்டதாக…
நாட்டு மக்களிடம் ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது, வேதமூர்த்தி
இனம், மொழி, சமயம், பண்பாடு, பால், பருவம், உடற்பேறு, பணி உள்ளிட்ட அனைத்துக் கூறுகளையும் வேறுபாடுகளையும் கடந்து நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு மிளிர்கிறது. இத்தகையப் போக்கு மலேசியாவை உலக அரங்கில் இன்னும் உயர்த்தி வைக்கும் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி…
இரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் பணி, நாட்டுக்கு நல்லது – ஆய்வாளர்
பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் ஆகியோரின் பணி இரண்டு தவணைகளுக்கு மட்டும்தான் என்று வரையறுப்பது மக்களுக்கும் மாநிலங்களுக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் பரிந்துரை என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். பிரதமர், முதலமைச்சர், மந்திரி புசார்கள் மாறுவதால் மக்களுக்குப் புதிய மேம்பாட்டுச் சிந்தனைகள், வியூகங்கள் போன்றவை கிடைக்கும் என…
























