அமலுக்கு வந்தது இந்தியா-ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்திய நுகர்வோருக்கு தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும். ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி அங்கீகரிக்கப்பட்டது. நேற்று முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு…

ஜனவரியில் கோவிட் வழக்குகளின் இந்தியாவில் அதிகரிக்கக்கூடும்

அடுத்த 40 நாட்கள் முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் ஜனவரி மாதத்தில் இந்தியா கோவிட் -19 வழக்குகளின் அதிகரிப்பைக் காணக்கூடும் என்று முந்தைய பரவலின் வடிவத்தை மேற்கோள் காட்டி அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன. முன்னர், கோவிட்-19 இன் புதிய அலையானது கிழக்கு ஆசியாவைத் தாக்கிய 30-35 நாட்களுக்குப் பிறகு…

2036 ஒலிம்பிக் போட்டிக்கு ஏலம் எடுக்க இந்தியா தயார்

2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏலம் எடுக்க இந்தியா தயாராக உள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் புதன்கிழமை தெரிவித்தார். 2036 ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏலம் எடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தை ஆதரிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலிடமிருந்து இந்தியா கிரீன் சிக்னல் கிடைத்தால்,…

வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி, மும்பையில் 6 பேர்…

மும்பையில் போலி கால் சென்டர் மூலம் வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையின் கோரேகானில் போலி கால் சென்டர் அமைத்து மொரீஷியஸ் மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினரை ஏமாற்றி ரூ.4 கோடி மோசடி செய்த 6 பேர் கைது…

மீண்டும் சுனாமி தாக்கினால் சென்னையில் 2 கி.மீ. தூரத்துக்கு கடல்நீர்…

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி ஆழிப்பேரலை கடந்த 2004ம் ஆண்டு ஏற்படுத்திய பேரழிவை காலத்துக்கும் நம்மால் மறக்க முடியாது.…

உக்ரேன் போரைக் குறைகூறியதாக நம்பப்படும் ரஷ்யச் செல்வந்தர் இந்தியாவில் திடீர்…

ரஷ்யச் செல்வந்தரும் அரசியல்வாதியுமான 65 வயது பாவல் அன்டோவின் திடீர் மரணம் குறித்து இந்தியக் காவல்துறை விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒடிஷா மாநிலத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோட்டலின் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. அவர்…

கடந்த 3 நாட்களில் மட்டும் இந்தியா வந்த 39 விமான…

498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை…

கொரோனா தொற்று குறித்து சரியான தகவல்களை மட்டும் பகிர வேண்டும்,…

இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும்…

இந்திய கடல் பகுதியில் ஆயுதங்களுடன் பிடிபட்ட பாகிஸ்தான் மீன்பிடி படகு…

இந்திய கடல் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடி படகு அத்துமீறி நுழைந்தது. படகை கைப்பற்றிய கடலோர காவல்படை ரூ.300 கோடி மதிப்புள்ள ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்தனர். இந்திய கடல் பகுதியில் 10 பணியாளர்களுடன் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகை கடலோர காவல் படையினர் கைப்பற்றினர். மேலும் படகிலிருந்த ரூ.…

கொரோனா அச்சுறுத்தல் – புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்த கர்நாடக…

திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்கள் நள்ளிரவு 1 மணிக்குள் முடிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டம் காணவைத்தது. தற்போது இயல்புநிலை திரும்பி வரும் நிலையில், சீனாவில் புதிதாக மீண்டும் பரவும் கொரோனா (பி.எப்.7)…

சுனாமி நினைவு தினம்- கடலூர் கடற்கரை பகுதியில் கண்ணீர் மல்க…

கடற்கரை ஓரமாகவே கற்பூரம், விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை ஏற்றி இறந்தவர்களுக்கு மண்டியிட்டு அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் உறவினர்கள், பொதுமக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி என்கின்ற பேரலை கடலூர் மாவட்டத்தில் தாக்கியதில் சுமார்…

இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார்: சீனா அறிவிப்பு

தவாங் செக்டரில் எல்லை தாண்டிய சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இந்திய-சீன உறவுகள் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகின்றன. லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டில் சீன ராணுவம் அத்துமீறியதில் இரு தரப்பிலும் பயங்கர மோதல் வெடித்தது. இதில் இரு நாட்டு படைகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு…

இந்தியாவில் புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்-…

இந்தியாவில் எந்த வைரஸ் வந்தாலும் எதிர் கொள்ளும் வகையில் சுகாதார கட்டமைப்பு உள்ளது. ஏற்கனவே பி.எப்-7 வைரஸ் கடந்த செப்டம்பர் மாதமே குஜராத்தில் கண்டறியப்பட்டது. ஆனால் அது பரவவில்லை. மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள்…

மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து – மத்திய அரசு…

மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல். மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்படும் எனவும்…

எல்லை பிரச்சினை குறித்து சீனா-இந்தியா ராணுவ அதிகாரிகள் தரப்பில் பேச்சு…

இந்தியா-சீனா ராணுவ கமாண்டர் அளவிலான அதிகாரிகள் பங்கேற்ற 17-வது சுற்றுப் பேச்சு சீனாவில் உள்ள சுசுல் மால்டோ எல்லைப் பகுதியில் நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 17ந் தேதி அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கூட்டத்தில், மேற்குப் பகுதியின் எல்லைக் கோட்டில் நிலவும்…

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 2,841 பேர் இந்திய வீரர்களாக…

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி. அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கவும், திறமை வாய்ந்த இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் காணவும் கேலோ இந்தியா போட்டிகள் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்படுகின்றன. கேலோ இந்தியா தேசிய சாம்பியன்ஷிப்…

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை விமான நிலையங்களில்…

ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை (‘ரேண்டம்’) நடத்தப்படும். சீனாவில் தற்போது உருமாறிய கொரோனாவான ஒமைக்ரானின் துணை வைரஸ் பிஎப்.7 வேகமாக பரவி வருகிறது. அதிதீவிரமாக பரவுகிற இந்த வைரஸ் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நுழைந்துள்ளது.…

இந்தியாவில் பண்டிகை காலம் மற்றும் விடுமுறையால் விமான கட்டணம் பல…

பண்டிகை காலம் விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சமயத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.3,500 கட்டணம், தற்போது ரூ.10,000 முதல்…

கொரோனா குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: சீரம் தடுப்பூசி…

வழிகாட்டு நெறிமுறைகளை நாம் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார். சீனா, ஜப்பான், அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், இது குறித்த…

சீன எல்லையில் இந்திய போர் விமானங்கள் குவிப்பு: இனி யாராலும்…

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தவாங் மாவட்டம் யாங்சி பகுதி சீன நாட்டையொட்டி உள்ளது. தவாங் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புத்த மடாலயம் உள்ளது. இங்கிருந்து திபெத் பகுதியை முழுமையாக கண்காணிக்கலாம். இதனால் இந்தியாவின் தவாங் பகுதியை கைப்பற்ற சீனா பலமுறை முயற்சி செய்தது. கடந்த 9-ந் தேதியும் சுமார்…

ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்க ஆராய்ச்சி- மத்திய அரசு

நாட்டில் சூரிய சக்தி திறனை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை மந்திரி ஆர் கே சிங் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: கட்டிடங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி தகடுகளை அமைத்து…

அமெரிக்காவில் இந்தி உதவாது, பாஜகவினர் பிள்ளைகளே ஆங்கில வழியில் தான்…

அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில்  மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை  பாஜகவினர் விரும்பவில்லை. – ராகுல் காந்தி குற்றசாட்டு. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி தற்போது 100 நாளை கடந்து ராஜஸ்தானில் தனது பயணத்தை…

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,…