அமெரிக்காவில் இந்தி உதவாது, பாஜகவினர் பிள்ளைகளே ஆங்கில வழியில் தான் படிக்கிறார்கள் – ராகுல்காந்தி

அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில்  மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை  பாஜகவினர் விரும்பவில்லை. – ராகுல் காந்தி குற்றசாட்டு.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தனது ஒற்றுமை யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி தற்போது 100 நாளை கடந்து ராஜஸ்தானில் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

வழிநெடுக, காங்கிரஸார் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தனது கருத்துக்களை பதிவு செய்தும் வருகிறார். அவர் ராஜஸ்தானில் இன்று பேசுகையில் ஹிந்தி திணிப்பு பற்றி பேசியிருந்தார்.

அதில், அமெரிக்காவில் பேசும்போது இந்தி எந்த வகைலயிலும் உதவாது. பள்ளிகளில்  மாணவ மாணவியர்களுக்கு ஆங்கிலம் கற்று கொடுப்பதை  பாஜகவினர் விரும்பவில்லை. என குற்றம் சாட்டினார்.

மேலும்,  பாஜக தலைவர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குச் தான் அனுப்புகிறார்கள்.  என ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசினார்.

 

 

-ds