உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மலேசியா நடவடிக்கை
இந்தியாவின் யுபிஐ மற்றும் ரூபே பரிவர்த்தனை சேவையை ஏற்றுக் கொள்ளும் வகையில் தங்கள் பரிவர்த்தனை கட்டமைப்பில் மாற்றம் செய்யும் நடவடிக்கையில் மலேசியா அரசு இறங்கியுள்ளது. மேலும், இருநாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த, உள்நாட்டு கரன்சியில் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளையும் மலேசியா பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக மலேசிய வெளியுறவுத் துறை…
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தபோது, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் முதலீடுசெய்ததாக இப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வருமானத்துக்கு மேல் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு, தற்போதைய…
பிணைக் கைதிகள் வீடு திரும்ப இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட இஸ்ரேல்…
ஹமாஸ் அமைப்பினரிடம் சிக்கியுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் வீடு திரும்ப வேண்டும் என்ற நம்பிக்கையில் இந்த தீபாவளிக்கு இந்தியர்கள் விளக்கேற்றி வழிபட வேண்டும் என இந்தியாவுக்கான இஸ்ரேல்தூதர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியர்கள் 1,100…
டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து 5வது நாளாக மோசமடைந்துள்ளது
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக உள்ளது. இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது. சஃபார் கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4…
ஏர் இந்தியா விமானத்தை தகர்க்கப் போவதாக சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த்…
ஏர் இந்தியா விமானத்துக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரும் நவ.19-ம் தேதிக்கு பிறகு சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். விமானத்துக்கு பகிரங்கமாக அவர் விடுத்துள்ள மிரட்டல்…
வேலைக்காக வெளிநாட்டுக்கு செல்பவர்கள் முழு விவரங்களை அறிந்து செல்ல வேண்டும்
அயலகத் தமிழர் நலத்துறை மற்றும் புனர்வாழ்வு துறை, தமிழக உள்நாட்டு தொழிலாளர் நல அறக்கட்டளை ஆகியன சார்பில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நியாயமான நெறிமுறைப்படி ஆட்கள் தேர்வு மற்றும் சமூக பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்…
தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் அரசு…
கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெழுத்திடாததால், உச்ச நீதிமன்றத்தில் அவர் மீது கேரள அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ‘மசோதாக்கள், அரசாணைகளை ஆளுநர்கிடப்பில் போடுகிறார்’ என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.…
காங்கிரஸ் இருக்கும் இடத்தில் வளர்ச்சி இருக்காது, சத்தீஸ்கரில் பிரதமர் மோடி…
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றால், அங்கு வளர்ச்சி இருக்காது’’ என சத்தீஸ்கரின் கான்கெர் நகரில் நேற்று நடந்த பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விமானப்படை சிறப்பு விமானத்தில் நேற்று…
இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அரையிறுதிக்கு…
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா அசுர பாய்ச்சல் நடத்தினர். இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து…
இந்தியாவில் 7.4 கோடி டன் உணவு ஆண்டுதோறும் வீணடிக்கப்படுகிறது
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. இது, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22% என்பது குறிப்பிடத்தக்கது. உலக உணவு தானிய உற்பத்தியில் 8% அதாவது 93.1 கோடி டன் உணவு வீணாவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்…
காற்று மாசுக்கும் சென்னை, டெல்லியில் டைப்-2 நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும்…
காற்று மாசுபாட்டுக்கும் சென்னை, டெல்லியில் டைப்-2 நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக சர்வதேச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டுக்கும் நீரிழிவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதால் இந்த ஆய்வறிக்கை கவனம் பெறுகிறது என்பதைக் காட்டிலும் இதுவரை மேற்கத்திய நாடுகள், சீனாவில் உறுதிப்படுத்தப்பட்ட இந்தத் தொடர்ப்பு இப்போது நகர்ப்புற…
மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடமிருந்து இந்தியாவைக் காப்போம் – முதல்வர்…
“மாநிலங்களை ஒழிக்க நினைக்கும் பாஜகவிடம் இருந்து இந்தியாவை பாதுகாப்போம். அதற்கு, இந்திய கூட்டணியை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று ‘இந்தியாவுக்காக பேசுவோம்’ 3வது அத்தியாயத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார். “மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவு கூட்டாட்சிக்கான எனது குரல்” என்ற தலைப்பில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அந்த போட்காஸ்டில் முதல்வர் பேசியதாவது:…
இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை நாளை தொடக்கம்
இந்தியா - வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் நவம்பர் 1-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளனர். 15 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தியாவின் அகர்தலா முதல் வங்கதேசத்தில் உள்ள அகவுரா வரை ரயில் பாதை…
அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக உள்நுழைந்த 42,000 இந்தியர்கள்
இந்த ஆண்டில் இதுவரை அமெரிக்காவினுள் 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக நியூயோர்க்கில் உள்ள தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தகவலின் படி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளதாக தெரியவருகின்றது. இவர்களில் பெரும்பாலானோர் புகலிடம் தேடியும், வேலைவாய்ப்பிற்காகவும் சட்டவிரோதமாக…
சிங்கப்பூரில் இந்தியருக்கு 16 ஆண்டு சிறை
சிங்கப்பூரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த கிளீனர் சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்த அந்தப் பெண் பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 2019-ம்…
ஆந்திராவில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பயணிகள் ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா சென்ற பயணிகள் ரயில் (வண்டி எண்…
கத்தாரில் மரண தண்டனைக்குள்ளான 8 இந்தியர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை
உளவு பார்த்த புகாரில் கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேரின் குடும்பத்தினரையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். அப்போது, "இந்த வழக்குக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அவர்களை விடுதலை செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் அரசு…
தமிழகத்தில் ஞாயிறுதோறும் ஆயிரம் மருத்துவ முகாம்கள்
தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை ஏற்பட்டிருக்கும் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 5,896. இதில் இன்று வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 607, கடந்த பத்து மாதங்களில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை, நேற்று தஞ்சையில் ஏற்பட்டுள்ள இறப்புகளையும் சேர்த்து 7" என்று தமிழகம் மருத்துவம் மற்றும் மக்கள்…
சத்தீஸ்கர் பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி: ராகுல் காந்தி தேர்தல்…
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்றுகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு வரும் நவ. 7, 17-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி ராகுல் காந்தி நேற்று கான்கெர்…
எர்ணாகுளம் அருகே ஜெபக்கூட்டத்தில் வெடிவிபத்து
எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த பயங்கர வெடிவிபத்து தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள களமசேரியில் இன்று (அக்.29) ஞாயிறு தோறும் நடக்கும் கிறிஸ்தவ மத சிறப்பு ஜெபக் கூட்டம் நடைபெற்றது. இதில் 2000க்கும் அதிகமானோர்…
திமுக இல்லையென்றால் தமிழும் தமிழகமும் இருக்காது – துரைமுருகன்
திமுக இல்லையென்றால் தமிழகம் இருக்காது, தமிழும் இருக்காது” என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திமுக மாணவர் அணி சார்பில் 9 மாவட்ட திமுக மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான 3 நாள் பயிற்சி பட்டறை இன்று…
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் டாடா குழுமம்
ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை டாடா குழுமம் இந்தியாவில் மேற்கொள்ளவுள்ளது என மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் டாடா குழுமம் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைக்கான ஆப்பிள் ஐபோன்களை உற்பத்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் புகழ்பெற்ற ஐபோன்களை தைவானை…
பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்களை காப்பாற்றின: ஜம்மு-காஷ்மீர் கிராம…
பாகிஸ்தான் குண்டுவீச்சிலிருந்து பதுங்கு குழிகள்தான் எங்கள் உயிரைக் காப்பாற்றின என்று ஜம்மு-காஷ்மீர் கிராம மக்கள் கண்ணீ ருடன் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரிலுள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் (எல்ஓசி) இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லைக்குமறுபுறம் பாகிஸ்தான் நிலையில்ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட் டுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு…