இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.
இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காணொலி வாயிலாக இதில் பங்கேற்றனர். சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லாவ் அகர்வால் மற்றும் வல்லுநர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் பேசிய மந்திரி மாண்டவியா கூறியதாவது: கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழலில் வதந்திகளையும், தேவையற்ற அச்சங்களையும் தடுக்கும் வகையில் சரியான தகவல்கள் பகிரப்படுவது அவசியம். கொரோனா தொடர்பான நம்பகமான தகவல்களை மட்டும் இந்திய மருத்துவ சங்கத்தின் மருத்துவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பகிர வேண்டும்.
கொரோனா சிகிச்சையில் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவைகளையும், பங்களிப்பையும் தலைவணங்கி பாராட்டுகிறேன்., நாளை நடைபெறவுள்ள கொரோனா சிகிச்சை தொடர்பான நாடு தழுவிய அளவிலான ஒத்திகை முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதன் ஒரு பகுதியாகவே நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-mm